Monday, September 27, 2010

பெருநாள் சிந்தனை


இனி இஸ்லாம் வெல்லும்

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதின் 8 வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுகிறார்கள்இணைய தளங்கள் பலவற்றிலும் தற்போது பரபரப்பாக இருக்கிற செய்தி இது.

இந்த ஆண்டு ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் செப்டம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் படக்கூடும். ஒரு வேளை செப்டம்பர் 11 ம் சனிக்கிழைக்கு அது தள்ளிப் போகவும் இடமுண்டு.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் பிறையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படுகிறது.  ரம்லான் 29 முடிந்த பிறகு அன்றைய  இரவு அந்தி வானத்தில் சந்திரன் இளம் பிறையாக் கண்ணுக்கு தென்பட்டால் அது ஷவ்வால் மாத்த்தின் முதல் தேதியாக அமையும் என்ற   இஸ்லாமிய சட்ட விதியின் படி பிறை தெரிகிறதா உலகெங்கிலும் இருக்கிற முஸ்லிம்கள் ஆர்வத்தோடும் ஆசையோடும் அந்தி வானத்தை அன்னாந்து  பார்க்கிறார்கள். பிறை தென்பட்ட தென்றால் எங்கும் மகிழ்சி பீரிட்டுக் கிளம்புகிறது. தக்பீர் முழக்கம் வானை நிறைக்கிறது. முஸ்லிம்கள் பெருநாளை வரவேற்கத் தயாராகிறார்கள்.

அனறு இரவு பிறை தென்படாவிட்டால், இன்னொரு நோன்பு நோர்க்கவும், இன்னும் ஒரு தராவீஹ் எனும் ரமலானின் விஷேச இரவுத் தொழுகைக்கு வாய்புக் கிடைத்த்தென முஸ்லிம்கள் ஆனந்தமடைகிறார்கள். அதற்கடுத்த நாளில், ஈத்பெருநாள்  கம்பீரமாக களை கட்டுகிறது.

உலக முஸ்லிம்களின் இந்த உன்னதமான கலாச்சாரம் இப்படியே ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்து அற்புதமான ஒரு நிகழ்வாக நடை பெற்று வருகிறது. 

இந்த நடை முறையால் இயந்திரத்தனமான திட்டமிடுதல் தவிர்க்கப் பட்டு ஒரு பிள்ளைப் பேற்றின் இயல்பான மகிழ்ச்சியும் குதூகலமும் பெருக்கெடுப்பதை முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வருகிறது.

சில அவசரக் குடுக்கைகளும் அதிருப்தி ஜீவிகளும் இஸ்லாமின் இந்தக் கலாச்சாரத்திற்கு எதிராக செய்ல்க் கிளம்பினார்கள். அவர்களின் சரியாக வேகாத அவியல் அறிவியல் த்த்துபித்துக்களை மூகம் புறந்தள்ளி தனது இஸ்லாமிய மரபு வழியான கலாச்சார வேர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்ட்து. அதனால் ஈதுல் பித்ர் செப்டம்பர் 10 தேதி கொண்டாடப்படலாம். அல்லது செப்டம்பர் 11 ம் தேதி கொண்டாடப்படலாம் என்ற அறிவிப்பை சரியாகப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம்  மூகத்திற்கு பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது.

ஈதுல் பித்ர் பெருநாள், ரமலானின் ஒரு மாத பட்டினி வணக்கம் நிறைவடைவதை ஒட்டி வருவதால் அதை உண்டு மகிழ்ந்து கொண்டாடும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு சொல்கிறது.

பக்ரீத் எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகு சாப்பிடாமல் கிளம்புவதும் ஈதுதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு சாப்பிட்ட பிறகு கிளம்புவதும் இஸ்லாமிய கலாச்சாரமாகும்.  நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிடாமல் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு புறப்படமாட்டார்கள் என பெருமானாரின் பணியாளர் அன்ஸ் (ரலி) கூறுகிறார்.  அதிலும் குறிப்பாக பேரீத்தம் பழத்தை ஒற்றை எண்ணிக்கையில் சாப்பிடுவது பெருமானரின் பழக்கம் என அவர் மேலும் தெரிவிக்கிறார். (ஸஹீஹுல் புகாரி 952)

எங்களது ஊரின் சில பள்ளிவாசல்களில் ரமலானுக்கு கஞ்சி காய்ச்சுவது போலவே  பெருநாள் அன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு வரும் மக்களுக்கு பேரீத்தம் பழங்களை தட்டில் வைத்து நீட்டுகிற பழக்கம் இருக்கிறது. நபிகள் பெருமானாரின் ஒரு வழி முறையை கடைபிடிப்பதோடு  அற்புதமான பெருநாள் வாழ்த்தாகவும் அது அமைந்து விடுகிறது.  

தாம் உண்டு மகிழ்ந்த்தின் அடுத்த தொடர் நடவடிக்கையாக பிறருக்கு கொடுத்து மகிழும் படி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பெருநாள் அன்று அன்றைய செலவுக்கு போக அதிகமாக காசு வைத்திருப்பவர்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களுக்காகவும் தலைகட்டு தர்ம்மாக பித்ரா எனும் தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்னதாக கொடுத்துவிட வேண்டும்.

ஒவ்வொரு தலைக்கும் 1.700 கிராம் கோதுமை அல்லது 2.400 கிராம் நடுத்தர அரிசி வீதம் பித்ரா தர்ம்ம் வழங்கப்ப்ட வேண்டும். உண்வுப் பொருளாக வழக முடியாதவர்கள் பணமாக வழங்குவ்தெனில் குறைந்த பட்சம் தலைக்கு ரூபாய 35 என்று கண்க்கிட்டு வழங்க வேண்டும்.

இது குறைந்த பட்ச அளவு தான். விரிந்த உள்ளம் கொண்ட தயாபரர்கள் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி என்ற அளவில் கூட பித்ரா தர்ம்ம் வழங்கலாம். லட்சாதிபதிகளும் கோடீஸ்வர்ர்களும் அளந்து பார்த்து வழங்க வேண்டியதில்லை. அரிசி வழங்குபவர்கள் கூட வசதி இருந்தால் பிரியாணி அரிசி வழங்குவது ஏழை எளியவர்களின் பெருநாள் செலவின் சுமையை குறைக்கும். அதுமட்டுமல்ல செல்வந்தர்களின் கௌரவத்திற்கு அது அழகு சேர்க்கும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுரையாகும்.    

பெருநாள் தொழுக்கைக்கு முன்னதாகவே பித்ரா தர்மத்தை வழங்கி விட  வேண்டும் என்பது இஸ்லாமின் உறுதியான அறிவுரையாகும். தொழுக்கைக்குப் பின்னால் வழங்கப்படும் தர்ம்ம்  சாதாரண தர்ம்மாகவே கணிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (இப்னுமாஜா 1817) என்வே பெருநாள் தொழுகைக்குப் பின்னால் தொழ்கைத்திடல்களின் வாசலில் காத்திருக்கிற யாசகர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சில்லரை காசுகளாக பித்ரா தர்மத்தை மாற்றி விடக்கூடாது என்பதை சமுதாரப் பிரமுகர்கள் கவனிக்க வேண்டும்.  

ஈதுல் பித்ர் பெருநாள் அன்று, அந்த மகிழ்ச்சியை வழங்கிய இறைவனை வணங்குவதற்கு முன்னதாக ஏழைகளை மகிழ்ச்சிப் படுத்திவிட வேண்டும் என்ற இஸ்லாமின் இந்தக் கோட்பாடு ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மனப்பக்குவத்தை சமுதாயத்திற்கு வழங்குகிறது.

இந்த தர்மத்தை முதலில் தம் உறவினர்களிடமிருந்து தொடங்குவதே உண்மையான இஸ்லாமிய அக்கறையாகும். உறவினர்களுக்கு அடுத்தபடியாக தமது பகுதியில் இருக்கிற ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவைப் பெருத்தவரை அது கடினமான வேலையல்ல. வீட்டு வாசலை விட்டு கீழே இறங்கினால் தகுதியுள்ள பலர் தாராளமாக கிடைப்பார்கள். அவர்களை தேடிச் சென்று சென்று தர்ம்ம் வழங்குகையில் ஒரு ஆனந்தம் கிட்டும். அந்த ஆனந்தம் தர்ம்ம் செய்த நிறைவை விட பேரானந்தமாக அமையும்.

சென்ற வருடம் இரத்தப்புற்று நோயாளல் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனைத்தேடி தன்னுடைய தர்மத்தை வழங்குவதற்காக ஒருவர் என்னோடு காரில் வந்தார். சுமார் 40 கீலோ மீட்டர் சுற்றி அலைந்த பிறகு அந்த இளைஞன் வீட்டை கண்டுபிடித்தோம். அவர்க் கொடுத்த பணம் 5000 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அதற்காக தகுதியுள்ளவரை தேடிச் சென்ற மகிழ்ச்சியும் மன திருப்தியும் அந்த சகோதர்ருக்கு 5000 ரூபாயை விட அதிகமாக இருந்த்து. ஒன்றுக்கு எழுநூறு மடங்கு அதிகம் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். அது எப்படி இருக்கும் என்பதன் அட்வான்ஸாக இந்த மகிழ்ச்சி அவருக்கு அமைந்த்து. 

ரகசியமாக தர்ம்ம் செய்வதிலும், அதுபோல தகுதியுள்ளவர்களை - யாரிடமும் கேட்கத் தயங்க்கிக் கொண்டிருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தர்ம்ம் செய்வதிலும் கிடைக்கிற பேராணந்த்தமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் சிலருக்கு கிடைக்காமலே போய்விடுகிறது.

எதிலும் காசுபார்த்து பழகிவிட்ட அமைப்புக்களிடமும் இயக்கங்களிடமும் பித்ரா தர்மத்தை வழங்குவது முஸ்லிம் சமூகத்துக்குள் புதிய பிரச்சினைகள் உருவாவதற்கே வழி செய்கிருக்கிறது ஈந்துவத்தலின் இன்பத்தை அனுபவிக்க்விடாத இயக்கப் பற்றாக அது மாறிவிட்ட்து என்பதும் இங்கே கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும்.


ஈதுல் பித்ர் பெருநாளின் இன்னொரு சிறப்பு.  அது கடந்த கால நினைவை போற்றுவதாகவோ, ஏதாவது ஒரு தலைவர் அல்லது வரலாற்றுப் பாத்திரத்தின் ஞாபகார்த்தமகவோ அமைந்த்து அல்ல. அது முஸ்லிம்களது நிகழ்கால வாழ்வின் பக்தியையும் சந்தோஷத்தையும் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இனி வரும் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாகவும் திகழ்கிறது.

இந்த ஆண்டு ஈதுல் பித்ர்  பெருநாள் வருவதற்கு முன்னதாக ஒரு சர்ச்ச்சை முஸ்லிம்களின் வட்டாரத்தில் ஒரு பேச்சாக கிளம்பியிருக்கிறது.

கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில்  இரட்டை கோபுரங்கள தகர்க்கப் பட்ட நிகழ்ச்சியின் எட்டாவது நினைவு செப்டம்பர் 11 அன்று அனுஷ்டிக்கப் பட இருக்கிறது. அது ஈதுல் பித்ர் பெருநாளில் அல்லது பெருநாளை ஒட்டிவருகிறது.

சில இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்ட பத்ரிகைகளும் இணைய தளங்களும் அமெரிக்க முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டங்களைப் பற்றி கேள்வி எழ்ப்பிவருகின்றன. சில இணைய தளங்கள் பெருநாள் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வண்ணம் கலக்கத்தையும் பீதியையும் எழுப்பி வருகின்றன. பிரஞ்சுப் பத்ரிகையான லுமோன்ட்இதில் வெறுப்பை உமிழும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது,

அமரிக்க முஸ்லிம்களின் தகவல் தொடர்பு மையத்தின் சார்பாக பேசுகிற இபுறாகிம் ஹூபர் என்பவர் மின்னணு ஊடங்கள் செய்து வருகிற பிரச்சரம் காரணமாக முஸ்லிம்கள் தங்களது பெருநாளை கொண்டாடுவதில் கலக்கமுற்றிருப்பதாகவும் சில இஸ்லாமிய அமைப்புக்கள் தங்களது பெருநாள் நிகழ்ச்சிகளை இரத்து செய்திருப்பதாகவு கூறியுள்ளார்.

வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று பெருநாள் கொண்டாட்டங்களை செபடம்பர் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த் தகவல்கள் விஷமத்தனமாக கிளப்பட்டிருக்கலாம்.. ஏனெனில் பெருநாள் கொண்டாட்டம் என்பது முஸ்லிம்களை பொருத்தவரை அது இறைவனால் வழங்கப் பட்ட்து. இறைவனால் தீர்மாணிக்கப் பட்ட்து. பெருநாட்களை எதன் பொருட்டும் துக்கமாக அனுஷ்டிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இன்னொன்றும் இங்கு கவனிக்கத்தக்கது பெருநாள் கொண்டாட்டங்கள் என்பது இறைவனை வணங்கி இல்லாதோர்க்கு வழங்கி மகிழ்வ்தேயாகும். குடித்து கூத்தாடி கும்மாளம் அடிக்கும் கொண்டாட்டங்கள் அல்ல. கொண்டாட்டம் என்ற வார்த்தையே கூட இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேச பொருத்தமற்றதாகும். வழக்குச் சொல் என்பதற்காகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை என்பதற்காகவுமே அச்சொல் இஸ்லாமிய பெருநாட்களோடு இணைத்துப் பேசப்படுகிறது.   என்வே இஸ்லாமிய பெருநாட்கள் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை தருவதாக இருப்பதில்லை,

அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மேற்குல நாடுகளும் இஸ்லாமிற்கும் முஸ்லிம் சமுதயாத்திற்கும் செய்துள்ள் தீமைகளும் கொடுமைகளும் ஏராளம். இப்போது செய்துவருகிற சதிச் செயல்களும் ஏராளம். அவற்றோடு ஒப்ப்டுகையில் இரட்டை கோபுரத் தகர்ப்பின் கொடூரம் என்பது சாதாரணமானதே!  ஆயினும் முஸ்லிம் சமுத்யாம் அந்த அநியாயத்தை அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய நீதி என்பது ஒளிவு மறைவற்றது. சுதி பேதம் இல்லாதது. அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்வது மொத்த மனித சமூகத்தையும் கொலை செய்வது போன்றது எனப் பகிரங்கமாக பிரகடணப் படுத்திய சமயம் இஸ்லாம். மனிதாபிமானத்தில் வேஷம் போட முஸ்லிம்களுக்கு இஸ்லாம் கற்றுத்தரவில்லை.

என்வே இரட்டை கோபுரத் தகர்ப்பில் அப்பாவிகள் கொல்லப் பட்ட்தற்கு முழு முஸ்லிம் உலகும் தங்களது கண்டனத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட்து. இப்போதும் முஸ்லிம்கள் அந்த விபத்தில் தங்களது உறவுகளை இழந்தவர்களுக்காக தங்களது ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இறைவா! அந்த கொடுமையான விபத்தில் தங்களது பாசத்திற்குரிய உறவுகளை இழந்து வாடுவோருக்கு நீ தகுந்த ஆறுதலை கொடு! வாழ்வின் நம்பிக்கை இழந்து நிற்போருக்கு நீ தகுந்த பரிகாரம் செய்! என்று பிரார்த்தனை செய்யத்தான் செய்கிறார்கள்.

ஆனால் அமெரிக்க மக்களுடைய உயிர் ம்ட்டுமே உன்னதமானது. மற்ற்வர்களின் உயிர்களும் உடமைகளும் மசுறுக்கும் மதிப்பற்றவை என்ற அமெரிக்க மனோபாவத்தை எந்த நாகரீகமுள்ள மனிதனும் ஒத்துக் கொள்ள மாட்டான. முஸ்லிம்களாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாது.

சில அமெரிக்க்க அரசியல் வாதிகளும், வகுப்புத் துவேஷம் கொண்ட சில செய்தி ஊடகங்களும் இரட்டை கோபுரத் தகர்ப்பு நிகழ்வை இத்தகைய அமெரிக்க மனோபாவத்தோடு தொடர்ந்து அணுகுகிறார்கள். இஸ்லாமிய கருவறுக்க உதவும் சாதனமாக அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், இந்தப் போக்கின் காரணமாக் இரட்டை கோபுர விபத்தை நிய்யப் படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் செல்லக் கூடும்.

21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய சத்திதிட்டமான இரட்டை கோபுரத் தகர்ப்பும் முஸ்லிம்களின் சர்வதேச மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று வலுவாகப் பிணைந்திருக்கின்றன. அந்த நிகழ்வுக்குப் பின் அமெரிக்காவிலுள்ள முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம் சமூகமும் பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் அளவுக்கு மீறிய ஆணவப் போக்கினாலும், அரபு தீபகற்ப பகுதிக்குள் அவர்கள் நட்த்திய வன்முறை வெறியாட்டங்களாலும் பாதிக்கப் பட்ட மக்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து இவனுக்கு இப்படி கொடுத்தால் தன் வலிக்கும் என்று நட்த்திய தாக்குதலே இரட்டை கோபுரத் தகர்ப்பு. ஆனால் இத்தாக்குதலுக்கு மூலமான பிரச்சினையை என்ன என்பதை மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்பியதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெய்ரை பரப்புவதிலும் முஸ்லிம்களின் மரியாதையை பங்கப் படுத்துவதிளும் அமெரிக்கா தற்போது வெற்றிய்டைந்திருக்கிறது. அதனால் சர்வதேச அளவில் முஸ்லிம்களின் நிலை இப்போது சிக்கலுக்குள்ளாக்ப் பட்டு வருகிறது. 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமும் முஸ்லிம் சமூகமும் மிக்ச் சவலான் சூழ்நிலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..

தந்திரம் மிக்க எதிரிகள், கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களிடமிருக்கிற எல்லாவகையான நவீன ஆயுதங்களையும் ஊடகங்களையும் பய்ன்படுத்தி இந்த பூமிப்பந்தின் மேற்பரப்பின் பெரும் பகுதியை பன்னூறு ஆண்டுகள் கோலாச்சிய சமூகத்தை, உலகத்திற்கு சுதந்திரத்தையும் நாகரீகத்தையும் முன்னேற்றத்தையும் அறிமுகப் படுத்திய சமூகத்தை ஒரு குற்றவாளிச் சமூகமாக, பிற்போக்கான சமூகமாக சித்தரித்து, ஆதிவாசிப் பழங்குடிகளை அழித்த்து போல் அழித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிய மண்ணிலும் வேட்டையாடப் படுகிற மக்களைப் பற்றிய காட்சிகள் இந்த வேட்டைக்கார்ர்களின் இரத்த வெறிக்கு சாட்சியாக நிற்கின்றன. இந்தப் படு கோரமான சூழ்நிலையை வென்றெடுக்கிற சக்தி முஸ்லிம்களுக்கு இருக்கிறதா என்பதில் சந்தேகத்திற்கு இடமிருக்கலாம். ஆனல் இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல இதைவிடக் கடுமையான பகையாளிகளையும் வாகை சூடுகிற சக்தி இஸ்லாத்திற்கு இருக்கிறது.

இஸ்லாமின் வெற்றிப் பாதை பெரும் பாலும் மலர் படுக்கையாகத்தான் இருந்த்து. காரணம் இஸ்லாம் மனிதர்களை ஆக்ரமிப்பதில்லை ஆட்கொள்கிறது. இஸ்லாமின்  நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில் அவ்வப் போது  இது போன்ற டுரமான மிருக வெறித் தாக்குதல்கள் ஏற்பட்ட்துண்டு. அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் இப்போதைய நிலையை விட மோசமாக கையறு நிலையில் இருந்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு இனி எதிர் காலமே இல்லை என்று எதிரிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்லாம் சாமப்லில் இருந்து உயிர் பெற்று எழும்  பீனிக்ஸ் பறவையை போல -  அல்ல -   நம்ரூதின் நெருப்புக் குண்ட்த்திலிருந்து மீண்ட தீர்க்கதரிசி இபுறாகீமைப் போல பல முறை புத்துணர்வோடு  எழுந்திருக்கிறது.     

13 ம் நூற்றாண்டில் மங்கோலியப் பழங்குடியினரான தாதாரியர்கள் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கரும்புக்காட்டுக்குள் புகுந்த யானை போல திடுமெனப் புகுந்து விவரிக்க முடியாத நாசத்தை விளைவித்தனர். சமர்கண்டு முதல் பக்தாது வரை வாழ்ந்த முஸ்லிம் உலகம் அந்த வெறி பிடித்த கூட்ட்த்தின் சண்டித்தனத்திலும் அமலியிலும் சிக்கி சின்னா பின்னமாகியிருந்த்து. த்தாரியர்களைப் பற்றி முஸ்லிம் சமூகத்தில் ஊடுறுவியிருந்த அச்சம் எத்தகையது என்பதை ஒரு அரபுப் பழமொழி படம் பிடிக்கிறது. அரபுகள் சொல்வார்களாம் : இதா கீல லக்க இன்னத் த்தர இன்ஹஸமூ பலா துசத்திக்
தாதாரியர் தோற்று விட்டார்கள் எனறால் நம்பக் கூடாது

ஒரு தாதாரியப் பெண் தங்கள் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞனைப் பார்த்து விட்டால் அங்கேயே நில்: என்று எச்சரிப்பாள். அவன் அங்கேயே நின்று விடுவான். அவள் வீட்டுக்குள் சென்று வாளை எடுத்து வந்து அவன் தலையை சீவுவாள் என்று தாதாரியரின் ஆதிக்கத்தையும் அதை கண்டு எதையும் செய்ய்ய முடியாதிருந்த முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலையையும் வரலாற்றாசிரியர்கள் விவரிக்கிறார்கள்.  ஆனால் மிகச் சீக்கிரத்தில் முஸ்லிம்கள் இந்தச் சோதனையிலிருந்து வெற்றிகரமாக மீண்டார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. அந்த மீட்சிக்கு இஸ்லாம் காரணமாக இருந்த்து,

எத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. அவர்கள் தோற்றுத்  துவண்டு போன களங்களில்  இஸ்லாம் வெற்றியடைந்திருக்கிறது, நவீன் ஆயுதங்கள் தொழில் நுட்பம் மிகுந்த ஊடகங்கள் என்ற எத்தைய எதிர்ப்புச் சூழ்நிலையும் மீறி தனது மக்களை காப்பற்றுகிற வலிவும் சாதுர்யமும் சாமார்த்தியமும் இஸ்லாத்திற்கு இருக்கிறது.  அதற்கான அடையாளங்கள் இப்போது தென்பட்த்துவங்கி விட்டன. இஸ்லாமையும் முஸ்லிம்களை எதிர்த்து முழங்குவதயே வாடிக்கையக கொண்டிருந்தவர்கள் ஒருவனை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்ப உதைப்பது அவன் பக்கம் இருக்கிற நியாயம் என்ன என்று கேட்க வேண்டிய இயற்கையின் ஒரு கட்டாய்த் திருப்பத்திற்கு ஆளாகி இந்தப் பக்கமிருக்கிற நியாயத்தையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இனி இஸ்லாம் பேசும். அது தனது எதிரிகளை வெல்லும். 

ஆக்கிரமிப்புச் சக்திகளை தனது சத்திய வெளிச்சத்தால் இஸ்லாம் எதிர் கொள்கிறது என்பதே இஸ்லாமிய வெற்றியின் பின்னணியில் இருக்கிற ரக்சியம்.  

தோல்வியின் வாசலிலும் விரக்தியின் விளிம்பிலும் நிற்கிற முஸ்லிம்கள் இஸ்லாமின் வழிகாட்டும் இந்த சத்திய விரலைப் பிடித்துக் கொண்டால் வரலாற்றின் சதிப்பள்ளங்களை அவர்கள் தாண்டிக் குதித்து விட முடியும். இரண்டாம் உலக யுத்த கால கட்ட்த்தில் துருக்கிய மக்கள் செய்த தவறை முஸ்லிம்கள் செய்து விடக்கூடாது.

இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு துருக்கியில் ஐரோப்பிய மோகம் கொண்ட ஒரு தலை முறை உருவானது. அவர்கள் இஸ்லாம் என்ற கீரீட்த்தை தங்கள் தலை மீது ஏற்றப் பட்டிருக்கிற சுமையாக கருதினார்கள். தங்கது அனைத்து வகையான பின்னடைவுகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று நினைத்தார்கள். உலகப் புகழ் பெற்ற துருக்கிக் தொப்பியை உதறினார்கள். தாடியை மழித்துக் கொண்டார்கள். பெண்கள் புர்கா அணியக் கூடாது என்றார்கள். ஐரோப்பியர்களைப் போல ஹட் தொப்பி வைத்துக் கொண்டார்கள். சுருட்டு பிடித்தார்கள். கோட் அணிந்து கொண்டார்கள். இப்படிச் செய்து விட்டால் ஐரோப்பியர்களாகி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்த்து. துருக்கிய மக்கள் தங்களது பழைய பெறுமையையும் இழந்தார்கள். புதிய முன்னேற்றத்தையும் இழந்தார்கள். இன்றும் ஐரோப்பாவின் நோயாளிகளாகவே இருக்கிறார்கள். இப்போது அங்கு ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. இஸ்லாமை தங்களது வாழ்க்க்கைகுள் மீட்டு வந்தாக வேண்டும் என்ற முனைப் போடு அங்குள்ள இளம் த்லைமுறை இஸ்லாம் வேண்டும் என்று கேட்டு போராடிவருகிறது. 

சிறிது காலம் ஐரோப்பிய உலகு செய்த மூளைச் சலைவைக்கு இடம் கொடுத்த்தால் துரூக்கியின் வளர்ச்சி இன்னும் ஒரு 50 ஆண்டு காலத்திற்கு பின்னுக்குச் சென்று விட்ட்து.

இத்தைகைய விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் நெருக்கடிகளில் இருந்து மீளவும் முஸ்லிம்களுக் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. தங்களது சமயத்தை உறுதியாக பற்றிக் கொள்வதே அது!

இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமின் அடிப்படையான நீதி உணர்வுக்கு எதிராக தங்களது சுய உணர்ச்சிகளுக்கு சம்யச் சாயம் பூசிக் கொள்ளும் போலி புரட்சியாளர்களையும் தூய்மை வாதிகளையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள தவறி விடக்கூடாது. அவர்களை தங்களது சமூகத்தின் எல்லா மட்ட்த்திலிருந்தும் ஒதுக்கி வைக்க வேண்டும். கட்டுச் சோற்றுக்குள் எலிகளையும் சேர்த்துக் கட்டிவைத்துக் கொண்டு நீண்ட பயணம் போக முடியாது.

எல்லாருக்குமான நீதி எல்லோருக்குமான சட்டம் எல்லோருக்குமான கருணை என்ற தெய்வீக கோட்பாடே இஸ்லாமின் லட்சியம் என்ற சுத்தமான உணர்வு முஸ்லிம்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சாரார் புரிகிற அட்டூழியம் நீதி தவறும் துணிச்சலை அவர்களுக்கு தந்து விடக்கூடாது.

கொள்கையற்றவர்களும், மதமற்றவர்களும், வழிகாட்டிகளை தொலைத்தவர்களும் நட்த்திக் காட்டுகிற  கூத்தாட்ட்த்தில் மயங்கிவிடாமல், முஸ்லிம்கள்  தங்களது கிடைத்திருக்கிற உறுதியான சம்யக்கயிற்றை பலமாக பற்றிக் கொண்டால் போதுமானது.  மார்க்கம் அவர்க்களை மீண்டும் உன்னத நிலைக்கு கொண்டுவந்து விடும்; மக்காவின் ஒட்டகம் மேய்க்கத் தெரியாத உமர்களை உலகச் ச்கரவர்த்திகளாக உயர்த்தியது போல.

அனைவருக்கும் இனிய ஈத் நல்வாழ்த்துக்கள்.  

"வெள்ளிமேடை " யில் இந்த வார ஜும்ஆ குறிப்பு

அன்பிற்கினிய நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
என்னுடை ஜும் ஆ உரை குறிப்புகளின் தொகுப்பு வெள்ளிமேடையில் (vellimedai.blogspot.com) கிடைக்கிறது. நீங்கள் இலகுவாக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
உங்களது கருத்துக்களையும் அத்ற்கு கீழே தெரிவிக்கலாம்.
உங்களைச் சார்ந்த ஆலிம்களுக்கு இத்தகவலை தெரிவியுங்கள்

ஜும் ஆ உரைகளுக்கான ஒரு நெட்வொர்க் உருவாக இது உதவும்.
அல்லாஹ் நமது முயற்சியை அங்கீகரிப்பானாக!

Thursday, August 12, 2010

INDIAN EXPESS NEWS ON ME 02 Aug 2010

Coimbatore Pesh imam turns Internet evangelist


WHEN you think of a Pesh imam, you imagine a person who spends most of his time in
mosque and giving religious sermon. You don’t expect him to be tech savy. But moulavi A
Abdul Azeez Fazil Baqavi is a cut above the rest. A double MA in history and an M.Phil
student Baqavi is focused on creating awareness about computer literacy among moulavis.
To his credit he has developed many Islamic Tamil websites besides blogs.
“I wish to educate imams so  that they can use internet to update their knowledge and to
have better understanding about the happenings across the globe. One of my first blogs
was exclusively for Vellore Al-Baqiyathus Salihath Arabic College alumni,” he said about
libas07.blogspot.com. 

His vellimedai.blogspot.com was an extension of his religious duties. Its content was
aimed at helping imams to give information packed sermons on Jumu’ah (Friday) prayers
instead of the stereo-type lectures.To create awareness about the benefits of internet use,
Baqavi has already conducted six seminars across the State.He is currently pursuing
M.Phil and his thesis is on  Modern Arabic specifically on Prophet Yousuf ’s life. For his
thesis he is being guided by DrP Nisar Ahmed of Arabic, Persian
and Urdu department at Madras University. Baqavi plans to take doctorate
as well.
His web portals include  www.darulquran.net (first Tamil website for Holy Koran),
www.rahamath.net (first Tamil Hadis website) besides his azeezbaqavi.blogspot.com.

Friday, July 30, 2010

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

“சாத்தான் அனுப்பிய அரக்கன் இவன்”– அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் கோபம் கொப்பளிக்க உச்சரித்த இந்த கடுஞ்சொற்கள் இறுதியில் 22 வயது அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனையை பெற்றுத்த்ந்து விட்டன. இந்தியக் குற்ற வழக்கு சரித்திரத்தில் மிக விரைவாக வழங்கப் பட்ட தீர்ப்பு இது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் சதுக்கம், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் ஊள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 25 வெளிநாட்டவர் உள்ளிட்ட 166 பேர் பலியாயினர். 304 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் இந்தியாவின் பிரபல என்கவுனடர் ஸ்பெஷலிஸ்டான ஹேமந்த் கர்கரே உட்பட 14 போலீஸாரும் அப்பாவிப் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்

மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் பலியாயினர். அஜ்மல் காசப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் மும்பை தாக்குதல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வவழக்கில் 17 மாதத்திற்குள்ளாக 650 சாட்சிகளை விசாரிக்கப் பட்டு மே மூன்றாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட்து. அமரிக்க பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட கருவிகளைப் பற்றிய விவரங்களையும் தொலைத் தொடர்புச் சாதன்ங்கள் எப்படிப் பயன்படுத்தப் பட்டன என்பதையும் நிதிபதி மதன் லட்சுமண்தாஸ் தகில்யானிக்கு விளக்கினர். இந்திய நீதிமன்ற வரலாற்றில் அந்நிய நாட்டு சாட்சிகள் விசாரிக்கப் பட்ட முதல் வழக்கு இது.

அது போல, இந்தக் கோரத் தாக்குதல் உள்ளூர் மக்களின் உதவியில்லாமல் நடந்திருக்க முடியாது என்று “மோடி”கள் இட்ட கூக்குரல் காரணமாக அவசர அவசரமாக வழக்கில் சேர்க்கப் பட்ட பஹீம் அன்சாரி சபீய்யுத்தின் அஹ்மது ஆகியோர் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்ட்தும் இந்திய குற்ற வழக்குச் சரித்திரத்தில் ஒரு அதிசயம் தான்.

என்றாலும் வழக்கு நடைபெற்ற விதமும்- வழக்கின் போது விவாதிக்கப் பட்ட விசயங்களும் இந்தியா என்கிற மாபெரிய தேசத்தின் புலானய்வுத்திரன், விசாரனைத்தரம் குறித்த பலத்தை சந்தேகத்தையும் கேள்விகளையும் விட்டுச் சென்றுள்ளதை மறுக்க முடியாது.

கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட்தை கொண்டாடிய மீடியாக்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களது மனது இப்போதுதான் ஓரளவு சாந்தமடைந்துள்ளதாகவும் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டால் மாத்திரமே அவர்கள் முழுமையாக நிம்மதியடைவார்கள் என்று காரம் க்க்கிக் க்க்கிப் பேசின. TIMES NOW தொலைக்காட்சியின் மூத்த செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி Arnab Goswami அநியாயத்திற்கு மூல வியாதிக்கார்ரைப் போல நாற்காலி நுனியில் உட்கார்ந்து கொண்டு உடனிருந்த நிபுணர்களையும் பார்வையாளர்களையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார். பாதிக்கப் பட்ட சிலர் குற்றவாளியை மன்னித்து விட்ட்தாக சொன்னது ஆண்டி கிளைமாக்ஸாக அமைந்த்து.

கசாப் தண்டிக்கப் பட வேண்டியவனே! தண்டனை பெற்ற கசாப் சிறையில் ஐவேளை தொழுவதாகவும் திருக்குர் ஆன் ஒதுவதாகவும் செய்திகள் வருகின்றன. அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்பவர்கள் அல்லாவின் பக்தர்களாக காட்டிக் கொள்வது அசமஞ்சித்தனமே தவிர வேறில்லை. “அப்பாவி ஒருவனைக் கொல்பவன் மனித சமூகத்தையே கொலை செய்தவனைப் போன்றவன். ஒரு உயிரைக் காத்தவன் மனித சமூகத்தையே காப்பாற்றியவனவான் என்று பேசுகிற திருக்குரானுக்கு செந்தம் கொண்டாட அவர்கள் ஒரு போதும் அருகதை அற்றவர்களே.

இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளும் வழிகாட்டுதல்களும் தெளிவானாவை. முல்லாக்களும் மதரஸாப் பீடங்களும்தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற தேவைகளற்றவை. என்வே இந்த தீவிரவாத்தை தாக்குதலுக்கு இஸ்லாமோடு தொடர்பு படுத்தி நியாயம் கற்பிக்க எந்த வழிவகையுமில்லை.

பாகிஸ்தானிலிருக்கிற சைத்தான் பிடித்த சில இந்திய எதிரிகள் இந்த்த் தாக்குதலுக்கு காரணமாக இருக்க கூடும். அதில் மதச் சாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அஜ்மல் கசாபை நினைவோடும் நினைவிழக்கச் செய்த நிலையிலும் விசாரித்த அதிகாரிகள் அவனிடம் அதிகமாக கேட்ட கேள்விகள் “ஜிஹாதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜிஹாதைப் பற்றி திருக்குர் ஆன் என்ன சொல்கிறது.” என்பவையாகும். இது பற்றி கசாபுக்கு எதுவும் தெரிந்திருக்க வில்லை. அவனால் எந்த் திருக்குர் ஆன் வசனத்தையும் கூறமுடியவில்லைஎன்று அதிகாரிகளின் அறிக்கை தெளிவு படுத்துகிறது,

"When we asked whether he knew any verses from the Quran that described jihad, Ajmal Amir said he did not," police said. "In fact he did not know much about Islam or its tenets," according to a police source. (ABC News, 03-Dec-2008)

கசாபுக்கு வழங்கப் பட்ட தண்டனையை இந்திய முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்கிற அமைப்புக்கள் பலவும் வரவேற்றன. அகில இந்திய முஸ்லிம் 'தனியார் சட்ட வாரியத்தின் துணை தலைவர் சாதிக் கூறுகையில், 'ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்த கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான். அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களை, பல முறை தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கருணை காட்ட முடியாது என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது' என்றார்.

முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் காலித் ரசீத் கூறுகையில், 'இந்திய நலனுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு, இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நபர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

முஸ்லிம் அமைப்புக்களின் இத்தகைய வெளிப்படையான எதிர்ப்புச் சூழ்நிலையிலும் கூட மும்மபை தீவிரவாத்த் தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மீடியாக்கள் அடையாளம் படுத்த்தின., இந்திய உள்துறை அமைச்சர் அதிகம் படித்த சிதம்பரம் உட்பட பலரும் இதை இஸ்லாமிய அடிப்படை வாத்த்தோடு இணைத்துப் பேசினர். இத்தப் போக்கு பிரச்சினையின் உண்மையான கண பரிமாணத்தை திசை திருப்பவே செய்யும்.

மும்பை விசேஷ நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரும் மும்பைத் தாக்குதல் வழக்கும் விசாரணையும் முழுமையடையாத்தாகவே இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரனை வெளிப்படுத்த்த் தவறிய மிக முக்கியமான அம்சம் – இச சதித்திட்ட்த்திற்கான நோக்கம் – என்ன என்பதே!

கசாபின் மீதான குற்றச் சாட்டுகள் நீரூபிக்கப் பட்டிருப்பதாக கூறிய நிதிமன்றத்தில் அவனுக்கு வழங்கப் பட வேண்டிய தண்டனைப் பற்றி வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் சுமார் 2 மணிநேரம் வாதிடினார்.

மும்பையின் ஆர்தர் சாலைச் சிறைச் சாலையில் அமைக்கப் பட்டிருந்த விசேஷ நிதிமன்றத்தில் நிரம்பி வழிந்த கூட்ட்த்திற்கிடையே நிதிபதி தகில்யானியின் முன்னால் அவர் எடுத்துவைத்த வாதங்கள் கசாபின் குற்றச் செயலின் கனபரிமாணத்தை படம்பிடித்துக் காட்டின.

கசாப் திட்டமிட்டே இத்தாக்குதலுக்கு தயார்படுத்தப் பட்டவன். லஷ்கர் தைய்யிபா அமைப்பின் பிதாயீன் பிரிவைச் சேர்ந்தவன் மிகவும் முன்கூட்டியே திட்டமிட்ட இந்த சதிச் செயலை நிதானமாக, எவ்வித சலனமுமின்றி சிரித்தபடியே நிறைவேற்றியுள்ளான். மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த நேரத்தில் தான் வந்துவிட்டதாக கசாப் வருத்தப்பட்டுப் பேசியதே அவனது கொலை வெறியின் தீவிரத்தைப் காட்டு வதாகவும், சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தனது கூட்டாளி அபு இஸ்மாயிலுடன் சேர்ந்து 60 பேரை கசாப் கொன்றுள்ளதாகவும், கசாப் சிரித்தபடியே அப்பாவி மக்கள் மீது துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளதாகவும் இது முழுக்க முழுக்க ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் என்று கூறிய உஜ்வால் நிகாம். இந்தக் கொடூரச் செயலுக்கான நோக்கம் – அல்லது காரணம் என்ன என்பதை உண்மையாகவும் முழுமையாகவும் கடைசி வரை விளக்கவே இல்லை.

பத்ரிகைகளும் இணையதள செய்தி ஊடகங்களும் பணத்திற்காகவே இத்தாக்குதலில் கசாப் ஈட்பட்ட்த்தாக் கூறின. இத்தாக்குதலில் வெற்றிகரமாக முடித்துவிட்டல் தனக்கு 1.50.000 ரூபாய் வழங்கப் படும் என்று வாக்க்களிப்பட்ட்தாகவும் தனது தந்தையின் பேல்பூரி வியாபாரத்தால் வசதி பெறமுடியத தன்னுடைய குடும்பம் இந்த பணத்தால் வசதி பெறக்கூடும் என்று கசாப் கூறியதாக ஏபிசி செய்தி கூறியது.
I was promised that once they knew that I was successful in my operation, they would give Rs 150,000, to my family," said Qasab.
ஏ பி சி இதற்கு அடுத்த்தாகச் சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானது. கசாப் சொன்னான் “எனக்கு நல்ல உணவும் பணமு கொடுத்தீர்கள் என்றால் அவர்களுக்காக நான் செய்த காரியத்தை உங்களுக்காகவும் செய்வேன்” "If you give me regular meals and money I will do the same for you that I did for them," he said

பதிரிகைகளிலும் இணைய தளங்களிலும் உலாவருகிற இது போன்ற செய்திகளில் எவ்வளவு நிஜம் எவ்வளவு கற்பனை என்பதை சாமாணிய மக்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால வலிமையான ஒரு தேசத்தின் புலன் விசாரணை அமைப்பாலும் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ற கேள்விக்கு விடையேதும் கிடைக்க வில்லை என்பதே இந்த வழக்கு விசாரனையின் மாபெரிய சருகுதலாகும்.

நிதிபதிகள் தங்களது தீர்ப்ப்புகளில் குற்றம் இன்ன நோக்கத்திற்காக செய்யப் பட்டது என்பதை தெளிவுபடுத்துவார்கள். கடுமையான தண்டனைகளின் போது இது இன்னும் விரிவாக சொல்லப்ப்டும். ஆனால் இந்த வழக்கிலோ நீதிபதி தகில்யானி “ இந்த மனிதன் (கசாப்) எந்த மனிதாபிமான உதவியையும் கோருவதற்கு தகுதிதியை இழந்துவிட்டான். ( "This man has lost the right to get any humanitarian relief," Tahaliyani observed. ) என்று கூறினாரே தவிர இவனை குற்றம் செய்யத் தூண்டிய காரணம் இது என்று எதையும் கூற வில்லை.

ஒரு கொடூரத் தாக்குதல் ஏன் நடத்த்ப் பட்டது? அதன் பின்னணி என்ன என்பது தீர்மாணமாகவும் தெளிவாகவும் அடையாளம் காணப்படாமல், தீவிரவாதம் அல்லது இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது பாகிஸ்தானிய தீவிரவாதம் என்ற ஒரு சொற்றடரை மட்டுமே கீறல் விழுந்த இசைத்தட்டாக சுழல விடுவது பிரச்சினைக்கு தீர்வாகிவிடுமா என்ற கேள்விக்கு விடை எதுவும் இதுவரை காணப்படவில்லை.

எந்த ஒரு பெரிய விபத்தின் போதும் முழுமையற்ற தற்காலிக கண்டுபிடுப்புக்களை பெரிய சாதனையாக முழக்கி நீட்டுகிற இந்திய புலனாய்வு மற்றும் நீதி அமைப்புக்கள் தேசத்தின் கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றன என்றே சொல்ல வேண்டும்.

ஹைதரா பாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்களின் போது இந்திய புலனாய்வு அமைப்புக்கள் நடத்திய அலம்பல்களை என்ன வென்று வர்ணிப்பது? பங்களா தேஷிலிருந்து ஹுஜி அமைப்பின் கமாண்டோ ஒருவன் மொபைல் போன் மூலம் குண்டு களை வெடிக்கச் செய்துள்ளான் என்று எவ்வளவு அழுத்தமாக ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அடித்துச் சொன்னார்கள்? இப்போது அது உள்ளூர் இந்துத்துவ அமைப்பின் வேலை என்று தெரியவருகிற போது புலனாய்வு அமைப்புக்கள் கேலிப்பார்வைக்கு ஆளாகின்றன என்றாலும் அவற்றுக்கு ஏற்படுகிற அவமானத்தை விட இந்தியப் பொதுஜனத்தின் பாதுகாப்பு எவ்வளவு தூரம் கேள்விக்குரியதாகிறது என்பதல்லவா முக்கியம்?

மும்பை தீவிரவாத்த் தாக்குதல் வழக்கியில் கையில் சிக்கிய ஒருவனை கழுவிலேற்றியாச்சு என்பது மட்டுமே இந்த தீர்ப்பின் ஒற்றைச் சாதனை என்று சொன்னால கண்டிப்பாக நமது நாட்டின் புலனாய்வு மற்றும் நீதி அமைப்பின் ஆளுமை சந்தேகத்திற்குரியதாகிவிட வாய்ப்பிருக்கிறது,

அதிர்ஷ்ட வசமாக இந்த வழக்கில் இரண்டு இந்திய முஸ்லிம்கள் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பஹீம் அன்சாரி சபிய்யுத்தீன் அஹ்மது ஆகிய அந்த இருவரும் தான் கசாபுக்கு மும்பை நகரத்தின் வரை பட்த்தை கொடுத்தார்கள் என்பதே குற்றச்சாட்டு. அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்த வரைப்படம் கசங்கவோ இரத்தக் கறை படிந்த்தாதக்வோ இருக்கவில்லை என்று கூறி நீதிமன்றம் அவ்விருவரையும் விடுதலை செய்துவிட்டது.

புலனாய்வு அமைப்புக்களின் முதுகில் விழுந்த கசையடி அது. இனி இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்கள் தேசியை மாநில நகர வரை படங்களை கையில் வைத்துக் கொள்வது ஆபத்தானது என்று அச்சப்படுகிற ஒரு சூழ்நிலையை நாட்டின் பல பகுதிகளிலிம் புலனாய்வு அமைப்புக்கள் ஏற்படுத்தியிருந்தன.

சுற்றுலா செல்வதற்கு வசதியாக நம்வீட்டில் ஒரு பெரிய மேப் வாங்கி வைக்க வேண்டும் என்று என் மனைவி சொன்னார். சத்தம் போடாதே! யாராவது போலீஸ்காரன் காதில் விழுந்து தொலைக்கப் போகிறது. முஸ்லிம் வீட்டில் மேப் வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணைக்கு வந்து விடப் போக்றார்கள் என்று சில மாதங்களுக்கு முன் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

கோவையின் புற நகர்ப் பகுதியில் குடியிருந்த இரண்டு இளைஞர்களை அவர்கள் கோவை நக்ரத்தின் மேப் வைத்திருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்த்து கோவை மாநகர காவல் துறை. கோவை நகரை தகர்க்க பயங்கர சதி என்று மூன்று நாட்கள் மீடியாக்கள் அலறின. பின்னர் அந்த இளைஞர்கள் விடுதலை செய்யப் பட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் மும்பை நீதிமன்றத்தின் இந்த்த் தீர்ப்பு புலனாய்வு அமைப்புக்களின் சாரமற்ற குற்றச்சாட்டுகளின் வேஷத்தை கலைத்து விட்ட்து.

இந்தியப் புலனாய்வு அமைப்பின் இந்த ஆளுமைக் குறைவினாலேயே இரு இந்தியர்கள் விடுதலை செய்யப் பட்ட்தை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த்திக் கொள்ள முயன்றது. இந்திய நீதிம்னறத்தின் தீர்ப்பு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்திருக்கிறது என அது நல்ல பிள்ளை போல பேசியது.

அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் போக்கினால் தனது மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை இழந்து விட்ட பாகிஸ்தானிய அரசுகளை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கென்னவோ செத்த பாம்பை அடிக்கிற கதையாகத்தான் தோன்றுகிறது. இது விசத்தில் கெட்டிக் கார்ர்களான நம்மூர் அரசியல் வாதிகள் அதையே ரொம்ப சாதுர்யமாக செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று அரற்றிக் கொண்டிருப்பது நம்முடை அரசியல் வாதிகளும் புலனாய்வு அமைப்புக்களுக்கும் சொளகரியமான ஒரு காரணமாகப் அமைது விட்ட்து. இந்த வார்த்தையை சொல்லி விட்டால் இந்தியப் பொதுஜன்ங்கள் அமைதியடைந்து விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையே அதற்கு காரணம்.

நம்முடைய நாட்டின் பொருளாதார தலைநகரான ஒரு நகரத்திற்குள் பக்கத்து நாட்டிலிருந்து பத்து பேர் சர்வ சாதாரணமாக பய்ங்கர ஆயுதங்களுடன் வந்து ஒரு 64 மணிநேரத்திற்கு நாட்டைபை கதி கலங்க வைத்து விட்டார்கள் எனில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களிடம் எத்தகைகைய விசாரணை நடைபெற்றது என்ற தகவல் எதுவும் இது வரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப் படவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிம்னறமும் இது குறித்த எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.

இத்தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெற்றதாக மட்டுமே குறிப்பிட்ட அரசு வழக்கறிஞரும் அதை ஆமோதித்த நீதிமன்றமும் இந்த் தாக்குதலுக்காக இந்திய மண்ணில் மேற்கொள்ளப் பட்ட முன்னேற்பாடுகள் பற்றி எதையும் குறிப்பிட வில்லை.

இந்த வழக்கில் திடீர்ன்று முளைத்த அமெரிக்கத் தயாரிப்பான ஹெட்லீக்கு என்ன தண்டனை என்று கூறப்படவில்லை. அவர் தன் மும்பைத் தாக்குதலுக்கு வடிவம் கொடுத்தவர் என்று அமெரிக்கா கூறுயது. அந்த வேதவாக்கை இந்திய அரசு அப்படியே எதிரொலித்த்து. தன்னுடையை மண்ணில் மிகப் பெரிய இரத்தக் களறியை ஏற்படுத்திய ஒருவனைப் பற்றிய உண்மையை அமெரிக்காவே கண்டறிந்து அவனை கைது செய்த பிறகு அந்தச் சதிகாரனை எங்களிடம் கொடு என்று கூட கேட்காமல் அவனை விசாரிக்கவாவது அனுமதி வேண்டும் என்று இந்தியா மன்றாடியது. உலகில் இதைவிட நீதமான ஒரு கோரிக்கை இருக்க முடியாது. அமெரிக்கா மறுத்துவிட்ட்து.

உலகில் யாரிடமிருந்தும் தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் உரிமையும், மற்ற யாருக்கும் தேவையானதை தர மறுக்கும் உரிமையும் அமாரிக்க மக்களுக்கு உண்டு. அது அந்த நாட்டின் சுதந்திர தேவி அவர்களுக்கு பாலூட்டிய பண்பாடு. அதனால் அமெரிக்க இந்தியாவின் நீதமான கோரிக்கையை ஏற்கமறுத்த்து. அமெரிக்காவின் இந்த நீதியுணர்வு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் மும்பைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக ஹெட்லியின் பெய்ரும் அவருக்கு இடமளித்த ராணாவின் பெய்ரும் முக்கியமாக அடிபடத் தொடங்கிய பிறகு, அமெரிக்காவின் கூற்றை இந்தியாவும் எதிரொலித்து விட்ட பிறகு, இந்த வழக்கின் குற்றவாளிகளின் பட்டியலில் ஹெட்லியின் பெயர் ஏன் சேர்க்கப் படவில்லை. அவர் மீதான குற்றத்திற்கு தண்டைனை ஏன் விதிக்கப் படவில்லை? என்ற கேள்விகள் இன்று வரை ஒரு புதிராக நிற்கின்றன. மும்பை விசேஷ நீதிமன்றமோ இது குறித்து மூச்சு விடவில்லை.

ஒரு அரசு வக்கீலாக மாத்திரம் நிற்காமல் ஏதோ வெளியுறவுத்துறை செயலாளர் போல வெளியரங்கில் சரமாரியாக பாகிஸ்தானை குற்ற்ம் சாட்டிப் பேசிய திருவாளர் உஜ்வல் நிகமின் வாயிலிருந்து ஒரு தடவை கூட ஹெட்லி என்ற பெயர் வரவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வரிவிடாமல் அலசிய மீடியாக்களிலும் இது பற்றி ஒரு விவாதமும் சர்ச்சையும் எழவில்லை.

மிக அத்தியாவசியமான இந்தக் கேள்வியை கண்டு கொள்ளாத மீடியாக்களும் இந்துத்துவ அரசியல் வாதிகளும் சதடி சாக்கில் கசாபுக்கு தூக்கு என்ற விசயத்தோடு அப்ஸல் குருவின் தூக்கு சமாச்சாரத்தையும் சந்திக்கு இழுத்த்தார்கள்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்டி அநியாயத்திற்கு இதில் அக்க்றை காட்டியது. அதன் வெத்து வேட்டுச் செய்தியாளர் பொய்யான கோபத்தோடு இந்த விசயத்தில் காட்டிய ஆக்ரோஷத்தை கண்டிருந்தால் நீங்கள் ஆடித்தான் போயிருப்பீர்கள். அவ்வளவு கோபம் அவருக்கு. என்ன முட்டாள் செய்தியாளர்கள் இவர்கள் என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு இந்த விசயத்தை இழு இழி என்று அந்த தொலைக்காட்சி இழுத்த்து. அதன் பிறகு இந்த ஜுரம் மற்ற சானல்களையும் தொற்றிக் கொண்ட்து.

மும்பை தாக்குதல் வழக்கில் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்த வழக்கின் முதல் கட்ட நடவடிக்கையே. இந்த தண்டனைக்கு, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பிரிவு 366ன் கீழ், மும்பை ஐகோர்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கசாப் தரப்பிலும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படலாம். அப்படி அப்பீல் செய்யப்பட்டால், வழக்கின் அனைத்து சாட்சிகளும் மீண்டும் விசாரிக்கப்படுவர். பின்னர் தான் தண்டனையை அப்படியே உறுதி செய்யலாமா அல்லது குறைக்கலாமா என்பதை மும்பை ஐகோர்ட் முடிவு செய்யும். கசாப்பிற்கான மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தாலும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உண்டு. அப்படி அப்பீல் செய்யப்பட்டால், முந்தைய தீர்ப்புகள் உட்பட அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் தீவிரமாக பரிசீலித்து தீர்ப்பு வழங்கும். சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தால், அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், ஜனாதிபதியிடம், கசாப் கருணை மனு அளிக்கலாம்

உச்ச நீதிமன்றத்தால் தூக்கு உறுதி செய்யப் பட்ட 29 பேர் இன்னும் ஜனாதிபதியிடம் மனுக் கொடுத்து வரிசையில் நிற்கிறார்கள். கசாப் அந்த வரிசையில் நிற்கப் போகிறானா என்பதே இன்னும் தெளிவாகவில்லை.


இது ஓரளவு படிப்பறிவுள்ள அனைவருக்கும் தெரியும் என்கிற போது கேமராவுக்கு முன்னாள் கிழவி நியாயம் பேசிக் கொண்டிருக்கிற வம்பர்களுக்குத் தெரியாமல் போவது ஆச்சரியமே.

நீதிமன்ற அமைப்பை பராமரிக்க் வேண்டியதில்லை என்றால் எப்போதோ கசாபை எண்கவுண்டரில் சுட்டுத் தள்ளியிருக்கலாமே! கசாபும் அதற்கு கவலைப் பட்டவன் அல்லவே! அவனுக்காக கவலைப் படுவதற்கும் யாரும் இல்லையே! என்பதல்லாம் அவர்களுக்குத் தெரியாதா? தொரியும். ஆனாலும்
மீடியாக்கள் வேணுமென்றே மக்கள் மத்தியில் பொறுப்பின்றி ஆத்திரத்தை கிளப்புகின்றன.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் துக்கு தண்டனை விதிக்கப் பட்ட்வர்கள்தான் தூக்கு தண்டனைய எதிர்பார்த்திருக்கும் கைதிகளில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசாமல் அப்ஸல் குருவைப் பற்றி அவர்கள் பேசுவது இதில் தேவையற்ற மதச் சாயத்தை பூசும் உத்தியாகும்.

அஜ்மல் கசாபை தூக்கிலிட்டால் அதனால் இந்தியாவில் எந்த் விளைவும் வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை தூக்கி லிட்டாலும் பெரிதாக எந்த விபரீதமும் ஏற்பட வாய்ப்பில்லை.

அப்ஸல் குரு விசய்ம அப்படி அல்ல. அதில் காஷ்மீர் மாநிலமே கொந்தளித்துப் போகும் அபாயம் இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த காங்கிரஸ் காரரான குலாம் நபி ஆஸாத் அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசு. இப்போது திடீரென பேருந்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவன் பின் சீட்டில் உட்காந்திருப்பவனின் நீ எங்கடா போற என்று செல்போனில் கேட்பது போல அப்ஸல் குரு விசய்த்தில் விரைவாக ஒரு முடிவுக்கு வருமாறு தில்லி மாநில அரசிடம் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறது.

'முன்னர் ஒரு சம்யம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது “ ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தவர்களின் பட்டியலில் அப்சல் குருவுக்கு முன்பாக 21 பேர் உள்ளனர். இவர்கள் விஷயத்தில் முடிவு எடுத்த பின்னரே, அப்சல் குரு விஷயத்தில் முடிவு எடுக்க முடியும். இது சட்ட நடைமுறை' என்றார். இத்தனை நாட்கள் வாளாவிருந்த அவரது துறையே இப்போது தில்லி அரசுக்கு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறது.

இது என்னடா வம்பாப் போச்சு என்று பய்ந்த தில்லி முதல் ஷீலா தீட்சித் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் உடனே அந்தக் கடித்த்தை ஆளுநருக்கு அனுப்பி “நீங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள் என்று கேட்டார். தில்லி மாநில ஆளுநரோ அப்ஸல் குவிற்கு தூக்கு தண்டனை வழங்கினால் ஏற்படக் கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் அதில் இல்லை என்று அதை திருப்பி அனுப்பி யிருக்கிறார். இதற்கிடையே தற்போதைய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வும் அப்ஸல் குருவிற்கு தண்டனை நிறைவேற்றுவது காஷ்மீரில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணும் என்று எச்சரித்திருக்கிறார்.

உங்களுக்கு தலை சுற்றுகிறதா?

நம் நாட்டின் தீவிரவாத்த்தாக்குதல்களின் உண்மைப் பின்னணியை தேடும் படலம் இப்படித்தான் மிகச் சுலபமாக மத மாச்சரியத்திற்குள் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது.


கசாபுக்கு மரண தண்டனையை தீர்ப்பளித்த நிதிபதி தகில்யானி கசாபை பார்த்து – நீ இறக்கும் வரை உனது கழுத்தில் கயிறுமாற்றப் பட்டு அதில் தொங்க விடப்படுவாய் என்று சொல்லி விட்டி “ யே ஹமாரா தரீக்கா ஹே” இது தான் எங்களூர்ப் பழக்கம் என்று சொன்னார்.

தீவிரவாத்த்தின் ஆணிவேரை கண்டறியாமல், புலனாய்பு அமைப்புக்களின் புனைவுகளில் நீதிமன்றங்களும் அரசுகளும் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் இந்த அக்கப்போ தொடந்து நடந்து கொண்டிருக்கும் வரை இப்படித்தான் சாத்தான் அனுப்புகிற அரக்கர்கள் சத்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். உஜ்வால் நிகம்கள் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஏ பீ ஹமாரா த்ரீக்கா ஹே!

திருமணப் பதிவுச் சட்டம் - தீராக் குழப்பம்!

2009 நவம்பர் 24 ம் தேதி முதல் தமிழகத்தில் நடை பெறுகிற அனைத்து திருமணங்களையும் அரசுப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்ததிலிருந்து அரச்ல் புரசலாக கிளம்ம்பியிருந்த புகை மூட்டம் நாட்கள் செல்லச் செல்ல “எங்கள்து பிணங்ககளின் மீது சென்று தான் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும்” என்ற சவடால் வரை வளர்ந்துள்ளது.

80 களின் பிற்பகுதியை நினைவூட்டும் ஒரு போராட்டச் சூழலுக்கு முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்லும் ஆவேசப் பேச்சுக்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன
· 2009 ம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி "அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
· உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும்'
· கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.’
· மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.
· சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும்.
· விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள் அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
· பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது

இச்சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது உண்மையே என்றாலும் அந்தச் சலனம் திருமணப் பதிவை எதிர்த்து அல்ல.

ஏனேனில் ப்ன்னூறு வருடங்களாக திருமணங்களை முறையாக பதிவு செய்கிற அமைப்பு முஸ்லிம்களிடம் சிறப்பாக - அரசுக்கே முன்னுதாரணமாக அமையத்தகக் வகையில்-
செயல்பட்டு வருகிறது.

அதனால் தான் அரசின் திருமணப் பதிவுத் துறையில் “முஸ்லிம் திருமணப் பதிவு” என்ற அம்சம் இதுவரையில் இருந்ததில்லை. அரசின் திருமணப் பதிவைப் பற்றிய இணைய தளத்திற்குச் சென்றால் மூன்று வகையான பதிவுப் பகுதிகளைக் காணலாம். “இந்துத் திருமணப் பதிவு” “கிருத்துவத் திருமணப் பதிவு” தனிநபர் திருமண்ப் பதிவு என்ற மூன்று பதிவுகள் மட்டுமே பதிவுத்துறை அலுவலகக் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

“முஸ்லிம் திருமணப் பதிவு” என்ற ஒரு அம்சமே திருமணப் பதிவுத்துறையின் பதிவேடுகளில் இல்லாதிருப்பதற்கு, இஸ்லாமிய திருமணங்கள். முறைப் படி முஸ்லிம் ஜமாத்துக்களில் அல்லது மாவட்ட மாநக காஜிகளிடம் பதிவு செய்யப் பட்டு வந்ததே காரணமாகும்.

தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரை எந்த ஒரு முஸ்லிம் அவர் வாழும் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சார்ந்த ஜமாத் அமைப்பில் இணைந்தே வாழ்கிறார். அவர் சார்ந்துள்ள ஜமாத் அமைப்பு அவர் மீது அரசை விட பலமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதும் எதார்த்தம்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் அல்லது ஒவ்வொரு ஜமாத் அமைப்பும் திருமணப் பதிவுப் புத்தகம் ஒன்றை மிக எச்சரிக்கையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

ஒரு சொத்து வழக்கிற்காக 1928 ல் நடை பெற்ற ஒரு திருமணத்திற்கான சான்று தேவைப் பட்ட போது பள்ளிவாசலின் பழைய நோட்டுப் புத்தகம் ஒன்றில் அத்திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்த்ததை தாங்கள் எடுத்துக் கொடுத்ததாக தாராபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் நிர்வாகி கூறினார்.

நான் எங்களது குடும்பம் சம்பந்தப் பட்ட ஒரு பள்ளிவாசலில் என் பெற்றோரின் திருமண்ப் பதிவை பார்த்திருக்கிறேன், எங்களது தாத்தா பாட்டியினுடைய பதிவும் கூட அந்தப் புத்தகத்தில் இருப்பதாக எனது உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள்,

முஸ்லிம் திருமணம் பெண் வீட்டைச் சார்ந்த ஜமாத்தின் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது, அல்லது ஊர்க் காஜி திருமணத்தை பதிவு செய்கிறார். அப்போது மண்மகனது திருமண நிலையைப் பற்றிய ஒரு சான்றறறிக்கை அவர் சார்ந்துள்ள ஜமாத் அளிக்கிறது. அந்த அறிகையின் அடிப்ப்டையிலேயே திருமணம் நடத்தி வைக்கப் படுகிறது.

பள்ளி வாசலின் பதிவு இஸ்லாமிய முறைப்படியான திருமணம் நடைபெறுகிற அந்த இடத்திலேயே நேரடியாக நிமிடக் குறிப்போடு பதிவு செய்யப் படுகிறது.

மண்மக்களுடைய முழு பெயர் விலாசம் மற்றும் கையொப்பம் பெண்ணின் பொறுப்பாளரின் பெய்ர் மற்றும் கையொப்பம் பெண் வீட்டார் சார்பாக ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் சார்பாக ஒரு சாட்சி அவர்களது விலாசம் கையொப்பம். திருமணத்தை நடத்தி வைத்த மௌல்வியின் பெய்ர் மற்றும் கையொப்பம், திருமணத்தை பதிவு செய்த ஜமாத்தின் முக்கியப் பொறுப்பாளரான முத்தவல்லியின் கையொப்பம் ஆகிய விபரங்களோடு திருமணக் கொடையாக மாப்பிள்ளை வழங்க வேண்டிய மஹர் தொகையும் ப்ள்ளிவாசல்களின் திருமணப் பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டிருக்கும்.

பெரும்பாலான ஜமாத்துக்களின் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப் படுகிற பரிச்ப் பொருட்களையும் கூட குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அருகே இருக்கிற ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று அல்லது ஒரு முஸ்லிம் திருமணத்திற்குச் செல்லும் போது திருமணம் நடைபெறுகிற மேடை அருகே சென்று கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அரசின் பதிவு ஏற்பாடுகளுக்கு ச்ற்றும் குறைவில்லாத இன்னும் சொல்வதானால் அதைவிடச் சிறந்த, பாதுகாப்பான, எளிதான பதிவு நடை முறை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது என்ற உண்மையை நேரில அறிந்து கொள்ளல்லாம்.

இந்நிலையில் அரசின் புதிய சட்டமானது முஸ்லிம்கள் இரண்டு முறை தங்களது திருமணத்தை பதிவு செய்யவேண்டிய சிரமத்தை தருகிறது.

இதைக் கூட ஒரு சமாதானம் சொல்லி ஏற்றுக் கொள்ளலாம். ஜமாத்துக்களில் நடைபெறுகிற பதிவை அந்தத்த ஜமாத்துக்களே பொறுப்பேற்று பதிவுத் துறைக்கு 100 ருபாய் இணைது தபாலில் அனுப்பி விட்டால் அரசிடமிருந்து பதிவுச் சான்று கிடைத்து விடும். இதில் ஜமாத்துக்களுக்கு ஒரு வேலை அதிகம் என்றாலும் மக்களுக்கு கிடைக்கிற நன்மையை கருதி ஜமாத்துக்கள் இத்திட்டத்தை ஏற்க வாய்ப்பிருக்கிறது. .

அரசின் பதிவு என்பது செல்வாக்கு மிக்கது என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடு செல்பவர்களுக்கு அரசின் பதிவு தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தியே! ஆனால் அதிலுள்ள பலவீனங்கள் என்ன் என்பது கூட அனைவரும் அறிந்ததே!

திருமணப் பதிவு குறித்த அரசானையைப் பற்றிய செய்தியை தினமலர் இனைய தளத்தில் படித்து ஏராளமானோர் அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தனர். அதில் என்னைக் கவர்ந்தவை இரண்டு ஒன்று

பதிவு செய்யும் போது ரெஜிஸ்டர் அலுவலகத்தில் மணமக்களுக்கு ஏதாவது மொய் கொடுப்பார்களா? என்ற நெல்லை வாசகரின் குரும்பு; இன்னொன்று பதிவுக் கோரிக்கையை 100 ரூபாய் கட்டணத்துடன் அஞ்சல் வழி அனுப்பினால் தப்பிக்க்லாம். நேரடியா போனால் வசூலான மொத்த மொய்ப் பணத்தை குடுத்துடு வரவேண்டியதுதான். என்ற சென்னை வாசகரின் அங்கதம்.


இந்தியாவில் பதிவுத்துறைதான் மிக அதிகமாக ஊழலில் திழைக்கிற துறை என்பது ஊருக்கு தெரிந்த ரக்சியம் இந்நிலையில் திருமணப் பதிவை கட்டாயப் படுத்தி, பதிவு அலுவலர் ஏற்றுக் கொண்டால் தான் திருமணப் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும் – அவர் நிராகரித்தால் நிராகரித்தது தான என்ற நிலையில் திருமணப் பதிவை க்ட்டாயப் படுத்தினால் அது அதிக ஊழலுக்கே வழி வகுக்கும் என்ற குற்றச் சாட்டை சொல்லி சிலர் திருமணப் பதிவுச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். என்றாலும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் இந்தக் காரணத்தை பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன்னெனில் பத்திரர்ப் பதிவு துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக யாரும் தங்களது சொத்துக்களை பதிவு செய்யாமல் இருப்பதில்லை.

முஸ்லிம் அறிஞர்களையும் பொதுமக்களையும் சங்கடப் படுத்துகிற முதல் அமசம் இச்சட்டம் முஸ்லிம் ஷரீஅத் சட்ட விதிகளில் கைவைத்து விடுமோ என்ற அச்சமாகும். ஏனென்றால நீட்டி முழக்கி பேசப்பட்டிருக்கிற அரசின் உத்தவு விளக்கெண்ணய்த் தனமாக அலலது குயுக்தியாக அமைந்திருக்கிறது.

எந்த மதப் படி திருமணம் நடைபெற்றிருந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிற அரசு அந்த மதம் அனுமதிக்கிற விதிகளின் படி அத்திருமணப் பதிவு ஏற்கப் படும் என்று சொல்லியிருக்கவேண்டும் .ஆனால் அப்படிச் சொல்ல வில்லை.

இந்த ஒரு வரி அரசின் உத்தரவில் சேர்க்கப் பட்டிருக்குமானால் அரசின் உத்த்ரவை சங்கடமில்லாமல் முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

அரசின் புதிய சட்டம் வயது சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. பெண் 18 வயதை அடைந்திருக்க வேண்டும் ஆண் 21 வய்தை அடைந்திருக்க வேண்டும் என்ற வார்த்தை அதில் இடம் பெற வில்லை. இது தந்திரமா? குழப்பும் உத்தியா? அல்லது எதார்த்தமாக நடந்த விசயமா என்று தெரியவில்லை.

அரசின் பொதுவான திருமணப் பதிவுச் சட்டத்தில் இந்த வயது வரம் கட்டாயமானது தான் என்றாலும் இதிலிருந்து முஸ்லிம்களுக்கு அவர்களது பர்சனல் லா சரீஅத் சட்டத்தின் படி விதிவிலக்கு உண்டு.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் முஸ்லிம் ஷரிஅத் சட்டம் அனுமதிக்கும் வகையில் நடைபெறுகிற சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்க் சார்பான் தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருப்பதே அதற்குச் சான்று

அதற்கு மிகச் சமீபத்திய ஒரு உதாரணம், 2009 ம் ஆண்டின் இறுதியில் டிஸம்பர் 17 ம் தேதி அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு,

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெரம்புர் பகுதையை சேர்ந்த சைருல் ஷேக் என்ற 26 வயது இளைஞனும் அனிதா ராய் என்ற 18 வ்யதை அடைய சில மாதங்களே உள்ள பெண்ணும் திருமண் செய்து கொண்டனர். அனிதாவின் தாய் ஜொட்ஸானா தனது மளை சைருல் க்டத்திச் சென்று திருமணம் செய்துவிட்டதாக புகார் பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமனற நீதிபதிகள் நீதியரசர் பினாகி சந்திர கோஷ, (Justice Pinaki Chandra Ghosh) நீதியரசர் எஸ்.பி. தாலுக் தார் (Justice S P Talukdar) ஆகிய இருவரும் இத்திருமணம் இஸ்லாமிய சட்ட விதிகளின் படி சட்ட்ப் பூர்வமாக நடை பெற்றுள்ளது என்ற சைருலின் வழக்கறிஞர் முன் வைத்த வாதத்த்தை ஏற்றுக் கொண்டு சைருல் ஷைகுகு முன் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

ஆர் எஸ் எஸ் ஸின் ஆதரவு பத்ரிகையான ஆர்கணைசர் (ORGANISER
January 24, 2010 -) ஆங்கில இதழ் இந்த ஆண்டு ஜன்வரி இதழில் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது என்றாலும் முஸ்லிம் பர்சனல் லா வின் படியான முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப் பட்டுள்ளதை இச்செய்தி தெளிவுபடுத்துகிறது.

இவற்றை கருத்தில் கொண்டோ என்ன்வோ தமிழக அரசின் புதிய சட்டம் வய்தைப் பற்றி பேச்சை எடுக்கவில்லை. ஆனால் போதிய தகவல் கிடைக்காத பதிவுத் துறை அதிகாரிகளோ தங்களது பழைய வழக்கின் படியே 18 வய்துக்கும் குறைவான பெண்ணுடைய திருமணத்தை தங்களால் பதிவு செய்ய முடியாது என்று கூறிவருகின்றனர். சில மாவட்ட பதிவாளர்கள் இன்னும் இது பற்றிய விரிவான தகவல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் பெரும்பலான் மாவட்ட பதிவாளர்கள் “திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் இல்யெனில் குற்ற வ்ழக்கு பதிவு செய்யப் படும் என்ற எச்சரிக்கையை கடமை தவறாமல் கச்சிதமாக செய்துவிட்டனர். அப்படி அறிக்கை வெளியிட்ட அதிகாரிகளிடம் சென்று அந்த திருமண் விண்ணப் பம் தாருங்கள் என்று கேட்ட போது இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்ற பாட்டையே பாடிக் கொண்டிருந்தனர் என்பதும் நிஜம்.

நாடு முழுவதும் திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஒரு உத்தரவிற்கேற்ப அரசுகள் அவசர அவசரமாக் சட்டம் இயற்றி விட்டன.

நீதிமன்றம் அவ்வாறு உத்தவிட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்தியாவின் பல சமுக அமைப்புக்களில் திருமணங்களை பதிவு செய்து வைக்கிற எந்த ஏற்பாடும் இல்லை. அது மட்டுமல்ல எங்காவதொரு கோயிலில் வைத்து, அல்லது சாமி படத்துக்கு முன்னாள் நின்று கொண்டு, தனிமையில் ஒர் பெண்ணிண் கழுத்தில் மாலையை மாட்டிவிட்டு அதை திருமணம் என்று சொல்லி ஏமாற்றுவது ஏராளமாக நடைபெறுகிறது. இதில் படித்தவர்கள் பாம்ரர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் ஏமாறுகின்றனர். நியாயமானதும் கூட. பதிவு செய்யப் படாத திருமணங்கள் பல வற்றில் அதையே சாக்காக வைத்துக் கொண்டு பெண்கள் மீது அநீதி இழைக்கப் படுகிறது. தில்லியில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் திருமணங்கள் நடை பெறுகிறது என்றால் 1500 திருமணங்கள் தான் பதிவு செய்யப்படுவதாக் CNN IBN கூறுகிறது. Delhi which sees over 50,000 weddings a year hardly 1500 marriages are registered, which means just three per cent of the total.

இத்தகைய திருமணங்களில் பிரச்சினை வருகிற போது வழக்கிற்கு அடிப்ப்படையாக இருக்கிற திருமணத்தைப் பற்றிய எந்த ஆதாரமும் இருப்பதில்லை. இத்தகைய நிகழ்வுகளால் நீதிபதிகள் கோபமடைவது இயற்கையானதே!

அத்தகைதொரு தார்மீக கோபத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமனற நீதிபதி Justice Arijit Pasayat திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயப் படுத்தும் சட்டமொன்றை மூன்று மாதங்களுக்கு இயற்று மாறு இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தர்விட்டார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயைக்கப் பபடுவதாக இருக்கலாம்;. ஆனால் அவை பூமியில் பதிவு செய்யப் பட வேண்டும் என்றார் நீதிபதி. Marriages may be made in heaven but they will have to be registered right here on earth அந்த அடிப்படையிலேயே தமிழக் அரசும் சட்டம் இயற்றியுள்ளது.

ஆனால் அரசுக சட்டம் இயற்றுவதற்கு முன் இந்திய சமுக்க அமைப்பிலுள்ள பல்வேறுபட்ட அம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இது பற்றி விரிவான தொரு ஆய்வு அல்லது விவாதம் அல்லது ஆலோசனை செய்திருக்க வேண்டும். அமெரிக்காவை கவ்னிக்கிற் அவசரத்தில் அதெற்கெல்லாம் நேரமில்லை எனபதலோ என்ன்வோ அரசு பொத்தம் பொதுவாக சட்டம் இயற்றிவிட்டது.

அதனால் இச்சட்டத்தில் பல வேடிக்கை விநோதங்கள் மலிந்து கிடக்கின்றன்.
சட்டத்தின் நோக்கம் என்ன வேன்பதே கேள்விக்குரியகி இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு கொண்டு வந்து தரப் ப்டும் தக்வல்களை பதிவு செய்வதாலோ அல்லது நிராகரிப்பதாலோ என்ன நன்மை என்பதே முக்கியக் கேள்வி?

ஒரு க்ல்யாணம் நடந்து எல்லாம் முடிந்த பிறகு 89 நாட்கள் கழித்து அல்லது 50 ரூபாய் கட்டணம் அதிகம் செலுத்தி விட்டு நான்கு மாதக் கருவோடு ஒரு தம்பதியின்ர் வந்து தங்கள்து திருமணத்தைப் பதிவு செய்கிற போது அதிலிருக்கிற ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கை கண்டுபிடித்து - அல்லது சாட்சியின் அட்ரஸ் புரூப் தெளிவில்லை என்று ஒரு பதிவாளர் பதிவு செய்ய மறுப்பாரானால் அந்த திருமணம் என்னவாகும்? அல்லது அந்தப் பதிவு என்னவாகும்?

ஒரு சரியான திருமணப் பதிவு என்பது திருமணத்தின் போது நடை பெற வேண்டும். அந்தப்பதிவுக்குப் பின்னரே திருமணம் அங்கீகாரம் பெற வேண்டும். அது தான் சரியான பதிவாக இருக்க முடியும். அப்படியானால் முஸ்லிம் சமுகத்தில் இருப்பது போன்ற திருமணப் பதிவை மற்ற சமூக அமைப்ப்புக்களுக்கு விரிவு படுத்த அரசு முயற்சி செய்திருக்க வேண்டும். சமய நம்பிக்கை அற்றவர்கள் அல்லது சமய அடிப்படையில் திருமணம் செய்ய விரும்பாதவர்கள் ஒரு நீதிபதி அல்லது ஒரு தாசில்தார் குறைந்த பட்சம் ஒரு நோட்டரி வக்கீலின் முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தால் அது திருமணங்களைப் பாதுகாப்பதன் சரியான் ஏற்பாடாக அமைந்திருக்கும். அதை விடுத்து திருமணத்தை முடித்துவிட்டு வந்து தகவல்களை கொடு அதை நான் சரி பார்க்கிறேன் என்பது குழந்தை பெற்றுக் கொண்டபின் தங்களது திருமணங்களை அறிவிக்கிற வகையறாக்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

ஆயினும் ஒரு முறையான கட்டமைப்பு இல்லாத சமூகங்களில் திருமண உறவுகளை பாதுகாப்பதற்கு – திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிற பெண்களைப் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டம் உதவிகரமாக இருக்கும்.

முஸ்லிம் சமூகத்தில் ஒரு முறையான சமூக கட்டமைப்பும் சரியான திருமணப் பதிவு முறையும் இருப்பதால் அரசு அதை கவனத்தில் கொண்டு சட்டத்தின் வாசகங்களை அமைத்திருக்க வேண்டும்

அப்படிச் செய்யாததால் ஒரு சரியான நடைமுறையை பன்னெடுங்காலமாக கடைபிடித்து வருகிற ஒரு சமுதாயமே அந்நடமுறை சட்டமாகி பொதுவாவதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையை அரசு ஏற்பட்த்தி விட்டது.

முஸ்லிம் சமுகத்தின் முறையான பதிவுகளை அரசு அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்க வேண்டும். உள்ளபடியே அது பாதுகாப்பானது. உண்மையானது.

அப்படி அரசு அறிவித்திருக்கும் என்றால் திருமணப் பதிவுச் சட்டத்தின் படி 2009 நவம்பர் 24 லிருந்து இதற்குள்ளாக பன்னூற்றுக்கணக்கான திருமணங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும்.

அரசின் அறிவிப்பில் காணப் பட்ட குழப்பம் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் தேவையற்ற ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்தை முழைமையாக எதிர்க்கிற -ஒப்புக் கொள்ளமுடியாது என்று மறுக்கிற நிலை உருவாகியுள்ளது.

“எங்களது சமூகத்தில் நடைபெறுகிற நூற்றுக்கு நூறு சதவீத திருமணங்களும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட அமைப்புக்கள் மூலம் ஏற்கென்வே பதிவு செய்யப் படுகிற போது எதற்காக நாங்கள் அதை மீண்டும் டூப்ளிகேட் செய்ய வேண்டும் என்று. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (மியாகான் பிரிவின்) தலைவர் தாவூத் மியா கான் கேட்பதாக ஹிந்து ஏடு கூறுகிறது.

"When already 100 per cent marriages in Islam are registered by the government approved authorities, why they need duplication and we are afraid that this maybe misused," says Indian Union Muslim League President MG Dawood Mia Khan

முஸ்லிம் சமய அறிஞர்கள் மட்டுமல்லாது முஸ்லிம் பொதுமக்களும் இது தேவையற்று என்று கருதுகிறாகள் என அந்த ஏடு மேலும் செய்தி வெளியிட்டிருந்தது.

It is not just religious leaders but even ordinary Muslims do not see the necessity in the government taking over what the Jamaath is already doing.

“அனைத்து முஸ்லிம் திருமணங்களும் 400 வருடங்களுக்கு மேலாக ஜமாத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. இன்றைய சட்ட விதிகளுக்கு ஏற்பவ. நாங்கள் ஏற்கெனவெ பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்வே அரசின் புதிய சட்டத்தை நான் உறுதியாக என்று கூறுயுள்ளார் யாஸ்மீன் பர்ஹானா
I am surely against this because if you consider Muslims we follow certain procedures for marriage. All the Islamic marriages are done according to the rules and regulations of the Jamaath. For more than 400 years, we have already been registering our marriages," points out Yasmeen Farhana.

திருமண்ப் பதிவுச் சட்டத்தை வாழ்த்தி வரவேற்க வேண்டிய முஸ்லிம்கள் அதற்கு எதிரான ஒரு நிலையை மேற்கொள்வதற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

முஸ்லிம்கள் பலரும் அரசு பொதுச் சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிப்பதாக கருதுவதற்கும் ஜமாத்தின் அதிகாரங்களைப் பறிக்க அரசுத் திட்டமிடுவதாக கருதுவதற்கும் அரசின் போக்கே காரணமாகிவிட்டது.

அரசு எல்லாவற்றையும் தன் கையில் எடுத்துக் கொள்ளுமானால் சமுதாயம் வெறுமையாகிவிடும் என்று ஷியா காஜி குலாம் முஹம்மது மெஹ்தி கான் கொதிப்படைந்துள்ளார்.

இந்நிலையில் அரசு ஜமாத்துக்களின் முஸ்லிம் திருமணப் பதிவை அப்படியே மறுபரிசீலனையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும. அல்லது அரசால் நியமிக்கப் படுகிற காஜிகளை திருமணப் பதிவாளராக அறிவிக்க வேண்டும். அவர்களது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஜமாத்துக்கள் செய்யும் திருமணங்களைப் அரசு அங்கீகரித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இல்லை எனில் இனி வரும் நாட்களில் முஸ்லிம் சமூகத்துக்கும் அரசுக்கும் தேவையற்ற ஒரு மோதல் போக்கு ஏற்படக் கூடும்.

பொதுத் தேர்தல் நெருங்கி வருகிற சூழ்நிலையில் அரசு யாரையும் பகைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்காது என்று எதிர்பார்க்கலாம்.

முஸ்லிம் அமைப்புக்களும் உச்ச நீதிமனறத்தின் தீர்ப்பு வந்த் போது சும்மா இருந்து விட்டு, மாநில அரசுகள் சட்ட முன் வரைவை சமர்ப்பிக்கும் போது இது பற்றிய் கவன்மே இல்லாமல் இருந்து விட்டு சட்டம் அமுலுக்கு வந்த பிறகு அதிலும் அதன் எல்லைக் கோட்டை தொட்ட பிறகு கூக்குரலிடுகிறார்கள். ஆவேசம் காட்டுகிறார்கள் இத்தகைய ஆவேசங்களால் ஆம்பிளிபையர்களின் ஐசிக்களும் கண்டன்சர்களும் சூடாகியதை தவிர வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை.

ஷாபானு வழக்குப் பிரச்சினையின் போது செய்யப் பட்ட ஆர்ப்பாட்டங்களால் அல்லது உயிரிழப்புக்களால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தியாவின் மதிப்பு மிக்க அறிஞர்கள் ஆட்சித்தலைவர்களிடம் உரிய முறையில் பிரச்சினையை எடுத்து வைத்த விதத்திலேயே அந்த நீண்ட போராட்டத்தில் ஒரு முடிவு ஏற்பட்டது.

இப்போதும் அந்த வழிமுறையை கையாள்வதே உசிதம். எதெற்கும் சட்டத்தை சட்டத்தால எதிர்கொள்வதற்கு வசதியாக நீதிமன்றங்களை அனுக்வும் முயற்சிப்பது உசிதமானதாக அமையும். சைருல் ஷேக் விசயத்தில் மேற்கு வங்க உயர் நீதிமன்றம் சொன்னது போன்ற ஒரு தீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் தேவையற்றதாக்கி விடும். அரசியல் சாசணம் முஸ்லிம்ளின் தனிநபர் சட்டத்திற்கு வழங்கியுள்ள அந்தஸ்த்து அத்தகையது.

அதே நேரத்தில் முஸ்லிம் ஜமாத்துக்கள் பதிவு விதிகளில் தற்போது சொல்லப் பட்டிருக்கிற சில நல்ல விசயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நமது திருமணப் பதிவை இன்னும் சிறப்பானதாக வலிமையானதாக அமைத்துக் கொள்ளமுடியும்.

பதிவு என்ற முக்கியமான விசயத்திற்கு முஸ்லிம்களில் சிலர் போதுமான கவனம் செலுத்துவதில்லை. கல்யாண மணடபத்திற்கு வந்த பிறகு யாரோ ஒருவரை சாட்சியாக போடுகிற நடைமுறையை விட திருமண நிகழ்வுக்கு முன்ன்ரே வலி வக்கீல் சாட்சிகளை தெளிவாகவும் முறையாகவும் முடிவு செய்து கொள்வதும் அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை புரிய வைப்பதும் நல்லதே!

ஒரு திருமணத்தின் போது சாட்சியாக பெயர் கொடுத்தவர் கையெழுத்துப் போட்டு இலை வாங்க வெளியே போய்விட்டார். அவரைக் கண்டு பிடித்து திருமப் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சாட்சி யின் வேலை என்ன்வென்பதை அவர் அறியாதிருந்த்தே இதற்குக் காரணம்.

முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்கிற ஜமாத்துக்களின் பத்வேடுகளின் காலச் சூழலுகு ஏற்ப பல நல்ல புதிய சேர்க்கைகள் ஏற்கப்பட்டிருக்கிறது. முந்தை காலத்தில் பெயர் தந்தை பெய்ரை மட்டுமே எழுதுவார்கள் பின்னர் முகவரி எழுதும் பழக்கம் வந்தது. அதன் பின்னர் திருமணம் நடை பெறுகிற இடத்தை குறிப்பிடுகிற பழக்கம் வந்தது. அது போலவே தொலை பேசி எண்கள் ஐ டி கார்டு பிரதிகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்வதில் என்ன சிரம்ம என்று ஜமாத்துக்கள் யோசித்து தேவையான மாற்றங்கள் செய்து கொள்வது நல்லதாகவே அமையும். இது எல்லா இடங்களிலும் சாத்தியமற்றது என்றாலும் சாத்தியமுள்ள இடங்களில் இதை கடைபிடிக்கலாம். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இது கடை பிடிக்கப் படுகிறது.

திருமணப் பதிவுச் சட்ட விவாகரம் தொடர்பாக ஒரு முழுமையான ஆய்வுக்கூட்டத்திற்கு முஸ்லிம் ஜமாத்துக்கள் உலமா அமைப்புக்கள் ஏற்பாடு செய்யாததும் ஒரு ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்துச் செயல்படாததும் ஒரு வகையான பின்னடைவேயாகும். அரசின் புதிய சட்டத்தை எதிர்ப்பதானால் எந்த வார்த்தகளில் எதிர்க்கிறோம் என்பதில் போதுமான கவனம் காட்டப் படவில்லை. பொதுவாக எதிர்க்கிறோம் என்ற கோபமான வார்த்தை முஸ்லிம்களிடம் இருக்கிற சிறப்பான நடைமுறையை மற்றவர்கள் அறியவிடாமல் செய்துவிட்டது.

முஸ்லிம் சமுகம் அரசின் எந்த சட்டத்திற்கும் கோர்ட்டின் எந்த உத்தரவிற்கும் பணிய மறுத்தது இல்லை. தேவையற்று முஸ்லிம்களின் தனி விவகாரங்களில் கோர்ட்டும் அரசுகளும் தலையிட நினைக்கிற போதுதான் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அப்படி எதிர்ப்பை வெளியிட்ட விதம் எதிர்களுக்கு சாதகமாகிவிட்டது.

கோர்ட் எந்தச் சட்டம் போட்டாலும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் நாம் மட்டும் பாபர் மஸ்ஜித் விசயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டுமா? என்ற மாய ஜாலம் பேசித்த்தான் இந்துத்துவ இயக்கங்கள் இந்துகளை தங்கள் பக்கம் ஈர்த்தார்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது.

இந்த சட்ட விவகாரத்தில் சமுதாயத்தின் பாதுகாவலர்கள் என்ற சிலரின் முகமூடிகள் தானாக கழன்விட்டதை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ளாமல் இருக்காது. அனைத்து முஸ்லிம் அமைப்புக்களு இச்சட்டத்தை எதிர்த்தாலும் நாங்கள் இதை ஆதரிப்போம் என்று சொன்ன முஸ்லிம்களை முன்னேற்றத் துடிக்கும்(?) அமைப்புக்கள் எந்த தளத்தில் செயல்படுகிறார்கள் என்பதை முஸ்லிம் ஜமாத்துக்கள் அவ்வளவு எளிதாக் மறந்து விடமாட்டார்கள். அவர்கள் வ்சூலுக்காக வருகிற போது இந்த வார்த்தைகளை ஞாபக்ப் படுத்துவோம் என்று ஜமாத் பிரமுகர் என்னிடம் சொன்னார்.

நான் சொன்னேன் பாவம்! அவர்கள் இழவு காத்த கிளிகளாகத்தான் ஆவார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தை அழுத்தமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிற ஜமாத் அமைப்புககளின் வலிமையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற வேகம் அவர்களை அவ்வாறு பேச வைத்து விட்டது. அவர்களது பகல் கனவு பலிக்காது என்றேன்.
ஒரு வேளை இதுவே அரசின் கன்வாகவும் இருக்கும் என்றால் அதுவும் பலிக்காது தான்.

Sunday, August 02, 2009

காதியானியும் கண்ணம்மா பேட்டையும்

சென்னை ராயப் பேட்டை பகுதியில் இந்துக்களின் பிரபலமான மயாணம் அமைந்துள்ள இடம் கண்ணம்மா பேட்டை. சென்னையின் தெருக்களில் தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறவர்களை கண்டால் ‘ மவனே நீ.. ஊட்டுக்கு போவ மாட்ட... கண்ணம்மா பேட்டைக்க்குத்தான் போவ.. என்று மக்கள் அர்ச்சிப்பது வழக்கம். அது போல இன்னோரு பிரபல மயாணம் இருக்குமிடம்
கிருஷ்ணாம்பேட்டை .
சென்னை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த 36 வயது காதியானி பெண் ஒருவர் கடந்த மே மாதம் 30 தேதி இறந்து பேனார். அவரது உடல் இராயப் பேட்டையில் உள்ள முஸ்லிம்களின் மையவாடியி அடக்கம் செய்யப் பட்டது. அதற்கு சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் ஆட்சேபனை செய்யவே அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப் பட்டு கிருஷ்ணாம் பேட்டை மயானத்தில் புதைக்கப் பட்டது.
முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப் பற்றிய 10 சதவீத உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிட்டுவிடுவது பத்ரிகையாளர்கள் இதையும் ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்தனர். .
காதியானி என்பது ஒரு தனி மதமாகும். பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்ற ஊரில் மீர்சா குலாம் என்பவரால் உருவாக்கப்பட்டதே காதியானி மதம். சீக்கிய மதம் எப்படி அனைத்து மதங்களிலிருந்தும் கருத்துக்ககளை எடுத்துக் கொண்டு ஒரு மதமாக உருவாகி இருக்க்கிறதோ அது போலவே காதியானி மதமும் உருவாகியது. சீக்கிய மதத்தில் இந்து மதச் சாயல் மிகுந்திருப்பது போல காதியானிகளிடம் முஸ்லிம்v சாயல் அதிகமாக இருக்கிறது அவ்வளவே!
சீக்கியர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. பா.ஜ.க வைத்தவிர மற்றவர்களும் அவ்வாறு சொல்ல முயற்சிப்பதில்லை. ஆனால் காதியானிகளை முஸ்லலிம் என்று அடையாளப் படுத்த காதியானிகளும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இதன் பின்னணியில் இருப்பது பிரிட்டிஷ் அரசு. காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது என்பதும் அதன் கிளை அலுவலக்ம் ஒன்று இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவில் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும்.
இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். அதனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிக்கிற இவர்களை முஸ்லிம் அல்லாத சிறுபான்மை இனமாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இவர்கள் தனி மதத்தினர் என்பதை அடையாளப் படுத்தியது. சவூதி அரசும் அவ்வரே அறிவித்து ஹஜ்ஜுக்கான அனுமதியை அவர்கள் கோர முடியாது என்று அறிவித்தது.
முஸ்லிம் சமூகத்திற்கும் காதியானிகளுக்கும் இடையே எந்த வித தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் பிரிட்டிஷை தொடர்ந்து இந்தியாவிலும் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்தும் முயற்சி தொடந்து நடக்கிறது. காதியானிகளின் இஸ்லாமியத் தொடர்பை விட இந்து மதத் தொடர்பே வலுவானது. அதன் காரணமாக பாபர் பள்ளிவாசலை உடைக்கச் சென்ற குழுவில் கூட அவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்தச் சூழலில்தான் இறந்து போன காதியானி ஒருவரின் உடலை பொய்யான சான்றிதழைக் காட்டி வேண்டு மென்றே முஸ்லிம் மையவாடியில் புதைத்துள்ளனர். ஒரு இறந்து போன உடலை புதைத்தல் என்ற மனிதாபிமானத்தை தாண்டி இதற்குள் இருக்கிற அரசியல் விளையாட்டைக் கருத்தில் கொண்டே அவ்வாறு புத்தைக்க்ப் பட்டதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வல்லரசு நாடுகளுடன் தொடர்பில் இருக்கிற காரணத்தால காதியானி மதத்தவரிடம் பணத்திற்கொன்றும் பஞ்சமில்லை. தனி மயாணம் அமைத்துக் கொள்ள அவர்களால் முடியும். ஆனாலும் சொந்தப் பிணங்களை வைத்தே அரசியல் நடத்த அவர்கள் முயற்சி செய்வதால் தான் ஒவ்வொரு காதியானியின் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
புதைக்கப் பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில் அதில் தவறொன்றும் இல்லையே ? இனி சென்னையில் ஒரு காதியானி இறந்தால் கண்ணம்மாபேட்டை மயாணம்தான் அவருக்குரியது எனபது முடிவாகி விட்டதல்லவா?
காவல் துறை எத்தனை பிணங்களை தோண்டி எடுத்து சோதனை செய்கிறது? அது பிரச்சினையோடு தொடர்புடையதே தவிர மனிதாபிமானத் தோடு முடிச்சுப் போடுகிற செய்தி அல்லவே!

Saturday, April 11, 2009

gaza

சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட அநாதை போல, சுற்றி இருந்த அரபுநாடுகளாலும், உதவிக்கு வந்து ஊரை அடித்துத் தின்கிற ஐரோப்பிய நாடுகளாலும் ஏன் தன் சொந்த தேசத்தின் அதிபரால் கூட கைவிடப் பட்ட பரிதாபத்திற்குரிய காஸா நகரம் வரலாற்றில் மற்றுமொரு கருப்பு அத்தியாயாயத்தை சந்தித்தது. 2008 டிஸம்பர; 26 ம் தேதி முதல் 2009 ஜனவரி 17 வரை ழுpநசயவழைn ஊயளவ டுநயன என்று பெயரிட்டு இஸ்ரேல் நடத்திய பேயாட்டத்தால் நிலை குலைந்து போனது. கதறி அழ மட்டுமே காப்புரிமை பெற்ற சமுதாயம் மீண்டும் ஒருமுறை அழுது தீர;த்தது.எந்த சோகத்திலும் தம் சுதந்திர வேட்கையை விட்டுக் கொடுக்காத காஸா நகரத்து மக்கள் உலகத்தின் ஒப்பாரியை ஒரு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறு கரத்தில் ராக்கெட் லாஞ்சர;களை ஏந்தி நின்றனர;. யுத்தம் கொடுரமாகத் தொடர;ந்தது. நிலம், நீர;, ஆகாயமென தன் சக்திக்கு உட்பட்ட அத்தனை திசைகளிலிர;ந்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர;ந்ததது. உலகமெங்கிருந்தும் கண்டனக் கனைகள் பறந்தன. கண்டன ஊர;வலங்களாலும் ஆர;ப்பாட்டங்களாலும் நாடுகள் குலுங்கின. புதிய அதிபரை பார;த்த மயக்கத்தில் அமேரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மறந்திருந்த ஒரு பொன்னான சந்தர;ப்பத்தில் ஐநா சபை ஒரு தீர;மாணம் நிறைவேற்றிக் கூட போரைத் தடுக்கப் பார;த்தது. வழக்கப் படி ”மசுறு” என்று அதை ஊதித் தள்ளி நிராகரித்த இஸ்ரேலிய அரசு மேலும் வேகமாக தாக்கத் தொடங்கியது. சமாதான முயற்சிகள் எகிப்து துருக்கி உள்ளிட்ட பல மட்டத்திலும் நடந்து கொண்டிருந்தன. எதுவும் உடனடி தீர;வுக்கு வழி செய்யவில்லை. . பலியானோர; எண்ணிக்கை நூறுகைளை தாண்டி ஆயிரத்தை தொட்டது. திடீரென்று இஸ்ரேல் போரை நிறுத்தி விட்டது! அதுவும் ஒரு தரப்பாக!. இஸ்ரேலோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஹமாஸ் கூட சற்றே அதிர;ச்சியடைந்திருக்கக் கூடும். எதனால் இந்த திடீர; மாற்றம்? ஹமாஸ் அமைப்பின் ஏவுகனை ஏவு தளங்களை அத்தனையும் அழிந்துவிட்டதா ? உலகத் தலைவர;கள் அமைதிக்காக குரல் கொடுத்தார;களே அதனாலா? அல்லது அப்பாவிகளை கொல்வது அநியாயம் என்று இஸ்ரேலுக்கு யாரவது புதிதாக ஞானதீட்சை வழங்கினார;களா? அதில் இஸ்ரேல் திருந்திவிட்டதா? இதில் எதுவும் இல்லை. பிறகு எதனால் இந்த அக்கிரமப் போர; அவசரமாக முடிவுக்கு வந்தது ?இஸ்ரேலின் தீடீர; தாக்குதலிலும் திடீர; சண்டை நிறுத்தத்திலும் அடிப்படையான ஒரு அம்சம் இருக்கிறது சர;வதேச சமுதாயம் கவனிக்க வேண்டிய விசயம் அது. அதுவே இஸ்ரேலின் இன வெறி. அப்பாவிக் முஸ்லிம் குழந்தைகளையும் நிராயுதபாணி முஸ்லிம் பொதுமக்களையும் கொல்வதை இஸ்ரேல் பாவம் என்று கருதுவதில்லை. தவறு என்றே கூட நினைப்பதில்லை. அதனால்தான் காஸாவில் ஏற்பட்ட மிகமோசமான மனிதக் படுகொலைகள் பற்றிய எந்தக் கோரக் காட்சியும் அதன் இதயத்தை தொட வில்லை. தொடாது. திருக்குரான் கூறுகிறது. (யு+தர;களே! பிறகு உங்களது இதயங்கள் இருகிவிட்டன. அது பாறை போன்றதாக ஆகிவிட்டது. இல்லை. பாறயைவிட அது இன்னும் கடினப் பட்டுவிட்டது. பாறைகளில் கூட சில நேரங்களில் நீர; கசியும் (உங்கள் இதயங்களில் அதுவும் இல்லை) 15 நூற்றாண்டுகளுக்கு முந்தைய திருக்குரானின் இந்த விமர;சனம் இன்றளவும் யு+தர;களுக்குப் பொருந்தும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு சற்று முன்னதாக ஜெர;மனியின் பெர;லின் நகரத்தில் ஒரு யு+தனை பிடித்த ராணுவ வீரன் அவனை கொல்ல முயன்றான். அப்போது அந்த யு+தன் அலறினான், ”என்னை எதற்காகா கொல்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான். நீ யு+தன். அதனால் தான் உன்னை கொல்கிறேன் என்று அந்த ஜெர;மனிய வீரன் சொன்னானாம்.இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நடைபெற்ற இந்த உரையாடல் அநீதியானதாக மனிதாபிமானமற்றதாக தோன்றினாலும் இருபத்த்தி ஒன்றாம் நூற்றாண்டு இதில் சில தர;ம நியங்கள் புதைந்து கிடப்பதை உணர;ந்து கொள்ளும் போல தெரிகிறது. காஸா முனை மீதான் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இஸ்ரேலியர;களின் மிருகத்தனம் அல்லது இஸ்ரேலிய மிருகங்களின் குணம் மீண்டும் ஒரு முறை அவர;கள் எவ்வளவு ஆபத்தானவர;கள் என்பதை உலகிற்கு புரிய வைத்துள்ளது. மூன்று வாரங்களாக காஸாமீது பொழியப் பட்ட குண்டு மழை எந்த காரண்த்தை கொண்டும் நியாயப் படுத்த இயலாது என வால் ஸ்ட்ரீட் ஜர;னல் உள்ளிட்ட அமெரிக்க பத்ரிகைகளே கூட ஒத்துக் கொண்டன. இஸ்ரேலின் உரிமையை நிலைநிறுத்துவது அல்லது இஸ்ரேலின் நலனை பாதுகாப்பது அல்லது ஹமாஸை ஒழிப்பது என்ற தேவையை விட இந்த தாக்குதல்கள் மிக அதிகம் என அவை நாசு+க்காக கூறின. சில பத்ரிகைகள் துணிந்து இஸ்ரேல் போர;க்குற்றம் புரிந்து வருவதாக எழுதின.. ஜெரூஸலம் போஸ்ட் பத்ரிகை தரும் தகவலின் படி டிஸம்பர; 26 ம் தேதி இஸ்ரேல், 100 பைட்டர; ஜெட் விமானங்களையும் குண்டு வீசும் ஹெலிகாப்டர; களையும் அனுப்பி காஸாமுனையின் மீது 200 குண்டுகளுக்கும் மேலாக வீசியது. 170 இலக்குகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப் பட்டது என்று இஸ்ரேல் கூறீய அந்த இலக்குகளில் பள்ளிவாசல்கள் பள்ளிக் கூடங்கள் மருத்துவ மனைகள் காவல் நிலையங்கள் அரசு கட்டிடங்கள் பொதுமக்கள் வாழ்விடங்கள் அனைத்தும் அடங்கும். முதல் நாள் தாக்குதலில் மட்டும் சுமார; 240 பேர; கொல்லப் பட்டார;கள். முதல் வாரத்தில் மட்டும் 12 பள்ளிவாசல் தரை மட்டமாக்கப் பட்டிருந்த தாக ராபிதததுல் ஆலமில் இஸ்லாமியா எனும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு கூறியது. ஒருபெரும் பு+கம்பத் தாக்குதலுக்குள்ளான நகர; போல் காஸா காட்சியளிக்கிறது என பி.பி.சி கூறுகிறது. போர;நிறுத்ததிற்குப் பிறகு காஸாவை நேரில் பார;த்த ஒருவர;, காஸாவில் ஏங்கு நோக்கினும் உடைந்த மரச்சாமான்களும் உருக்குலைந்த இரும்புச் சட்டங்களும் சிதறிக்கிடக்கின்றன, அவை மட்டுமே அங்கே இருக்கின்றன என்று பி.பி.சிக்கு எழுதுகிறார;..
ஒன்றின் மேல் ஒன்றாக சிதைந்து விழுந்துள்ள கட்டிட இடுபாடுகள் காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்படுவதாக கூறிய பி.பி.சி இடிபாடுகளுக்கு இடையே இருந்து இன்னும் சடலங்கள் எடுக்கப் படுவதாக கூறியுள்ளது.
இதுவரை 50800 பேர; வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கூறுகிற ஐநாவின் அறிக்கை ஒன்று 40,000 பேர; குடிப்பதற்கு தண்ணீர; இன்றி அவதியுறுகின்றனர; என்கிறது
இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களைகண்க்கிடும் பணி இஸ்ரேலின் முற்றுகை அகன்ற பிறகுதான் ஆரம்பித்துள்ளது என்பதனால் இத்தாக்குதலில் காஸாவுக்கு ஏற்பட்ட சேத விவரம் இன்னும் முழுமையாக தெரிய வில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி இஸ்ரேலின் வெறியாட்டத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளுக்கான சீரழிவிலிருந்து காஸாவை காப்பாற்ற இனி ஒரு தலைமுறை பிடிக்கும்.
இத்தனைக்கும் பிறகு தொடர;ந்து இஸ்ரேல் நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தேவையான நிவாரண உதவிகள் காஸாவுக்குள் அனுப்பப் பட்டுள்ளதாக இஸ்ரேலின் ராணுவப் பேச்சாளர; மார;க் ராக்யோ கூறுவதாக சொல்கிற பி.பி.சி இப்பொருட்கள் பாதிக்கப் பட்டமக்களை சென்றடைந்ததா என்பதை தம்மால் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவிலை என்று கூறுகிறது.
தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 13 இஸ்ரேலியர;கள் கொல்லப் பட்டுள்ளார;கள். அதேநேரத்தில் பாலஸ்தீனின் மருத்துவ வட்டாரங்களின் தகவலின் படி இதுவரை காஸாவில் 1300 பாலஸ்தீனர;கள் கொல்லப் பட்டிருக்கிறாகள். 5500 காயமடைந்திருக்கிறார;கள். கொல்லப் பட்டவர;களில் 300 க்கும் மேற்பட்டோர; குழந்தைகள். அழகிய பிஞ்சுக் குழந்தைகள் அழுகிய காய்கறிகள் போல கொத்துக் கொத்தாக கொட்டப் பட்டுக்கிடந்த காட்சியை கண்ட உலகம் குலுங்கியது. இஸ்ரேலியர;கள் மனிதர;கள் தானா என்று மக்கள் குமுறினர;. ஆனால் இஸ்ரேல் எதெற்கும் அலட்டிக் கொல்லவில்லை. குறைந்த பட்சம் குழந்தைகள் கொல்லப் பட்டதற்கு, குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் ஒரு பாலர; பள்ளிக் கூடத்தின் மீது குண்டு விழுந்து அதிலிருந்த அத்தனை குழந்தைகள் மாண்டுபோனதற்கும் - ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தெரிவிக்காது. ஏனேனில் இவை எதுவும் எதோச்சையாக நடந்தது அல்ல. இஸ்ரேலின் முதல் பிரதமர; டேவின் பென்குரியனிடம் னுயஎனை டீநn-புரசழைn இஸ்ரேல் படைகளின் தளபதி ஈகல் அலன் லுபையட யுடடழn அரபுகளை நாம் என்ன செய்வது ”றுhயவ ளாயடட றந னழ றiவா வாந யுசயடிள?” என்று கேட்டபோது அவர; என்ன பதில் சொன்னார; என்பதை இஸ்ரேலிய வரலாற்றாசிரியர; டீநnலெ ஆழசசளை விவரிக்கிறார;. கைககளை அலட்சிய்மாக உதறியபடி பென் கூரியன் சொன்னார; 'நுஒpநட வாநஅ'”. அவர;களை வெளியே தள்ளிவிடுங்கள் இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் அந்த வார;த்தைகளே இலட்சிய எல்லைகளாக இருக்கின்றன. கூடுமானவரை வாய்ப்புக்களைஉரூவாக்கி பாலஸ்தீனர;களை கொல்லுவது. முடிந்தவரை அவர;களது நிலங்களை திருடுவது என்பது மாத்திரமே இஸ்ரேலின் தாரக மந்திரம். எனக்கென்னவோ ஆகாய மார;க்கமாக காஸாவுக்குள் வந்து விழுந்த ஒவ்வொரு வெடிகுண்டும் 'நுஒpநட வாநஅ' என்ற பென் கூரியனின் அசரீரீயாகவே படுகிறது. Pநயஉநஅயமநச அமைதியை உருவாக்கியவர; என்று மீடியாக்களால் விளம்பரப் படுத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்ட இட்சாக் ரபீன் லுவைணாயம சுயடிin யாசிர; அரபாத்துடனான அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது கூட இந்த திட்டத்தின் ஒரு பகுதிதான். பாலஸ்தீன பிரச்சினைக்கு தனது வாழ்நாளுக்குள் தீர;வுகண்டு விட வேண்டும் என்று துடித்த யாசிர; அரபாத் ஓஸ்லோ உடன்படிக்கை என்ற அந்த மாசு நிறைந்த ஒப்பந்தத்தில் கயெழுத்திட்டார;. யுத்த அபாயங்களை பற்றி கவலை எதுவுமின்றி பல தலைமுறைகளாக கவுரமாக வாழ்ந்த ஒரு சமுதாயம், வாழ்கையின் சகல விதமான சிரம்க்களை யும் கடந்த இரண்டு தலைமுறையாக அனுபவித்து வருவதை மேலும் சகிக்கப் பொருக்காமல், இந்த ஒப்பந்தத்தில் யாசிர; அரபாத் கையெழுத்திட்டிருக்கலாம். ஆனால் அது 'நுஒpநட வாநஅ' என்ற பென்கூரியனின் வார;த்தைக்கு சட்டபு+ர;வமான அங்கீகாரத்தை பெற்றுத்தரும் ஒரு நடவ்டிக்கை என்பதை அவர; ஆரம்பத்தில் உணர;ந்தாரில்லை. பின்னால் உணர;கிற ஒர; சந்தர;ப்பம் வந்த போது அவர; வீட்டுக்காவலில் இருந்தார;.இந்த அபாக்கிய நிலையை உங்களால் கற்பனை செய்து பார;க்க முடிகிறா? பாலஸ்தீனின் அதிபரான யாசிர; அரபாத் அவரது சொந்த தேசமான பாலஸ்தீனிற்குள்ளேயே வீட்டுக்காவலில் இருந்தார;. பக்கத்து நாட்டின் ரானுவம் அவரது உதவியாளர;களை கொன்றொழித்து அவரது வீட்டுச் சுவர;களை கூட புல்டோஸரால் உடைத்துக் கொண்டிருந்தது என்றால் அது என்ன தேசம்? இப்படி ஒரு நாடா என்ற கேள்வி உங்கள் மனதில் உலாவருகிறதல்லவா? இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இப்படிப் ப்ட்ட ஒரு பரிதாபகரமான நிலைமைக்குத் தான் பாலஸ்தீனர;கள் ஆளானார;கள். ஆனால் இஸ்ரேலோ இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு வழிகளில் மிக ஏராளமான அனுகூலங்களை அடைந்தது. அதில் முக்கியமானது. இஸ்ரேலை தீண்டத்தகாத நாடாக ஒதுக்கிவைத்திருந்த சவதேச நாடுககள் பலவும் இஸ்ரேலுடன் கைகுலுக்கத்தொடங்கின. அது பாலஸ்தீனர;களின் பரிதாப நிலையை மேலும் சிக்கலாக்கியது. அனுதாபத்திற்கு கூட அருகதை அற்றவர;களாக அவர;கள் ஆகிப் போனார;கள். இந்தியாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். முன்னர; பாலஸ்தீனர;கள் துன்பப் படுகிற சந்தர;பத்திலெல்லாம் இந்தியா அவர;கள்து இதயங்களுக்கு அருகே இருந்து ஆறுதல் சொன்னது. உதவிகளை வாரி வழங்கியது. சர;வதேச அரங்குகளில் அவர;களுக்காக பரிந்து பேசியது. திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் நடைபெற்ற அணிசேர நாடுகளின் மாநாட்டிற்கு யாசிர; அரபாத் அழைக்கப் பட்டார;. அப்போது அவருக்கு சொந்தமாக ஓரடி நிலம் கூட இருக்கவில்லை. ஆனால் ஒரு தேசத் தலைவருக்குரிய மரியாதை அவருக்கு வழங்கப் பட்டது. இந்திர அம்மையாரோடு சேர;ந்து இந்திய தேசமே அவரை வரவேற்று ஆர;ப்பரித்தது. அத்தோடு இந்தியா இஸ்ரேலிடமிருந்து வெகு தூரம் விலகி இருந்தது. இந்தியாவின் கடவுச் சீட்டுக்களில் இஸ்ரேலுக்கு பயணம் செய்யமுடியாது என்ற முத்திரை இருந்தது. விளையாட்டு வீரர;கள் இஸ்ரேலுக்குச் சென்றால் இந்தியாவுக்கு வர முடியாது என்ற நிலை இருந்தது. 1988 ல் இஸ்ரேல் பாலஸ்தீன் உடன்பாடு, இல்லை இட்சாக் ரபீன் யாசிர; அரபாத் உடன் பாடு ஏற்பட்ட பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. 1992 ல் இந்தியா இஸ்ரேலுடன் தூதரக உறைவை வைத்துக் கொண்டது. அந்த உறவை இஸ்ரேல் வேகமாக வளர;த்துக் கொண்டது. இப்போது இந்தியாவும் இஸ்ரேலும் சுமார; 6200 கோடிக்கு ஆயுத வியாபாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னர; ரஷ்யாவுக்கு கொடுத்திருந்த இடத்தில் இப்போது இந்தியா இஸ்ரேலை இருத்தி இருக்கிறது. (அமெரிக்காவுக்கு தன்னையே தாரை வார;த்துவிட்டது என்பது வேறு விசயம்.) காஸாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப் படுகிறார;கள் ஊரே தரைமட்டமாக்கப் படுகிறது. இந்தியாவும் அதை கண்டிக்கிறது. ஆனால் அதன் குரலில் ஜீவன் இல்லை. சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர;களுக்கான மாநாட்டில் காஸாவின் மீதான தாக்குதலை கண்டித்த பாரதப் பிரதமர; திருமிகு மன்மோகன் சிங் அவர;களின் உரையை நான் ஆர;வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன் அவரது திருவாய் ஒரு தடவை கூட ”இஸ்ரேல்” என்று சொல்லவே இல்லை. இந்த மந்திர மாற்றத்திற்கான முக்கியக் காரணம் இஸ்ரேலும் பாலஸ்தீனும் செய்து கொண்ட உடன்படிக்கைதான். பாலஸ்தீனே இஸ்ரேலோடு கைகோர;த்து விட்ட பிறகு நாம் ஏன் விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணமே இந்திய ராஜ தந்திரிகளை இஸ்ரேலோடு கைகோர;க்க வைத்தது. அது முஸ்லிம்கள் விசயத்தில் ஈவுஇரக்கத்திற்கி இடம் விடாதவாறு இறுகியும் விட்டது. உலக மகா அயோக்கிய சிகாமணிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும், உலகத்தை ஏமாற்ற போட்ட திட்டம் தான் பாலஸ்தீனின் சுயயாட்சி என்பது. அது பாலஸ்தீன மக்களை அடக்கியாளும் அதிகாரத்தை இஸ்ரேல் சட்ட பு+ர;வமாக பெறுவதற்கு வழி வகுத்ததே தவிர பாலஸ்தீன மக்களின் கண்ணீரைத்துடைக்க கைக்குட்டையை கூட நீட்டவில்லை. இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய பொய் எது தெரியுமா? பாலஸ்தீன் என்று ஒரு நாடு இருப்பதாக கருதுவதுதான். இன்றைய சுழ்நிலைக்கு உலகின்மிகப் பெரிய வேடிக்கை எது தெரியுமா? உலகின் 117 நாடுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு தூதரக உறவு இருப்பது தான்.இப்படி ஒரு விசயத்தை உலகம் நம்பியதால் அதற்கு பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் இதையே உலக முஸ்லிகளும் நம்பிவிட்டதில் தார;மீகமாவும் செயல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அவர;கள் மிகவும் பின் தங்கிவிட்டார;கள்.ஏமாந்து போய்விட்டனர;. இன்னொரு வார;த்தையில் சொவதானால் ஈஸா சிலுவையில் அறையப் பட்டார; என்று நம்புகிற கிருத்துவர;களை போலவே இதுவிசயத்தில் முஸ்லிம்கள் சரியான பாதையிலிருந்து சருகிவிட்டார;கள். பாலஸ்தீன் எனபது இன்றைய நிலையில் இஸ்ரேல் நாட்டிலிருக்கிற ஒரு முன்சிபாலிட்டிக்கு பெயர;. அதுவும் கிழக்கில் ஒரு துண்டு மேற்கில் ஒரு துண்டு என பிரிந்து கிடக்கிற நிலத்தை இணைத்து உருவாக்கப் பட்ட ஒரு முனிசிபாலிட்டி. விலக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம் என்பது போல அதன் மேயர; அதிபர; என்று அழைக்கப் படுகிறார;. ஆணையாளர; பிரதமர; என்றும் கவுன்சிலர;கள் அமைச்சர;கள் என்றும் அழைக்கப் படுகிறார;கள். இதற்கு மேல் எதுவும் இல்லை. காஸாவின் வரலாற்றை சற்றே அகழ்ந்து பார;த்துவிட்டு வந்தால்தான் இதிலுள்ள எதார;த்தமும் வேதனையும் புரியும். பாலஸ்தீன் விசய்த்தில் எத்தகைய நிலைப் பாட்டை மேற்கொள்வது என்ற தெளிவும் கிடைக்கும். காஸா உலகின் புராதான நகரங்களில் ஒன்று. அரபியில் ஃகஸ்ஸா என்று அழைக்கப்டும் நகரே ஆங்கில வழக்கிலும் அதன் வழியாக தமிழ் உருமாற்றத்திலும் காஸா என்றழைக்கப் படுகிறது.. ஃகஸ்ஸா என்ற வார;த்தைக்கு மரியாதை என்று பொருள். கஸ்ஸாவில் தன் நபிகள் நாயகம் (ஸல்) அவர;களின் பாட்டனார; ஹாஷிமின் கல்லறை உள்ளது. இதன் காராணமாகவே அது ”கஸ்ஸத்து ஹாஷிம்” ஹாஷிமின் கல்லறை உள்ள மரியாதைக்குரிய இடம் என்று அழைக்கப் பட்டதாக விக்கிபீடியா கலைக்களஞ்சியம் கூறுகிறது. இஸ்லாத்தின் நான்கு சட்டப் பிரிவுகளில் ஒன்றான ஷாபி பிரிவின் முன்னோடியான இமாம் ஷாபி இங்கு பிறந்தவர;தான். இவற்றை எல்லாம் விட மத்தியத்தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்நகரம் அதன் கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாக பல்வேறு வடிவங்களைப் பெற்று பிரபலமடைந்து வந்தது. பழங்காலத்தில் அது சுறுசுறுப்பான வியாபார மையமாகவும் எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையே பயணம் செய்யும் வியாபாரக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாகவும் இருந்தது. காஸாநகரத்தை உள்ளடக்கிய மத்தியத்தரைக்கடலை ஒட்டிய கடற்கரை பிரதேசம் காஸாமுனை என்று சொல்லப் படுகிறது. அது இப்போது எகிப்தின் தென்மேற்கு எல்லையாகவும், இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையாகவும் இருக்கிறது. காஸாமுனை 41 கிலோமீட்டர; நீளமும் 6 முதல் 12 கிலோமீட்டர; வரை அகலமும் கொண்டது. காஸா, உமர; ரலி அவர;கள் ஆட்சிக் காலத்தில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர;களால் கி.பி.637 ல் கைப் பற்றப் பட்டது. அன்றிலிருந்து இடையில் ஏற்பட்ட சில சிலுவைப் போர; விபத்துக் களை தவிர;த்து சுமார; ஆயிரத்து முன்னூறு வருடங்கள் அது முஸ்லிம்களின் கட்டுப் பாட்டிலேயே இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின் துருக்கிய கிலாபத் வீழ்ந்த போது 1917 ல் பிரிட்டிஷ்காரர;கள் துருக்கியிடமிருந்து காஸாவை கைப்பற்றினார;கள். தொடர;ந்து பிரிட்டிஷாரால் நிர;வகிக்கப் பட்ட பாலஸ்தீனின் ஒரு அங்கமாக காஸா இருந்தது. பிறகு சர;வதேச நாடுகள் சபையின் பொறுப்பில் அது விடப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் ந்டை பெற்ற காலகட்டத்தில் யு+தர;கள் பிரிட்டிஷிற்கும் அமெரிக்காவிற்கும் பெருமளவில் உதவினார;கள். அற்கு பதிலாக ஜெருசலத்தை தலிமையிடமாக கொண்டு தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று தொடர;ந்து பிரிட்டனையும் அமெரிக்காவையும் அவர;கள் கோரி வந்தனர;. அதன் விளைவாக பாலஸ்தீன அரபுகளிடமிருந்து நிலத்தை திருடி பாலஸ்தீனிற்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வல்லரசுகள் திட்டமிட்டன. தங்களது நாட்டில் குடியேறியிருக்கிற ஆபத்தான சக்திகளான யு+தர;களை தங்களது நாடுகளிலிருந்து வெளியே இனுப்ப இது தான் நல்ல தருணமென்று நினைத்த ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அதை ஆதரித்தன. இஸ்ரேலியர;களுக்கு ஒரு நாட்டை உருவாக்கும் பல்போர; தீர;மாணம் உருப்பெற்றது. ஜோர;டான் நதியிலிருந்து மத்தியத்தைர;க்கடல் வரை பரவியிருந்த பாலஸ்தீனிற்குள்1948 ம் ஆண்டு திருட்டத்தனமாக இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது மட்டுமல்லாது அதை பாலஸ்தீனின் நடு மார;பில் அமைத்தனர;.பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அமைந்துள்ள ஜெருஸலத்தை யு+தர;கள்சொந்தம் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு நடைபெற்றது. இதனால் ஜோர;டான் நதிக்கரைய ஒட்டிய பாலஸ்தீனின் பகுதிகளும் அதன் இன்னொரு எல்லையான மத்தியத் தரைக்கடலை ஒட்டிய காஸாபகுதியும் தனித்தனி துண்டுகளாக பிரிந்தன. இரண்டு தனித்தனி துண்டுகளை சேர;த்துத்தான் இப்போது பாலஸ்தீன் என்று அழைக்கப் படுகிறது. இரண்டுக்கும் இடையே இரும்புத்திரையாக இஸ்ரேலின் ராஜாங்கம் நடக்கிறது. அரபுகள் ஒன்று திரண்டு விட முடியாத படி செய்யப்பட்ட சதி அது.இஸ்ரேல் அமைக்க்ப பட்ட போதே பாலஸ்தீனமும் அமைக் கப்பட்டது. ஆனால் அரபுகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலின் வலிமை அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்ளாத அரபு நாடுகள் இஸ்ரேல் பிறந்த அன்றே அதன் மீது அவசரமாக யுத்தம் தொடுத்தன. யுத்தத்தில் அரபு நாடுகள் மோசமாக தொற்ற போது பாலஸ்தீனம் சிதைந்து போனது. 1948 ல் 369 பாலஸ்தீன ஊர;களை இஸ்ரேல் அழித்தது. யுத்தத்தில் ஈடுபட்ட அரபு நாடுகள் தம் பங்கிற்கு பாலஸ்தீனை மேலும் சிதைத்தன. பாலஸ்தீனின் பகுதிகளாக அறிவிக்கப் பட்டிருந்த காஸாவை எகிப்து கைப்பற்றி கொண்டது. மேற்கு கரையை ஜோர;டான் கைப் பற்றிக் கொண்டது. காஸாவை 1948 லிருந்து காஸா எகிப்திடமிருந்தது. 1967 ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மற்றொரு போர; நடந்தது அதில் அரபு நாடுகள் மிக மோசமாக தோற்றன. எகிப்திடமிருந்து காஸா ஜோர;டானிடமிருந்து மேற்கு கரை ஆகிய வற்றை மட்டுமல்லாது அதுவரை அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இருந்த பைத்துல் முகத்தஸ் புனிதப் பள்ளிவாசல் அடங்கியிருக்கிற ஜெரூசலம் நகரத்தையும் சேர;த்தே கைப்பற்றியது. தங்களது கள்ள்க் குழந்தை அரபு நாடுகளை கப்ளீகரம் செய்வதை அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார;த்தன. 1948 லிலிருந்து பாலஸ்தீன்னின் விடுதலைக்காக பாலஸ்தீன மக்கள் பல்வேறு குழுக்களாக போராடினர;. அதில் பிரதானமானது யாசிர; அரபாத்தின் அல்பதாஹ் இயக்கம். வேறு பல குழுக்களும் இருந்தன.1963 ம் ஆண்டு விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அந்த குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பி.எல்.ஒ என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. அந்த அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பார;வையாளர; அந்தஸ்து தரப் பட்டது. தான் உருவாக்கிய ஒரு ரவுடி தேசத்தினால் பாரம்பரியம் மிக்க ஒரு நாடு காணாமல் போனதற்காக ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்திய அதிகபட்ச நல்லெண்ணம் இது. இதைதான் வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பார;கள். இந்த நடவடிக்கையின் அல்லது இந்தப் புதிய அந்தஸ்தின் காரணமாக அல்லது மயக்கத்தினால் பி.எல்.ஓ அமைப்பு போராட்ட வழி தவிர;த்து வேறு வழியான அரசியல் தீர;வுகளையும் தேடியது. எப்படியாவது ஒரு சமாதானம் ஏற்பட்டாக வேண்டும் என்று அவர;கள் யோசிக்க வேண்டிய நிர;பந்ததத்தை இஸ்ரேல் தொடர;ந்து கொடுத்துக் கொண்டே வந்தது. பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு மிக மோசமான கொடுமைகளை இஸ்ரேலிய அரசு இழைத்தது. ஏதாவது ஒரு சப்பையான காரணத்தை சொல்லிக் கொண்டு அரபுகளை சு+ரையாடியது. அவர;களது வீடுகளை கணக்கின்றி இடித்துதள்ளியது. அரபுகளின் வீடுகளை இடித்துத் தள்ளுவதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர;களை உருவாக்கியது. ஊயவநசிடைடயச வுசயஉவழச என்ற கம்பெனி பாலஸ்தீனர;களின் வீட்களை இடிப்பதற்கென்றே விஷேசமாக வடிவமைக்கப் பட்ட புல்டோஸர;களை இஸ்ரேலுக்காக தயார; செய்து கொடுத்தது. மனித உரிமை ஆர;வலரான சுயஉhநட ஊழசசநை என்பவர; அந்த புல்டோஸர;களில் ஒன்றின் முன் அதை அறவழியில் தடுத்து நிறுத்த போராடினார;. இஸ்ரேலியர;கள் அவரை கைது செய்திருக்கலாம். அல்லது அப்புறப்படுத்தி இருக்கலாம். ஆனால் சர;வசாதரணமாக அவர; மீது புல்டோஸை ஏற்றி சிதைத்தார;கள். இதுதான் இஸ்ரேலின் அணுகுமுறை.இத்தகைய அணுகுமுறையில் இஸ்ரேலின் கொடூரம் உச்ச கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த சு+ழலில் பாலஸ்தீன போராளிகளும் தங்களது போராட்டத்தை தீவிரப் படுத்தினார;கள். வரலாற்று ச்சிறப்பு வாய்ந்த முதலாவது இன்திபாதா போராட்டம் நடந்தது. பல லட்சக்கணக்கான மக்கள இஸ்ரேலின் சர;வ வல்லமை படைத்த ராணுவத்தை எதிர;த்து வெறும் கற்களை ஏந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர;. இந்தச் சு+ழலில் தான் இஸ்ரேலிய அரசு அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மூலமாக பாலஸ்தீனர;களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது. அதுதான் பாலஸ்தீனிற்கு தன்னாட்சி வழங்கும் திட்டம். நார;வேயின் தலைகர; ஒஸ்லே வில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் யாசிர; அரபாத்தின் பிரதிநிதியும் அரபாத்தின் பிரதிநிதியும் கையெழுத்திட்டனர;. பிறகு அதே ஒப்பந்தததை அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் யாசிர; அரபாத்தும் இட்சாக் ரபீனும் ஒப்பமிட்டனர;. நடுவே இஸ்ரேல் கொலுவிருக்க ஒரு பக்கம் காஸாவும் மறுபக்கம் மேற்குகரையும் கொண்ட ஒரு பகுதியை பாலஸ்தீனின் தன்னாட்சிப் பகுதியாக வரையறுத்தார;கள். நிலம் பாலஸ்தீனர;களிடம் இருக்கும் ஆனால் அதன் வானம் இஸ்ரேலுக்குச் சொந்தம். காஸாவும் அதன் கடற்கரையும் பாலஸ்தீனிடமிருக்கும் ஆனால் கடல்வழி இஸ்ரேலுக்குச் சொந்தம். ஒரு ஊசிமுனையளவு பொருளாக இருந்தாலும் அது இஸ்ரேலின் கஸ்டம்ஸை கடந்து தான் உள்ளே வரவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி அதிகாரம் பாதுகாப்பு ராணுவம் அனைத்தும் இஸ்ரேலிடம் இருக்கும். இஸ்ரேலிடம் அனுமதி பெற்றே யாரும் பாலஸ்தீனிலிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ முடியும். பாலஸ்தீனர;கள் இஸ்ரேலுக்கு வரியும் செலுத்த வேண்டும். பாலஸ்தீனில் விழுகிற குப்பைகளை அள்ளவும் மருத்துவ மனைகளை பராமரிக்கவும் பாலஸ்தீன நகரங்களை பராமரிக்கவும் மட்டுமே பாலஸ்தீன தன்னாட்சி அமைப்புக்கு அதிகாரம் இருக்கும். அது வரை ஒரு தீரமிக்க போராளியாக இருந்த அரபாத் அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்பார; என்று யாரும் எதிர;பார;க்கவில்லை. ஆனால் அரபாத் ஏற்றுக் கொண்டார;. தனது மக்களின் மிக மோசமான வாழ்வில் அது கொஞ்சமாவது நிம்மதியை உண்டு பண்ணும் என்று அவர; நம்பினார;. தற்காலிக தீர;வுகள் மூலமாக நிரந்தர தீர;வை நோக்கி நகர முடியும் என்று அவர; நம்பிதாக விமர;சகர;கள் கூறுகிறார;கள். ஆனால் யு+தர;களின் ஒப்பபந்தங்கள், வாக்குறுதிகள், நம்பிக்கை குறித்து எந்த அளவு எச்சரிக்கையும் விழிப்புணர;வும் அவசியம் என்று திருக்குரான் கூறுகிற வழிகாட்டுதல்களை அவர; கவனத்தில் கொண்டாரில்லை. இந்த ஒப்பந்தத்தினால பாலஸ்தீனர;களுக்கு கிடைத்த ஒரே பலன் மேற்குக் கரையிலும் காஸா முனைப் பகுதியிலும் இஸ்ரேல் அமைத்திருந்த யு+த குடியேற்றங்களை காலி செய்தது தான். இஸ்ரேல் இதைச் செய்ததேகூட பாலஸ்தீனர;களின் நன்மைக்காக அல்ல. பாலஸ்தீன பகுதியில் குடியிருக்கிற யு+தர;களை பராமறிப்பதற்கு ஆகிற ராணுவச் செலவு எல்லை கடந்து செல்கிறது என்பதற்காகத் தான் என மேற்கத்திய உடகங்கள் கண்சிமிட்டி பேசிக் கொள்கின்றன. அரபாத் இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அப்போதே பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக காஸா முனைப் பகுதியில் வலுவாக செயல்பட்டு வந்த ஒரு மாபெரும் அர;பனீப்பு இயக்கமாக கருதப் பட்ட ஹமாஸ் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேலினால் பாதிக்கப் படும் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவும் அவர;களது ஒவ்வொரு பிரச்சினையிலும் உதவுவதற்காக மார;க்க அறிஞர;கள் பட்டதாரிகளால உருவாக்கப் பட்ட ஒரு அமைப்பு. ஹர;கத் அல்முகாவமுதுல் இஸ்லாமியா என்ற முழு பெரை சுருக்கமாக ஹமாஸ் ( தற்காப்பு அல்லது தடுப்புப் படை) என்று அழைத்துக் கொண்டனர;. இஸ்ரேலினால் ஆக்ரமிக்கப் பட்டு நிராதவராக எந்த வித கவனிப்பும் அற்றிருந்த பகுதிக்குள் ஒரு அரசு நிர;வாகம் போல் செயலாற்றியது. அரசியல் ரீதியாக பிரபலமடைவதை மார;ர;க ரீதியாக பிரச்சினையை கையாள்வதில் ஹமாஸ் அக்கறை செலுத்தியது. உலமாக்கள் எனப்படும் மார;க்க அறிஞ்ர;களே அதன் தலைமை பொறுப்பிற்கு வர முடியும். இப்போதைய தலைவரான இஸ்மாயில் ஹனியாவும் ஒரு மார;க்க அறிஞ்ர;தான். யு+தர;கள் விசயத்தில் மார;க்கம் கற்றுத்தரும் எச்சரிக்கைகளை அவர;கள் மறக்கவில்லை. அதனால் ஒரு போதும் இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர;கள் உறுதிபடக் கூறினார;கள். அதனல். அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்குள் (பி.எல்.ஓ) அவர;கள் இணைய வில்லை. தொடர;ந்து தனி அணியாகவே செயல்பட்டு இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர;. அயினும் யாசிர; அரபாத்தின் முயற்சிக்கு அவர;கள் தொல்லை எதுவும் தரவில்லை. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்தப் பட்டு யாசிர; அரபாத் அதன் தலைவராக இன்னொரு வார;த்தையில் பாலஸ்தீனின் அதிபராக தேர;ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் அவரது முழு அதிகாரம் பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் மட்டுமே இருந்தது. காஸாவை அதிகாரப் பு+ர;வமாக பி.எல்.ஓ ஆட்சி செய்தாலும் உண்மையான அதிகாரம் ஹமாஸிடமே இருந்தது. ஒரு அரசியல் தீர;வை தேடும் முயற்சியில் பி.எல்.ஓ மேற்குலகத்தின் நாடகத்திற்கு அரபாத் மயங்கிவிட்டார; என்று கருதிய பாலஸ்தீனர;கள் ஹமாஸ் பி,எல்.ஒ வோடு சேர;ந்து விடக்கூடாது என்றே விரும்பினார;கள் என விமர;சகர;கள் கூறுகிறார;கள். ஓஸ்லோ ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முனிசிபாலிட்டு தன்னை தலைவராக்கி விட்டதன் மூலம் இஸ்ரேல் ஏரளமான புதிய நட்பை சேர;த்துக் கொண்டு பாலஸ்தீனர;களை மேலும் அபகதிக்குள் உள்ளாக்கிவிட்டதை சற்று தாமதமாகவே அரபாத் புரிந்து கொண்டார;. ஆயினும் கிடைத்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி ஏதாவது சில நல்ல காரியங்களை செய்ய முடியுமா என்று முயற்சித்தார;. அதற்குள்ளாக தனது இருப்பை சர;வதேச அளவில் உறுதிப் படுத்திக் கொள்ள ராஜாங்க ரீதியான முயற்சியை இஸ்ரேல் தீவிரப் படுத்தியது. அமெரிக்காவும் பெருமளவில் அதற்கு உதவியது. இஸ்ரேல் தனது எந்த ஒரு முயற்சியின் வழியாகவும் தனது வக்கிரமான எண்ணங்களையே நிறைவேற்றிக் கொள்ளவிரும்பியது. அதன் பாரம்பரிய விஷ(ம)த்தனம் கடுகளவும் குறைய வில்லைஇறுதியாக அதே அரபாத்தை பயன்படுத்தி இன்னும் சர;ச்சைக்குள்ளான பகுதியாக இருக்கிற ஜெரூஸலத்திற்கும் இந்த முறையிலான ஒரு தீர;வை அடைந்துவிட அது துடிததது. அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன் மூலம் பாலஸ்தீனிற்கு மடிப்பிச்சை இடுகிற பல திட்டங்களை அது முன் வைத்தது. அதற்கு விலையாக மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை கேட்டது. பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் பாரம்பரியம் மிக்க முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலும் பின்னாட்களில் கட்டப்பட்ட மஸ்ஜிது உமர; பள்ளிவாசலும் இருக்கினறன. மஸ்ஜிது உமர; முஸ்லிம்களுக்கு என்றும் மஸ்ஜிதுல் அகஸா யு+தர;களுக்கு என்றும் பிரித்துக் கொள்ள அந்த ஒப்பந்தம் ரகசியாமாக வழி வகுத்தது. அந்த இடத்தில் பிரம்மாண்டமான ஒரு யு+தக் கோயிலைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. இப்போதும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. வரலாறு ஒரு போதும் மன்னிக்காத அபகீர;த்திக்கு தான் ஆளாகிவட்க் கூடாது என உணர;ந்த அரபாத் புதிய திட்டத்தை உறுதியாக மறுத்துத் திரும்பிவிட்டார;. அது முதல் இஸ்ரேலின் பெரும் எதிரியாக அரபாத் மாறினார;. பைத்துல் முகத்தஸ் விசயத்த்தில் இஸ்ரேலின் திட்டத்தை தெரிந்து பாலஸ்தீனர;கள் இரண்டாவது இன்திபாதா போராட்டத்தை தொடக்கினார;கள். இஸ்ரேல் ரானுவம் பாலஸ்தீனிற்குள் நுழைந்டத்து. பாலஸ்தீனம் ரணகளமாகியது. போதுமான அழிவை ஏற்படுத்திய பிறகு சர;வதேச நிர;பந்தங்களுக்குப் பணிந்து இஸ்ரேல் வெளியேறியது. பின்னரும் காஸாவில் கலவரத்தை தூண்டினார; அதற்காக ஆயுதங்களை வாங்க முயற்சி செய்தார; என்று அரபாத்தின் மீது குற்றம் சாட்டி அவரை வீட்டுச் சிறையில் வைத்தது இஸ்ரேல். இஸ்ரேலும் அமரிக்காவும் இனி அரபாத்துடன் பேசமுடியாது என்று மறுத்தன. சர;வதேச அரங்கில் அவரது மரியாதையை சிதைக்க பெருமளவில் முயற்சி செய்தன. அவர;களின் நிர;பந்தத்தினால அவர;களது விருப்பப் படி மஹ்மூது அப்பாஸ் பிரதமராக நியமிக்கப் பட்டார;. அரபாத் இறந்த பிறகு அவரே பாலஸ்தீன அதிபராகவும் ஆனார;. இதற்கிடையே பாலஸ்தீனில் முதன் முதலாக தேர;தல் நடந்தது. பல்வேறு பட்ட தரப்பிலிருந்தும் வந்த வேண்டுகோளை அடுத்து இஸ்ரேலுடனான போராட்ட வழியில் இருந்த ஹமாஸ் தேர;தலில் போட்டியிட ஒப்புக்கொண்டு தேர;தலில் போட்ட்யிட்டது. மக்கள் குறிப்பாக காஸா நகரத்து மக்கள் பெருவாரியாக ஹமாஸை தேர;ந்தெடுத்தனர;. 2006 ஜனவரி 25 நடந்த தேர;தலில் ஹமாஸ் வென்றது. 42.9 சதவீத வாக்குகளுடன் மொத்தமுள்ள 132 இடங்களில் 74 கை கைப்பற்றியது. இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் ஹமாஸின் தேர;வை ஏற்க மறுத்தன. ஹமாஸ் பாலஸ்தீனின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து விட்டது. அத்தோடு தங்கள் மீதான சர;வதேச நிர;பந்தங்களைய்ம் ஏற்க மறுத்தது. அதற்கான நியாயத்தை உலகிற்கு ஹமாஸின் சார;பில் பேசவல்ல அமெரிக்க பாலஸ்தீனரான கலீல் தெளிவுபடுத்தினார;. பாலஸ்தீனில் நிலவும் எதார;த்த சு+ழ்நிலையை, பாலஸ்தீன அமைப்புக்கு வழங்கப் பட்ட தன்னாட்சி அதிகாரத்தின் லட்சணத்தை அவர; அம்பலப்படுத்தினார;; கலீல் கூறினார;. ”ஐளசயநட ளவடைட உழவெசழடள நஎநசல pநசளழn, நஎநசல பழழன, டவைநசயடடல நஎநசல னசழி ழக றயவநச வழ நவெநச ழச டநயஎந வாந புயணய ளுவசip. ஐவள வசழழிள அயல ழெவ டிந வாநசந டிரவ வை ளவடைட சநளவசiஉவள வாந யடிடைவைல கழச வாந Pயடநளவinயைn யரவாழசவைல வழ நஒநசஉளைந உழவெசழட. இஸ்ரேல் இப்போதும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு பொருளையும் கட்டுப்படுத்துகிறது. காஸாவுக்குள் நுழைகிற அல்லது வெளியேறுகிற ஒவ்வொரு துளி தண்ணீரையும் சோதிக்கிறது. பாலஸ்தீன தன்னாட்சி அமைப்பு தனது பொறுப்பை ஏற்றுக் கொள்ள அது இன்று வரை தடையாக இருக்கிறது.மற்ற உலக நாடுகளில் தேர;தலில் வெற்றி பெற்றவர;கள் தனக்கு வேண்டாதவர;கள் என்றால் அதை ஏற்க மறுப்பதும் அவர;களை எப்பாடுபட்டவது துரத்த முயற்சிப்பதும் அதுவும் முடியாவிட்டால் அத்தகைய ஆட்சித் தலைமையை தேர;ந்தெடுத்த மக்களை வதை செயவ்தும் தானே அமெரிக்க ஜனநாயகம். அமெரிக்கா பாலஸ்தீனிற்கு செய்து வந்த நேரடி உதவியை காஸாவிற்கு நிறுத்தியது. அதன் ஆதிக்க கூட்டாளிகளும் தங்களது உதவியை நிறுத்தினர;. ஹமாஸ் பாலஸ்தீன அரசை தேசிய சுயாட்சி அரசாக அறிவித்தது. பி. எல்.ஓ வைச் சார;ந்த அதிபர; மஹ்மூது அப்பாஸ் அதை ஏற்கவில்லை. அவசர நிலையை அறிவித்து ஹமாஸ் இல்லாத ஒரு அரசை அமைப்பதாக கூறிவிட்டு அவர; பாலஸ்தீனின் இன்னொரு பகுதியான மேற்குக் க்ரை பகுதியில் இருந்து விட்டார;. அவரது ஆட்கள் மேற்கு கரையில் ஹமாஸின் சில தலைவர;களை கைது செய்தார;கள்பாலஸ்தீன் முனிசிபாலிட்டி இரண்டாக பிளவுண்டது. மேற்குக் கரை இப்போது அதிபர; மஹ்மூது அப்பாஸ் வசம் இருக்கிறது. காஸா இப்போது பிரதமர; இஸ்மாயீல் ஹனியாவிடம் இருக்கிறது. அப்பாஸின் அரசை அமெரிக்காவின் பொம்மையான சவு+தியும், இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட இரண்டே இரண்டு அரபு தேசங்களான எகிக்தும் ஜோர;டானும் ஆதரிக்கின்றன. ஹமாஸை சிரியாவும் ஈரானும் ஆதரிக்கின்றன. காஸாவிற்குள் அத்தியாவசியப் பொருட்களும் எரிபொருட்களும் செல்வதையும் போக்குவரத்தையும் இஸ்ரேல் தடுத்தது. 2007 செப்டம்பரில் காஸாவை யுத்த பகுதியாக அறிவித்தது. காஸாவில் பொருளாதார பிரச்சினை தலை தூக்கியது. இன்றைய காஸா என்பதே இஸ்ரேலின் வெறியாட்டங்களால் உருவான ஒரு பெரிய அகதி முகாம் தான். அகதிகளுக்காக ஐநாவின் நிவாரணத்திட்டத்தின் கீழ் கிடைத்துவருகிற அத்தியாவசியப் பொருட்கள்தான் அங்குள்ள மக்களுக்கு பிராணவாயு. அதையும் நிறுத்தி விட்டால்? உணவு, மருந்துப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர; என அனைத்துப் அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஹமாஸை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக 15 லட்சம் மக்களை பட்டினிச் சாவை நோக்க்கி இஸ்ரேல் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. கேட்பார; யாரும் இருக்கவில்லை. இந்தச் சு+ழ்நிலையில் தான் ஹமாஸ் இஸ்ரேலின் சில பகுதிகள் மீது கஸம் ஏவுகனைகளை வீசியது. இஸ்ரேலின் ஆயுத வன்முறையோடு ஒப்பிடுகையில் உள்ளுhர; தயாரிப்பான கஸம் ஒரு பொருட்டே அல்ல. 697 ராக்கெட்டுகளும் 822 பாம்களும் வீசப்பட்டதாக இஸ்ரேல் கணக்கு காட்டுகிறது. இதன் மொத்த பாதிப்பும் இஸ்ரேலின் ஒற்றை குண்டுக்கு நிகராகாது. இந்த ராக்கெட்டுகளை காரணம் காட்டித்தான் இஸ்ரேல் காஸாவின் மீது மிருகவெறித் தாக்குதல் நடத்தியது. உண்மையில் காஸா இஸ்ரேலிய நாட்டுக்குள் இருக்கிற ஒரு நகரம். அதை பாதுகாக்க பீரங்கிப் படைகளோ எல்லைப் பாதுகாப்பு வீரர;களோ ஒருவரும் இல்லை. காஸாவை மீண்டும் ஆக்ரமிப்பது என்று இஸ்ரேல் முடிவு செய்தால் கூட எந்த ஆயுதங்களையும் வீசாமல் அதிகபட்சமாக இரண்டு நாட்களில் பிடித்து விட முடியம். மிக முக்கியமான விசயம். வான்வெளித்தாக்குதல் எனப்து அறவே தேவையற்றது. பிறகு ஏன் இந்த மாபெரும் கொலைவறித் தாக்குதல்? அது தான் இஸ்ரேலின் குணம். இஸ்ரேல் இந்த தாக்குதலின் மூலம் பாலஸ்தீனர;களுக்கு சொல்ல விரும்புவதை மீண்டும் தெளிவாக சொல்லிவிட்டது. எங்களது விருப்பத்திற்கு உடன்படுவதானால் மட்டுமே இந்தப் பிராந்தியத்தில் நீங்கள் உயிர;வாழ முடியும். போர; நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேலின் ரானுவப் பேச்சாளர; அதைத்தான் இப்படிக் கூறினார;. ”எங்களது நோக்கம் நிறைவேறிவிட்டது”.இஸ்ரேலின் விருப்பம் தான் என்ன என்று கேட்கிறீர;களா? வேறொன்றும் இல்லை.இப்போதைக்கு எந்த எதிர;ப்பும் இல்லாமல் ஜெரூஸலம் நகரை ஆள வேண்டும். பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை இடித்து விட்டு அங்கு மாபெரும் சினகாஹ் யு+தக் கோயில் ஒன்றை கட்ட வேண்டும்.இது பாலஸ்தீனில் அரபிகள் இருக்கிற வரை நடக்காது. அதனால் தான் தன் எண்ணத்திற்கு தடையாக இருப்பவர;களுக்கு தன்னுடைய வலிமை என்ன என்பதை இஸ்ரேல் காட்டிக் கொண்டே இருக்கிறது. தன் விருப்பப் படி நடக்கதவர;களை தேர;ந்தெடுத்த மக்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்தது. கொடுத்து விட்டது. பிறகு வெளியேறியும் விட்டது. இப்போதைக்கு இந்தத் தாக்குதல் ஒரு முடிவில்லாமல் முடிந்துவிட்டது. ஆனால் இதுவே முடிவான முடிவல்ல. எல்லோருக்கும் இது தெரியும். நாளைக்கே இன்னொரு காரணத்தை சொல்லிக் கொண்டு இஸ்ரேல் மேற்குக் கரை மீது இன்னொரு மிருகத் தாக்குதலை தொடங்கலாம். காரணங்களுக்கு அங்கே பஞ்சமே இல்லை. பாலஸ்தீனில் முஸ்லிம்கள் இன்னும் உயிர; வாழ்கிறார;கள் என்ற ஒற்றைக் காரணம் போதாதா? அறுபது வருடங்களாக தொடர;ந்து இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதை நிறுத்துகிற வழியை காணோம்.இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. பாலஸ்தீனப் பிரச்சினையை அங்குள்ள அரபிகளின் அரசியல் விவகாரமாக மட்டும் பார;க்கப் படக் கூடாது. உலக முஸ்லிம்களின் தன்மானத்தோடும் பக்தியோடும் தொடர;புடைய உயிர; அம்சமாக பார;க்கப் படவேண்டும். அதனடிப்படையில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஒரு பாதிக்குள் இஸ்ரேல் விவகாரத்திற்கு ஒருமித்த ஒரு முடிவு கட்டப் படவேண்டும். பாலஸ்தீனிற்குள் ஒரு முனிசிபாலிட்டியாக இஸ்ரேல் இருக்க மட்டுமே முஸ்லிம்கள் சம்மதிக்க வேண்டும். மற்றெந்த மற்றெந்த குறுக்கீடுகளையும் உடன்பாடுகளையும் திரும்பியும் பார;க்கக் கூடாது. ஒரு சமுதாயம் இலட்சியத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிற வரை மட்டுமே அந்த சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். உலக முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய உறுதியை தெளிவையும் மறு பரிசீலனை செய்து கொள்வதற்கு வசதியாக இஸ்ரேலின் முதல் பிரதமர; பென் கூரியன் செய்த ஒரு பிரகடணத்தை மட்டும் நினைவு+ட்டுகிறேன். 1967 ம் ஆண்டு ஜெரூஸலத்தை கைப் பற்றிய பிறகு பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்கருகே நின்று கொண்டு தன்னுடை வீரர;களிடமும் மக்களிடம் உரையாற்றிய பென் கூரியன் இறுதியாக இப்படி முடித்தார;. ”கதிஸ்தவல்லைனா அலல் குதுஸ். வ நஹ்னு பீ தரீகதீனா இலா யத்ரிப்.””நாம் பைத்துல் முகத்தஸை வென்றுவிட்டோம். இனி நமது பயணம் யத்ரிபை நோக்கி.”உங்களுக்கு நான் நினைவு படுத்த வேண்டியிருக்காது என்று நம்புகிறேன். யத்ரிப் என்பது ”மதீனா” வின் புராதானப் பெயர;.

Monday, February 23, 2009

लिबास मदुरै प्रोग्रम्म ओं मार्च 17


லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கம் (லிபாஸ்)
ஒரு நாள் பயிலரங்கு
"முஸ்லிம் சமூகத்தில் பிரிவினைச் சக்திகள் - அவர்களை எதிர் கொள்ளும் வழிகள் என்ற தலைப்பில்" ஆலிம்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகிற மார்ச் 17 ம் தேத்தி செவ்வாய்கிழமை காலை 9:30 மணியளவில் மதுரை அன்னாநகரரில் உள்ள ஸ்டார் பார்க் கல்யாண மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிகழ்சியில்
திருவனந்தபுரம் ஜாமியா பலாஹிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் , வேலூர் பாக்கியாத்தின் முன்னாள் பேராசிரியர் பையலூர் செய்யது முஸ்தபா அவர்கள் பிரதானமாக கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விசயங்களில் நமது தரப்பிற்கான சான்றுகள் என்ன? எப்படி? என்ற தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். இது தவிர பிரிவினை வாதிகளை எதிர் கொள்ளும் நடைமுறை உத்திகள் குறித்தும் அவர்களுடை முரண்பாடுகள் பற்றியும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட இருக்கின்றன.
அண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழா
அன்று மாலை தென்னிந்தியாவின் மார்க்கக் கல்விக்கு தன்னிகரற்ற சேவை செய்த அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்களின் நினைவு விழா பாகவிகள் சந்திப்பு "தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்வில் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் தாக்கம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கமாவும் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்சியில் வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத்தின் முன்னாள் முதல்வர் , பி.எஸ்.பி ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட பெருந்தகைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்வமுள்ள ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
உங்களுக்கான வசதிகள் செய்வதற்கு வசதியாக உங்களது வருகையை மார் 15 க்குள் அலை பேசி வழியாக பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்சியில் மர்ஹூம் கமாலுத்தீன் ஹஜ்ரத் வாழ்கை ஒரு வகுப்பறை நூல் வெளியிடப் படும் (இன்ஷா அல்லாஹ்)
pह: 9443979187