தேர்தல் நெருங்க நெருங்க ஆலிம்களை தேடி தலைவர்கள் வர
ஆரம்பித்து விட்டார்கள். (குறிப்பாக முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகிற
தொகுதிகளில்)
இதில் இடைத்தரகர்கள்
சிலரும் இலாபம் பார்க்க நினைக்கின்றனர்.
ஆலிம்களால் தங்கள் பழகுகிற மக்கள் மட்டத்தில் திட்டமான கருத்தை உருவாக்க முடியும். முதலில் அதற்கு ஆலிம்களுக்கு என்று ஒரு சுய கருத்து வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆலிமாக எனது கருத்துக்களை எனது பிளாக்கில் பதிவு செய்கிறேன். இதில் நீங்களும் உடன்பட்டால் இதே கருத்தை பரப்பலாம்.
எச்சரிக்கை வெள்ளிமேடையை குறிப்பிட்ட யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ பயன்படுத்த வேண்டாம்.
என்னுடைய
கருத்தோடு உடன்படாவிட்டால் என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்குள்ள உரிமையை நீங்கள் மறுக்க
கூடாது. என கருத்தை ஒத்துக்கொண்டால் தான் நீ முஸ்லிம் இல்லேன்னா நீ முஸ்லிமே அல்ல என்ற
மாதிரி ச்ண்டைக்கெல்லாம் வரக்கூடாது.
இந்த தேர்தல் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமானது என ஒரேயடியாக தூக்கி வைக்க என்னால் இயலவில்லை.
அதாவது
மோடி பிரதமராகிவிட்டால் இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் அழிந்து விடும் என்ற
பயம் தேவையில்லை என்பது என் கருத்து.
அதே நேரத்தில் ஊடகங்கள் ஒட்டொடுமொத்தமாக திட்டமிட்டு மோடியை ஒரு சிறந்த வேட்பாளராக உருவாக்கிவைத்திருக்கிற பிம்பத்தை தூக்கி வீச நம்மால் முயன்ற முயற்சிக்க வேண்டும் என்ற தீர்மாணத்தை இந்த இந்த நாடாளுமனறத் தேர்தலின்
முதல் தீர்மாணமாக நான் கொள்கிறேன்.
குஜராத்
இயல்பாகவே காங்கிரஸ் காலத்திலிருந்தே இந்திய மாநிலங்களில் சில துறைகளில் முன்னேறிய
மாநிலமாக இருந்து வருகிறது.! அமுல் தயாரிப்புக்களின் பரவுதல் அதற்கு ஒரு உதாரணம்.
மோடியால்
குஜராத் முன்னேறியது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏறபடுத்தி அதுவே ஒரு பிரதமர்
வேட்பாளருக்கான தகுதியாக முன் வைக்கப்படுவது ஏற்புடையதல்ல. மோடியின் அரசில் சிறு பான்மை
இன மக்கள் அச்சத்தோடு வாழுமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை இன்றைய
(1.4.2014) தமிழி ஹிந்து வின் கட்டுரை தெரிவிக்கிறது.
இது
நூற்றுக்குநூறு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் மோடி இதுவரைக்குமான தனது தேர்தல்
பிரச்சாரத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஆறுதலான அல்லது நம்பிக்கை ஊட்டுகிற எந்த விசயத்தையும்
பேசவில்லை. மாறாக குரோதம் கொப்பளிக்கிற வார்த்தைகளையே பேசி வருகிறார். அஸாமில் அவர்
பேசுகீற போது “ வங்க தேசத்திலிருந்து வருகிற இந்துக்களை
வரவோற்போம் என்கிறார். ஆனால் முஸ்லிம்களை திருப்பி அனுப்புவோம் என்கிறார். அவர்கள்
ஓட்டு வங்கிக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்கள்
என்கிறார். ஏன் சிறுபான்மை மக்களிடம் அவர்
ஓட்டுக்கு கூட கேட்கவில்லை.
அப்பட்டமான
அவருடைய மக்கள் விரோத இன் வாதப்போக்கு இந்தியாவை நாசம் செய்து விடும்.
தன்னுடைய
ஆட்சியில் நடைபெற்ற வரலாறு காணாக அப்பாவி மக்களுக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல்களை
தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர் அவர். அதற்காக
அவரை நவீன் நீரோ என்று உச்சநீதிமனறம் கண்டித்துள்ளது.
இத்தகைய
மரணவியாபாரி ( மவ்த்கி சவ்தாகர்) மோடி பிரதமராவது
இந்திய மக்களின் நல்லிணக்கத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரானது எனற வகையில் மோடி
பிரதமராவதை தடுக்க வேண்டும் என்பது ஒரு சராசரி வாக்களான்ன் எனது கருத்து,
என்வே
எந்த ஒரு தொகுதியிலும் சிறுபான்மை பிற்படுத்தப் பட்ட மக்களின் வாக்குசிதறிப்போய் இந்தியாவுக்கு
ஆபத்தை விளைவிக்க கூடிய சக்திகள் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்
என்ற அடிப்படையில் வேட்பாளர்களைப் பார்ப்பதில எனக்கு உடன்பாடில்லை. நாட்டு மக்களுக்கு
நல்லது செய்வாரா என்ற அடிப்படையிலேயே ஒரு வேட்பாளரை பார்க்க வேண்டும் என்றகருத்துடையவன்
நான். அப்படியெல்லாம் ஒரு நன்மையும் செய்ய
மாட்டாங்க என்ற நிலையில் இருவரில் யாரல் தீமை குறைவு என்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.
யாரிடம் ஒரு நீதியுள்ள பார்வையை எதிர்பார்க்கலாம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கலாம்.
இன்றைய
நாட்ளுமனறத்திற்கான தேர்தல் சூழ்நிலையில் வேலூர் தொகுதியில் அப்துர்ரஹமான் சாஹிபுக்கு
வாக்களிக்கலாம். நாடாளுமன்றத்தில் சிறப்பாக
செயல்பட்டவர்களில் 7 வது நபராக அவரது பெயர் இடம் பெற்றுள்ளது,
இராமநாதபுரம்
தொகுதியில் ஜலீலுக்கு வாக்களிக்கலாம். மோடிக்கு எதிரான கூட்டணி என்ற வகையில் அது அமையும்.
அதே
போல தேனித்தொகுதியில் ஹாரூனுக்கு வாக்களிக்கலாம். அதுவும் மோடிக்கு எதிரான கூட்டணியில்
பிரச்சினை குறைவானவர் என்ற வகையில் அமையும்
மயிலாடுதுறை
முஸ்லிம்கள் குறிப்பாக ஆலிம்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியத் தொகுதி. நமது
அரசியல் பார்வையையும் அதில் தென்பட வேண்டிய தெளிவையும் காட்ட உதவக் கூடிய தொகுதி. அந்தப்
பகுதியில் பிரபலமானவரும் சிறந்த ஜனநாயகவாதியுமான
மணிசங்கர் ஐயரை தயக்கமின்றி முஸ்லிம்களும் ஆலிம்களும் ஆதரிக்கலாம். என்னை கேட்டால்
அவருக்கான ஆலிம்கள் பணி செய்ய வேண்டும் என்று கூறுவேன். அவரோடு ஒப்பிடுகையில் அவரை
எதிர்த்து நிற்கிற வேட்பாளர்கள் அவரளவுக்கு இந்திய ஜனநாயத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும்
தேவையானவர்கள் அல்ல. சிறுபான்மையினர் நலனிலும் அவரது அக்கறை உறுதியானது. சர்ச்சைகளுக்கு
அப்பாறபட்டது.
மற்ற
தொகுதிகளிலும் இதே அடிப்படையை கவனத்தில் கொள்ளலாம். ஏதேனும் ஒரு தொகுதியில் வேறு கட்சிகளின்
வேட்பாளர்கள் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் நமது வாக்கு பிரிவதால
தவறான தேர்வுகளுக்கு அது காரணமாகி விடக் கூடும் என்பதை கவனத்தில் கொண்டால் போதுமானாது,
இந்திய
அரசியலில் பாரதீய ஜனதா என்ற தீய சக்திக்கு எதிரணியில் இருப்பவர்களை இப்படி வரிசைப்படுத்திக்
கொள்ளலாம்.
·
கம்யூனிஸ்டுகள்
·
காங்கிரஸ்
·
திமுக கூட்டணி
·
அதிமுக கூட்டணி
ஒவ்வொரு தொகுதியிலும் பல முனைப் போட்டி இருக்கிற சூழ்நிலையில்
தீய சக்திகளை எதிர்க்கிற அணியில் வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளவருக்கு வாக்களித்து
விடுவதே இந்த தேர்தலுக்கு சிறந்த்து,
நாட்டுக்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன். நீங்கள்?
3 comments:
Mayiladuthurai kurithhana ungalin thervu mattum thaan nerudalaga irukkirathu..
Matrabadi anaithhu karuthhugalum samuthaayam yetrukkollum..
Nanum thaan..
mayiladudhurai il mmk y? manisa..r maanila katchihal congress meedhu pala kuraihalai korri thadutthu vidum so avar vara vaipu rare otu vest aahidum
ramanaadhapuram sdpi y? future plan
Very intelligent padhivu. Muslimgalin vote indha parvaiyudan irundhal mihavum aarogyamaha irukkum.muslim vetpalar enbadhai thandi muslimgalin nalanai mihavum virumuhiravar enra konatthilthan nammudaiya anuhumurai irukkavendum.so, mayiladuthurai sambandhamana karutthu etrukkollappada vendiyadhe.
Post a Comment