Friday, July 30, 2010

திருமணப் பதிவுச் சட்டம் - தீராக் குழப்பம்!

2009 நவம்பர் 24 ம் தேதி முதல் தமிழகத்தில் நடை பெறுகிற அனைத்து திருமணங்களையும் அரசுப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்ததிலிருந்து அரச்ல் புரசலாக கிளம்ம்பியிருந்த புகை மூட்டம் நாட்கள் செல்லச் செல்ல “எங்கள்து பிணங்ககளின் மீது சென்று தான் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும்” என்ற சவடால் வரை வளர்ந்துள்ளது.

80 களின் பிற்பகுதியை நினைவூட்டும் ஒரு போராட்டச் சூழலுக்கு முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்லும் ஆவேசப் பேச்சுக்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன
· 2009 ம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி "அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
· உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும்'
· கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.’
· மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.
· சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும்.
· விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள் அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
· பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது

இச்சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது உண்மையே என்றாலும் அந்தச் சலனம் திருமணப் பதிவை எதிர்த்து அல்ல.

ஏனேனில் ப்ன்னூறு வருடங்களாக திருமணங்களை முறையாக பதிவு செய்கிற அமைப்பு முஸ்லிம்களிடம் சிறப்பாக - அரசுக்கே முன்னுதாரணமாக அமையத்தகக் வகையில்-
செயல்பட்டு வருகிறது.

அதனால் தான் அரசின் திருமணப் பதிவுத் துறையில் “முஸ்லிம் திருமணப் பதிவு” என்ற அம்சம் இதுவரையில் இருந்ததில்லை. அரசின் திருமணப் பதிவைப் பற்றிய இணைய தளத்திற்குச் சென்றால் மூன்று வகையான பதிவுப் பகுதிகளைக் காணலாம். “இந்துத் திருமணப் பதிவு” “கிருத்துவத் திருமணப் பதிவு” தனிநபர் திருமண்ப் பதிவு என்ற மூன்று பதிவுகள் மட்டுமே பதிவுத்துறை அலுவலகக் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

“முஸ்லிம் திருமணப் பதிவு” என்ற ஒரு அம்சமே திருமணப் பதிவுத்துறையின் பதிவேடுகளில் இல்லாதிருப்பதற்கு, இஸ்லாமிய திருமணங்கள். முறைப் படி முஸ்லிம் ஜமாத்துக்களில் அல்லது மாவட்ட மாநக காஜிகளிடம் பதிவு செய்யப் பட்டு வந்ததே காரணமாகும்.

தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரை எந்த ஒரு முஸ்லிம் அவர் வாழும் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சார்ந்த ஜமாத் அமைப்பில் இணைந்தே வாழ்கிறார். அவர் சார்ந்துள்ள ஜமாத் அமைப்பு அவர் மீது அரசை விட பலமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதும் எதார்த்தம்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் அல்லது ஒவ்வொரு ஜமாத் அமைப்பும் திருமணப் பதிவுப் புத்தகம் ஒன்றை மிக எச்சரிக்கையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

ஒரு சொத்து வழக்கிற்காக 1928 ல் நடை பெற்ற ஒரு திருமணத்திற்கான சான்று தேவைப் பட்ட போது பள்ளிவாசலின் பழைய நோட்டுப் புத்தகம் ஒன்றில் அத்திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்த்ததை தாங்கள் எடுத்துக் கொடுத்ததாக தாராபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் நிர்வாகி கூறினார்.

நான் எங்களது குடும்பம் சம்பந்தப் பட்ட ஒரு பள்ளிவாசலில் என் பெற்றோரின் திருமண்ப் பதிவை பார்த்திருக்கிறேன், எங்களது தாத்தா பாட்டியினுடைய பதிவும் கூட அந்தப் புத்தகத்தில் இருப்பதாக எனது உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள்,

முஸ்லிம் திருமணம் பெண் வீட்டைச் சார்ந்த ஜமாத்தின் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது, அல்லது ஊர்க் காஜி திருமணத்தை பதிவு செய்கிறார். அப்போது மண்மகனது திருமண நிலையைப் பற்றிய ஒரு சான்றறறிக்கை அவர் சார்ந்துள்ள ஜமாத் அளிக்கிறது. அந்த அறிகையின் அடிப்ப்டையிலேயே திருமணம் நடத்தி வைக்கப் படுகிறது.

பள்ளி வாசலின் பதிவு இஸ்லாமிய முறைப்படியான திருமணம் நடைபெறுகிற அந்த இடத்திலேயே நேரடியாக நிமிடக் குறிப்போடு பதிவு செய்யப் படுகிறது.

மண்மக்களுடைய முழு பெயர் விலாசம் மற்றும் கையொப்பம் பெண்ணின் பொறுப்பாளரின் பெய்ர் மற்றும் கையொப்பம் பெண் வீட்டார் சார்பாக ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் சார்பாக ஒரு சாட்சி அவர்களது விலாசம் கையொப்பம். திருமணத்தை நடத்தி வைத்த மௌல்வியின் பெய்ர் மற்றும் கையொப்பம், திருமணத்தை பதிவு செய்த ஜமாத்தின் முக்கியப் பொறுப்பாளரான முத்தவல்லியின் கையொப்பம் ஆகிய விபரங்களோடு திருமணக் கொடையாக மாப்பிள்ளை வழங்க வேண்டிய மஹர் தொகையும் ப்ள்ளிவாசல்களின் திருமணப் பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டிருக்கும்.

பெரும்பாலான ஜமாத்துக்களின் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப் படுகிற பரிச்ப் பொருட்களையும் கூட குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அருகே இருக்கிற ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று அல்லது ஒரு முஸ்லிம் திருமணத்திற்குச் செல்லும் போது திருமணம் நடைபெறுகிற மேடை அருகே சென்று கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அரசின் பதிவு ஏற்பாடுகளுக்கு ச்ற்றும் குறைவில்லாத இன்னும் சொல்வதானால் அதைவிடச் சிறந்த, பாதுகாப்பான, எளிதான பதிவு நடை முறை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது என்ற உண்மையை நேரில அறிந்து கொள்ளல்லாம்.

இந்நிலையில் அரசின் புதிய சட்டமானது முஸ்லிம்கள் இரண்டு முறை தங்களது திருமணத்தை பதிவு செய்யவேண்டிய சிரமத்தை தருகிறது.

இதைக் கூட ஒரு சமாதானம் சொல்லி ஏற்றுக் கொள்ளலாம். ஜமாத்துக்களில் நடைபெறுகிற பதிவை அந்தத்த ஜமாத்துக்களே பொறுப்பேற்று பதிவுத் துறைக்கு 100 ருபாய் இணைது தபாலில் அனுப்பி விட்டால் அரசிடமிருந்து பதிவுச் சான்று கிடைத்து விடும். இதில் ஜமாத்துக்களுக்கு ஒரு வேலை அதிகம் என்றாலும் மக்களுக்கு கிடைக்கிற நன்மையை கருதி ஜமாத்துக்கள் இத்திட்டத்தை ஏற்க வாய்ப்பிருக்கிறது. .

அரசின் பதிவு என்பது செல்வாக்கு மிக்கது என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடு செல்பவர்களுக்கு அரசின் பதிவு தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தியே! ஆனால் அதிலுள்ள பலவீனங்கள் என்ன் என்பது கூட அனைவரும் அறிந்ததே!

திருமணப் பதிவு குறித்த அரசானையைப் பற்றிய செய்தியை தினமலர் இனைய தளத்தில் படித்து ஏராளமானோர் அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தனர். அதில் என்னைக் கவர்ந்தவை இரண்டு ஒன்று

பதிவு செய்யும் போது ரெஜிஸ்டர் அலுவலகத்தில் மணமக்களுக்கு ஏதாவது மொய் கொடுப்பார்களா? என்ற நெல்லை வாசகரின் குரும்பு; இன்னொன்று பதிவுக் கோரிக்கையை 100 ரூபாய் கட்டணத்துடன் அஞ்சல் வழி அனுப்பினால் தப்பிக்க்லாம். நேரடியா போனால் வசூலான மொத்த மொய்ப் பணத்தை குடுத்துடு வரவேண்டியதுதான். என்ற சென்னை வாசகரின் அங்கதம்.


இந்தியாவில் பதிவுத்துறைதான் மிக அதிகமாக ஊழலில் திழைக்கிற துறை என்பது ஊருக்கு தெரிந்த ரக்சியம் இந்நிலையில் திருமணப் பதிவை கட்டாயப் படுத்தி, பதிவு அலுவலர் ஏற்றுக் கொண்டால் தான் திருமணப் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும் – அவர் நிராகரித்தால் நிராகரித்தது தான என்ற நிலையில் திருமணப் பதிவை க்ட்டாயப் படுத்தினால் அது அதிக ஊழலுக்கே வழி வகுக்கும் என்ற குற்றச் சாட்டை சொல்லி சிலர் திருமணப் பதிவுச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். என்றாலும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் இந்தக் காரணத்தை பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன்னெனில் பத்திரர்ப் பதிவு துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக யாரும் தங்களது சொத்துக்களை பதிவு செய்யாமல் இருப்பதில்லை.

முஸ்லிம் அறிஞர்களையும் பொதுமக்களையும் சங்கடப் படுத்துகிற முதல் அமசம் இச்சட்டம் முஸ்லிம் ஷரீஅத் சட்ட விதிகளில் கைவைத்து விடுமோ என்ற அச்சமாகும். ஏனென்றால நீட்டி முழக்கி பேசப்பட்டிருக்கிற அரசின் உத்தவு விளக்கெண்ணய்த் தனமாக அலலது குயுக்தியாக அமைந்திருக்கிறது.

எந்த மதப் படி திருமணம் நடைபெற்றிருந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிற அரசு அந்த மதம் அனுமதிக்கிற விதிகளின் படி அத்திருமணப் பதிவு ஏற்கப் படும் என்று சொல்லியிருக்கவேண்டும் .ஆனால் அப்படிச் சொல்ல வில்லை.

இந்த ஒரு வரி அரசின் உத்தரவில் சேர்க்கப் பட்டிருக்குமானால் அரசின் உத்த்ரவை சங்கடமில்லாமல் முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

அரசின் புதிய சட்டம் வயது சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. பெண் 18 வயதை அடைந்திருக்க வேண்டும் ஆண் 21 வய்தை அடைந்திருக்க வேண்டும் என்ற வார்த்தை அதில் இடம் பெற வில்லை. இது தந்திரமா? குழப்பும் உத்தியா? அல்லது எதார்த்தமாக நடந்த விசயமா என்று தெரியவில்லை.

அரசின் பொதுவான திருமணப் பதிவுச் சட்டத்தில் இந்த வயது வரம் கட்டாயமானது தான் என்றாலும் இதிலிருந்து முஸ்லிம்களுக்கு அவர்களது பர்சனல் லா சரீஅத் சட்டத்தின் படி விதிவிலக்கு உண்டு.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் முஸ்லிம் ஷரிஅத் சட்டம் அனுமதிக்கும் வகையில் நடைபெறுகிற சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்க் சார்பான் தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருப்பதே அதற்குச் சான்று

அதற்கு மிகச் சமீபத்திய ஒரு உதாரணம், 2009 ம் ஆண்டின் இறுதியில் டிஸம்பர் 17 ம் தேதி அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு,

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெரம்புர் பகுதையை சேர்ந்த சைருல் ஷேக் என்ற 26 வயது இளைஞனும் அனிதா ராய் என்ற 18 வ்யதை அடைய சில மாதங்களே உள்ள பெண்ணும் திருமண் செய்து கொண்டனர். அனிதாவின் தாய் ஜொட்ஸானா தனது மளை சைருல் க்டத்திச் சென்று திருமணம் செய்துவிட்டதாக புகார் பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமனற நீதிபதிகள் நீதியரசர் பினாகி சந்திர கோஷ, (Justice Pinaki Chandra Ghosh) நீதியரசர் எஸ்.பி. தாலுக் தார் (Justice S P Talukdar) ஆகிய இருவரும் இத்திருமணம் இஸ்லாமிய சட்ட விதிகளின் படி சட்ட்ப் பூர்வமாக நடை பெற்றுள்ளது என்ற சைருலின் வழக்கறிஞர் முன் வைத்த வாதத்த்தை ஏற்றுக் கொண்டு சைருல் ஷைகுகு முன் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

ஆர் எஸ் எஸ் ஸின் ஆதரவு பத்ரிகையான ஆர்கணைசர் (ORGANISER
January 24, 2010 -) ஆங்கில இதழ் இந்த ஆண்டு ஜன்வரி இதழில் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது என்றாலும் முஸ்லிம் பர்சனல் லா வின் படியான முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப் பட்டுள்ளதை இச்செய்தி தெளிவுபடுத்துகிறது.

இவற்றை கருத்தில் கொண்டோ என்ன்வோ தமிழக அரசின் புதிய சட்டம் வய்தைப் பற்றி பேச்சை எடுக்கவில்லை. ஆனால் போதிய தகவல் கிடைக்காத பதிவுத் துறை அதிகாரிகளோ தங்களது பழைய வழக்கின் படியே 18 வய்துக்கும் குறைவான பெண்ணுடைய திருமணத்தை தங்களால் பதிவு செய்ய முடியாது என்று கூறிவருகின்றனர். சில மாவட்ட பதிவாளர்கள் இன்னும் இது பற்றிய விரிவான தகவல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் பெரும்பலான் மாவட்ட பதிவாளர்கள் “திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் இல்யெனில் குற்ற வ்ழக்கு பதிவு செய்யப் படும் என்ற எச்சரிக்கையை கடமை தவறாமல் கச்சிதமாக செய்துவிட்டனர். அப்படி அறிக்கை வெளியிட்ட அதிகாரிகளிடம் சென்று அந்த திருமண் விண்ணப் பம் தாருங்கள் என்று கேட்ட போது இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்ற பாட்டையே பாடிக் கொண்டிருந்தனர் என்பதும் நிஜம்.

நாடு முழுவதும் திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஒரு உத்தரவிற்கேற்ப அரசுகள் அவசர அவசரமாக் சட்டம் இயற்றி விட்டன.

நீதிமன்றம் அவ்வாறு உத்தவிட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்தியாவின் பல சமுக அமைப்புக்களில் திருமணங்களை பதிவு செய்து வைக்கிற எந்த ஏற்பாடும் இல்லை. அது மட்டுமல்ல எங்காவதொரு கோயிலில் வைத்து, அல்லது சாமி படத்துக்கு முன்னாள் நின்று கொண்டு, தனிமையில் ஒர் பெண்ணிண் கழுத்தில் மாலையை மாட்டிவிட்டு அதை திருமணம் என்று சொல்லி ஏமாற்றுவது ஏராளமாக நடைபெறுகிறது. இதில் படித்தவர்கள் பாம்ரர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் ஏமாறுகின்றனர். நியாயமானதும் கூட. பதிவு செய்யப் படாத திருமணங்கள் பல வற்றில் அதையே சாக்காக வைத்துக் கொண்டு பெண்கள் மீது அநீதி இழைக்கப் படுகிறது. தில்லியில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் திருமணங்கள் நடை பெறுகிறது என்றால் 1500 திருமணங்கள் தான் பதிவு செய்யப்படுவதாக் CNN IBN கூறுகிறது. Delhi which sees over 50,000 weddings a year hardly 1500 marriages are registered, which means just three per cent of the total.

இத்தகைய திருமணங்களில் பிரச்சினை வருகிற போது வழக்கிற்கு அடிப்ப்படையாக இருக்கிற திருமணத்தைப் பற்றிய எந்த ஆதாரமும் இருப்பதில்லை. இத்தகைய நிகழ்வுகளால் நீதிபதிகள் கோபமடைவது இயற்கையானதே!

அத்தகைதொரு தார்மீக கோபத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமனற நீதிபதி Justice Arijit Pasayat திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயப் படுத்தும் சட்டமொன்றை மூன்று மாதங்களுக்கு இயற்று மாறு இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தர்விட்டார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயைக்கப் பபடுவதாக இருக்கலாம்;. ஆனால் அவை பூமியில் பதிவு செய்யப் பட வேண்டும் என்றார் நீதிபதி. Marriages may be made in heaven but they will have to be registered right here on earth அந்த அடிப்படையிலேயே தமிழக் அரசும் சட்டம் இயற்றியுள்ளது.

ஆனால் அரசுக சட்டம் இயற்றுவதற்கு முன் இந்திய சமுக்க அமைப்பிலுள்ள பல்வேறுபட்ட அம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இது பற்றி விரிவான தொரு ஆய்வு அல்லது விவாதம் அல்லது ஆலோசனை செய்திருக்க வேண்டும். அமெரிக்காவை கவ்னிக்கிற் அவசரத்தில் அதெற்கெல்லாம் நேரமில்லை எனபதலோ என்ன்வோ அரசு பொத்தம் பொதுவாக சட்டம் இயற்றிவிட்டது.

அதனால் இச்சட்டத்தில் பல வேடிக்கை விநோதங்கள் மலிந்து கிடக்கின்றன்.
சட்டத்தின் நோக்கம் என்ன வேன்பதே கேள்விக்குரியகி இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு கொண்டு வந்து தரப் ப்டும் தக்வல்களை பதிவு செய்வதாலோ அல்லது நிராகரிப்பதாலோ என்ன நன்மை என்பதே முக்கியக் கேள்வி?

ஒரு க்ல்யாணம் நடந்து எல்லாம் முடிந்த பிறகு 89 நாட்கள் கழித்து அல்லது 50 ரூபாய் கட்டணம் அதிகம் செலுத்தி விட்டு நான்கு மாதக் கருவோடு ஒரு தம்பதியின்ர் வந்து தங்கள்து திருமணத்தைப் பதிவு செய்கிற போது அதிலிருக்கிற ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கை கண்டுபிடித்து - அல்லது சாட்சியின் அட்ரஸ் புரூப் தெளிவில்லை என்று ஒரு பதிவாளர் பதிவு செய்ய மறுப்பாரானால் அந்த திருமணம் என்னவாகும்? அல்லது அந்தப் பதிவு என்னவாகும்?

ஒரு சரியான திருமணப் பதிவு என்பது திருமணத்தின் போது நடை பெற வேண்டும். அந்தப்பதிவுக்குப் பின்னரே திருமணம் அங்கீகாரம் பெற வேண்டும். அது தான் சரியான பதிவாக இருக்க முடியும். அப்படியானால் முஸ்லிம் சமுகத்தில் இருப்பது போன்ற திருமணப் பதிவை மற்ற சமூக அமைப்ப்புக்களுக்கு விரிவு படுத்த அரசு முயற்சி செய்திருக்க வேண்டும். சமய நம்பிக்கை அற்றவர்கள் அல்லது சமய அடிப்படையில் திருமணம் செய்ய விரும்பாதவர்கள் ஒரு நீதிபதி அல்லது ஒரு தாசில்தார் குறைந்த பட்சம் ஒரு நோட்டரி வக்கீலின் முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தால் அது திருமணங்களைப் பாதுகாப்பதன் சரியான் ஏற்பாடாக அமைந்திருக்கும். அதை விடுத்து திருமணத்தை முடித்துவிட்டு வந்து தகவல்களை கொடு அதை நான் சரி பார்க்கிறேன் என்பது குழந்தை பெற்றுக் கொண்டபின் தங்களது திருமணங்களை அறிவிக்கிற வகையறாக்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

ஆயினும் ஒரு முறையான கட்டமைப்பு இல்லாத சமூகங்களில் திருமண உறவுகளை பாதுகாப்பதற்கு – திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிற பெண்களைப் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டம் உதவிகரமாக இருக்கும்.

முஸ்லிம் சமூகத்தில் ஒரு முறையான சமூக கட்டமைப்பும் சரியான திருமணப் பதிவு முறையும் இருப்பதால் அரசு அதை கவனத்தில் கொண்டு சட்டத்தின் வாசகங்களை அமைத்திருக்க வேண்டும்

அப்படிச் செய்யாததால் ஒரு சரியான நடைமுறையை பன்னெடுங்காலமாக கடைபிடித்து வருகிற ஒரு சமுதாயமே அந்நடமுறை சட்டமாகி பொதுவாவதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையை அரசு ஏற்பட்த்தி விட்டது.

முஸ்லிம் சமுகத்தின் முறையான பதிவுகளை அரசு அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்க வேண்டும். உள்ளபடியே அது பாதுகாப்பானது. உண்மையானது.

அப்படி அரசு அறிவித்திருக்கும் என்றால் திருமணப் பதிவுச் சட்டத்தின் படி 2009 நவம்பர் 24 லிருந்து இதற்குள்ளாக பன்னூற்றுக்கணக்கான திருமணங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும்.

அரசின் அறிவிப்பில் காணப் பட்ட குழப்பம் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் தேவையற்ற ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்தை முழைமையாக எதிர்க்கிற -ஒப்புக் கொள்ளமுடியாது என்று மறுக்கிற நிலை உருவாகியுள்ளது.

“எங்களது சமூகத்தில் நடைபெறுகிற நூற்றுக்கு நூறு சதவீத திருமணங்களும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட அமைப்புக்கள் மூலம் ஏற்கென்வே பதிவு செய்யப் படுகிற போது எதற்காக நாங்கள் அதை மீண்டும் டூப்ளிகேட் செய்ய வேண்டும் என்று. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (மியாகான் பிரிவின்) தலைவர் தாவூத் மியா கான் கேட்பதாக ஹிந்து ஏடு கூறுகிறது.

"When already 100 per cent marriages in Islam are registered by the government approved authorities, why they need duplication and we are afraid that this maybe misused," says Indian Union Muslim League President MG Dawood Mia Khan

முஸ்லிம் சமய அறிஞர்கள் மட்டுமல்லாது முஸ்லிம் பொதுமக்களும் இது தேவையற்று என்று கருதுகிறாகள் என அந்த ஏடு மேலும் செய்தி வெளியிட்டிருந்தது.

It is not just religious leaders but even ordinary Muslims do not see the necessity in the government taking over what the Jamaath is already doing.

“அனைத்து முஸ்லிம் திருமணங்களும் 400 வருடங்களுக்கு மேலாக ஜமாத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. இன்றைய சட்ட விதிகளுக்கு ஏற்பவ. நாங்கள் ஏற்கெனவெ பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்வே அரசின் புதிய சட்டத்தை நான் உறுதியாக என்று கூறுயுள்ளார் யாஸ்மீன் பர்ஹானா
I am surely against this because if you consider Muslims we follow certain procedures for marriage. All the Islamic marriages are done according to the rules and regulations of the Jamaath. For more than 400 years, we have already been registering our marriages," points out Yasmeen Farhana.

திருமண்ப் பதிவுச் சட்டத்தை வாழ்த்தி வரவேற்க வேண்டிய முஸ்லிம்கள் அதற்கு எதிரான ஒரு நிலையை மேற்கொள்வதற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

முஸ்லிம்கள் பலரும் அரசு பொதுச் சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிப்பதாக கருதுவதற்கும் ஜமாத்தின் அதிகாரங்களைப் பறிக்க அரசுத் திட்டமிடுவதாக கருதுவதற்கும் அரசின் போக்கே காரணமாகிவிட்டது.

அரசு எல்லாவற்றையும் தன் கையில் எடுத்துக் கொள்ளுமானால் சமுதாயம் வெறுமையாகிவிடும் என்று ஷியா காஜி குலாம் முஹம்மது மெஹ்தி கான் கொதிப்படைந்துள்ளார்.

இந்நிலையில் அரசு ஜமாத்துக்களின் முஸ்லிம் திருமணப் பதிவை அப்படியே மறுபரிசீலனையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும. அல்லது அரசால் நியமிக்கப் படுகிற காஜிகளை திருமணப் பதிவாளராக அறிவிக்க வேண்டும். அவர்களது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஜமாத்துக்கள் செய்யும் திருமணங்களைப் அரசு அங்கீகரித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இல்லை எனில் இனி வரும் நாட்களில் முஸ்லிம் சமூகத்துக்கும் அரசுக்கும் தேவையற்ற ஒரு மோதல் போக்கு ஏற்படக் கூடும்.

பொதுத் தேர்தல் நெருங்கி வருகிற சூழ்நிலையில் அரசு யாரையும் பகைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்காது என்று எதிர்பார்க்கலாம்.

முஸ்லிம் அமைப்புக்களும் உச்ச நீதிமனறத்தின் தீர்ப்பு வந்த் போது சும்மா இருந்து விட்டு, மாநில அரசுகள் சட்ட முன் வரைவை சமர்ப்பிக்கும் போது இது பற்றிய் கவன்மே இல்லாமல் இருந்து விட்டு சட்டம் அமுலுக்கு வந்த பிறகு அதிலும் அதன் எல்லைக் கோட்டை தொட்ட பிறகு கூக்குரலிடுகிறார்கள். ஆவேசம் காட்டுகிறார்கள் இத்தகைய ஆவேசங்களால் ஆம்பிளிபையர்களின் ஐசிக்களும் கண்டன்சர்களும் சூடாகியதை தவிர வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை.

ஷாபானு வழக்குப் பிரச்சினையின் போது செய்யப் பட்ட ஆர்ப்பாட்டங்களால் அல்லது உயிரிழப்புக்களால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தியாவின் மதிப்பு மிக்க அறிஞர்கள் ஆட்சித்தலைவர்களிடம் உரிய முறையில் பிரச்சினையை எடுத்து வைத்த விதத்திலேயே அந்த நீண்ட போராட்டத்தில் ஒரு முடிவு ஏற்பட்டது.

இப்போதும் அந்த வழிமுறையை கையாள்வதே உசிதம். எதெற்கும் சட்டத்தை சட்டத்தால எதிர்கொள்வதற்கு வசதியாக நீதிமன்றங்களை அனுக்வும் முயற்சிப்பது உசிதமானதாக அமையும். சைருல் ஷேக் விசயத்தில் மேற்கு வங்க உயர் நீதிமன்றம் சொன்னது போன்ற ஒரு தீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் தேவையற்றதாக்கி விடும். அரசியல் சாசணம் முஸ்லிம்ளின் தனிநபர் சட்டத்திற்கு வழங்கியுள்ள அந்தஸ்த்து அத்தகையது.

அதே நேரத்தில் முஸ்லிம் ஜமாத்துக்கள் பதிவு விதிகளில் தற்போது சொல்லப் பட்டிருக்கிற சில நல்ல விசயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நமது திருமணப் பதிவை இன்னும் சிறப்பானதாக வலிமையானதாக அமைத்துக் கொள்ளமுடியும்.

பதிவு என்ற முக்கியமான விசயத்திற்கு முஸ்லிம்களில் சிலர் போதுமான கவனம் செலுத்துவதில்லை. கல்யாண மணடபத்திற்கு வந்த பிறகு யாரோ ஒருவரை சாட்சியாக போடுகிற நடைமுறையை விட திருமண நிகழ்வுக்கு முன்ன்ரே வலி வக்கீல் சாட்சிகளை தெளிவாகவும் முறையாகவும் முடிவு செய்து கொள்வதும் அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை புரிய வைப்பதும் நல்லதே!

ஒரு திருமணத்தின் போது சாட்சியாக பெயர் கொடுத்தவர் கையெழுத்துப் போட்டு இலை வாங்க வெளியே போய்விட்டார். அவரைக் கண்டு பிடித்து திருமப் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சாட்சி யின் வேலை என்ன்வென்பதை அவர் அறியாதிருந்த்தே இதற்குக் காரணம்.

முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்கிற ஜமாத்துக்களின் பத்வேடுகளின் காலச் சூழலுகு ஏற்ப பல நல்ல புதிய சேர்க்கைகள் ஏற்கப்பட்டிருக்கிறது. முந்தை காலத்தில் பெயர் தந்தை பெய்ரை மட்டுமே எழுதுவார்கள் பின்னர் முகவரி எழுதும் பழக்கம் வந்தது. அதன் பின்னர் திருமணம் நடை பெறுகிற இடத்தை குறிப்பிடுகிற பழக்கம் வந்தது. அது போலவே தொலை பேசி எண்கள் ஐ டி கார்டு பிரதிகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்வதில் என்ன சிரம்ம என்று ஜமாத்துக்கள் யோசித்து தேவையான மாற்றங்கள் செய்து கொள்வது நல்லதாகவே அமையும். இது எல்லா இடங்களிலும் சாத்தியமற்றது என்றாலும் சாத்தியமுள்ள இடங்களில் இதை கடைபிடிக்கலாம். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இது கடை பிடிக்கப் படுகிறது.

திருமணப் பதிவுச் சட்ட விவாகரம் தொடர்பாக ஒரு முழுமையான ஆய்வுக்கூட்டத்திற்கு முஸ்லிம் ஜமாத்துக்கள் உலமா அமைப்புக்கள் ஏற்பாடு செய்யாததும் ஒரு ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்துச் செயல்படாததும் ஒரு வகையான பின்னடைவேயாகும். அரசின் புதிய சட்டத்தை எதிர்ப்பதானால் எந்த வார்த்தகளில் எதிர்க்கிறோம் என்பதில் போதுமான கவனம் காட்டப் படவில்லை. பொதுவாக எதிர்க்கிறோம் என்ற கோபமான வார்த்தை முஸ்லிம்களிடம் இருக்கிற சிறப்பான நடைமுறையை மற்றவர்கள் அறியவிடாமல் செய்துவிட்டது.

முஸ்லிம் சமுகம் அரசின் எந்த சட்டத்திற்கும் கோர்ட்டின் எந்த உத்தரவிற்கும் பணிய மறுத்தது இல்லை. தேவையற்று முஸ்லிம்களின் தனி விவகாரங்களில் கோர்ட்டும் அரசுகளும் தலையிட நினைக்கிற போதுதான் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அப்படி எதிர்ப்பை வெளியிட்ட விதம் எதிர்களுக்கு சாதகமாகிவிட்டது.

கோர்ட் எந்தச் சட்டம் போட்டாலும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் நாம் மட்டும் பாபர் மஸ்ஜித் விசயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டுமா? என்ற மாய ஜாலம் பேசித்த்தான் இந்துத்துவ இயக்கங்கள் இந்துகளை தங்கள் பக்கம் ஈர்த்தார்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது.

இந்த சட்ட விவகாரத்தில் சமுதாயத்தின் பாதுகாவலர்கள் என்ற சிலரின் முகமூடிகள் தானாக கழன்விட்டதை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ளாமல் இருக்காது. அனைத்து முஸ்லிம் அமைப்புக்களு இச்சட்டத்தை எதிர்த்தாலும் நாங்கள் இதை ஆதரிப்போம் என்று சொன்ன முஸ்லிம்களை முன்னேற்றத் துடிக்கும்(?) அமைப்புக்கள் எந்த தளத்தில் செயல்படுகிறார்கள் என்பதை முஸ்லிம் ஜமாத்துக்கள் அவ்வளவு எளிதாக் மறந்து விடமாட்டார்கள். அவர்கள் வ்சூலுக்காக வருகிற போது இந்த வார்த்தைகளை ஞாபக்ப் படுத்துவோம் என்று ஜமாத் பிரமுகர் என்னிடம் சொன்னார்.

நான் சொன்னேன் பாவம்! அவர்கள் இழவு காத்த கிளிகளாகத்தான் ஆவார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தை அழுத்தமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிற ஜமாத் அமைப்புககளின் வலிமையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற வேகம் அவர்களை அவ்வாறு பேச வைத்து விட்டது. அவர்களது பகல் கனவு பலிக்காது என்றேன்.
ஒரு வேளை இதுவே அரசின் கன்வாகவும் இருக்கும் என்றால் அதுவும் பலிக்காது தான்.

No comments: