மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஒரு தடவை சொன்னார்.
“நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.”
முஸ்லிம்களது வரலாற்றில் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நம்பிக்கை அளிக்கிற தலைவராகவும், உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு சவால்விடுபவராகவும் திகழ்ந்த மஹாதீரின் இந்தக் கருத்து மிகுந்த கவனத்திற்குரியது.
உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கனிசமானது. உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 630 கோடி என்றால் அதில் 150 கோடிப் பேர் முஸ்லிம்கள். அதாவது நால்வருக்கு ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்.
உலகம் முழுவதிலும் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் வாழும் நாடுகளில் கனிசமாக செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள். பெட்ரோலிய பலம், அல்லது கனிம வளம், குறைந்த பட்சம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வாழ்வது, சில பகுதிகளில் அரசியில் ஆளும் தர்ப்பை தீர்மாணிப்பவர்களாக இருப்பது ஆகிய காரணங்களால் அவர்களது செல்வாக்குக்கு குறையொன்றும் இல்லை. என்றாலும் அவர்களது மரியாதை கேள்விக்குரியதாகி இருக்கிறது. இன்றைய சூழலில் அவர்களது கருத்துக்கு மதிப்பு கிடைப்பது இல்லை. அவர்களது மனோ உணர்வு கவனத்தில் கொள்ளப் படுவதில்லை. அவர்களைப் பாதிக்கிற விசயங்கள் குறித்து அக்கறை செலுத்தப் படுவதில்லை. உலக அளவில் கணிசமாக அவர்கள் வாழ்ந்தாலும் இன்றைய நிலையில் அவர்கள் அநாதைகளைப் போல அல்லது கேட்பாரற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக வரலாற்றில் முன்னெப்பேதையும் விட சவாலான சூழலில் உலக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
இந்த்ச் சூழல், முஸ்லிம் சிந்தனையாளர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. வெகு தூரத்தில் எங்காவது, அல்லது எப்பாடு பட்டவது இந்நிலையை மாற்றுவதற்குரிய ஒரு மகத்தான சக்தி வெளிப்படாதா என்று அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருக்குரானும் நபிவழியும் நபித்தோழர்களுடைய வாழ்கைப் பாடங்களும் இந்த இருட்டுப் பள்ளத்திலிருந்து வெளியேற வழி என்ன சொல்கின்றன என்று விழிகளை விரித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பட்ட சிந்தனைகள் முன்வைக்கப் படுகின்றன. கணக்கற்ற யோசனைகள் கடுமையாகவும் மென்மையாகவும் சமுதாயத்திற்கு முன் கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். ஆயிதமேந்திய போராட்டம் ஒன்றே அத்தனை பிரச்சினைகளையும் மொத்தமாக தீர்கக் கூடியது என்று சம்யத் தூய்மைவாதம் பேசிய ஒரு சாரார் உரத்து வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். கல்வி விழிப்புணர்வே முக்கியம் என்று மற்றொரு சாரார் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள், சிறந்த தலைமையை தேடி பலர் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலோர் பொத்தம் பொதுவாக ஒற்றுமை தேவை என்பதை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஒற்றுமைதான் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தென்படவே மாட்டேன் என்கிறது.
உலகின் மிகப் பெரும் ஆச்சரியம் இது தான். அல்லாஹ் அக்பர் என்ற ஒரு வார்த்தையில் குனியவும் நிமிரவும் தாழவும் எழுந்து நிற்கவும் கற்பிக்கப்பட்டு ஒரு ராணுவக் கட்ட்மைப்புக்கு பழக்கப் படுத்தப் பட்ட சமுதாயம், நமை பிரிக்கிற தடைக்கற்களை விட நம்மை பிணைக்கிற கயிறுகளே அதிகம் எனபதை நடைமுறையில் நிரூபித்துள்ள ஒரு சமுதாயம், ஒன்று படுவதற்கான வழிகளை பல கோடிக்கணக்கான வார்த்தைகளில் தேடிக் கொண்டிருக்கிறது.
ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழிகள் என்னென்ன எனபது பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கிறது. குரான் ஹதீஸை பின்பற்ற வேண்டும் என்பதில் தொடங்கி கோகோ கோலாவை புறக்கணிக்க வேண்டும் என்பது வரை ஏராளமான வழிகள் அலசப் பட்டு விட்டன. இந்தச் சூழலில் தான் மஹாதீர் முஹம்மதுவின் இந்தக் கருத்து முன்வைக்கப் பட்டுள்ளது.
“நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.”
யோசிக்க வேண்டிய விசயம் தான். காரணம் இது வரட்டு வேதாந்தம் அல்ல.எதார்த்தமான ஒரு உண்மை.
ஒற்றுமைக்கான வழிகளை த்ததுவார்த்த ரீதியாக தேடிப் புறப்பட்ட பலரும் புறப் பட்ட இடத்திற்கே வந்து நின்றார்கள். அல்லது வழி தெரியாமல் காணாமல் போனார்கள். அல்லது ஆயுதங்ளை தூக்கிக் கொண்டு தங்களது நிம்மதியையும் சமுதாயத்தின் நிம்மதியையும் போலி ஜிஹாதின் சந்தையில் விலைபேசி விற்று விட்டார்கள் காரணம் தத்துவார்த்த ரீதியாக ஒற்றுமையை சிந்த்திததவர்கள் தங்களை மட்டுமே தூய முஸ்லிம்களாக கண்டார்கள். மற்றவர்களை இந்த அற்ப உலகிற்காக மறுமையை அல்லது தீனை விற்றுவிற்றவர்கள் என்று எண்ணிணார்கள்.இதனால் இருதரப்பிற்குமான இடைவெளி இன்னும் அதிகமாகியது. ஒற்றுமை ஒரு படி அல்ல சில நூறு படிகள் தள்ளிப் போனது. அது ஏற்படுத்திய விரக்தி அவர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது. இன்றைய ஜிஹாதியச் சிந்த்னைகள் பெரும்பாலும் விரக்தியில் உதித்ததே தவிர விருப்பத்தில் வந்தது அல்ல. எனவே தான் இன்றைய ஜிஹாதிய அறை கூவல்கள் பிளவுகளை அதிகப் படுத்துகிறது. பிரிவினைக்கு தூபம் போடுகிறது. ஒற்றுமைக்கு உலை வைக்கிறது.
இந்தச் சூழலில் மஹாதீரின் கருத்து தத்துவார்த்த்மாக அல்லாமல் பரீட்சார்த்த நடை முறையில் ஒற்றுமை ஏற்படாமல் போவதற்கான காரணத்தை அலசுகிறது.
உணமையில் முஸ்லிம்கள் ஒருவருகொருவர் உதவிக் கொள்ளாமல் இருப்பது அல்லது உதவிக் கொள்ள முடியாமல் இருப்பது தான் அவர்களது ஒற்றுமையை பெருமளவில் தடுத்து வைத்திருக்கிறது.
மஹாதீர் சர்வதேச அளவில் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்றாலும் நாம் உள்ளூர் அளவில் அதைப் பொறுத்திப் பார்ப்பது இன்றைய சூழநிலைக்குப் பொருத்தமானது.
இஸ்லாம் பரஸ்பரம் உதவி செய்து கொள்வது குறித்து அதிகம் வலியுறுத்துகிறது.
உதவி என்பதை மனிதாபிமானக்கடமை என்றுதான் மற்றவர்கள் சொன்னார்கள். இஸ்லாமோ உதவியை தெய்வ நம்பிக்கையின் ஒரு பகுதி என்று சொன்னது. கடவுளை நம்பி அவனை வழிபட்டு வாழ்வது மட்டுமே தெயவ நம்பிக்கை என்று உலகம் கருதிக் கொண்டிருந்த போது அது மட்டுமல்ல் சக மனிதர்களுக்கு உதவி செய்வதும் அவர்களின் கண்ணீரை துடைப்பதுமே கூட தெய்வநம்பிக்கை சார்ந்தது தான் என்று இஸ்லாம் சொன்னது. இன்னும் கூட சற்று அழுத்தமாக சக மனிதனுக்கு ஏற்படும் துயரிலிருந்து காப்பது தெய்வ நம்பிக்கையின் வெகு சாதாரண நிலை என்று இஸ்லாம் வர்ணித்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
(ஈமான்) இறை நம்பிக்கை, எழுபதுச் சொச்சம் பிரிவுகளை கொண்டது. அதில் உயந்தது லாயிலாக எனும் வார்த்தை. அதில் சாதாரணமானது மக்கள் நடமாடுகிற பாதையில் இடையூறாக கிடக்கிற பொருளை அப்புறப் படுத்துவது. (முஸ்லிம்: 51)
திருக்குரான் பல இடத்திலும் இறைவனை ம்ட்டுமே வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டதற்கு அடுத்த படியாக பெற்றோருக்கும் உற்றாருக்கும் ஏழை எளியவர்கள், அநாதைகளுக்கும் உதவியாக இருங்கள் என்று கட்டளையிடுகிறது.(2:83,4:36.)
இத்தைகய வலியுறுத்தல்களால் ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயத்தில் உதவும் மனப் பான்மை பெருகியிருந்தது. அது எல்லா வகையிலும் வளர்ந்தது. ஆதரவ்ற்றோருக்கும் அடைக்கலம் தேடி வருவோருக்கும் பொருளாலும் அன்பாலும் உதவுவதிலிருந்து ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் போட்டி போடாமல் தவிர்த்து விடுவது வரைக்கும் அனைத்து விசயத்திலும் அந்த உதவி வெளிப்பட்டது,
அத்தகைய உதவிதான் மார்க்கமும் பெரிய அளவில் வளரவும் சமுதாயம் பெரிய அளவில் ஒன்றுபடவும் வலிமையடையவும் காரண்மாக அமைந்தது.
பெருமானார் (ஸல்) அவர்கள் மரணித்திருந்த தருணத்தில் அண்ணலாரது புனித உடல் அடக்கம் செய்யப் படுவதற்கு முன்னதாகவே ஆட்சி அதிகாரம் குறித்த சர்சை எழுந்தது. எதிர்பாராத விதமாக அந்தச் சர்சையில் சிக்கியிருந்த அன்ஸாரி முஸ்லிம்களை பஷீர் பின் ஸஃத் (ரலி) எனும் நபித்தோழர் திசை மாற்றினார். சில பேர் மக்களால் அதிகம் கவனிக்கப் படுவதில்லை. ஆனால் அந்த வரலாற்று நாயகர்களின் பங்களிப்பு இல்லை என்றால் வரலாறே திசை மாறியிருக்கும். பஷீர் பின் ஸஃத் (ரலி) அவர்கள் அதில் ஒருவர். அந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் அன்ஸாரிகளுக்கு அவர்களது பெருமைக்குரிய விசயத்தை நினைவு படுத்தினார். அன்ஸாரிகளே! நீங்கள் பெருமானாருக்கு உதவியாளர்களாக இருந்தது போன்றே அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்களுக்கும் உத்வியாக இருங்கள் என்றார். அவரது வார்த்தைகளால் விழிப்படைந்த அன்ஸாரித் தோழர்கள் அதிகாரத்தில் பங்கு கேட்பதை விடுத்து ஆட்சியாளருக்கு உதவியாக இருப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உதவும் மனப்பான்மை என்பது மனிதர்களை எத்த்கைய உய்ரிய நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது? அத்தோடு அதனால் மனித சமூகத்திற்கும் கிடைக்கிற ந்ன்மைகள் எவ்வளவு அருமையானதாகிவிடுகிறது?
உதவி என்பது இணைப்பை வலுப்படுத்தி ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறது.அதன் காரண்மாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு நெருங்கி வந்தவ்ர்களுக்கு தாராளமாக உதவிகளைச் செய்தார்கள். ஜகாத் எனுன் ஏழை வரியை பெற்றுக் கொள்ளத் தகுதி படைத்தவர்களில் இதயத்தால் நெருங்கி வருபவர்களையும் திருக்குரான் சேர்த்தது இந்தக் காரணத்தால் தான். இதில்ருக்கிற தத்துவ தரிசணத்தை கவ்னிக்க முஸ்லிம்கள் பல நேரங்களிலும் மறந்து விட்டார்கள். பிணங்கி நிற்பவர்களை அல்லது பிரச்சினை செய்பவ்ர்களை சரிக்கட்டுவதற்கு எளிய வழி அவர்களுக்கு உதவி செய்வது என்ற அருமையான யோசனையை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள். கத்தியின்றி இரத்தமின்றி ஒரு எதிரியை இல்லாமல் செய்த்விடுகிற சக்தி உதவிக்கு இருக்கிறது என்பதை திருக்க்ரானுடைய வழிகாட்டுதல்களும் பெருமானருடைய வழி முறைகளும் ஏராளமாக பறையறிவித்துக் கொண்டிருக்கின்றன.
உயிருக்கு பாதுகாப்புக் கொடுத்து, மன்னிப்பை வாரி வழங்கி, பொருளாதார உதவிகள் செய்து, அந்தஸ்துக்களை வாரி வழங்கி பெருமானார் (ஸல்) அவர்கள் செயத உதவிகள் கணக்கற்றோரை மார்க்கத்திற்கு அழைத்து வந்தது. சமுதாயத்திற்கு வலிமை சேர்த்தது என்ற உண்மை புடைத்துக் கொண்டு வெளிப்படுகிற போது முஸ்லிம் சமுதாயம் அதை கவனிக்காமல் இருப்பது ஆச்சரியமானது. இன்றைய நாகரீக மோகத்தில் உதவி செய்வதை ஒரு தொல்லயான விசயம் என்று முஸ்லிம் சமுதாயமும் கருதி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் இஸ்லாமோ தேவையான சந்தர்ப்பத்தில் தகுந்த உதவியை செய்யாமலிருப்பது ஒருவரது இறை நம்பிக்கையையே சந்தேகத்திற்குள்ளாகிவிடும் என்று எச்சரிக்கிறது. பாதையில் கிடக்கிற முள்ளை அப்புறப் படுத்துவது இறை நம்பிககையின் சாதாரண நிலை என்று இஸ்லாம் கூறுகிற போது சாலையில் அடிபட்டு விழுந்து கிடக்கிறவருக்கு ஓடிப் போய் உதவி செய்யாமல் ஓர விழியில் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒதுங்கிப் போய்விடுவது எத்தைகைய தெய்வ நம்பிக்கையற்ற செயல் என்பதை சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்,
திருக்குரான் இன்னொரு இடத்தில் வெளிப்படையாகவும் தெளிவாகவும் ஒரு உணமை வெளிச்சப் படுகிறது. மதமற்றவர்கள் யார் தெரியுமா? யார் உதவி செய்யாது வாழ்கிறார்களோ அவர்கள் தான் என்கிறது. மார்க்கத்தை ஏற்ற்றுக் கொண்டதாக சொல்லிக் கொண்டு மார்க்கத்தை பொய்யாக்குபவர்கள் யார் தெரியுமா என்று கேட்கிற இறைவன் அல்லஹ்வையும் தூதரையும் நம்பாதவர்கள் என்று பதில் சொல்ல வில்லலை. அநாதைகளை வெருட்டுகிறவனும் ஏழைகளுக்கு உண்வளிக்கத் தூண்டாதவ்னிமே மார்க்கத்தை பொய்யாக்குபவ்ர்கள் என்று பதிலளிக்கிறான். (திருக்குரான்: 107:1,2,3)
ஒரு மத்ததின் பிரதான கோட்பாடே உதவி வாழச் செய்த்ல் என்பதாக அர்த்தம் கொள்ள இந்த அறிவுறை நிர்பந்திக்கிறது. இந்தக் காரணங்களால் உதவி வாழுதலின் தேவையும் அதனால் கிடைக்கிற நன்மைகளையும் வெரெவரயும் விட அதிகம் கடைமைப் பட்டுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது. .
தகுந்த சம்யத்தில் உதவி செய்வது சமயக் கடமை என்ற நிலையைத் தாண்டி இன்னொரு உண்மையும் கவ்னிக்கத் தக்கது. தகுந்த சம்யத்தில் செய்யப் படும் உதவி அது சிறியதாக இருந்தாலும் பெரும் பலனை தரக்கூடும். அது எத்தகைய ந்ன்மையை திருப்பித்தரக்கூடும் என்றால் அதை நாம் கனவில் கூட எண்ணியிருக்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்துக்குப் பயணம் செய்து விட்டு திரும்பிய போது, சூழல் அசாதாரணமாக இருந்தது. பெருமானருக்கு இருந்த ஒரே கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போயிருந்தது. மக்காவில் எதிர்ப்பு மனோநிலை கடுமையாகி இருந்தது. யாராவது பலம் பொருந்திய ஒருவருடைய பாதுகாப்பின் அரவணைப்பில் தான் தன்னுடைய சொந்த ஊருக்குள் நுழைய முடியும் என்ற சூழலில் பெருமானார் (ஸல்) அவர்கள் தனக்குத்தெரிந்த பிரபலங்களிடமெல்லாம் அபயம் கோரி ஆளனுப்பினார்கள். அஹ்னஸ் பின் சுரைக், சுஹைல் பின் அம்ர் உள்ளிட்ட பலரிடமும் ஒரு ஆதரவுக் கரம்கோரி கைநீட்டினார்கள். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அந்த அபய்குரலுக்கு செவிசாய்க்க, மனித குலத்தை உய்விக்கவந்த அந்தப் புனிதருக்கு உதவிக்கரம் நீட்ட யாரும் தயாராக இருக்கவில்லை. கடைசியில் முத் இம் பின் அதீ என்ற மனிதர் கரம் நீட்டினார். கருணை காட்டினார். பெருமானார் தன்னுடைய பாதுகாப்பில் மக்காவுக்குள் வரலாம் என்று உறுதிகூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவரது ஆதரவில் மக்காவுக்குள் நுழைந்தார்கள்.
தான் செய்த அந்த உதவி தனக்கு எப்படி அதே போன்றதொரு உதவியை பெற்றுத்தரும் என்று முத் இம் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டார். நிலமையில் ஒரு தலைகீழ் மாற்றம் 5 வருடத்திற்குள் நடந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு பத்ரு யுத்தத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த போது மறுநாள் நடைபெறுகிற யுத்தத்தில் எதிரிகள் பலரயும் அவர்களுடைய பெயரைச் சொல்லி இவர் இங்கு விழுந்து கிடப்பார் இங்கு விழுந்து கிடப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது மறாக்காமல் தனது தோழர்களுக்கு ஒரு உத்தரவைச் சொன்னார்கள். “முத்இமை கண்டால் கொன்று விடாதீர்கள்” என்று கட்டளயிட்டார்கள்.
ஒரு உதவியின் பலன் தனி மனிதர்களுக்கு மாத்திரமல்ல சமுதாயத்திற்கும் பெரிய பாதுக்கப்பாக இருக்க முடியும். பெருமானாரிடமிருந்து உதவி பெற்ற பல்ர் ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயத்திற்கு பல் வகையிலும் பாதுகாப்பாக இருந்துள்ளார்கள், சமுதாயம் வலிமைப் பட உதவிய்ள்ளார்கள் என்பதற்கு நிறைய உதாணங்கள் உண்டு. பெருமானாரால் மன்னித்து விடுவிக்கப் பட்ட வஹ்ஷீ (ரலி) அவ்ர்கள், பிற்காலத்தில் தானும் ஒரு நபி என்று வாதிட்டுக் கொண்டு இஸ்லாத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த பொய்யன் முஸைலமாவை தீர்த்துக் க்ட்டினார் என்ற ஒரு வரலாறே சான்றுக்கு போதுமானது.
ஒரு சமுதாயம் மற்றவர்களூகு உதவி செய்யும் போது அது பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்றால் அது தன்க்குள் உதவி செய்து கொள்ளும் போதே அதன் ஒற்றுமை உறுதிப் படும். ஒரு குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டுமெனில் அக்குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். அண்ணனுக்கு தம்பியோ அத்தாவுக்கு பிள்ளைக்ளோ ஒரு தேவைப் பட்ட தருணத்தில் உதவாமல் இருந்து விட்டால் அப்போது தான் பிரிவினை வெடிக்கும். அது போலத்தான் சமுதாயத்திலும் தேவைப் படுபவர்களுக்கு தேவைப் படுகிற சமய்த்தில் உதவவேண்டும். இல்லை என்றால் சமுதாயத்தின் ஒற்றுமை சந்தேகத்திற்குரியதாகிவிடும்.
உதவி செய்தால் உபத்திரவம் வந்து சேரும் என்று இன்றைய நாகரீகம் சொல்லிக் கொடுக்கிறது. அந்த நச்சுக் கருத்துக்கு இடமளித்து விட்டால் மனித வாழ்வு முடை நாற்றம் பிடித்ததாகி விடும்.
இந்திய தேசத்தை மட்டுமல்ல உலகையே அதிரச் செய்த நொய்டா படுகொலைகள் பச்சிளம் குழந்தைகள் பலரை பலி கொண்டது. அந்தப் படுகொலைகளைவிட திடுக்கிட வைத்த அம்சம் எது என்றால் நகரின் பரபரப்பு மிகுந்த இடத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் இப்படு கொலைகள் அரங்கேறியுள்ளன என்பது தான். அக்கம் பக்கத்திலிருந்த யாருக்கும் பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த கொடூரம் குறித்து எதுவும் தெரிந்திருக்க வில்லை. தன்னை சூழ்ந்திருக்கிற கருகிய பிணவாடையை கூட உணர முடியாதவாறு நாகரீகம் மனிதர்களை மூச்சடக்க வைத்திருக்கிற்து, தொழில் நுட்பம் தொலை தூரத்தில் நட்க்கிற கிரிக்கெட் மேட்சில் விக்கெட் வீழ்நத செய்திய பந்து தரையை தொடுமுன் தந்துவிடுகிறது. ஆனால் பக்கத்து வீட்டில் பல ஆண்டுகளாக வசிக்கும் மனிதர்களைப் பற்றி ஒரு வார்த்தை அளவிற்கு சொல்வதற்கு கூட அறிந்து கொள்ள விடாமல் செய்துவிட்டது.
இந்த விபத்து தொடர்கிற எந்த சமூகத்திலும் மானுடம் கருகிப் போகும். இஸ்லாமின் கருத்துப் படி மார்க்கமும் அற்றுப் போகும். இத்தகைய ம்னோ நிலை முஸ்லிம் சமூகத்தில் நிலவும் என்றால் அங்கு ஒற்றுமை கிளை விட அல்ல, முளைவிட விடக் கூட முடியாது எனவே ஒற்றுமை குறித்த சிந்தனையை நட்டக் கணக்குப் பார்க்காத உதவியில் இருந்து தொடங்க வேண்டும்,
உதவி என்பது பணத்தால் செய்யப்படுவது மாத்திரமல்ல. சில சச்சரவுகளை பொருட்படுத்தாமல் இருப்பது, தொந்தரவுகளை மன்னித்து விடுவது, நல்லுபதேசம் செய்வது, ஆலோசனை வழங்குவது, உரியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது குறைந்த பட்சம் அவதூறுகள் பழிச் சொற்களை வீசுவதிலிருந்து தவிர்ந்து கொள்வது அனைத்துமே ஒருவருக்கு செய்கிற உதவியில் அடங்கும்.
உதவி என்று வரும் போது ஒரு பொதுக் கண்ணோட்டமும் அவசியம். நம்முடையவர்களுக்கு மட்டும் என்ற குறுகிய சிந்தனை உதவியின் மரியாதைய குறைத்துவிடும் மட்டுமல்ல. அது நன்மைக்கு பதிலாக தீமையையே ஏற்படுத்தும். தேவைப்படுவோருக்கு தேவையான தருணத்தில் தேவையான வகையில் உதவ் வேண்டும். எந்த சிறு அடையாளங்களுக் குள்ளும் உதவியை சுருக்கி விடக் கூடாது.
இத்தகைய உதவியை முஸ்லிம்கள் தம் குடும்பத்தில் தொடங்கி மஹல்லாவில் வளர்த்து ஊரளவில் தொடருவார்களானால் ஒற்றுமைக்கான வழிகள் காணல் நீராக இல்லாமல் கண்முன் தெரியக் கூடியாதாக இருக்கும். தனி மனிதர்க்ள மட்டுமல்ல ஜமாத்துகள் நல்ல சங்கங்கள் அமைப்புக்கள் இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கும் சூழ்நிலை வருமென்றால், உரிமை கேட்டு உயரும் கரங்களை விட உதவு செய்ய விரையும் கரங்கள் அதிகமாக இருக்கும். அபோது ஒற்றுமை தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ்வோம் என்ற சிந்தனையை ஒரு உறுதி மொழியாக எடுத்துக் கொள்வோமானால் நம்து பெருநாட்கள் உண்மையில் பெருமைக்குரிய நாட்களாக அமையும். நம்க்கும் சமுதாயத்திற்கும்.
Monday, October 06, 2008
ஜம்மு : இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதம்
நெருப்பில்லாமல் புகையுமா? என்றால் புகையாது தான். ஆனால் உயர் பதவியில் இருந்த இரண்டு பொறுப்பில்லாத மனிதர்கள் மூட்டிவிட்ட சிறு நெருப்பு இந்தியா அரசியல் வானில் இவ்வளவு பெரிய புகை மூட்டத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சிரமாமாக இருக்கும் தான். ஆனால் அது தான் உணமை.
காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் பாரதீய ஜனதாவை சார்ந்தவருமான s.k.சின்ஹா, அமர்நாத் ஷரீன் போர்டின் நிர்வாக அதிகாரியாக இருந்த அருண்குமார் I.A.S ஆகிய இரண்டு பேர் சர்வசாதரணமாக மூட்டிவிட்ட நெருப்பில் காச்மீர் பள்ளத்தாக்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இரண்டு மாதங்கள் மட்டுமே மனிதர்கள் வசிக்க முடிந்த ஒருபனிமலைப் பிரதேசத்திற்கான போராட்டத்தில் இந்திய அரசியலில் வெகுசூடான விசித்திரமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய இலட்சணங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
நாட்டின் 62 வது சுதந்திரதின கொடியேற்றத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீரில் அமைதி ஏற்பட ஒத்துழைப்புத்தாருங்கள் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சகதிகளிடம் கையேந்தாத குறையாக கோரிக்கக வைத்திருப்பது அந்த விசித்திரங்களில் முதல் அம்சம். ஆனால் இத்தனைக்கும் சூத்திரதாரியான ஆர் எஸ் எஸ் ,ரக்சியமாக ஜம்மு பகுதிக்கு ஆட்களை அனுப்பி வன்முறைத் தீயை வளர விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர் எஸ் எஸின் ஊதுகுழலான பாரதீய ஜனதா மக்களின் எரிகிற பிரச்சினை பற்றி சிறீதும் கவலைப் படாமல் “நிலத்தை திருப்பிக்கொடுத்தால் அமைதி திரும்பும்” என்று வாயாடிக் கொண்டிருக்கிறது.
இது நாடு முழுவதிலும் வகுப்புவாத தீயை பற்றவைத்து விடக்கூடாதே என்று தேசியச் சக்திகள் அச்சப் பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் 13 பேரை வைத்துக் கொண்டு இல.கணேசன் சென்னை அண்ணாசாலையில் அமர்நாத யாத்ரீகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது அவலமாகிப் போன அரசியலின் அசிங்கமான வெளிப்பாடு என்றால் தொட்டதற்கெல்லாம் பெணகளை இழுத்துக் கொண்டுபோய ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் முஸ்லிம் அமைப்புக்கள் அமர்ந்நாத்தின் நிலவரம் குறித்து பத்ரிகைகளில் லாபியிங் கூட செய்யத் தெரியாமல் விழிப்பது இந்திய முஸ்லிமகளின் கையாளாகாத்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. .
150 வருடங்களுக்கு முன்பு, அமர்நாத் குகையை பதான்கோட் நகரின் பூடாமாலிக் என்கிற ஒரு முஸ்லிம் குடியானவர் தன் கால்நடைகளை தேடும்போது முதன்முறையாக கண்டுபிடித்தார். காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் 3,888 மீட்டர் உயரத்திலும் உள்ள இந்த அமர்நாத் குகையின் உட்புறத்தில் லிங்கம் (ஆண் இன உறுப்பின் மாதிரி வடிவம்) ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி காஷ்மீரின் பனிப் பொழிவு மாதங்களில் மீண்டும் உருப்பெறுகிறது. இயற்கை சூழலில் உருவாகிற இச்சிலையை கடவுளின் வடிவம் என்று கருதி இந்துக்களில் ஒரு சாராரான் சைவர்கள் வழிபடுகிறார்கள். அதாவது வழிபட யாத்திரை செய்து வருகிறார்கள். இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிகுத் தெரிவித்ததார் என்ற புராணங்களும் பிற்பாடு கருத்துக் கொண்டன. இங்கு பார்வதி மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளதாக கூறப்படுகிற அதே வளையில் சமீபத்தில் பனி லிங்கம் கரைந்த போது கோயில் நிர்வாகம் யாத்ரீகர்களை கவர்வதற்காக் செயற்கையாக லிங்கத்தை உருவாக்குகிறது என்ற சர்ச்சையும் எழுந்ததுண்டு. குகை, கோயில், லிங்கம் என்ற விசய்ங்களைத் தாண்டி பனிமலைகளை கடந்து பயணம் செய்கிற ஒரு வீர தீர பயணம் என்ற அளவிலும் இது யாத்ரீகர்களை கவர்ந்து வருகிறது.அதனால் ஒரு காலத்தில் சன்னியாசிகளும் வாழ்ந்து முடித்துவிட்டவர்களும் பயணம் செய்த இந்த இடத்திற்கு இபோது சுற்றுலா மோகத்தில் இளைஞர்களும் இளைஞிகளையும் திரளாக வர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் காஷ்மீர் மாநிலத்துக்கு தாள் ஏரிக்கு அடுத்த படியான சுற்றுலா மையாமாக அம்ர்நாத மாறியிருக்கிறது.
இந்திய தீப கற்பத்தின் உச்சியில், இமய மலையின தென்மேற்குப் பகுதியில் இந்திய சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் காஷ்மீரில் உள்ளது. இரண்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அங்கு 15 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அதில் தொன்னூறு சதவீதம் போர் முஸ்லிம்கள். பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே அங்கு இந்துக்கள் வாழ்கிறாகள்.
காஷ்மீர் கடந்து அரைநூற்றாண்டுகளாக எரிந்துகொண்டிருக்கிற ஒரு கனல். கடந்த இருபது ஆண்டுகளில் நாற்தாயிரம் முஸ்லிம்களை அது பலி கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று பேசப் பட்டாலும் சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சியில் காஷ்மீர் ஹுர்ரரிய்யத் அமைப்பின் தலைவர் மீர்வாயிஸ் உமர் பாரூக் , இந்தியர்களே ! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அது ஒரு பிரச்சினைக்குரிய பகுதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்! என்று சொன்னது போல பல்த்தை சர்சைக்கும் சச்சர்வுகளுக்கும் உள்ளான் உள்ளாகிக் கொண்டிருக்கிற ஒரு பகுதி அது. (விரிவான தக்வலுக்கு பார்க்க: சம்நிலச் சமுதாயம் மாத இதழ்.
அங்கு முழுக்க முஸ்லிம்கள் வாழ்கிற பகுதியில் கடந்த 150 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற அமர்நாத யாத்திரை ஆரம்பத்தில் இரட்டை இலக்கங்களில்தான் இருந்தது. தொன்னூறுகளின் வாக்கில் அமர்நாத பிரபலமடைந்தது. இப்போது அது லர்சக்கணக்கானோர் பயணம் செய்யும் ஒரு யாதிரைத்தலமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த வரை நடிகர் ரஜினிகாந்த இமயமலை பயணம் போவார் என்ற செய்தி பிரபலாகிய அளவுக்கு அமர்நாத யாத்திரை இன்னும் பிரபல்மாகவில்லை என்பதே உணமை, யாத்திரை சிறு அளவில் இருந்ததலிருந்து இன்று வரை அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் ஒத்துழைப்போடுதான் நடக்கிறது என்பதும் காஷ்மீரில் உள்ள பிரிவினைக் குழிவினர் கூட யாத்திரையை தடுக்க முயற்சித்ததில்லை. இன்னொரு வார்த்தையில் சொவதானால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்கள் முஸ்லிம்களின் ஒத்துழைப்பில்லாமல் இந்த யாத்திரையை இத்தனை காலம் தொடர்ந்திருக்க முடியாது.
“காஷ்மீரில் முஸ்லிம்கள் இருக்கும் வரையில் அமர்நாத் யாத்திரை தொடரும்” என மக்களவையில் கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா கூறியதை அவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேசையைத் தட்டி வரவேற்றனர் எனபது அமர்நாத யாத்திரை விசயத்தில் காஷ்மீர் உள்ளிட்ட இந்திய முஸ்லிம்களின் கருத்து என்ன என்பதை நாடு அறிந்து ஏற்றுக் கொண்டதற்கான பாராட்டாக அமைந்தது.
இத்தகைய சூழலில் அமர்நாத் கோயில் விவகாரம் எப்படி சர்சைசயில் சிக்கியது என்பதும். இக்கோயில் நிர்வாகத்திற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை வழங்க அனுமதித்த, முஸ்லிம்களை பெருவாரியாக கொண்ட மக்க ஜனநாயக் கட்சியே அதை திரும்பப் பெறும்படி அரசை நிர்பந்தித்து ஏன்? அரசுக்கு வழங்கிய ஆதரவினை வாபஸ்பெற்றது ஏன் என்பதும் இப்போது இந்திய மக்களின் முன் எழுந்துள்ள பிர்தான கேள்வியாகும்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகத்திற்காகவும் பாம்பூரில் இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு என்றும் பல ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு தரப் பட்டது. இந்துக்களுக்களின் கோயிலுக்கு தேவையான நிலம் தரப்பட வில்லை என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அது உண்மையை திரித்து போலித்தனமாக மக்களிடம் மதவாத வெறியேற்றுவதற்காக சொல்லப் படுகிறது என்றாலும் அதன் பின்னணி என்ன? என்பதை அறிவதும் இப்போதைய அவசியத் தேவையாகும்.
இந்தப் பரந்த தேசத்தின் மக்களுக்கு, விரிந்த வசதிகளைக் கொண்ட ஊடகங்கள் தேசத்தின் ஒரு முக்கியமான பிரச்சினையில் சரியான செய்தியை கொண்டு போய்ச் சேர்க்கவில்லை என்பது இந்தியாவை பிடித்திருக்கிற ஊடக பயங்கர வாத்ததின் ஊமை வெளிப்பாடாகும். தினகரன் நாளேடு சென்னை அண்ணாசாலையி இலகணேசன் நடத்திய அலம்பலை எழுதுகிற போது அமர்நாத யாத்திரையை முஸ்லிம்கள் தடுப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார் என்று எழுதியிருந்தது. கல்யாண வீட்டு வாசலில் எச்சில் இலைகளுக்காக காத்திருக்கிற பிச்சைக்காரர்களைப் போல பத்ரிகையாளர் சந்திப்பின் இறுதியில் கவரில் விழும் சில்லைரைகளுக்கா காத்திருக்கிற செய்தியாளர்கள் பெருகி விட்டசூழலில் செய்திகளை தேடி எடுத்து அதை காய்தல் உவத்தல் இன்றி அலசிச் சொல்லுவோர் அரிதாகிப் போவிட்டனர். பத்ரிகை அல்லது பத்ரிகயாளர் போர்வையில் இயக்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் அடிமைச் சாசணம் எழுதிக் கொடுத்து விட்ட அலிகளின் எண்ணிக்கையும் செய்தித் துறையில் பெருகிவிட்டது. இதனால் அமர்நாத யாட்திரையாளர்களுக்கு வசதி செய்து கொடுப்பதை முஸ்லிம்கள் தடுக்கிறார்கள் அதுதான் இப்போதையா பிரச்சினை என்று பலர் தவறாக விளங்கியிருக்கிறார்கள். உனமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா தடம் போட்டுக் கொடுக்க ஆர் எஸ் எஸ் அமைப்பு காஷ்மீர் விசயத்தில் தனது கன்வுத்திட்டத்தை அமுல்படுத்த மேற்கொண்ட ஒரு வெள்ளோட்டமே இந்தக் கலவரங்களின் தொகுப்பு. அமர்நாத் யாத்திரை விவகாரத்தில் நடைபெற்ற சில உள்ளடி வேலைகளின் வரலாற்றை கொஞ்சமாக புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.
நூற்றம்பது ஆண்டுகளாக நல்லபடியாக நடந்து வந்த அமர்நாத யாத்திரையில் 1996 ம் ஆண்டு ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த ஆண்டு பணிப்புயலுக்கு பலியாகி 250 யாதிரீகள் இறந்தனர். அதை தொடர்ந்து யாதிரீகளுக்கு வசதிகள் செய்து தருவதற்காக நிதிஸ் சென்குப்தா தலைமையிலான் கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டது
அந்தக் கமிட்டி அமர்நாத குகைகோயில நிர்வகிக்கவும் யாத்ரீகர்களின் தேவைகளை கவனிக்கவும் ஒரு நிர்வாகக் குழுவை ஏற்படுத்த பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது தான் அமர்நாத் செரீன் போர்டு. 2000 மாவது ஆண்டில் பரூக அபதுல்லா வின் தலைமையிலான முஸ்லிம்களின் அரசாங்கம் தான் இந்த போர்டை நியமித்தது. முஸ்லிம்கள் யாத்திரையயோ அல்லது அதற்கு வச்திகள் செய்து தருவதையோ தடுக்க நினைத்திருந்தால் பிரச்சினைக்குர்ய இந்த ஷ்ரீன் போர்டே வந்திருக்காது. ஆனால் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை. ஷரீன் போர்டு காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறையின் கீழ் சிறப்பகவே நிர்வகிக்ப் பட்டு வந்தது.அதன் மூலம் கழிப்பிட வசதி உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கப் பட்டு வந்தன.
இன்றைய பிரச்சினை 2003 ம் ஆண்டு காஷ்மீர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற கே.எஸ். சின்ஹா வின் வடிவத்தில் முளைவிட்டது.
பொதுவாக காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர்கள் பண்டைய இந்தியாவை ஆட்சி புரிந்த பிரிட்டிஷின் வைஸ்ராய்களைப் போலவே நட்ந்து கொள்கின்றனர் என்பது அதிகம் பேசப் படாத நிஜம், காஷ்மீர் மாநில ஆளுநருக்கு வழங்கப் பட்டுள்ள அதிக அதிகாரமும் அங்குள்ள் ராணூவத்திற்கு தனி சட்ட உரிமைகள் வழங்கப் பட்டிருப்பதும் ராணுவத்தின் ஒரு கண்ட்ரோல் ஆளுநரிடம் இருப்பதும் மாநில அரசு என்ற ஒரு அமைப் பையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்தது. ஆளுநரை தாஜா செய்து அல்லது மாஜா வாக வைத்திருக்கும் மாநில மாநில முதல்மைச்சரே சிரமிமின்றி மாநிலத்தை ஆளமுடியும் என்ற நிலையில் பாரதீய ஜனதாவைச் சார்ந்தவரான ஆளுந்ருக்கு இந்துக்களுக்காக தான் எதையாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. ஷ்ரீன் போர்டின் தலைவராக இருந்த ஆளுநர் சின்ஹா ஷ்ரீன் போர்டுக்கு முழு நேர அலுவலராக அருண்குமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தார். ஷ்ரீன் போர்டு என்ற பெரைப் பயன்படுத்தி இந்த இருவரும் அடித்த கூத்துதான். அமர்நாத் விவகாரத்தை சிக்கலாக்கியது. மாநில அரசின் சுற்றுலாத்துறைக்கு கீழே நிர்வகிக்க்ப் பட்டு வந்த ஷ்ரீன் போர்டு ஒரு தனி அரச்சாங்கத்தையே அமர்நாத்தில் நடத்த தொடங்கியது. சின்ஹா, மாநில அரசின் ஒப்பு தல் இல்லாமலே, தன்னிச்சையாக வன இலாகாவிற்கு சொந்த மான 100 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு ஒதுக்குவதாக அறிவித் தார்.
அருண்குமார் தன் பங்குக்கு அதிக உரிமை எடுத்துக் கொண்டு வனப் பகுதிக்கு சொந்தமான கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தில் பெரிய அலுவலக்ம கோயிலுக்கு எதி திரட்டுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். ஒருகட்டத்தில் அவரது அதிகப் படியான செயல் அந்தப் பகுத்தியில் வசித்துப் வந்தவர்களை துரத்தும் நோக்கில் அமைந்தது. பாரப்பரியமாக சுற்றுலாப் பய்ணிகளுக்கு உதவுவதன் மூலம் பல்வேறு காண்டிராக்ட் வேலைளைச் செய்து பிழைத்து வந்த அமர்நாத பகுதி மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக அங்கிருந்த பல்வேறு கட்டிடங்களை அருண்குமார் இடித்துத்தள்ளத் தொடங்கினார். இதுவே எரிகிற தீயில் எண்ணை வார்த்தது. பிரச்சினை சூடுபிடித்தது. உள்ளூர் மக்கள் முறையிடவே அப்போதைய முதல்வர் முப்தீ முஹம்மது இடிக்கும் பணிக்குத் 2005 ம் ஆண்டு தடை விதித்தார்.
அப்போது இந்தியா வில் வேறு எங்கும் நடக்க முடியாத ஒரு ஆச்சரியம் நடந்தது. மாநில அரசின் ஒரு அதிகாரியே அந்த அரசின் நிர்வாக உத்தவுக்கு எதிர்ரன் மாநில உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். உயர்நீதிமன்றம் ஷ்ரீன் போர்டு இடிப்புப் பணியை தொடர அனுமதித்தது. அந்தப் பகுதியில் பாரம்பரிய்மாக வசித்து வரும் மக்களின் நன்மையை கவனிக்காமல் ஒரு அரசு இருக்கமுடியாது என்ற நிலையில் பிரச்சினையை ஏற்படுத்திய அருண்குமாரை மாநில அரசு கோயிலின் நிர்வாக அதிகாரப் பொறுப்பிலிருந்து நீக்கியது.
இந்த உயர்நீதிமன்ற உத்தரவின் மிதப்பில் ஷ்ரீன் போரடின் தலைவரான மாநில ஆளுநர் சின்ஹா வனத்துறையின் 100 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு மாற்றித்தருமாறு மாநில அரசுக்கு கடிதம் அனுப்பினார். இந்த பிரச்சினை இப்போது காஷ்மீரி மக்களா? ஷரீன் போர்டா என்ற இருமுனப் போட்டியாக உருவெடுத்த சூழலில் அரசாங்கம் அக்கடிதத்தை கிடப்பில் போட்டது.
ஜம்முவைச் சார்ந்தவரான குலாம் நபி ஆஸாத் காஷ்மீரின் புதிய முதல்வராக் பொற்ப் பேற்ற பிறகு ஆளுநரின் நெருக்குதல் காரணமாக இந்த ஆண்டு மே 26ம் தேதி மாநில அரசு பாலாட்டலில் உள்ள 38 ஹெக்டேர் நிலத்தை 2.5 கோடிக்கு பதிலாக மாற்றிக் கொடுக்க ஒப்புக் கொண்டது. அப்போது வனத்த்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த காஷ்மீர் மக்கள் ஜனநாயக் கட்ட்சியை சார்ந்த ஒருவர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஒரு முஸ்லிமின் தல்மையிலிருந்த அமைச்சரவை ஒரு முஸ்லிம் அமைச்சரின் ஒப்புதலோடு அமர்நாத கோயிலின் வசதிக்காக 100 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக மாற்றிக் கொடுத்தது. இந்தச் சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண்குமார் ஐ.ஏ.ஏஸ் நிலம் வழங்கப் பட்டது நிரந்தரமானது என்று பேட்டியளித்தார்.
ஏற்கெனவே சின்ஹாவின் தலைமையில் இருந்த ஷ்ரீன் போர்டின் சர்சைக்குரிய நடவ்டிக்கைகளால் அதிருப்தியுற்றிருந்த மக்கள் இதனால் அதிக கோபமுற்ற போராட ஆரம்பித்தார்கள். ஆளுநரின் நடவ்டிக்கையில் அதிருப்தியுற்ற முப்தி முஹம்மதின் மக்கள் ஜனநாயக் கட்சி நிலத்தை திரும்பப் பெறுமாறும் யாத்ரீகர்களுகான பணிகளை காஷ்மீர் சுற்றுலாத்துறையே மேற்கொள்ளுமாறு நிர்பந்தித்தது. ஒரு கட்டத்தில் அக்கட்சி குலாம் நபி ஆஸாத்துக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கவே குலாம் நபி ஆஸாத் பதவியை ராஜினாமா செய்தார். அவ்வாறு ராஜினாம செய்வதற்கு முன்னதாகவே அருண்குமார் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ள சூழலில் அடுத்த யாத்திரைக்கான ஏற்பாடுகள சுற்றுலாத்துறையே மேற்கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்து முடித்திருந்தார்.
இந்த சூழ்நிலையி காஷ்மீரின் புதிய ஆளுனரான வோரா விசயம் தவறான போக்கில் சென்று தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை கருத்தில் கொண்டு, யாத்ரீகர்களுக்க்கு வசதி செய்து கொடுப்பது முக்கியமே தவிர யார் செய்வது என்பது முக்கியமல்ல என்பதை உணர்ந்து, ஒன்று மில்லாத ஒரு விசயத்திற்காக மாநிலத்தில் ஒரு பெரும் மோதல் ஏற்படுவாதை தடுக்கும் நோக்கில் தற்காலிக நிலம் வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற்றார். அவரே ஷரீன் போர்டின் தலைவர் என்ற முறையில் அரசிடம் நிலம் கோரிய ஷரீன் போர்டின் கோரிகை ம்னுவையும் திரும்பப் பெற்றார்.
தன் கட்சியைச் சார்ந்த ஆளுநர் மாற்றப் பட்ட உடனேயே கலவ்ரத்துக்கு தயாராகிவிட்ட பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துதுவ சக்திகள், ஆளுநர் வோரா அரசின் முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றதும் அமர்நாத சங்கர்ஷ் சமிதி (அமர்நாத் போராட்டக் குழு) என்ற பெயரில் திட்டமிட்டு ஜம்முவிலேயே கலவரத்தை தொடங்கின. ஆர் எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றும் பல முன்னாள் ராணுவத்தினர் ஜம்முவிற்கு அனுப்பிவைக்கப் பட்டனர். அவர்கள் வெகுசுதந்திரமாக ஜம்முவிலிருந்தை முஸ்லிம்களின் வீடுகளையும் வியாபார நிறுவனங்களையும் சுறையாடினர். பல நூற்றுக்கணக்கான குஜ்ஜார் இன முஸ்லிம்களை வீடுகளை விட்டு துரத்தினர். முஸ்லிம்களை மட்டுமல்லாது இக்கலவரத்துக்கு எதிராக இருக்கிற இந்துக்களையும் மிரட்டினர், ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். ஆளுநர் வோராவின் நிர்வாகமும் மத்திய அரசும் அந்த வன்முறையாளர்களை தடுத்தால் இந்துக்களின் எதிரி என்ற குற்றச் சாட்டுக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தே வாளாவிருதனர். கிட்டத்தட்ட குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப் பட்டதை ரகசியமாக அனுமதித்த மோடி அரசாங்கத்தின் செயலை ஒத்ததாக இது அமைந்தது. மீடியாக்கள் கூட சட்டஒழுங்கை நிலை நிறுத்த முயற்சி செய்யாமல் இது என்ன வேடிக்கை? என்று கேட்கும் அளவு மத்தியை ஆளும் காங்கிரஸ் வாளாவிருந்தது. பிரச்சினை அதுவாகவே ஒரு தீர்வைத் தேடிக் கொள்ளும் என்ற காங்கிரஸின் கர்ண பரம்பரை அனுகுமுறையையே காங்கிரஸ் இதிலும் கடை பிடித்தது.
இதற்குள்ளாக ஜம்முவில் வன்முறை இரண்டு வாரங்களை கடந்து எல்லை மீறிக்கொண்டிருந்தத்து. ஆரம்பத்தில் மெலிதாகப் பரவிய வன்முறை அரசு கேட்பதற்கு வராது என்பதை தெரிந்து கொண்ட பிறகு ஜம்முவில் நிலமை வரலாறு காணாத வகையில் தீவிரமானது.ஏராளமான போலீஸ்காரர்கள் தாக்கப் படுவதாக செய்திகளும் புகைப் படங்களும் தினசரி வந்து கொண்டே இருதன. ஜம்முவிற்கு வெகு அருகில் காஷ்மீரில் இந்தியாவின் அனைத்து வகையான ராணுவ அமைப்புக்களும் இந்திய ராணுவத்திலுள்ள அனைத்து வகையான ஆயுதங்களோடும் தயாராக இருக்கிற சூழ்நிலையில்,மத்திய அரசின் பேச்சு வார்தை நடவ்டிக்கைகள் ஒரு வகையில் நீரோவை நினைவூட்டுகிற காட்சிகளாக தெரிந்தன. ஜம்மு காஷ்மீர் சம்பந்தப் பட்ட இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப் பட்ட குழுவில் முஸ்லிம்கள் இடம் பெற்றதை கூட ஜம்முவின் வன்முறையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பரூக் அபதுல்லாஹ் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பின்வாங்கிக் கொண்டனர். இந்துத்துவ சக்திகளைத் தவிர நாட்டிலுள்ள் அனைத்து அரசியல் வாதிகளையும் கவலையுறச் செய்த விசயம் இது, என்றாலும் நாட்டிற்குள் ஒரு மாதவாத மோதலை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸின் திட்டத்தை புரிந்து கொண்ட அவர்கள் அவ்வாறு நடந்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக அமைதி காத்தனர். தான் இறங்கிய வன்முறைத் திட்டம் இன்னும் போதுமான அளவில் நடந்து முடியாத சூழலில் ஆர் எஸ் எஸ் அமர்நாத் சங்கஷ் அமிதியை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் போராட்டத்தின் கால அளவை ஏதோ பொருட்காட்சிக்காண காலக்கெடுவை நீட்டிப் பதுபோல நீட்டிக் கொண்டிருந்தார்.
ஜம்முவிற்குள் இறக்குமதி செய்யப் பட்டிருந்த இந்துத்துவ வன்முறைய்ளர்கள் காஷ்மீரின் பொருளாதாரத்தை முடக்க திட்டமிட்டு காஷ்மீரை இந்தியாவுடன் தொடர்பு படுத்திவைத்திருக்கிற ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் காஷ்மீருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் செல்வது தடைபட்டது. இதன் அதிகபட்ச விளைவாக காஷ்மீரின் மாவட்ட மருத்துவமனையில் ம்ருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது (கிரேட்காஷ்மீர் நாளிதழ்)
இதன் பிறகே காஷ்மீரில் நிலமை மாறத்தொடங்கியது. தங்கள் மீது ஒரு பொருளாதார தடையை ஏற்படுத்தி எச்சிக்கை செய்ய ஆர் எஸ் எஸ் திட்டமிடுவதை புரிந்து கொண்ட காஷ்மீரிகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத, தங்களது விளைபொருட்கள் வீணாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஆபத்தான அந்த முடிவை எடுத்தனர். பாகிஸ்தான் ஆகரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸப்பராபாத் நகருக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்தனர்.
ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்ச்சலையில் போக்கு வரத்து தடை செய்யப் பட்டு காஷ்மீரில் உள்ள பல் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாக்கப் பட்டதை கண்டு கொள்ளாமகல் இருந்த ராணுவம் காஷ்மீரிகள் முஸப்பராபாத பேரணியை தடுப்பதற்கு மட்டும் சுறுச்றுப்பகாக இறங்கியது. அப்போது அதன் துப்பாக்கிகளுக்கு சூடும் சொரனையும் வந்தது. பேரணியினரை நோக்கி ராணுவம் சுட்டதில் பேரணீக்கு தலைமையேற்ற ஹுர்ரிய்யத் அமைப்பின் தலைவரான ஷேக் அப்துல் அஸீல் கொல்லப் பட்டார்.
ஷேக் அஸீஸின் படுகொலையை நேரில் கண்ட பிலால் அஹ்மது பி.பி.சி யிட்டம் பேசுகையில், பாரமுல்லா விலிருந்து 35 கீமி தொலைவிலுள்ள் ராம்பூர் பகுதியில் ஒரு பெரும் பேரணி வந்த போது ராணுவத்தினர் ஊர்வ்லத்தை தடுத்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அங்கேயே நின்றுவிட்டனர். பெருமளவில் கோஷங்கள் முழக்கங்களும் போடப் பட்டுக் கொண்டிருந்தன. ஷேக அஸீஸ் ராணுவ்த்திற்கு பேரணி அமைதியாகவே நடைபெறும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தார். பதிலுக்கு ராணுவத்தினர் சரமாரியாக சுட்டனர். அந்த இடத்திலேயே ஒரு 16 வயதுப் பையன் இறந்து விழுந்தான். கடுமையாக காயமுற்றிருந்த ஷேக் அஸீஸ் மருத்துவ மணையில் உயிர்ரிழந்தார் என்று கூறினார்.
ஷேக் அஸீஸின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீர் பற்றி எரியத் தொடங்கியது. லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ஊர்வலங்ளில் கூடினர். 13 வருடங்களுக்கு பிறகு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டது. காஷ்மீர் ஹுர்ரிய்யத் அமைப்பின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டனர்.
இந்திய ராணுவம் தன் பங்குக்கு ருசித்து பழகிவிட்ட காஷ்மீரிகளின் ரத்தத்தை மீண்டும் குடிக்கத் தொடங்கியது. தேசத்திற்காக என்ற பெயரில்காஷ்மீரில் கட்டவிழ்த்து விடப்பட்ட ரானுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆகஸ்ட் 17 ம் தேதிவரை பலியானோரின் எண்ணிக்கை 22 ஐ தொட்டது. இருநூற்றுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயமுற்றிருக்கின்றனர்.ராணுவம் காஷ்மீரிகளுக்கு தன்னுடைய வழமையான செய்தியை சொல்லிவிட்டது. ஷேக அப்துல் அஸீஸஸின் படுகொலை காஷ்மீரி அமைபுகளின் தலைவர்களுக்கு கொடுக்கப் பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கை என்று செய்தி விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சொரனையற்ற இந்தியா என்று இதுவரை புலம்பியா இந்தியா டுடேயின் எஜாமனர்கள் ஓரளவு தாக சாந்தியடந்திருக்கக் கூடும். ஆனால் இந்தச் சொரனை ஜம்முவில் அப்பாவிகளின் வீடுகளையும் கடைகளயும் சேதப்படுத்தி வருகிற இறக்குமதி செய்யப் பட்ட இந்து பயங்கரவாதிகளை நோக்கி ஒரு முறையாவது துப்பாக்கியை திருப்பியிருக்கும் என்றால் ஜம்முவில் இருபது நாட்களாக தொடரும் வன்முறை இரண்டு மணிநேரத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் இந்திய அரசின் இரட்டை அணுகுமுறையால் காஷ்மீரில் பொசுக் பொசுக் என்று வெடிக்கிற அரசாங்கத்தின் துப்பாக்கிகள் ஜம்முவில் மட்டும் கருணை பனியில் நனைந்து போய்விடுகிறது.
காஷ்மீரின் தெருக்களில் மீண்டும் ஆஜாதி கோஷம் அதிரத் தொடங்கியிருக்கிறது. அங்குள்ள அமைப்புகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளனர். அது சுதந்திரக் காஷ்மீருக்கான இறுதிகட்ட போராடடத்தை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார தடையை கண்டித்து சீனாவின் ஆதிக்கத்திலிருக்கிற காஷ்மீரின் ஒரு பகுதியை நோக்கியும் பேரணியினர் செல்லப் போவதாக ஒரு தகவல்வருகிறது
ஸ்ரீநகரில் உள்ள ஐநா சபையின் ராணுவ கண்காணிப்பு குழுவின் அலுவலகத்திற்கு வெளியே பள்ளத்தாக்கின் பல் பகுதிகளிலிருந்தும் வந்து குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்கள் திரளினிடையே பேசுகிற போது ஹுர்ரிய்யத் கவுன்ஸ்லின் தலைவர்களில் ஒருவரும் மிதவாத எண்ணம் கொண்டவர் என்று அனைத்து தரப்பினராலும் கருதப் படுகிற மீர் வாயிஸ் உமர் பாரூக் காஷ்மீரின் அடைப்படையான பிரச்சினையில் கவனம் செலுத்த காலம் வந்துவிட்டதாக கூறுகிறார். காஷ்மீரின் சுய நிரணய உரிமையை காப்பதற்காக நேரிடையாக தலையிடுமாறு ஐ நா வுக்கு அழைப்பு விடுக்கிறார். காச்மீரிகளின் கருத்துக் கணிப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். ஜம்முவிலும் காஷ்மீரிலும் முஸ்லிம்களின் வாழ்வுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறிய மற்றொரு பிரிவிணை வாத தலைவர் அலிஷா கீலானி இந்தப் பகுதியில் ஐநா ஒரு சார்பற்ற அமைதிப் படை ஒன்றை நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறார். ஒரு நீண்ட கால ராஜ தந்திர முயற்சியின் பயணாக சர்வதேச அரங்கில் காஷ்மீர் பிரச்சினை எழுப்பப் படுவதை ஒரு கட்டுக்குள் வத்திருந்த இந்திய அரசின் கலகலத்துப் போயிருக்கிறது.
ஜம்முவில் ஏற்பட்டுவருகிற கொந்தளிப்பு இது ஒரு நில விவாகாரம் என்ற எல்லையை கடந்து பள்ளத்தாக்கை இந்திய மய்மாக்கும் முயறிசியாக உருவெடுத்திருப்பதக இந்து வலது சாரியான தருன் விஜய் எழுதுகிறார். ஆர் எஸ் எஸ் ஸின் திட்டத்தை அவர் அவசர்ப்பட்டு வெளியிட்டுவிட்டதாகவே தோன்றுகிறது ஆனால் நிலமை அவரது கற்பனையை பொய்ய்க்கி அடங்கியிருந்த பிரிவினை வேட்கையை இதுவரை இல்லாத அளவில் கிளப்பி விட்டிருக்கிறது.
ராணுவத்திடம் விட்டுவிடுங்கள் அது தீவிரவாதிகளை கவ்னித்துக் கொள்ளும் என்று சி.என்.என்.ஐ.பி.என் நடத்திய மக்கள் மன்றம் நடத்திய நிகழ்ச்சியில் பாரதீய ஜனதாவின் சார்பில் பேசிய ஒருவர் கூறினார். அதைதானே இருபது வருடங்களாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ன சாத்திதீர்கள் என்று இடை மறிக்கிறார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒருவர்.
ஜம்முவில் ஒரு இந்து துப்பாக்கி சூட்டிற்கு பலியானதற்காக குய்யோமுறையோ என்று இந்த்துதுவ சார்பு ஊடகங்கள் கதறுகின்றன. குல்தீப் குமார் என்ற இளைஞனை போலீஸ்காரர்கள் அவனது குடும்பத்திற்கு கூட தெரிவிக்காமல் நாட்டுச் சாராயத்தை ஊற்றி டயரை வைத்து எரிப்பதை ஒரு துறவி பார்த்த்தாகவும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸ் கூறுகிறது
இது போல பல் ஆயிரக்கணக்கான கதைகள் காஷ்மீரிகளிடமும் உண்டு என்பது நாட்டுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்தக் கதையை சொல்லி இந்துக்களை தூண்டிவிடுவது தருண் விஜய்க்கும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸுக்கும் நியாயமாகுமென்றால் கல்யாண வீட்டிற்குள் திடிரென்று நுழைந்து கண்மண் தெரியாமல் சுட்டு பத்துக்கும் மேற்பட்டோரை கொன்ற பிறகு தவறாக சுட்டுவிட்டதாக கூறும் ராணுவத்தைப் பார்த்து அதை நிர்வகிக்கும் அரச்சங்கத்தைப் பார்த்தும் மக்களுக்கு ஏற்படுகிற கொந்தளிப்பு எத்தைகயதாக இருக்கும் ? என்ற கேள்விக்கு மட்டும் யாரும் விடை சொல்ல மறுக்கிறார்கள்!
அமர்நாத் கோயிலுக்கான நில விவகாரத்தில் நீத மன்றத்தீர்ப்புக்கு ஏற்ப யாத்திரை நடைபெறுகிற மூன்று மாதங்களில் அந்தப் பகுதி ஷ்ரீன் போர்டுக்கு தரப்படும் என்றும். அங்கு தற்காலிக செட்களை அமைத்துக் கொள்வது என்றும் தற்போதைய இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு காணப் பட்டிருக்கிறது. நியாய உனர்வு மிக்கவர்கள் தற்ப்போது எட்டப்பட்டிருக்கிற தீரவை கண்டு இதற்குத்தான் ஆசைப்பட்டாயா என்ற ஸ்டெயில் கேள்வி கேட்கின்றனர். இது தான் ஏற்றுக் கொள்ளப் பட்ட விசயம்தானே! இதற்க்காகவா இத்தனை சீரழிவுகள் என்று கேட்கின்றனர்?. ஆர் எஸ் எஸுக்கு அமர்நாத விசயத்தில் அக்கறை உன்றும் கிடையாது. அது தனக்கே உரித்தான குரூர வழியில் மக்களை பிளவுபடுத்துவதில் வெற்றி கண்டுவிட்டது என்பது அவர்களுக்கு தெரியாது.
.

Tuesday, August 19, 2008
பெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும்.
இது ஒரு சர்சையான, அல்லது சிக்கலான தலைப்பு என்று தான் பலரும் முதலில் நினைப்பார்கள். எனெனில் வீடுகளுக்குள்ளளேயே பெண்கள் ஒடுங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புவதாக அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவே வலுவில் பெண்களை அரசியல் அரங்கிற்கு இழுத்து வருகிற ஒரு திட்டத்தை இஸ்லாம் அறவே ஏற்றுக் கொள்ளாது. அப்படை வாத முஸ்லிம்களும் இதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்தத தலைப்பு ஒரு சுமூகமான தலைப்பாக இருக்க முடியாது என்று அவர்கள் கருதக் கூடும். உணமை நிலவ்ரம் அப்படி அல்ல.
பெண்கள் கவர்ச்சிப் பொருளாக, ஆன்களின் காமப் பசிக்கு இலக்கானவர்களாக கருதப் பட வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதே இஸ்லாமின் குறிக்கோள். இதற்காவே இஸ்லாம் பர்தா உள்ளிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளை பெண்களுக்காகச் செய்துள்ளது. அதே போல சமூக ரீதியாக சில சீர்கேடுகளை கலைவதற்காக ஆணும் பெண்ணும் சகஜமாக கலந்துறவாடுவதை தடை செய்துள்ளது.
ஒழுக்கம் பண்பாடு கட்டுப்பாடு சார்ந்த எந்த விசயத்த்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்க்கும் இஸ்லாம் சமமான எல்லைக் கோடுகலையே வரைந்துள்ளது. கற்பெனப்படுவதை பொதுவில் வைட்ப்போம் என்ற தீர்மாணத்தை பாரதி பாடுவதற்கு 14 நுற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சட்டமாக்கி அமுல் படுத்தியும் விட்டது. இது விசய்த்தில் பாலின வித்தியாசம் என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை. ஒழுக்க மீறல்களுக்கான தண்டனை எதுவும் பெண்களுக்கென்று தனிப்பட்டு இஸ்லாத்தில் விதிக்கப் படவில்லை. ஒழுக்க மீறலுக்கான இஸ்லாமின் தண்டனைகளை பெண்களுக்கு எதிராண நடவடிக்கையாக சிலர் பேசுவது திட்டமிட்ட விஷமப் பிரச்சாரமாகும்.
பர்தா ஒழுங்கைப் பேணி பெண்கள் சம்பாத்தியத்தில் ஈடுபடவோ, சமுதாயப் பணிகள் ஆற்றவோ, எந்தத் தடையும் இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம் சமுதாயமும் பெண்களின் பங்களிப்பை ஏற்பதில் எந்த வித சஞ்சலத்திற்கும் ஆளானதில்லை. பெண்கள் ஒரு பொருட்டக மதிக்கப் படாத கால கட்டத்தில் நபிகளள் நாயகத்தின் அருமைத் துணைவியார் ஆயிஷா அம்மையார் அறிவித்த 2100 நபிமொழிகளை எந்த வித சலனமும் இன்றி முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டது. அவரது வார்த்தகள் சட்டவிதிகளாக ஏற்கப் பட்டன. நபிகள் நாயகத்தின் துணைவி என்பதால் இந்தத் தனிச்சிறப்பு என்று யாரும் கருதிவிடக்கூடாது. மற்ற பெண்மணிகள் அறிவிக்கும் நபிமொழிகளும் ஏற்கப் பட்டன. சில கட்டங்களில் ஆண்களது கருத்துக்களைவிட மேலானதாக பெண்களது கருத்துக்கள் ஏற்கப் பட்டன. உதாரணத்திற்கு, நோன்பின் சமயத்தில் சஹர் நேரத்தில் குளிக்க வேண்டிய நிர்பந்த நிலையில் இருக்கிற ஒருவர் குளித்துவிட்டுத்தான் சஹர் சாப்பாட்டைஉண்ண வேண்டும் என்று அபூஹூரைரா (ரலி) அவர்கள் சொல்ல, தேவையில்லை சாப்பிட்டுவிட்டு பிற்கு குளித்துக் கொள்ளலாம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போது அன்னை ஆயிஷாவின் அறிவிப்பு ஏற்கப் பட்டது. அதுவே சட்டமாக பரிணாமம் பெற்றது. போர்க்களத்தில் போராட பெணகள் அழைக்கப் படவில்லை என்றாலும் சூழ்நிலைகலின் நிர்பந்தத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் செய்த சண்டைகள் ஏற்கப் பட்டன. யுத்த காலங்களில் மருத்துவம் போன்ற பணிகளில் பெணகளின் உதவி வரவேற்கப் பட்டிருக்கிறது. கல்வி மற்றும் சட்டப் பணிகளில் அவர்களது பங்கேற்பும் பங்களிப்பும் மிகுந்த மரியாதையோடு வரவேற்கப் பட்டிருக்கிறது. இது அத்தைனையும் பெண்கள் அவர்களுக்கு இஸ்லாம் வகுத்திருக்கிற எல்லைகளில் இருந்து ஆற்றிய பணிகளாகும்.
இஸ்லாத்தின் அந்த எல்லைகள் பெண்களை எந்த மூலையிலும் முடக்கிப் போட்டுவிடவில்லை. ஹஜ்ஜுக்கு செல்கிற விசயத்தில் பெண்களுக்கு தர்ப்பட்டிருக்கிற அங்கீகாரமும் அது ஆண்களைப் போலவே அவர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருப்பதும்- கூட பெண்களை ஆண்களுக்கு இளைத்தவர்களாக இஸ்லாம் கருதவில்லை என்பதற்கு போதுமான சான்றாகும். அதே நேரத்தில் ஹஜ்ஜுக்கு செல்கிற பெண் தகுந்த துணை ஒன்றுடன் தான் செல்ல வேண்டும் என்பது ஒரு சரியான பார்வையில்ல் இஸ்லாம் பெண்களளைப் பார்க்கிறது என்பதை அறிந்து கொள்ளப் போதுமானது.
ஆணக்ளைவிட அதிகம் பயப்படுகிற அல்லது பதட்டப் படுகிற அவளது குண இயல்பு கருதியும், பாதுகாப்புக் குறைவான அவளது உடல் இயல்பு கருதியும் சில பாதுகாப்பு உபயங்களை இஸ்லாம் வகுத்திருக்கிறது. அவ்வளவே!
இதே இயல்புகளின் அடிப்படையில் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்புக் கருதி அவளை சில பணிகளை மேற்கொள்வதிலிருந்து இஸ்லாம் தடுத்து வைத்திருக்கிறது. அதில் ஒன்று ஆட்சி செய்வது. இது பெண்ணை அவமானப் படுத்துவதோ மலினப் படுத்துவதோ அல்ல. பெண்களுக்கான இந்தத் தடைகள் தவிர்க்க முடியாதவை. உலகில் பெண்களுக்கு அதிக உரிமைகளை வழ்ங்கியிருக்கிற நாடு என்று பெறுமைப் படுகிற அமெரிக்காவில் சுமார் 65 க்கும் மேற்பட்ட துறைகள் பெணக்ளுக்கு உரியவை அல்ல என்று தீர்மாணிக்கப் பட்டிருக்கிறது. ஏன் இன்று வரை அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண் தேர்ந் தெடுக்கப் பட்டதில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் அவர்களது வசீகரமிக்க மனைவி ஹிலாரி போட்டியில் தற்போதைக்கு முன்னிலையில் இருப்பதாக ஒரு தோற்றம் தெரிந்தாலும் அவர் அமெரிக்க அதிபராவதற்கான் வாய்ப்பு இல்லை. ஒருக்கால் அவர் அதிபராகிவிட்டால் அது அதிசயம்தான் என்று சொல்கிற அரசியல் ஆய்வாளர்கள் அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். உலகின் அதிக அதிகாரம் மிக்க அந்தப் பதவிக்கு ஒரு பெண் வருவதை அமெரிக்கர்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் காரணம் ஆச்சரியமானதல்ல. எதார்த்தமானது. கம்யூனிஸ்ட்களின் கனவு தேசமான ரஷ்யாவிலும் இதே நிலை தான். கேரளாவில் ஒரு பெண்மணி முதல்வ்ராதை ஜாதியத்தின் பெயரால் தட்டித்தகர்த்தவர்கள் நமது கம்யூனிஸ சகாவுகள் என்பதையும் ஒரு ஓரத்தில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதே போல ஆசிய நாடுகள் பல்வற்றிலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பெணகள் பலரும் அவர்களைச் சார்ந்த ஆண்களின் நிழலில் ஆட்சிக்கு வந்தவர்களேயன்ற்றி தமது அரசியல் திறனில் வந்தவர்கள் அல்ல. (இதில் ஆட்சிக்கு வந்தபிற்கு சிலரது திறமை பிரகாசித்தது என்பது உண்மைதான்). உலகின் எந்த நாட்டு ராணுவத்திற்கு ஒரு பெண் தலைமையேற்றிருக்கிறார் என்பதும் விடை இல்லாத கேள்விதான். இந்த வகையில் தான் சர்வ வல்லமை படைத்த தலைமப்பீடத்தை, அரச பட்டத்தை ஒரு பெண் ஏற்பதை தவிர்க்குமாறு இஸ்லாம் கூறியுள்ளது.
ஆனால், சில நேரங்களில் சந்தர்ப் சூழ்நிலைகள் காரணமாக பெண்கள் ஆட்சிப் பொறுப் பேற்றதை இஸ்லாம் கீழ்த்தர்மாக விமர்ச்சிக்க வில்லை. இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களது காலத்தில் யமன் தேசத்தின் ஒரு பகுதியை ஒரு பெண்மணி அரசாண்டதை குறிப்பிடுகிற திருக்குரானிய வசனங்கள் எதுவும் அது குறித்து இரண்டாந்தரக் கண்ணோட்டம் கொண்ட எந்தச் சொல்லையும் உதிர்க்கவில்லை. ஆனால், அவரது முடிவெடுக்கும் மேதமையை திருக்குரான் பறைசாற்றியுள்ளது.
சரவ அதிகாரம் மிக்க தலைமை பீடத்தை பெண்கள் ஏற்பது குறித்து இஸ்லாம் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் அவர்களது அரசியல் அதிகாரத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக முடக்கிவைக்கிற எந்த உத்தரவையும் வெளிப்படையாக கூறவில்லை.
அதே நேரத்தில் அரசியலில் கருத்துச் சொல்லும் தகுதி பெண்களுக்கு உண்டு என்பது ஏற்கப் பட்டிருக்கிறது. உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று ஆயிஷா அம்மையார் கோரியதையும் அதற்காக அவர்கள் போராட்டத்திற்கு தயாரானதையும் இஸ்லாமிய வரலாறு கண்டிருக்கிறது. தகுதியுடைய பெண்கள் அரசியலில் பங்கேற்பது தடுக்கப் படவேண்டியதல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு இந்த சின்ன சான்று போதுமானதா என்ற கேள்வி எழுந்தாலும் தவிர்க்க முடியத சந்தர்ப்பங்களில் இத்தைகை நிலைப் பாட்டை ஏற்பதில் தவ்று இருக்க முடியாது.
அத்தைகய தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இந்திய முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது.
இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையில் கடந்த மே மாதம் 7 ம் தேதி சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்ககளுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகம் பாரளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்கொள்கிற ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த சட்டமுன்வடிவு இதற்கு முன் பலமுறை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடக்க நிலைய்லேயே முடக்கப் பட்டுவந்தது.
1975 ம் ஆண்டு இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து ஆய்வதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான அவைகளில் பெண்களின் பங்கு குறைவாக இருப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. அப்போது இட ஒதுக்கீடு கோரிக்கை எற்கப் படவில்லை.
1993 ம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தி 73 வது 74 பிரிவுகளின் மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்ட போது பெண்களுகான தனி இட ஒதுக்கீடு குறித்து ஆராய ஒரு குழு கீதா முகர்ஜியின் தலைமையில் நியமிக்கப் பட்டது. அந்தக் குழு பெண்கள்ளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரியது. அதே கால கட்டத்தில் உலகின் பல் பாகங்களிலும் நடந்த பெண்ணுரிமை மாநாடுகளில் இதே கோரிக்கை முன் வைக்கப் பட்டு வந்தது. குறிப்பாக 1995 சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் இந்த கோரிக்கை அழுத்தமாக முன் வைக்கப் பட்டது. பீஜிங்க் மாநாட்டின் தொடர்ச்சி யாக அதிகாரத்தில் பெண்களுக்குகு 33 சத்வீத ஒதுக்கீடு கோரிக்கை வலிமைபெற்றது. உலகம் முழுவதிலும் பெண்கள் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து போராட துவங்கின். உலகில் உழைக்கும் வர்க்கத்தில் மூன்றில் ஒரு ப்ங்கு பெண்கள் இருக்கிறார்கள் என்ற சதவீதக் கண்க்கே இந்த 33 சதவீதம் என்ற கோரிக்கைக்கு காரணம். பாகிஸ்தனில் 22.5 சதவீத இட ஒடுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.
1990 களின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்ட்சித் தேர்தலில் இந்தியாவின் பல் மாநிலங்களிலும் பெண்களுக்கு 33 சதவித ஒதுக்கீடு வழங்கப் பட்டது. சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் இதை அமுல்படுத்த அரசியல் கட்சிகள் விடவில்லை. பாரதீய ஜனதா கட்சி தலைமை தாங்கிய கடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது இதன் முன்வடிவு சமர்ப்பிக்கப் பட்ட போது அப்போதைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி இதை கடுமையாக எதிர்த்து ம்சோதா பேப்பரை கிழித்துப் போட்டார்கள். அவர்கள் வெளிப்படையாக் எதிர்த்தார்கள் மற்றவர்கள் உள்ளுக்குள் அதை ரசித்தார்கள். உணமையில் எந்த அரசியல் கட்சிக்கும் இந்த மசோதாவில் உளமார்ந்த பற்றில்லை. காரணம் முதலில் அந்தக் கட்சிகளின் நிர்வாக அமைப்புக்களில் பெண்களுக்கு ஒரு பத்து சதவீதம் கூட பொறுப்புக் கிடையாது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அதனால் தங்களது அரசியல் இருப்ப்பு பறிபோய்விடும் என்று அஞ்சுகிற தலைவர்கள் ஒரு பக்கம். இத்தனை பெண்களுக்கு எங்கே போவது என்று கவலைப் படுகிற கட்சித் த்லைமை மறுபக்கமாக இம்மசோதா விழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத ஒரு அந்தர நிலையில் இருந்தது. தங்களது முற்போக்கு அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கடந்த ஆறு வருடங்களாக இம்மசோதாவுக்கு ஆதர்வளிப்பதாக சொல்லத் தவ்றவில்லை. இதை எதிர்த்த அரசியல் கட்சிகள் கூட குயுக்தியாக சில பிரச்சினைகளை கிளப்பி இம்மசோதாவை மடக்க முயன்றன்வே தவிர உண்மையான பிரச்சினைகளை அவை முன் வைக்கவில்லை. எனெனில் எந்தக் கட்சியும் பழைமைவாத முத்திரையை ஏற்கத் தயாரக இல்லை.
இந்தச் சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்களின் நிர்பந்தம், பாரதீய ஜனதாவை வென்றெடுக்க வேண்டிய தேவை, சோனியாவின் தலைமை இத்தனை காரணங்களும் மொத்தமாக சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ம்சோதாவை முன்வைக்க வேண்டிய நிர்பந்தத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தி விட்டது.
கடந்த மே 7ம்தேதி மசோதா முன்வைக்கப் பட்ட போது ராஷ்ட்ரீய ஜனதா தளமும் சமாஜ்வாடி த்னதா தளமும் அதற்கு முட்டுக் கட்டை போட முயன்றன. ஆனால் அதையும் மீறி மசோதாவை தாக்கல் செய்வதில் காங்க்ரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இப்ப்தைக்கு மசோத சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நிலைக்கு குழுவிற்கு அனுப்பப் பட்டுள்ளது. அந்தக்குழு மகக்ளிடமும் அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்று ம்சோதாவை இதே வடிவில் தக்கல் செய்வதா? அல்லது திருத்தம் செய்து தாக்கல் செயவதா என்பதை முடிவு அரசுக்கு தகுந்த அலோசனைகளை சொல்லும். அதன் பிறகு மக்களைவைல் தாக்கல் செய்யப்படும். இது அரசியல் சாசண சட்ட திருத்த்மாக இருப்பதால் பிற்கு இம்ம்சோதா மாநிலங்களுக்கு அனுப்பப் படும். இரண்டு பங்கு மாநிலங்கள் இம் ம்சோதாவை ஏற்றுக் கொண்டன் என்றால் அதன் பிறகு ஜனாதிபதியின் கையெழுத்திற்காக இதுஅனுப்பப் படும். ஜனாதிபதி கையெழுத்திட்ட பிறகே இது சட்டமாக ஆகும். அந்த வகையில் இந்த மகளிர் இட் ஒதுக்கீடு ம்சோதா சட்டமாவதற்கு இன்னும் நீண்ட பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆயினும் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இம்மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பது போல காட்டிக் கொள்வதால் இம் மசோதா சட்டமாவதற்கான வாய்ப்ப் முன்பைவிட அதிக பிரகாசமாகவே இருக்கிறது.
ஒருக்கால் இம்மசோதா நிறைவேற்றப் பட்டால் அப்போது பெரிதும் தர்மசங்கடத்துக்குள்ளாக போவது முஸ்லிம் சமுதாயமாகத்தான் இருக்கும். எனேனில் முஸ்லிம் வெற்றி பெற்தற்கான வாய்ப்புள்ள தொகுதிகள் பெண்கள் தொகுதிகளாக அறிவிக்கப் படுகிற வாய்ப்பு அதிகம். உள்ளாட்சி தேர்தல்களின் போது இது அனுபவப்பூர்வமாக உணரப்பட்டது. முஸ்லிம்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பெண்கள் தொகுதியாக மாற்றப் படுவது அரசு நிர்வாகத்தின் திட்டமிட்ட சதியா? அல்லது எதார்த்தமாக நடக்கிறதா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு இடையில் இந்தப் பிரச்சினை வந்து விட்டது. இப்போது இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து முடிவெடுத்து வைக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை.
முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் அரசியலில் ஈடுபாடோ ஆர்வமோ காட்டுவதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமைய வில்லை. இப்போது அதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் சாக்கடையை விட கேவலாமக எல்ல விதமான சீர்களுக்கும் மூலகாரண்மாக இருக்கிற அரசியல். மற்றொருபக்கம் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு இழ்த்துவரவேண்டிய நிர்பந்த்தத்திற்கு ஆளாகியிருக்கிற சூழில் முள்ளில் சிக்கிய ஆடையை கவனமாக எடுக்கிற லாவகத்தொடு இந்தப் பிரச்சினையை சமுதாயம் கையாள வேண்டியிருக்கிறது. அதற்கு சில யோசனைகளை இங்கு சமர்ப்பிக்கிறேன். சமுதாய அக்கறையுள்ளவர்கள் இதை பர்சீலிக்கட்டும்.
மார்ர்க வரையரைகளுக்கு உட்பட்ட பெண்கள் அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ளும் மன்ப் பக்குவத்திற்கு சமுதாயம் வரவேண்டும்,
இதற்காக பெண்களை ஆயத்தப் படுத்தவும் வேண்டும்
மார்ர்க அறிஞர்கள் அதை அனும்திக்கவும் வேண்டும்.
போதுமான செல்வாக்கும் தகுதியும் இல்லாத பெண்கள் அரசியலில் ஈடுபடும் போது சில நேரங்களில் அது அவர்கள் சீரழிவதற்கு காரணமாகி வைடுகிறது. பல் அரசியல் கட்சிகளின் மக்ளிர் அணியினரப் பற்றிய செய்திகள் அவலட்ச்ண்மாக இருப்பது அவ்ர்களது சமூக பொருளாத நிலையே காரணம், என்வே முஸ்லிம் சமூகத்திலிலுள் வசதி படைத்த தலைமைத்துவ தகுதியுள்ள ஓரளவு வயதான பெண்கள் தேர்தல்களில் போட்டியிடவும், அரசியல் ஆர்வம் காட்டவும் வேண்டும். அத்தகைய நிலையிலுள்ளவர்களை அவர்க்ளைச் சார்ந்தவர்கள் ஊக்கப் படுத்த வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் சில அச்சங்களை கலைய இது உதவும். அதே போலமுஸ்லிம் சமூகத்தின் பொது மக்களும் அரசியலில் ஈடுப்டும் பெண்கள் குறித்து தவறுதலாக பேசக் கூடாது.
மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸம்த் சாஹிப் அவர்களது மகளாரும் மில்லத் ஹஜ் சர்வீஸின் உரிமையாளர் முஸப்பர் அவர்களது துணைவியார்மான பாத்திமா முஸப்பர். ஒரு வார இதழின் பர்தா குறித்த் கேள்விக்கு இஸ்லாம் முஸ்லிம் பெண்கள் முக்காடிட்டு முடியை மறைக்க வேண்டும் என்று சொன்னதே தவிர மூளையை மறைக்கச் சொல்ல வில்லை என்று சொன்ன போது அது சமுதாயத்தின் கவுரவத்தை கட்டிக்காப்பதாக இருந்தது. இது போன்ற பல பெண்கள் அரசியலுக்கு வருவது சமுதாயத்திற்கு நன்மையாகவே அமையும்.
மார்க்க அடிப்படையில் இத்தகைய பெண்கள் தயார் படுத்தப் படவில்லையானால் நஜ்முல்ல ஹிப்பதுல்லா போன்ற முஸ்லிம் சமுதாயத்தின் மரியாதையை பங்கப் படுத்துகிற பெண்கள் மட்டுமே அரசிய்லுக்கு கிடைப்பார்கள்.

Sunday, March 09, 2008
தாராபுரத்தில் ஒரு குஜராத்திய முன்னோட்டம்?
முஸ்லிம்கள் கனிசமாகவும் செல்வாக்காகவும் வாழ்கிற பகுதிகளில் இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட இந்துத்த்துவா சக்திகளுக்கு தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது ஒரு நமச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது. அந்த நமச்சலை தீர்த்துக்கொள்ள மேற்கொள்ளப் பட்ட ஒரு நடவடிக்கை தான் தாரபுரத்தில் அரங்கேறியிருக்கிறது. தாரபுத்தில் உள்ள ஒரு பள்ளிவசலில் பன்றியை கொன்று வீசியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரு நகரங்களில் தாராபுரமும் ஒன்று. 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அந்நகரில் சுமார் 25 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். தாராபுரம் நகர் மன்றத்தின் 30 உறுபினர்களில் நால்வர் முஸ்லிம்கள்.தாரபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர்கள் 1.70,000 பேரில் முஸ்லிம்கள் 23 சதவீதம் இருப்பதாக நகர் மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட் பகுதிகளில் 12 பள்ளிவாசல்கள் இருக்கின்றன். அவற்றில் சில் நூற்றாண்டுகள் கண்டவை. இந்தப் பகுதியில் பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழ்கிற நகரங்களில் தாராபுரமும் ஒன்று. தாரபுரத்தின் புற நகர்ப் பகுதியான கண்ணன் நகரில் உள்ள மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசலில் 2007 டிஸம்பர் 7 ம் வியாழக்கிழமை நள்ளிரவில் யாரோ சிலர் ஒரு பன்றியை கொன்று விசியிருக்கிறார்கள்.
மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் அதைப் பார்ர்த்து அதிர்ந்துள்ளனர். நூற்றுக்கும் குறைவான முஸ்லிம்கள் வாழ்கிற புற நகர்ப் பகுதி அது. தொழகைக்கு வந்த நான்கைந்து முஸ்லிம்கள் அக்கம் பக்கத்திலுள்ள இந்துக்களிடம் விசயத்தை தெரிவித்துள்ளனர். அவர்களும் பதறிப் போயிருக்கிறார்கள். இந்தக் அக்கிரமத்திற்கு எதிராக தங்களது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இந்துக்கள் சிலரும் உடன் சென்றுள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவர் சம்பத்தும் உடன் இருந்துள்ளார். அன்று ஜீமா தொழுகைகுப்பின் ஒன்று கூடிய ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் காவல் துறை உயர் அதிகாரியை சந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். முஸ்லிம்களை சமாளிப்பதற்காக காவல் துறை அப்பகுதியைச் சார்ந்த கருணாகரன் என்பவரை கைது செய்து மிக விரைவாக அவரிடமிருந்து ஒப்புதல் வாக்கு மூலத்தையும் பெற்று குண்டர் தடை சட்டத்தில் அடைத்துள்ளது காவல் துறையின் நடவடிக்கை முஸ்லிம்களுக்கு திருப்தியளிக்கவில்லை. வெள்ளிக் கிழமையை தேர்வு செய்து, ஒருவர் மட்டுமே இக்காரியத்தை செய்திருக்க முடியாது. இதன் பின்னணியி ஒரு திட்டமிட்ட கூட்டுச் சதி இருக்கிறது என்று கருதிய அவர்கள் இதில் தீர விசாரணை செய்து சம்பந்தப் பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு போரடியுள்ளனர். காவல் துறை அவர்களது கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. அதனால் ஆவேசமுற்ற முஸ்லிம்கள் அடுத்த வெள்ளிக்கிழ்மை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர். காவல் துறை அனுமதிக்க மறுத்துள்ளது. மேல் நடவடிக்கை குறித்து தாராபுரம் ஐக்கிய ஜமாத் நிதானமாக யோசித்துக் கொண்டிருந்த போது தங்களது மாநிலத்தலமை உத்தர்விட்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டு த.மு.மு.க. த.த.ஜ. உள்ளிட்ட அமைப்புக்கள் தடையை மீறி ஊர்வலம் செல்ல முடிவெடுத்துள்ளனர். ஜனவரி 4 ம் தேதி தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 2500 முதல் 3000 ஆயுரம் பேரை காவல் துறை கைது செய்து, அன்று மாலை விடுதலை செய்துள்ளது.
இதற்கிடையே சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களிலேயே அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்திய இந்து முன்னணியினர் முஸ்லிம் பயங்கரவாதிகள் வேணுமென்றே இவ்வாறு செய்து விட்டு இந்துக்கள் மீது பழிபோடுவதாக பேசியுள்ளனர். தாராபுரம் இந்துக்களுக்கு பாதுகாப்புக் கோரி கருத்தரங்கம். மோசமாகவும் கடுமையாகவும் பேசியுள்ளனர். நகருக்குள் துண்டுப் பிர்சுரங்களையும் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர். பதற்றமான ஒரு சூழ்நிலையில் இத்தகைய ஒரு கூட்டத்திற்கு காவல் துறை எப்படி அனுமதி கொடுத்தது என்று உள்ளூர் வாசிகள் வியப்புத்தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாசலில் பன்றியை வீசியிருப்பது முஸ்லிம்களை மிக வேகமாகவும் எளிதாகவும் பதட்டமடையச் செய்வதற்காக மேற்கொள்ளப் பட்ட உத்தியாகும். ஈன குணம் கொண்ட கிராதகர்ளை வேறு யாரும் இந்த இழி செயலை செய்திருக்க முடியாது. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்து முன்னணியின் ராமகோபாலன் அங்கு வந்து சென்றுள்ளார். குஜராத்தில் இப்படித்தான் முஸ்லிம்கள்மீது அக்கிரமத்தை அரங்கேற்றுவதற்கு முன் அங்குள்ள பள்ளிவாசலில் பன்றியை கட்டிவைத்துள்ளனர். இந்த்துத்துவா சக்திகள் தமிழகத்திலும் அப்படி ஒரு கலவரத்தை அரங்கேற்றுவத்ற்கு ஒத்திகை பார்க்கிறார்களா என்பதை உன்னிப்பாக் கவனிக்க வேண்டியது தமிழக அரசினுடைய பொறுப்பு.
தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக உள்ளூர் முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள் என்று தெரிகிறது. காவல் துறையின் நடவடிக்கை போதுமானதல்ல என்ற கருத்து தாராபுரம் நகர மக்கள் பலருக்கும் இன்னும் இருக்கிறது. அங்குள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக அமுங்கியிருந்த இந்துத்துவா சக்திகளின் ஆத்திர மூட்டுகிற செயல்கள் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் தலை தூக்கியிருப்பது கவலை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆயினும் தங்களது அதிருப்தியை ஒரு கட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். அதுவே புத்திசாலித்தனமும் நன்மை பயக்கக் கூடியதுமாகும்.
ஒரு அளவுக்கு மேல் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டு செல்வது இந்துத்த்துவா சகதிகளுக்குத்தான் லாபமாக அமையும். இப்படிச் செய்துவிட்டார்களே என்று ஆத்திரப் படுவதை விட இதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என்பதை யோசிப்பதும் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடாமல் பார்த்துக் கொள்வதுமே புத்துசாலித்தனமாகும். நகரத்தில் முஸ்லிம்கள் மீது குரோத்ததை ஏற்படுத்துவதும், நகர மக்கள் மத்தியில் நிலவுகிற நல்லிணக்கத்தை குலைப்பதும் இந்துதுதுவா சக்திகளின் பிரதான நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற தாரபுரம் மக்கள் வாய்ப்பளிக்க வில்லை என்பது நிம்மதியளிக்கிற விசயம். சம்பவம் நடந்த உடனே பல அரசியல் கட்சியினரும் அப்பகுதியில் வசிக்கிற இந்துக்கள் பலரும் இந்த அக்கிரமத்திற்கு எதிராக இருந்தார்கள் என்ற செய்தி இந்த தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையளிக்கிற செய்தியாகும். இததகைய மக்கள் சக்தியின் சங்கமத்தை பார்க்கிற சாத்தான்கள் பொறாமையிலும் விரக்தியிலும் எரிந்து சாம்பலாகிப் போவார்கள். பொதுவான மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலமே இத்தீய சக்திகளை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தாரபுரத்தில் ஒரு கோயிலிருந்த சிலைகள் காணாமல் போயின. இது முஸ்லிம்களின் பழிவாங்கும் செயல் இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணியினர் எகிறிக் குதித்தனர். காவல் துறை விரைந்து செயல்பட்டு சிலைகள் ஒரு கிணற்றில் வீசப்பட்டிருப்பதை கண்டுபிடித்த்தது. அதில் முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை என்பதையும் கண்டுபிடித்தது. இதற்குப் பிறகும் ராம கோபாலன் அங்கு வந்துள்ளார். அதன் விளைவாக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் வேண்டு மென்றே தாராபுரத்தில் ஒரு நாள் கடையடைப்பை அறிவித்திருக்கிறார்கள். பிரச்சினையை பயந்து வியாபாரிகள் யாரும் கடையை திறக்க வில்லை எனினும் இந்தச் செயல் அனைத்து வியாபாரிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் பள்ளிவாசலில் பன்றி வீசப்பட்ட போதோ, தடையை மீறி போராட்டம் செய்த போதோ முஸ்லிம்கள் இத்தகய அராஜகம் எதையும் செய்ய வில்லை என்பது அவர்களிடம் நல்ல சமிக்ஞயை உருவாக்கியிருக்கிறது.
முஸ்லிம் அமைப்புக்கள் இயக்கங்கள் அமைப்புக்கள் சுய விளம்பரத்திற்கு முயற்சித்து காரியத்தை கெடுத்துவிடாமல் இந்த உண்மையை புரிந்து அதற்கேற்ப நடக்கிற வரை முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்குமான இந்த நட்புறவு தொடரும். தாராபுரம் ஐக்கிய ஜமாத் பொறுப்பை உணர்ந்து விரைவாகவும் விவேகமாகவும் செயல்படும் என்றால் அத்தகைய விபத்துக்கள் எதுவும் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். அவர்களால் தான் நகரிலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் பிர்முகர்களையும் அணுக முடியும். அதன் மூலம் சமூக நல்லைணக்கத்தை கட்டிக்காக்க முடியும் என்று தாராபுரம் நகரைச்சார்ந்த சமூக அக்கறையுள்ள பலரும் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் வலிமையாக இருந்து களப்பணியாற்றியிருக்கிற பகுதி இது. இப்போதோ அந்தப் பேச்செல்லாம் தாத்தா பாட்டி கதையாகிவிட்டதால் ஐக்கிய ஜமாத் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று ஆக்கப் பூர்வமாக செயல் பட வேண்டிய தருணம் இது. அது உறுதியாகவும் விரைவாகவும் முடிவெடுக்க் தயங்கும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தின் சௌஜன்ய வாழ்வு கேள்விக்குரியதாக ஆகக் கூடும்.தாராபுரத்தின் நிகழ்வை கருத்தில் கொண்டு, தமிழ்கத்தின் மற்ற பகுதிகளில் உள்ள் முஸ்லிம் ஜமாத்துக்களும் விழிப்போடும் எச்சரிக்கையோடும் செயல் பட வேண்டியது அவசியம்.
ராமகோபாலைனப் போன்ற அருவருப்பான ஆசாமிகள் தமது மதிப்புமிகுந்த வாழ்க்கையில் விளையாடிவிட முஸ்லிம்கள் அனுமதித்து விடக்கூடாது. 200 மில்லி சாராயத்துக் காக அந்த அருவருப்புக்களின் ஆணைக்கு கட்டுப்பட்பவர்களைப் பார்த்து அனுதாபப் பட பழக வேண்டுமே தவிர தமது பொன்னான நேரத்தையும் உழைப்பையும் பாழ்படுத்தும் செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது. அந்த அருவருப்புக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கலவரங்களும் பதற்றமும் எங்கு நிகழ்கிறதோ அங்கு தான் அவர்களால் வளர முடியும். அதற்கான தூண்டுதலை செய்வதை கைவந்த கலையாக கொண்டிருக்கிறார்கள்.
தாரபுரத்தில் ஒரு கலகத்திற்கு தூண்டில் போட முயன்ற தீய சக்திகள் இந்தப் பன்றியை அதன் கொக்கியில் மாட்டி வீசியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் மீண்கள் தூண்டில்காரனை தண்ணீருக்குள் இழுத்துப் போட்டு விட்டு தங்களது பாதையில் பயணிக்கப் பழகிவிட்டன. அந்தப் பயணம் தொடரட்டும். இந்துத்துவா வீழட்டும். இந்திய தேசம் வாழட்டும்.

Subscribe to:
Posts (Atom)