Posts

Showing posts from August, 2009

காதியானியும் கண்ணம்மா பேட்டையும்

சென்னை ராயப் பேட்டை பகுதியில் இந்துக்களின் பிரபலமான மயாணம் அமைந்துள்ள இடம் கண்ணம்மா பேட்டை. சென்னையின் தெருக்களில் தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறவர்களை கண்டால் ‘ மவனே நீ.. ஊட்டுக்கு போவ மாட்ட... கண்ணம்மா பேட்டைக்க்குத்தான் போவ.. என்று மக்கள் அர்ச்சிப்பது வழக்கம். அது போல இன்னோரு பிரபல மயாணம் இருக்குமிடம் கிருஷ்ணாம்பேட்டை . சென்னை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த 36 வயது காதியானி பெண் ஒருவர் கடந்த மே மாதம் 30 தேதி இறந்து பேனார். அவரது உடல் இராயப் பேட்டையில் உள்ள முஸ்லிம்களின் மையவாடியி அடக்கம் செய்யப் பட்டது. அதற்கு சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் ஆட்சேபனை செய்யவே அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப் பட்டு கிருஷ்ணாம் பேட்டை மயானத்தில் புதைக்கப் பட்டது. முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப் பற்றிய 10 சதவீத உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிட்டுவிடுவது பத்ரிகையாளர்கள் இதையும் ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்தனர். . காதியானி என்பது ஒரு தனி மதமாகும். பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்ற ஊரில் மீர்சா குலாம் என்பவரால் உருவாக்கப்பட்டதே காதியானி மதம். சீக்கிய மதம் எப்படி ...