ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
அனபுமிகு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்றன.
விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடை பெற இருக்கிறது. இத்தேர்தலில் த்மிழக்த்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்த்டுக்க உரிமை பெற்றுள்ளனர். அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றஆலிம்களும் அரபிக் M.A. பட்டம் பெற்ற ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவ்ர்.
இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்
நீங்கள் அப்ஸலுல் உல்மா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.
இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு தெரிவியுங்கள்.
வஸ்ஸலா,
அப்துல் அஜீஸ் பாகவி
தகவல் தந்தவர் :
சுலதான் சலாஹுத்தீன் மழாஹிரி
பேராசிரியர் ஜாவியா அரபுக்கல்லூரி.
காயல்பட்டினம்.
Wednesday, October 13, 2010
Friday, October 01, 2010
பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு
குள்ள நரிகளுக்கு சாதகமாகி விட்ட தீர்ப்பு
நீதிமன்றம் ஒரு நலனை விரும்பி இவ்வாறு காம்பரமைஸுக்கு முயற்சித்துள்ளது.
சின்னப் புள்ளைக சண்டையை தீர்த்து வைக்கிற மாதிரி
ஆனால் இந்த்துத்துவ சக்திகள் அமைதியை விரும்புகிற மாதிரி நடந்து கொள்வதில்லை.
ரமார் கோயில் கட்டுவோம் என்று சொன்ன அத்வானி முஸ்லிம்கள் தங்களுக்குரிய இட்த்தில் பள்ளிவாசல் கட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருந்தால் நிலமை சூடு எவ்வளவு தணிந்திருக்கும்
பல் நிருபர்கள் இது குறித்து கேட்ட போதும் அவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை இந்தியா இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்துக்கள் இதை கவனிக்க வேண்டும்.
இந்த்துத்துவ சக்திகள் மத நம்பிக்கை என்ற பெயரில இனி எத்தனை பிரச்சினைகளை தொடர காத்திருக்கிறார்கள் என்பதை நீதிபதிகள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
இந்தப் பிரச்சினையில் குளிர்காய முனையும் குள்ள நரிகளை கவனத்தில் கொள்ளாமல் நீதிபதிகள் ஒரு சமரசத்திற்கான தீர்ப்பை கூறியுள்ளன
Monday, September 27, 2010
பெருநாள் சிந்தனை
இனி இஸ்லாம் வெல்லும்
“அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதின் 8 வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுகிறார்கள்”இணைய தளங்கள் பலவற்றிலும் தற்போது பரபரப்பாக இருக்கிற செய்தி இது.
இந்த ஆண்டு ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் செப்டம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் படக்கூடும். ஒரு வேளை செப்டம்பர் 11 ம் சனிக்கிழைக்கு அது தள்ளிப் போகவும் இடமுண்டு.
ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் பிறையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படுகிறது. ரம்லான் 29 முடிந்த பிறகு அன்றைய இரவு அந்தி வானத்தில் சந்திரன் இளம் பிறையாகக் கண்ணுக்கு தென்பட்டால் அது ஷவ்வால் மாத்த்தின் முதல் தேதியாக அமையும் என்ற இஸ்லாமிய சட்ட விதியின் படி பிறை தெரிகிறதா உலகெங்கிலும் இருக்கிற முஸ்லிம்கள் ஆர்வத்தோடும் ஆசையோடும் அந்தி வானத்தை அன்னாந்து பார்க்கிறார்கள். பிறை தென்பட்ட தென்றால் எங்கும் மகிழ்சி பீரிட்டுக் கிளம்புகிறது. தக்பீர் முழக்கம் வானை நிறைக்கிறது. முஸ்லிம்கள் பெருநாளை வரவேற்கத் தயாராகிறார்கள்.
அனறு இரவு பிறை தென்படாவிட்டால், இன்னொரு நோன்பு நோர்க்கவும், இன்னும் ஒரு தராவீஹ் எனும் ரமலானின் விஷேச இரவுத் தொழுகைக்கு வாய்புக் கிடைத்த்தென முஸ்லிம்கள் ஆனந்தமடைகிறார்கள். அதற்கடுத்த நாளில், ஈத்பெருநாள் கம்பீரமாக களை கட்டுகிறது.
உலக முஸ்லிம்களின் இந்த உன்னதமான கலாச்சாரம் இப்படியே ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்து அற்புதமான ஒரு நிகழ்வாக நடை பெற்று வருகிறது.
இந்த நடை முறையால் இயந்திரத்தனமான திட்டமிடுதல் தவிர்க்கப் பட்டு ஒரு பிள்ளைப் பேற்றின் இயல்பான மகிழ்ச்சியும் குதூகலமும் பெருக்கெடுப்பதை முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வருகிறது.
சில அவசரக் குடுக்கைகளும் அதிருப்தி ஜீவிகளும் இஸ்லாமின் இந்தக் கலாச்சாரத்திற்கு எதிராக செய்ல்படக் கிளம்பினார்கள். அவர்களின் சரியாக வேகாத அவியல் அறிவியல் த்த்துபித்துக்களை சமூகம் புறந்தள்ளி தனது இஸ்லாமிய மரபு வழியான கலாச்சார வேர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்ட்து. அதனால் ஈதுல் பித்ர் செப்டம்பர் 10 தேதி கொண்டாடப்படலாம். அல்லது செப்டம்பர் 11 ம் தேதி கொண்டாடப்படலாம் என்ற அறிவிப்பை சரியாகப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் சமூகத்திற்கு பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது.
ஈதுல் பித்ர் பெருநாள், ரமலானின் ஒரு மாத பட்டினி வணக்கம் நிறைவடைவதை ஒட்டி வருவதால் அதை உண்டு மகிழ்ந்து கொண்டாடும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு சொல்கிறது.
பக்ரீத் எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகு சாப்பிடாமல் கிளம்புவதும் ஈதுதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பிறகு கிளம்புவதும் இஸ்லாமிய கலாச்சாரமாகும். “நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடாமல் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு புறப்படமாட்டார்கள்” என பெருமானாரின் பணியாளர் அன்ஸ் (ரலி) கூறுகிறார். அதிலும் குறிப்பாக பேரீத்தம் பழத்தை ஒற்றை எண்ணிக்கையில் சாப்பிடுவது பெருமானரின் பழக்கம் என அவர் மேலும் தெரிவிக்கிறார். (ஸஹீஹுல் புகாரி 952)
எங்களது ஊரின் சில பள்ளிவாசல்களில் ரமலானுக்கு கஞ்சி காய்ச்சுவது போலவே பெருநாள் அன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு வரும் மக்களுக்கு பேரீத்தம் பழங்களை தட்டில் வைத்து நீட்டுகிற பழக்கம் இருக்கிறது. நபிகள் பெருமானாரின் ஒரு வழி முறையை கடைபிடிப்பதோடு அற்புதமான பெருநாள் வாழ்த்தாகவும் அது அமைந்து விடுகிறது.
தாம் உண்டு மகிழ்ந்த்தின் அடுத்த தொடர் நடவடிக்கையாக பிறருக்கு கொடுத்து மகிழும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பெருநாள் அன்று அன்றைய செலவுக்கு போக அதிகமாக காசு வைத்திருப்பவர்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தலைகட்டு தர்ம்மாக “பித்ரா” எனும் தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுத்துவிட வேண்டும்.
ஒவ்வொரு தலைக்கும் 1.700 கிராம் கோதுமை அல்லது 2.400 கிராம் நடுத்தர அரிசி வீதம் பித்ரா தர்ம்ம் வழங்கப்ப்ட வேண்டும். உண்வுப் பொருளாக வழக முடியாதவர்கள் பணமாக வழங்குவ்தெனில் குறைந்த பட்சம் தலைக்கு ரூபாய 35 என்று கண்க்கிட்டு வழங்க வேண்டும்.
இது குறைந்த பட்ச அளவு தான். விரிந்த உள்ளம் கொண்ட தயாபரர்கள் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி என்ற அளவில் கூட “பித்ரா” தர்ம்ம் வழங்கலாம். லட்சாதிபதிகளும் கோடீஸ்வர்ர்களும் அளந்து பார்த்து வழங்க வேண்டியதில்லை. அரிசி வழங்குபவர்கள் கூட வசதி இருந்தால் பிரியாணி அரிசி வழங்குவது ஏழை எளியவர்களின் பெருநாள் செலவின் சுமையை குறைக்கும். அதுமட்டுமல்ல செல்வந்தர்களின் கௌரவத்திற்கு அது அழகு சேர்க்கும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுரையாகும்.
பெருநாள் தொழுக்கைக்கு முன்னதாகவே பித்ரா தர்மத்தை வழங்கி விட வேண்டும் என்பது இஸ்லாமின் உறுதியான அறிவுரையாகும். தொழுக்கைக்குப் பின்னால் வழங்கப்படும் தர்ம்ம் சாதாரண தர்ம்மாகவே கணிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (இப்னுமாஜா 1817) என்வே பெருநாள் தொழுகைக்குப் பின்னால் தொழ்கைத்திடல்களின் வாசலில் காத்திருக்கிற யாசகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சில்லரை காசுகளாக பித்ரா தர்மத்தை மாற்றி விடக்கூடாது என்பதை சமுதாரப் பிரமுகர்கள் கவனிக்க வேண்டும்.
ஈதுல் பித்ர் பெருநாள் அன்று, அந்த மகிழ்ச்சியை வழங்கிய இறைவனை வணங்குவதற்கு முன்னதாக ஏழைகளை மகிழ்ச்சிப் படுத்திவிட வேண்டும் என்ற இஸ்லாமின் இந்தக் கோட்பாடு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மனப்பக்குவத்தை சமுதாயத்திற்கு வழங்குகிறது.
இந்த தர்மத்தை முதலில் தம் உறவினர்களிடமிருந்து தொடங்குவதே உண்மையான இஸ்லாமிய அக்கறையாகும். உறவினர்களுக்கு அடுத்தபடியாக தமது பகுதியில் இருக்கிற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவைப் பெருத்தவரை அது கடினமான வேலையல்ல. வீட்டு வாசலை விட்டு கீழே இறங்கினால் தகுதியுள்ள பலர் தாராளமாக கிடைப்பார்கள். அவர்களை தேடிச் சென்று சென்று தர்ம்ம் வழங்குகையில் ஒரு ஆனந்தம் கிட்டும். அந்த ஆனந்தம் தர்ம்ம் செய்த நிறைவை விட பேரானந்தமாக அமையும்.
சென்ற வருடம் இரத்தப்புற்று நோயாளல் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனைத்தேடி தன்னுடைய தர்மத்தை வழங்குவதற்காக ஒருவர் என்னோடு காரில் வந்தார். சுமார் 40 கீலோ மீட்டர் சுற்றி அலைந்த பிறகு அந்த இளைஞன் வீட்டை கண்டுபிடித்தோம். அவர்க் கொடுத்த பணம் 5000 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அதற்காக தகுதியுள்ளவரை தேடிச் சென்ற மகிழ்ச்சியும் மன திருப்தியும் அந்த சகோதர்ருக்கு 5000 ரூபாயை விட அதிகமாக இருந்த்து. ஒன்றுக்கு எழுநூறு மடங்கு அதிகம் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அது எப்படி இருக்கும் என்பதன் அட்வான்ஸாக இந்த மகிழ்ச்சி அவருக்கு அமைந்த்து.
ரகசியமாக தர்ம்ம் செய்வதிலும், அதுபோல தகுதியுள்ளவர்களை - யாரிடமும் கேட்கத் தயங்க்கிக் கொண்டிருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தர்ம்ம் செய்வதிலும் கிடைக்கிற பேராணந்த்தமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் சிலருக்கு கிடைக்காமலே போய்விடுகிறது.
எதிலும் காசுபார்த்து பழகிவிட்ட அமைப்புக்களிடமும் இயக்கங்களிடமும் “பித்ரா” தர்மத்தை வழங்குவது முஸ்லிம் சமூகத்துக்குள் புதிய பிரச்சினைகள் உருவாவதற்கே வழி செய்கிருக்கிறது ஈந்துவத்தலின் இன்பத்தை அனுபவிக்க்விடாத இயக்கப் பற்றாக அது மாறிவிட்ட்து என்பதும் இங்கே கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும்.
ஈதுல் பித்ர் பெருநாளின் இன்னொரு சிறப்பு. அது கடந்த கால நினைவை போற்றுவதாகவோ, ஏதாவது ஒரு தலைவர் அல்லது வரலாற்றுப் பாத்திரத்தின் ஞாபகார்த்தமகவோ அமைந்த்து அல்ல. அது முஸ்லிம்களது நிகழ்கால வாழ்வின் பக்தியையும் சந்தோஷத்தையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இனி வரும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாகவும் திகழ்கிறது.
இந்த ஆண்டு ஈதுல் பித்ர் பெருநாள் வருவதற்கு முன்னதாக ஒரு சர்ச்ச்சை முஸ்லிம்களின் வட்டாரத்தில் ஒரு பேச்சாக கிளம்பியிருக்கிறது.
கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள தகர்க்கப் பட்ட நிகழ்ச்சியின் எட்டாவது நினைவு செப்டம்பர் 11 அன்று அனுஷ்டிக்கப் பட இருக்கிறது. அது ஈதுல் பித்ர் பெருநாளில் அல்லது பெருநாளை ஒட்டிவருகிறது.
சில இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட பத்ரிகைகளும் இணைய தளங்களும் அமெரிக்க முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டங்களைப் பற்றி கேள்வி எழ்ப்பிவருகின்றன. சில இணைய தளங்கள் பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வண்ணம் கலக்கத்தையும் பீதியையும் எழுப்பி வருகின்றன. பிரஞ்சுப் பத்ரிகையான “லுமோன்ட்”இதில் வெறுப்பை உமிழும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது,
அமரிக்க முஸ்லிம்களின் தகவல் தொடர்பு மையத்தின் சார்பாக பேசுகிற இபுறாகிம் ஹூபர் என்பவர் மின்னணு ஊடங்கள் செய்து வருகிற பிரச்சரம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது பெருநாளை கொண்டாடுவதில் கலக்கமுற்றிருப்பதாகவும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களது பெருநாள் நிகழ்ச்சிகளை இரத்து செய்திருப்பதாகவு கூறியுள்ளார்.
வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பெருநாள் கொண்டாட்டங்களை செபடம்பர் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த் தகவல்கள் விஷமத்தனமாக கிளப்பட்டிருக்கலாம்.. ஏனெனில் பெருநாள் கொண்டாட்டம் என்பது முஸ்லிம்களை பொருத்தவரை அது இறைவனால் வழங்கப் பட்ட்து. இறைவனால் தீர்மாணிக்கப் பட்ட்து. பெருநாட்களை எதன் பொருட்டும் துக்கமாக அனுஷ்டிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது பெருநாள் கொண்டாட்டங்கள் என்பது இறைவனை வணங்கி இல்லாதோர்க்கு வழங்கி மகிழ்வ்தேயாகும். குடித்து கூத்தாடி கும்மாளம் அடிக்கும் கொண்டாட்டங்கள் அல்ல. கொண்டாட்டம் என்ற வார்த்தையே கூட இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேச பொருத்தமற்றதாகும். வழக்குச் சொல் என்பதற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை என்பதற்காகவுமே அச்சொல் இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேசப்படுகிறது. என்வே இஸ்லாமிய பெருநாட்கள் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை தருவதாக இருப்பதில்லை,
அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மேற்குல நாடுகளும் இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதயாத்திற்கும் செய்துள்ள் தீமைகளும் கொடுமைகளும் ஏராளம். இப்போது செய்துவருகிற சதிச் செயல்களும் ஏராளம். அவற்றோடு ஒப்ப்டுகையில் இரட்டை கோபுரத் தகர்ப்பின் கொடூரம் என்பது சாதாரணமானதே! ஆயினும் முஸ்லிம் சமுத்யாம் அந்த அநியாயத்தை அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய நீதி என்பது ஒளிவு மறைவற்றது. சுதி பேதம் இல்லாதது. அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்வது மொத்த மனித சமூகத்தையும் கொலை செய்வது போன்றது எனப் பகிரங்கமாக பிரகடணப் படுத்திய சமயம் இஸ்லாம். மனிதாபிமானத்தில் வேஷம் போட முஸ்லிம்களுக்கு இஸ்லாம் கற்றுத்தரவில்லை.
என்வே இரட்டை கோபுரத் தகர்ப்பில் அப்பாவிகள் கொல்லப் பட்ட்தற்கு முழு முஸ்லிம் உலகும் தங்களது கண்டனத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட்து. இப்போதும் முஸ்லிம்கள் அந்த விபத்தில் தங்களது உறவுகளை இழந்தவர்களுக்காக தங்களது ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இறைவா! அந்த கொடுமையான விபத்தில் தங்களது பாசத்திற்குரிய உறவுகளை இழந்து வாடுவோருக்கு நீ தகுந்த ஆறுதலை கொடு! வாழ்வின் நம்பிக்கை இழந்து நிற்போருக்கு நீ தகுந்த பரிகாரம் செய்! என்று பிரார்த்தனை செய்யத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க மக்களுடைய உயிர் ம்ட்டுமே உன்னதமானது. மற்ற்வர்களின் உயிர்களும் உடமைகளும் மசுறுக்கும் மதிப்பற்றவை என்ற அமெரிக்க மனோபாவத்தை எந்த நாகரீகமுள்ள மனிதனும் ஒத்துக் கொள்ள மாட்டான. முஸ்லிம்களாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாது.
சில அமெரிக்க்க அரசியல் வாதிகளும், வகுப்புத் துவேஷம் கொண்ட சில செய்தி ஊடகங்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பு நிகழ்வை இத்தகைய அமெரிக்க மனோபாவத்தோடு தொடர்ந்து அணுகுகிறார்கள். இஸ்லாமிய கருவறுக்க உதவும் சாதனமாக அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், இந்தப் போக்கின் காரணமாக் இரட்டை கோபுர விபத்தை நிய்யப் படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் செல்லக் கூடும்.
21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சத்திதிட்டமான இரட்டை கோபுரத் தகர்ப்பும் முஸ்லிம்களின் சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று வலுவாகப் பிணைந்திருக்கின்றன. அந்த நிகழ்வுக்குப் பின் அமெரிக்காவிலுள்ள முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம் சமூகமும் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் அளவுக்கு மீறிய ஆணவப் போக்கினாலும், அரபு தீபகற்ப பகுதிக்குள் அவர்கள் நட்த்திய வன்முறை வெறியாட்டங்களாலும் பாதிக்கப் பட்ட மக்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து இவனுக்கு இப்படி கொடுத்தால் தன் வலிக்கும் என்று நட்த்திய தாக்குதலே இரட்டை கோபுரத் தகர்ப்பு. ஆனால் இத்தாக்குதலுக்கு மூலமான பிரச்சினையை என்ன என்பதை மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்பியதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெய்ரை பரப்புவதிலும் முஸ்லிம்களின் மரியாதையை பங்கப் படுத்துவதிளும் அமெரிக்கா தற்போது வெற்றிய்டைந்திருக்கிறது. அதனால் சர்வதேச அளவில் முஸ்லிம்களின் நிலை இப்போது சிக்கலுக்குள்ளாக்ப் பட்டு வருகிறது. 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் மிக்ச் சவலான் சூழ்நிலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..
தந்திரம் மிக்க எதிரிகள், கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களிடமிருக்கிற எல்லாவகையான நவீன ஆயுதங்களையும் ஊடகங்களையும் பய்ன்படுத்தி இந்த பூமிப்பந்தின் மேற்பரப்பின் பெரும் பகுதியை பன்னூறு ஆண்டுகள் கோலாச்சிய சமூகத்தை, உலகத்திற்கு சுதந்திரத்தையும் நாகரீகத்தையும் முன்னேற்றத்தையும் அறிமுகப் படுத்திய சமூகத்தை ஒரு குற்றவாளிச் சமூகமாக, பிற்போக்கான சமூகமாக சித்தரித்து, ஆதிவாசிப் பழங்குடிகளை அழித்த்து போல் அழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிய மண்ணிலும் வேட்டையாடப் படுகிற மக்களைப் பற்றிய காட்சிகள் இந்த வேட்டைக்கார்ர்களின் இரத்த வெறிக்கு சாட்சியாக நிற்கின்றன. இந்தப் படு கோரமான சூழ்நிலையை வென்றெடுக்கிற சக்தி முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்பதில் சந்தேகத்திற்கு இடமிருக்கலாம். ஆனல் இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல இதைவிடக் கடுமையான பகையாளிகளையும் வாகை சூடுகிற சக்தி இஸ்லாத்திற்கு இருக்கிறது.
இஸ்லாமின் வெற்றிப் பாதை பெரும் பாலும் மலர் படுக்கையாகத்தான் இருந்த்து. காரணம் இஸ்லாம் மனிதர்களை ஆக்ரமிப்பதில்லை ஆட்கொள்கிறது. இஸ்லாமின் நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் அவ்வப் போது இது போன்ற டுரமான மிருக வெறித் தாக்குதல்கள் ஏற்பட்ட்துண்டு. அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் இப்போதைய நிலையை விட மோசமாக கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இனி எதிர் காலமே இல்லை என்று எதிரிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாம் சாமப்லில் இருந்து உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையை போல - அல்ல - நம்ரூதின் நெருப்புக் குண்ட்த்திலிருந்து மீண்ட தீர்க்கதரிசி இபுறாகீமைப் போல பல முறை புத்துணர்வோடு எழுந்திருக்கிறது.
13 ம் நூற்றாண்டில் மங்கோலியப் பழங்குடியினரான தாதாரியர்கள் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கரும்புக்காட்டுக்குள் புகுந்த யானை போல திடுமெனப் புகுந்து விவரிக்க முடியாத நாசத்தை விளைவித்தனர். சமர்கண்டு முதல் பக்தாது வரை வாழ்ந்த முஸ்லிம் உலகம் அந்த வெறி பிடித்த கூட்ட்த்தின் சண்டித்தனத்திலும் அமலியிலும் சிக்கி சின்னா பின்னமாகியிருந்த்து. த்தாரியர்களைப் பற்றி முஸ்லிம் சமூகத்தில் ஊடுறுவியிருந்த அச்சம் எத்தகையது என்பதை ஒரு அரபுப் பழமொழி படம் பிடிக்கிறது. அரபுகள் சொல்வார்களாம் : இதா கீல லக்க இன்னத் த்தர இன்ஹஸமூ பலா துசத்திக்
“தாதாரியர் தோற்று விட்டார்கள் எனறால் நம்பக் கூடாது”
ஒரு தாதாரியப் பெண் தங்கள் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞனைப் பார்த்து விட்டால் “அங்கேயே நில்: என்று எச்சரிப்பாள். அவன் அங்கேயே நின்று விடுவான். அவள் வீட்டுக்குள் சென்று வாளை எடுத்து வந்து அவன் தலையை சீவுவாள் என்று தாதாரியரின் ஆதிக்கத்தையும் அதை கண்டு எதையும் செய்ய்ய முடியாதிருந்த முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையையும் வரலாற்றாசிரியர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் மிகச் சீக்கிரத்தில் முஸ்லிம்கள் இந்தச் சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. அந்த மீட்சிக்கு இஸ்லாம் காரணமாக இருந்த்து,
எத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. அவர்கள் தோற்றுத் துவண்டு போன களங்களில் இஸ்லாம் வெற்றியடைந்திருக்கிறது, நவீன் ஆயுதங்கள் தொழில் நுட்பம் மிகுந்த ஊடகங்கள் என்ற எத்தைய எதிர்ப்புச் சூழ்நிலையும் மீறி தனது மக்களை காப்பற்றுகிற வலிவும் சாதுர்யமும் சாமார்த்தியமும் இஸ்லாத்திற்கு இருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இப்போது தென்பட்த்துவங்கி விட்டன. இஸ்லாமையும் முஸ்லிம்களை எதிர்த்து முழங்குவதயே வாடிக்கையக கொண்டிருந்தவர்கள் ஒருவனை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்ப உதைப்பது அவன் பக்கம் இருக்கிற நியாயம் என்ன என்று கேட்க வேண்டிய இயற்கையின் ஒரு கட்டாய்த் திருப்பத்திற்கு ஆளாகி இந்தப் பக்கமிருக்கிற நியாயத்தையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இனி இஸ்லாம் பேசும். அது தனது எதிரிகளை வெல்லும்.
ஆக்கிரமிப்புச் சக்திகளை தனது சத்திய வெளிச்சத்தால் இஸ்லாம் எதிர் கொள்கிறது என்பதே இஸ்லாமிய வெற்றியின் பின்னணியில் இருக்கிற ரக்சியம்.
தோல்வியின் வாசலிலும் விரக்தியின் விளிம்பிலும் நிற்கிற முஸ்லிம்கள் இஸ்லாமின் வழிகாட்டும் இந்த சத்திய விரலைப் பிடித்துக் கொண்டால் வரலாற்றின் சதிப்பள்ளங்களை அவர்கள் தாண்டிக் குதித்து விட முடியும். இரண்டாம் உலக யுத்த கால கட்ட்த்தில் துருக்கிய மக்கள் செய்த தவறை முஸ்லிம்கள் செய்து விடக்கூடாது.
இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு துருக்கியில் ஐரோப்பிய மோகம் கொண்ட ஒரு தலை முறை உருவானது. அவர்கள் இஸ்லாம் என்ற கீரீட்த்தை தங்கள் தலை மீது ஏற்றப் பட்டிருக்கிற சுமையாக கருதினார்கள். தங்கது அனைத்து வகையான பின்னடைவுகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று நினைத்தார்கள். உலகப் புகழ் பெற்ற துருக்கிக் தொப்பியை உதறினார்கள். தாடியை மழித்துக் கொண்டார்கள். பெண்கள் புர்கா அணியக் கூடாது என்றார்கள். ஐரோப்பியர்களைப் போல ஹட் தொப்பி வைத்துக் கொண்டார்கள். சுருட்டு பிடித்தார்கள். கோட் அணிந்து கொண்டார்கள். இப்படிச் செய்து விட்டால் ஐரோப்பியர்களாகி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்த்து. துருக்கிய மக்கள் தங்களது பழைய பெறுமையையும் இழந்தார்கள். புதிய முன்னேற்றத்தையும் இழந்தார்கள். இன்றும் ஐரோப்பாவின் நோயாளிகளாகவே இருக்கிறார்கள். இப்போது அங்கு ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. இஸ்லாமை தங்களது வாழ்க்க்கைகுள் மீட்டு வந்தாக வேண்டும் என்ற முனைப் போடு அங்குள்ள இளம் த்லைமுறை இஸ்லாம் வேண்டும் என்று கேட்டு போராடிவருகிறது.
சிறிது காலம் ஐரோப்பிய உலகு செய்த மூளைச் சலைவைக்கு இடம் கொடுத்த்தால் துரூக்கியின் வளர்ச்சி இன்னும் ஒரு 50 ஆண்டு காலத்திற்கு பின்னுக்குச் சென்று விட்ட்து.
இத்தைகைய விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் நெருக்கடிகளில் இருந்து மீளவும் முஸ்லிம்களுக் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. தங்களது சமயத்தை உறுதியாக பற்றிக் கொள்வதே அது!
இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமின் அடிப்படையான நீதி உணர்வுக்கு எதிராக தங்களது சுய உணர்ச்சிகளுக்கு சம்யச் சாயம் பூசிக் கொள்ளும் போலி புரட்சியாளர்களையும் தூய்மை வாதிகளையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள தவறி விடக்கூடாது. அவர்களை தங்களது சமூகத்தின் எல்லா மட்ட்த்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும். கட்டுச் சோற்றுக்குள் எலிகளையும் சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டு நீண்ட பயணம் போக முடியாது.
எல்லாருக்குமான நீதி எல்லோருக்குமான சட்டம் எல்லோருக்குமான கருணை என்ற தெய்வீக கோட்பாடே இஸ்லாமின் லட்சியம் என்ற சுத்தமான உணர்வு முஸ்லிம்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சாரார் புரிகிற அட்டூழியம் நீதி தவறும் துணிச்சலை அவர்களுக்கு தந்து விடக்கூடாது.
கொள்கையற்றவர்களும், மதமற்றவர்களும், வழிகாட்டிகளை தொலைத்தவர்களும் நட்த்திக் காட்டுகிற கூத்தாட்ட்த்தில் மயங்கிவிடாமல், முஸ்லிம்கள் தங்களது கிடைத்திருக்கிற உறுதியான சம்யக்கயிற்றை பலமாக பற்றிக் கொண்டால் போதுமானது. மார்க்கம் அவர்க்களை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டுவந்து விடும்; மக்காவின் ஒட்டகம் மேய்க்கத் தெரியாத உமர்களை உலகச் ச்கரவர்த்திகளாக உயர்த்தியது போல.
அனைவருக்கும் இனிய ஈத் நல்வாழ்த்துக்கள்.
"வெள்ளிமேடை " யில் இந்த வார ஜும்ஆ குறிப்பு
அன்பிற்கினிய நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
என்னுடை ஜும் ஆ உரை குறிப்புகளின் தொகுப்பு வெள்ளிமேடையில் (vellimedai.blogspot.com) கிடைக்கிறது. நீங்கள் இலகுவாக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களையும் அத்ற்கு கீழே தெரிவிக்கலாம்.
உங்களைச் சார்ந்த ஆலிம்களுக்கு இத்தகவலை தெரிவியுங்கள்
ஜும் ஆ உரைகளுக்கான ஒரு நெட்வொர்க் உருவாக இது உதவும்.
அல்லாஹ் நமது முயற்சியை அங்கீகரிப்பானாக!
என்னுடை ஜும் ஆ உரை குறிப்புகளின் தொகுப்பு வெள்ளிமேடையில் (vellimedai.blogspot.com) கிடைக்கிறது. நீங்கள் இலகுவாக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களையும் அத்ற்கு கீழே தெரிவிக்கலாம்.
உங்களைச் சார்ந்த ஆலிம்களுக்கு இத்தகவலை தெரிவியுங்கள்
ஜும் ஆ உரைகளுக்கான ஒரு நெட்வொர்க் உருவாக இது உதவும்.
அல்லாஹ் நமது முயற்சியை அங்கீகரிப்பானாக!
Thursday, August 12, 2010
INDIAN EXPESS NEWS ON ME 02 Aug 2010
Coimbatore Pesh imam turns Internet evangelist
WHEN you think of a Pesh imam, you imagine a person who spends most of his time in
mosque and giving religious sermon. You don’t expect him to be tech savy. But moulavi A
Abdul Azeez Fazil Baqavi is a cut above the rest. A double MA in history and an M.Phil
student Baqavi is focused on creating awareness about computer literacy among moulavis.
To his credit he has developed many Islamic Tamil websites besides blogs.
“I wish to educate imams so that they can use internet to update their knowledge and to
have better understanding about the happenings across the globe. One of my first blogs
was exclusively for Vellore Al-Baqiyathus Salihath Arabic College alumni,” he said about
libas07.blogspot.com.
mosque and giving religious sermon. You don’t expect him to be tech savy. But moulavi A
Abdul Azeez Fazil Baqavi is a cut above the rest. A double MA in history and an M.Phil
student Baqavi is focused on creating awareness about computer literacy among moulavis.
To his credit he has developed many Islamic Tamil websites besides blogs.
“I wish to educate imams so that they can use internet to update their knowledge and to
have better understanding about the happenings across the globe. One of my first blogs
was exclusively for Vellore Al-Baqiyathus Salihath Arabic College alumni,” he said about
libas07.blogspot.com.
His vellimedai.blogspot.com was an extension of his religious duties. Its content was
aimed at helping imams to give information packed sermons on Jumu’ah (Friday) prayers
instead of the stereo-type lectures.To create awareness about the benefits of internet use,
Baqavi has already conducted six seminars across the State.He is currently pursuing
M.Phil and his thesis is on Modern Arabic specifically on Prophet Yousuf ’s life. For his
thesis he is being guided by DrP Nisar Ahmed of Arabic, Persian
and Urdu department at Madras University. Baqavi plans to take doctorate
as well.
His web portals include www.darulquran.net (first Tamil website for Holy Koran),
www.rahamath.net (first Tamil Hadis website) besides his azeezbaqavi.blogspot.com.
aimed at helping imams to give information packed sermons on Jumu’ah (Friday) prayers
instead of the stereo-type lectures.To create awareness about the benefits of internet use,
Baqavi has already conducted six seminars across the State.He is currently pursuing
M.Phil and his thesis is on Modern Arabic specifically on Prophet Yousuf ’s life. For his
thesis he is being guided by DrP Nisar Ahmed of Arabic, Persian
and Urdu department at Madras University. Baqavi plans to take doctorate
as well.
His web portals include www.darulquran.net (first Tamil website for Holy Koran),
www.rahamath.net (first Tamil Hadis website) besides his azeezbaqavi.blogspot.com.
Subscribe to:
Posts (Atom)