சட்டமன்ற் தேர்தல் 2011 மாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல்
கோடையின் வருகையோடு தேர்தலின் வருகையும் சேர்ந்து தமிழகத்தை அதிகமாக சூடேற்றியுள்ளது . ஏப்ரல் 13 ம் தேதி நடைபெறவுள்ள தமிழக்த் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்ட்த்தை எட்டியுள்ளன . தமிழகத்தின் இரண்டு பிரதான் கூட்டணிகளிலிம் ஏகப்பட்ட நாடகங்கள் அரங்கேறிய பிறகு ஒருவாராக காட்சி தெளிவாகிய சூழ்நிலையில் இருபது நாட்களுக்குள்ளாக அத்தனை நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு இந்திய வாக்காளர் திருவாளர் ஏழைப் பொதுஜனம் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நவீன மஹாராஜாக்களும் ம்ஹாராணிகளும் காத்திருக்ப் போகிறார்கள் . நமது ஜனநாயகம் பனநாயகமாகிவிட்ட்து . மக்களின் பிரநிதிகளாவதற்காக களத்தில் நிற்பவர்ளில் பெருமபாலோர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவில்லை என்பது மட்டும் நிச்சய்ம் . பணம் தேட அல்லது இருக்கிற பணத்தை காப்பாற்ற கட்சிகளுக்கு கப்பம் கட்டி களத்தில் குதித்து விடுகிறார்கள் . திருவாரூரில் போட்டியிடுகிற நம்முடை ய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 41 கோடிக்கு சொத்து மதிப்பு காட்டிய...