Posts

Showing posts from December, 2013

பாக்கியாத் 150 ஆண்டு விழா

அல்லாஹ்வின் கிருபையால் டிஸம்பர் 21,22 ஆகிய தேதிகளில் பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் 150 ஆண்டு விழா வேலூர் கூனா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சுமார் 9 ஆயிரம் பேர் திரளாக கலந்து கொண்டனர். முறையான அழைப்பும் போதிய விளம்பரமும் இல்லாமலே இவ்வளவு பேர் கலந்து கொண்டது பாக்கியாத்தின் பெருமைக்குச் சான்றாக அமைந்தது. பல ஊர்களிலிருந்து பிரமுகர்கள் சாதாரணமாக கலந்து கொண்டு பாக்கிகியாத்தின் விழாவைப் பார்த்துச் சென்றனர்.   ஒரு வரலாற்று வைபவபவத்தில் கால்பதிக்கும் உணர்வு அவர்களிடம் காணப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகள் தான் போதிய அளவில் சோபிக்கவில்லை. மொழிவாரி நிகழ்ச்சிகளை தவிர பொது நிகழ்ச்சிகள் எதுவும் மன நிறைவை தரவில்லை.   நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான பாக்கியாத்தின் தற்போதைய பேராசிரியர்களின் உள்குத்து அரசியல் நிகழ்ச்சி முழுவதிலும் பிரதிபலித்தது. பாக்கியாத்தின் சுயச்சார்பு மேலும் கேள்விக் குறியாகி இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாக்கியாத்தின் பேராசிரியர்கள் பாக்கியாத்திற்கு சேவையாற்றுவதை விட சென்னை காஷிபுல் ஹுதா மதரஸாவிற்க்கு ...