Friday, April 01, 2011

கதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி




கதீஜா பின்து குவைலித். புகழ் பெற்ற தொழிலதிபர். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் செல்வமும் செல்வாக்கும் ஈட்டியவர். மூன்று திருமணங்கள் செய்தவர். எட்டு குழந்தைகளைப் பெற்றவர். கடைசியாக தன்னை விட 15 வய்து இளைய ஆண்மகனை விரும்பி சுயமாகத்  திருமண்ம் செய்து கொண்டவ்ர். உலகைப் புரட்டிப் போட்ட ஒரு புரட்சி வரலாற்றின் சாரதி.

இன்றைய பெண்ணிய வாதிகளின் கற்பனை இலக்குகளை சாமாண்யமாய கடந்து சாதனை படைத்த அந்த் பழையக் காலத்து மனுஷியை இன்னும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வில்லையா?

இதோ! கடைசியாக ஒரு தகவ்ல். அவர்தான்  நபிகள் நாயகம் (ஸல்)  முதல் மனைவி கதீஜா (ரலி).- கி.பி.556-  தன் வீட்டுத் தோட்ட்த்தில் இஸ்லாமைப் பதியமிட்ட் பாக்கிய சாலி.

மார் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிற வேளையில், நினைவு கூர்வதற்கல்ல; இன்றைய பெண்ணியம் படிப்பதற்கும் பாடமாக எடுத்துக் கொள்வதற்கும் தகுந்த மகிழ்சியான மரியாதையான எட்டுத்திசையிலும் புகழ்மிக்க வரலாற்றின் நாயகி.

சற்றேரக்குறைய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த சீனாவின் ஒரே பெண் ஆட்சியாளரான வூ சதியான் Wu Zetian இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த 16 ம் நூற்றாண்டின்  முதலாம் எலிசபெத், மற்றொரு இங்கிலாந்துப் பேர்ரசி விக்டோரியா, தங்களது நாடுகளில் இரும்புப் பெண்மணிகள் என்று வர்ணிக்கப்பட்ட மார்க்க்ரெட் தாட்சர், இந்திராகாந்து, பாகிஸ்தானின் அரசியல் அழகி பெனாசிர் புட்டோ
அமெரிக்க கருப்பின மக்களின் போராளி ரோஸாபர்க் ஆகிய பிரபலப் பெண்மணிகள் எவரையும் விட அதிக இரவா புகழுக்குரியவர் கதீஜா (ரலி) ஆவார்.

அவரோடு ஒப்பிடத் தகுந்த ஒருவர் உண்டென்றால் அது ஏசுவின் தாய் மாரியாள் என்ற மர்யம் மட்டுமே! அதனால் தான் நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் மிக்கச்சிதமாக அன்றைய உலகின் சிறந்த பெண்மணி மர்யம் , இன்றைய உலகின் சிறந்த பெண்மணி கதீஜா என்று கூறினார்கள். (ஷஹீஹ் முஸ்லிம்  

புகழ் என்ற வட்ட்த்தில் மாத்திரமே மரியம் அம்மயாரை கதீஜா அம்மையாரோடு ஒப்பிட முடியும். வாழ்நாள் சாதனைகளில் கதீஜா அம்மையார் அவரிலும் தனித்துவம் பெற்றுத்திகழ்கிறார்.

உலகின் சிறந்த பெண்மணி கதிஜா என்ற நபிகள் நாயகத்தின் வாக்க்கு இன்றைய தலைமுறை பெண்கள் புதிய கண்ணோட்ட்த்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

கதீஜா (ரலி) மத ரீதியாக அதிக கவனப்படுத்தலுக்குரியவர் என்பதை தாண்டி இன்றை பெண்ணிய த்த்துவத்திற்கான ஒரு சரியாள அள்வீடாக அவர் திகழ்வதை அக்கறையுள்ளவர்கள் கவனிக்க வேண்டும்.

பெண்ணியம் அதிலும் குறிப்பாக இந்தியப் பெண்ணியம் இப்போது ஒரு முச்சந்தியில் நிற்கிறது. இன்றைய பெண்ணியத்தின் உரிமைக்குரல் ஒரு பக்கம் இழுக்க, பழமையின் பவிசு மறுபக்கம் இழுக்க கல்வியும் வேலை வாய்ப்பும் தந்த தைரிய்ம் வாழ்க்கையை கந்தலாக்கி விடுமோ என்ற பயம் இன்னொரு புறமாக இழுக்க்க முன்னெப்போதையும் விட  பெண்மை ஒரு சிக்கலான சுய போராட்ட்த்தில் இருக்கிறது.

அதனால்தான் விக்கிபீடியா இன்று அதிகமாகப் பேசப்படுகிற பெண்ணியத்தை விளக்குகையில் பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டுஎன்று கூறுகிறது.

ஆண்கள் தண்ணியடிக்கும் போது பெண் தண்ணியடிச்சா என்ன தப்பு? பெண் பாலியல் தொழில் செய்தால் அது விபச்சாரம் அதையே ஆண் செய்தால் அது ஜமீந்தாரித்தனமா? என்றெல்லாம் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்புகிற பெண்ணியம் பேதமையானது. ஒழுக்க கேடுகள் யார் செய்தாலும் அது சம்மான கண்டனத்திற்கும் தண்டணைக்கும் உரிய்தே  என்று ஒப்புக்க்கொள்ளப்பட்ட உலகில் இக்கேள்விகள் வெறும் பிதற்றலே!

தற்போதைய சூழ்நிலையில் ஒழுக்க்க் கேட்டை நிறுவனப் படுத்த முயலும் ஒரு முயற்சியாகவே இத்தகைய கேள்விகள் எழுப்ப்ப் படுகின்றன.

சமீபத்தில் பெண்ணியம் பேசும் இணைய தளமொன்றில் நான் வாசித்த கட்டுரை ஒன்றில் இந்த வரிகள் காணப்பட்டன.

ஆணைவிட அதிகமாக இருக்கும் அழகான உறுப்புகளான கருப்பை, மார்பு. இவை இரண்டினாலும் பெண்ணை விட ஆண்தான் இன்புறுகிறான். பெண் பாதிக்கப்படுகிறாள். கருப்பை குழந்தை பெறும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆணுக்கு தகப்பன் என்ற பதவி கிடைக்கிறது சமூகத்தில். ஆனால் பெண்ணுக்கு தாய் என்ற பதவி - கூடவே வலி வேதனை. குழந்தை பெற முடியாதவளுக்கு மலடி என்ற பட்டம் கிடைக்கிறது

பெண் என்ன உடை அணிந்தாலும் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் ,மார்பு ஒரு உறுப்பு என்ற எண்ணம் மறைந்து கற்பை போல் அதை  மறைத்து பாதுகாக்கும் பழக்கம்  ஏற்பட்டுவிட்ட்து.
திருமண் ஒழுக்கம் என்ற கோட்பாடெல்லாம் பெண் அடிமைத்தனத்தை நிறுவிய கலாச்சார குறியீடுகள் என்று அவர் குறிப்பிடுகிறார். முந்தை சமூகத்தில் பலர் சேர்ந்த கூட்டு வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் இருக்கவில்லை. பின்னால் வந்த ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகவே திருமணம் நடைமுறைக்கு வந்த்து என்றும் அவர் வாதிடுகிறார்.

இது ஒருவருடைய கருத்து மாத்திரமில்லை. பெண்ணியம் சார்ந்து பொது மேடைகளில் பேசவருகிற பலரிடமிருந்தும் இத்தகைய கருத்துக்களை வார்த்தைகளில் சற்றே கூடுதல் குறைவுகளோடு நான் கேட்டிருக்கிறேன், நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

பெண்ணிய்ம் குறைத்த ஒரு அசூசையான பார்வைக்கு இது போன்ற கருத்துக்களே காரணமாகின்றன, இந்த அசூசையும் முகச்சுளிப்பும் ஆண்களுக்கு அல்ல பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. அதனால்தான் பெண்ணிய வாதிகளை கண்டு பெண்களே பயப்படுகிறார்கள். தங்களது வாழ்வின் அமைதியை குலைக்க வந்த அணுகுண்டுகளாக அவர்களைப் பார்க்கிறார்கள்.

இப்படி ஆக்ரோஷமாக பேசுகிற பெண்களுக்கே கூட  தங்களது கருத்தின் மேல் உறுதியும் நம்பிக்கையும் இருப்பதில்லை. இணைய தளத்தில் மார்பும் ஒரு சராசரி உறுப்பே என்று பேசிய பெண்மணி இறுதியில்அதற்காக  மார்பை  மறைக்காமல் வாங்க! என்று அர்த்தம் கொள்ளாதீர்  என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

ஆண்மையோடு தேவையற்று வலிந்து போட்டியிடுகிறஎதற்கும் கட்டுப்பட விரும்பாதபாலுணர்வு வீக்கம் கொண்டஒழுக்கத்தை ஒற்றை விரலால் விரட்டுகிற பெண்ணியம் சமூகத்தை பிடித்த பெருநோயேயன்றி வேறில்லை

விளம்பர மோகம் கொண்ட ஊடகங்கள் இந்த அணுகுண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என்றால் அது மேதாவிலாசமோ சமுதாயம் அக்கறையோ அல்ல. திறந்து காட்டுகிறவர்கள் நிறைந்தால்தான் அவர்களது வியாபாரம் விழுந்துவிடாமல் நிற்க முடியும் என்பதனால் மட்டுமே! இதே நிலைப்பாடு கொண்ட ஆண் எழுத்தாளர்களும் சிந்த்னையாளர்களும் பெண்களுக்கு அறிவுப்போதையூட்டி அவர்களை ஆக்ரமிக்கிற வஞ்சகர்களே என்பது மறைவில்லாத ரகசியம்.

பெண்களை கட்டுப்படுத்தி வாழ்கிற ஆண்களை விட பெண்களை கட்டவிழ்த்து விடுகிற ஆண்களே பல சந்தர்ப்பங்களிலும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்பதை  இந்தியப் பெண்ணியம் புரிந்திருக்கிறது. அதனால் உரிமைகளோடு பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்துகிற பெண்ணியமே அவசியம் என்று இந்தியப் பெண்களில் படித்தவர்களும் பக்குவமானவர்களு நினைக்கிறார்கள்.  அவர்கள் ஆண்களோடு சண்டையிடுவதை விரும்பவில்லை. சம்மான மரியாதைக்கே ஆசைப்படுகிறார்கள்..

இந்திய்ச சமூகத்தின் புதிய பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ற இயல்பான இக்கருத்து  தற்போது மேலை நாடுகளை வசீகரித்து வருகிறது. குடும்பம், கட்டுப்பாடு ஆகிய சொற்றொடர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகி வருகிற உலகில் பாலின விரோத்த்தை விட பாலினப் புரிதலே அவசியம் என்ற் போதனை வேகமாக நடைபெற்று வருகிறது.

போலியான சமத்துவம் பேசி பெண்களுக்கு உசுப்பேற்றி சொந்தக்காலில் நிற்கும் படி செய்த மேற்கு நாடுகளின் நாகரீகம் டு யூ மேரி மீஎன்று என்று காதலனை கொஞ்ச வேண்டிய சூழ்நிலைக்கும் அல்லது ஏதாவது ஒரு ஆண் வாண்டு மேரீ யூ என்று சொல்லி விட்டால் இந்த உலகின் அதிக மகிழ்ச்சியான வார்த்தையாக அதை கருதுகிற சூழ்நிலைக்கும் பெண்களை ஆளாக்கிவிட்டிருக்கிறது.. மேற்குல்கப் பெண்ணியம் எங்கு எதற்காகப் புறப்பட்டு எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை இது கேள்வியாக்குகிறது.  

சுதந்திரமான ஆக்க்கரமான மதிப்புமிக்க சாதனைப் பெண் என்ற அளவுகோள்கள் ஒரு பெண்ணியப்பார்வைக்கு போதுமென்றால் அன்னை கதீஜா அதில் தலை சிறந்த முன்னோடியாகத் திகழ்கிறார்.

அவர் பெருமானாரின் மனைவியாக மாத்திரமே பெருமைக்குரியவர் அல்ல. அவர் தான் முதன் முதலாக இஸ்லாமைத் தழுவினார். முஸ்லிம் சமுதாயத்திற்காக  தன்னுடைய சொத்துக்களை அர்ப்பணித்த்தார் என்பதனாலுமே அவர் பெருமைக்குரியவர் அல்ல. தன்னுடைய தரத்தாலும் தகுதியாலும் செயல்பாட்டினாலும் உலகப் பெண்மணிகள் அனைவரைக் காட்டிலும் உன்னதமானவராக அவர் திகழ்கிறார்..

கதீஜா அம்மையார், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நுழைவதற்கு முன்னரே அரபுலகின் புகழ் பெற்ற வணிகராக திகழ்ந்தார். பெண்கள் சில்லரை வியாபாரம் செய்வது வாடிக்கையானது தான். பெட்டிக் கடை நடத்துவது நெசவு போன்ற சிறு தொழில்களில் இடுபடுவது உலகம் முமுவதிலும் வழக்கத்தில் இருந்திருக்கிறது,

கதீஜா அம்மையாரோ வெளிநாட்டு வர்த்தகம் செய்யும் அளவு வணிகத்தில் உயர்ந்திருந்தார் என்பது அவர் மீதான கவனத்தை கூர்மைப் படுத்துகிறது. அவருக்கு கீழே பலர் வேலை செய்தனர். சந்தைகளில் அவருக்காக பொருட்களை வாங்க ஏஜெண்டுகள் இருந்தார்கள் என்பன போன்ற தகவல்கள் அவரது வியாபார வட்டத்தின் பரப்பளவை புலப்படுத்துகின்றன.

கீபி 585 ல் இறந்த தன்னுடைய தந்தையின் திரண்ட வியாபாரப் பொருட்களுக்கு வாரிசான கதீஜா அம்மையார் அன்றையை மக்காவின் வியாபாரிகள் அனைவரின் மூலதனத்திற்கும் ஈடான வியாபாரச் செல்வாக்கை கொண்டிருந்தார் என்று வரலாறு சொல்கிறது.

It is said that when the Quraysh's trade caravans gathered to embark upon their lengthy and arduous journey either to Syria during the summer or to Yemen during the winter, Khadijah's caravan equalled the caravans of all other traders of the Quraish put together.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெரு வணிகச் சீமாட்டி யார் என்ற ஒரு தேடல் நடை பெறுமெனில் கதீஜா அம்மையாருடைய ஒரு பெயர் மட்டுமே அதன் விடையாக்க் கிடைக்க்கூடும்.

இந்திரா நூயி பெப்ஸி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகிக்கிறார் என்பது இன்றைய வியாபார உலகத்தில் பிரமிப்பாக பேசப்படுகிறது. உலகில் அதிக சம்பளம் வாங்குகிற, அதிக செல்வாக்குப் பெற்ற, அதிகப் புகழ் பெற்ற மணி என்றெல்லாம் அவரை புகழ்கிறார்கள். இவரைப் போல இன்னும் சில பெண்கள் அரசியலில் பொதுச் சேவையில் அல்லது தொழிலில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்கள்.

நீங்கள் நியாயமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இவர்களில் யாருடைய திறமைக்கும் குறையாதவராகஇன்னும் சொல்வதானால் இவர்களை விட அனைத்து துறையிலும் இவர்களை விஞ்சி நிற்ப்வராக கதீஜா அம்மையாரை காண்பீர்கள்.

இந்திரா காந்தி அரசியலில் செல்வாக்கும் உறுதியும் மிக்க பெண்மணியாக இருந்தார். ஆனால அவர் நல்ல மனவியாக இருந்தாரா என்பது கேள்விக்குரியது.  இது போன்ற பலவீனங்கள் இன்றைய புகழ் பெற்ற ஒவ்வொரு பெண்மண்யிடமும் உண்டு. அந்த அம்சங்களையும் கணக்கில் கொண்டு கதீஜா அம்மையாரை ஒப்பீடு செய்து பார்த்தால் கதீஜா அம்மையாரின் பெருமையை முழுமையானதாக உணர்வீர்கள்.

கதீஜா அம்மையாரின் திறமைக்கு அடையாளமாக அவரது வியாபார ஈடுபாடு அமைந்த்து என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை திருமணம் செய்ய அவர் முடிவெடுத்த்து அவரது துணிச்சலையும் சுயமாக முடிவெடுக்கும் இயல்பையும் தேர்வுத்திறனையும்  அடையாளப்படுத்துகிறது.

இந்த திருமணத்தைப் பற்றி பேசுகிற போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை விட 15 வய்து மூத்த கதீஜா அம்மையாரை திருமணம் செய்தார் என்றை ஒற்றை வரியில் முஸ்லிம்களும் மற்றவர்களும் பேச்சை முடித்துக் கொள்கிறார்கள்.இதில் ஒப்பீட்டு நோக்குவதற்கு இன்னும் பல செய்திகள் இருக்கின்றன.

கதீஜா (ரலி) தான் இத்திருமண்ம பற்றி முதலில் முடிவெடுத்தவர்  என்பது முதன்மையாக கவனத்திற்குரியது. அவரது முந்தைய இரு திருமணங்கள் முடிந்து விட்டிருந்தன. முதல் கணவர் அதீக் பின் ஆபித் இறந்து போகவே இரண்டாவதாக அபூஇஹாலா என்பவரை திருமணம் செய்தார். அத்திருமணமும் நிலைக்கவில்லை. முதல் திருமணத்தில் ஹின்தா என்ற பெண் குழந்தையும் இரண்டவது திருமணத்தில் இஹாலா என்ற ஆண் குழந்தையும் அவருக்கு இருந்தன.

இரண்டு முறை கணவனை இழந்த்தில் வாழ்க்கைய பற்றி அவர் விரக்தியுற்றுக் கிடக்கவில்லை. தற்காலப் பெண்மணிகள் செய்வது போல தனிமை வாழ்வை தேர்ந்தெடுக்கவுமில்லை.

தன்னிடம் வேலைப் பார்த்த முஹ்ம்மது வின் நற்பண்புகள் அவரைக் கவர்ந்த்த போது அந்த நல்ல மாப்பிள்ளையை அவர் உறுதியாக கைகொண்டார்.
.
பல பெரிய மனிதர்கள் திருமணத்திற்கு தூது விட்ட போதும் தனக்கு பிடித்த முஹம்மதையே அவர் துணிந்து தேர்வு செய்தார். மாப்பிள்ளைக்கு தன்னைவிட 15 வயது குறைவாயிற்றே என்பதுவெல்லாம் அவரைக் குழப்பிக் கொண்டிருக்கவில்லை. அவரது தேர்வுத் திறன் அதில் பளிச்சிட்ட்து. பண வசதி சமூக செல்வாக்கு போன்ற தடைகளை அவர் பொருட்படுத்தாதது அவரது துணிச்சலைப் புலப்படுத்துகிறது. அவரே திருமணத்தைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பேசினார் என இப்னு இஸ்ஹாக் கூறுகிறார். தன் பெரிய தந்தைகளிடம் கேட்க வேண்டும் என முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்ல நாயகத்தின் பெரிய தந்தை அபுதாலிபிடம் விசயம் தெரிவிக்கப் பட்ட்து. அவர் ஒத்துக் கொள்ளவே அன்றைய மக்காவின் பிரபலங்களின் முன்னிலையில் அம்ரு பின் அஸத் கதீஜா (ரலி) வை பெருமானாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். .

கதீஜா அம்மையாரின் இந்த சுத்ந்திரமான அணுகுமுறை ஆச்சரியத்திற்குரியது. ஒரு வகையில் அன்றைய சமூகச் சூழல் அந்த சுதந்திரத்தை அவருக்கு வழங்கியிருந்த்த்து என்பதையும் மறுப்பதற்கில்லை

இன்றைக்குள்ள சில பெண்கள் தங்களியே அதிகம் சுதந்திரம் பெற்றவர்களாக கருதிக் கொள்வதை கதீஜா அம்மையாரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கேலியாகச் சிரிக்கத்தான் தோன்றும்.

செல்வமும் செல்வாக்கும் மிக்கவராக இருந்து தன்னிலும் இளையவரை திருமண்ம் செய்த போதும் குடும்ப வாழ்க்கைக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் கவனிக்கத் தக்கது, நபிகள் நாயகத்துக்கு நான்கு பெண்கள் 2 ஆண்கள் என ஆறு குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். காஸிம் அப்துல்லாஹ் என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்து போய்விட ஜைனப் ருகைய்யா உம்மு குல்சூம் பாத்திமா (ரலி) என்ற நான்கு பெண்மக்களை அவர் பேணி வளர்த்தார்.

பிள்ளைப் பேறும் குழந்தை வளர்ப்பும் அன்னை கதீஜா வின் பெண்ணிய வாழ்க்கையின் சிறப்பான வெளிப்பாடாகவே அமைந்தன. 

கணவர் மீது அன்பு செலுத்துவதிலும் அவருக்கு ஒத்துழைப்பதிலும் அன்னை கதிஜாவின் வாழ்வு சாதனைமனிதர்களின் வாழ்க்கை துணைவிகளுக்கு சரித்திரம் சொல்லும் ஒரு பாடமாகவே அமைந்த்து. எனக்கு கதீஜாவின் அன்பு வாழ்வாதாரமாக கொடுக்க்கப் பட்டிருந்த்து என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இன்னீ கத் ருஜிக்து ஹுப்பஹாஸஹீஹ் முஸ்லிம் 4464) அந்த அன்பு எனக்கு கிடைத்த வரம் என்பதே இதன் கருத்து என விரிவுரையாளர் நவவீ கூறுகிறார். 

அவரின் அன்பு நபிகள் நாயகத்தால் இறுதிவரை மறக்க முடியாத அன்பாகவே இருந்த்து. நபி (ஸல்) கதீஜாவை அதிகம் நினைவு கூறுவார். அவர் இப்படி இப்படி இருந்தார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஞாபகம் பெருக்கெடுத்த ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை கதீஜா அம்மையாரின் தோழிகளுக்கு அன்பளிப்பாக வழங்குவார்.

ஒரு வரலாற்று நாயகரை - மாபெரிய வாழ்நாள் சாதனையாளரை தன் அன்பால் இறுதிவரைக் கட்டிப்போட்டிருந்த்து கதீஜா அம்மையாரின் சாதனைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இதை ஒரு அவமானமாக இன்றைய பெண்ணியம் கருது மென்றால் அதை உடைப்பில் போடவேண்டாமா? 

கணவரின் சமுதாயச் கவலைகளுக்கு தன்னால் இயன்றதை எல்லாம் கதீஜா (ரலி) செய்தார். நபிகள் நாயகத்திற்கு முதல் வேத வசனம் சொல்லப்பட்ட ஹிரா மலையின் செங்குத்தான சிகரத்தின் மீது 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றும் ஏறிச்செல்கிற சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரின் நாவிலும் அன்று எப்படித்தான் கதீஜா நாயகி ஏறிவந்தாரோ என்ற் வார்த்தை வெளிவராமல் இருப்பதில்லை.

தனிமைச் சிந்தனையிலிருந்த நபி (ஸல்) அவர்களுக்காக அன்றாடம் உணவு சுமந்து சென்று கொடுத்த கதீஜா அம்மையாரின் குடும்ப்ப் பொறூப்பு பெண்ணியத்தின் பெறுமையை எந்த வகையிலும் குலைத்துவிடவில்லை. அவரது திறன், துணிச்சல், செல்வாக்கு செல்வம் எதுவும் குடும்பத்திற்கான பணியை செய்வதிலிருந்து அவரை த்டுக்கவில்லை. குடும்ப வாழ்வு அவரது தரத்தையும் தகுதியையும் எந்த வகையிலும் குறைத்து விடவும் இல்லை.

குடும்ப்ப் பொறுப்பின் ஊடே அவர் காப்பாற்றி வைத்திருந்த தெளிந்த அறிவும் நிலையான் சிந்தனையும் ஒரு மகத்தான வரலாற்றின் வாசலில் அவரை முதல் வரவேற்பாளராக நிறுத்தியது. முஹம்மது நபியை முதன் முதலில் ஏற்றது ஒரு பெணமணி என்ற பெருமையை பெண்ணினத்திற்கு பெற்றுத்தந்த்து.

நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் தனக்கு ஹிரா மலையில் வைத்து நேர்ந்த அதிசயமான அனுபவத்தை அன்னை கதீஜாவுக்கு விவரித்த அந்த தருணம்; நிலவுக்குச் ஆட்களைச் சுமந்த செல்லும் ஒரு ராக்கெட் செலுத்தப் படுகிற ஜீரோ நிமிட்த்தை விட நெருக்கடியான தருணமே! இழை பிசகி இருந்தாலும் வரலாறு தடம் மாறியிருக்கும். 

ஆனால் அந்த தருணத்தில் ஒரு தலைவிக்குரிய தகுதியோடு அன்னை கதீஜா ரலி செயல்பட்டார்.
பத்ட்டமுற்றிருந்த நபி (ஸல்) அவர்களுக்கு அவர் ஆறுதலாகச் சென்ன வார்த்தைகள் வரலாற்றின் வைரவரிகளுக்குச் செந்தமானவை.

உங்களுக்கு ஒன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணை! உஙகளை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்   (ஏனெனில்) தாஙகள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்  (சிரமப் படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள் வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள்

ஆங்கில வரலாற்றாசிரியர்கள் ரொனொல்ட் போட்லியும் (Ronald Bodley) (Washington Irving) வாஷிங்டன் இர்விங்கும்  இந்த வாச்கங்களில் மயங்கி நிற்பதை அவர்களது வரலாற்று நூல்கள் படம் பிடிக்கின்றன.  

தகுதி வாய்த கணவரை தகுந்த நேரத்தில் கண்டறிந்து அவருக்கு ஒத்துழைக்கிற பேறு அன்னை கதீஜா அவர்களுக்கு கிடைத்த்து போல இனி யாருக்கும் கிடைக்காது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களோ ஒரு குழந்தையின் குணத்தோடு அன்னை கதீஜாவுக்குப் பின்னே சென்றார். 

இந்தப் புதிரான நிகழ்விற்கு விளக்கம் தேட அன்னை கதீஜா மக்காவில் இருந்த ஒரே வேத விற்பன்னரான வரகா பின் நவ்பலை தேர்ந்தெடுத்தார்.

இந்தப் புதிரான நிகழ்விற்கு சரியான விடை காண பொருத்தமான நபர் இவ்ரே என வரகாவை கண்டறிந்த்த்து அன்னை கதீஜாவின் அலாதியான அறிவுத்திறனுக்கு சான்று என மொத்த வரலாறும் பாராட்டுகிறது. 

வரகா மனித குலத்தின் இறுதி இறைத்தூதரை அவரது மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு அதிர்ச்சிகரமான தகவலோடு. இந்த ஊர் மக்கள் உங்களை மக்காவிலிர்ந்து வெளியேற்றுவார்கள்.

இனிவரக்கூடிய ஆபத்துக்களை கட்டியம் கூறிய அந்த வார்த்தைகள் கதீஜா அம்மையாரை கலங்கடித்து விடவில்லை. கணவரை நபி என ஏற்க ஒரு கண நேரமேனும் அவர் தயங்கினாரில்லை. நபியின் வாக்கையும் வாழ்வையின் பிறழாது தொடர்ந்தார். இடைப்பட்ட சிரமங்களை தாங்கினார். சொந்த பந்தங்கள் சமூகப் பகிஷ்கரிப்பு செய்த மூன்று வருடங்களில் புதிய முஸ்லிம் சொந்தங்களுக்காக தனது திரண்ட சொத்து முழுவதையும் செலவழித்தா. எந்த நிலையிலும் கண்ணின் இமை போல கண்வரைக் காக்கத் தவறினாறில்லை.

கதீஜா அம்மையாரின் செல்வாக்கை அவரது குடும்ப வாழ்வோ கொள்கைப் போக்கோ குலைத்துவிடவில்லை என்பதற்கு சரித்திரம் சாட்சியாக இருக்கிறது. அவர் வாழ்ந்த வரைக்கும் நபி(ஸ்ல்) யின் மீது ஒரு தூசியை எறிவதற்குக் கூட மக்கத்து எதிர்கள் அஞ்சினார்கள். 

கதீஜா அம்மையார் கி.பி.619 ல் இறந்த பின்னரோ மக்காவிலிருந்த முஹம்மது நபியின் எதிர்களுக்கு அவர் மீது கை வைக்கும் தைரியம் பிறந்த்து.

இதன் தொடர்ச்சியாகவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குகுடிய்பெய்ர நேர்ந்த்து.

ஒரு வெற்றிகரமான பெண்ணியத்தின் குறியீடாக திகழும் கதீஜா பிந்து குவைலித் ஏதோ வரலாற்றில் வாழ்ந்து முடிந்த பழைய பெயர் அல்ல.

இன்றைய சூழலில் அவரது ஒவ்வொரு நடவ்டிக்கையும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும். ஒப்பீடுகள் செய்யப்பட வேண்டும். அவரது வெற்றிப்பணிகளின் கனபரிமாணம் அளக்கப் பட வேண்டும். அப்படிச் செய்யப் பட்டால் இன்றைய நவீனப் பெண்மணிகளுக்கு பல புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்க்கும். வாழ்க்கையைப் பற்றிய தெளிவுகளை பிறக்க்கும்.

அன்னை கதீஜா வின் வழியை பின் தொடர்வது பெண்ணியத்த்தின் உரிமையையும் மரியாதையை மட்டுமல்ல மகிழ்வையும் புகழையும் தக்கவைக்கும்
 

3 comments:

ஃபக்ருத்தீன் ஃபாஜில் பாகவி said...

Alhamdu lillah.Miha arumai

Anonymous said...

மவ்லானா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இரண்டு வருடங்களுக்குப்பிறகு இப்போது இக் கட்டுரையை மீண்டும் இன்று வாசித்தபோது அன்னை கதீஜா ரலி பற்றிய தங்களின் வரிகளால் மனம் விம்மி அழுதேன், தங்களின் உண்ர்வுப்பூர்வ எழுத்துப்பணி தொடர இறைவன் துணைச்செய்யட்டும் வஸ்ஸலாம் மவ்லவி எஸ் எம் ஜுனைதுல்பக்தாதி ஹசனி 9380641494

Unknown said...

இக் கட்டுரை மிகவும் அற்புதமான விளக்கங்கள் கொண்டுள்ளது.