கோடையின் வருகையோடு தேர்தலின் வருகையும் சேர்ந்து தமிழகத்தை அதிகமாக சூடேற்றியுள்ளது.
ஏப்ரல் 13 ம் தேதி நடைபெறவுள்ள தமிழக்த் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்ட்த்தை எட்டியுள்ளன. தமிழகத்தின் இரண்டு பிரதான் கூட்டணிகளிலிம் ஏகப்பட்ட நாடகங்கள் அரங்கேறிய பிறகு ஒருவாராக காட்சி தெளிவாகிய சூழ்நிலையில் இருபது நாட்களுக்குள்ளாக அத்தனை நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு இந்திய வாக்காளர் திருவாளர் ஏழைப் பொதுஜனம் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக நவீன மஹாராஜாக்களும் ம்ஹாராணிகளும் காத்திருக்ப் போகிறார்கள்.
நமது ஜனநாயகம் பனநாயகமாகிவிட்ட்து. மக்களின் பிரநிதிகளாவதற்காக களத்தில் நிற்பவர்ளில் பெருமபாலோர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வரவில்லை என்பது மட்டும் நிச்சய்ம். பணம் தேட அல்லது இருக்கிற பணத்தை காப்பாற்ற கட்சிகளுக்கு கப்பம் கட்டி களத்தில் குதித்து விடுகிறார்கள். திருவாரூரில் போட்டியிடுகிற நம்முடைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 41 கோடிக்கு சொத்து மதிப்பு காட்டியிருக்கிறார். அமைச்சர்கள் பலருடை சொத்து மதிப்பு 2006 ஆண்டு காட்டப்பட்ட்தை விட 700 மடங்கிற்கு மேல் அதிகரித்திருப்பதாக Times of india செய்தி வெளியிட்டிருந்த்து. இந்த மதிப்பு கூட தோராயமான மதிப்பு தான். கொங்குச் சீமையின் அமைசர் பொங்களூர் பழனிச்சாமி தன்னிடமுள்ள 12 பவுன் தங்க நகையின் மதிப்பு 25 ஆயிரம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆளும் கட்சியில் மட்டுமல்லஎதிர்க்கட்சியிலும் இப்படித்தான் மக்கள் ஆதரவை தேசத்தை சுரண்டும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் போக்கு இரத்த்ப் புற்று நோயாய பரவி விட்ட்து. கொள்கை, மக்கள் நலன், சிறந்த எதிர் காலத்திற்கான திடாங்கள் என்பதெல்லாம் இந்திய அரசியலில் இனி காணக்கிடைக்காத அம்சங்களாகிவிட்டன. மக்களும் கூட இந்த ம்லிவான மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர் எம்பது தான் ஜ்னநாயக்த்திற்கு நேர்ந்த மாபெரிய சோதனை. வளமான பாதுகாப்பான தேசம் என்ற இலக்கு தவறி கையேந்துத்தல் காசு பார்த்தல் என்பதே இந்திய அரசியலின் அணிகலனாகிவிட்ட்து. ஓரளவு மரியாதையை தக்க வைத்திருந்த தமிழகம் இப்போது மோசடிக்கும் தந்ந்திரங்களுக்கும் முன்னொடியாகிவிட்ட்து.
இந்திய அரசிய்லில் அதிக ஈடுபாடும் கவனிப்பும் கொண்ட முஸ்லிம் சமுதாயமும் காலத்தின் கோலத்திற்கேற்ப தன்னுடை சிந்தனையில் செய்ல்லிலும் மாற்றங்களுக்கு தயாராகிவிட்ட்து. இந்த 14 வது சட்ட மன்றத் தேர்தல் அந்த மாற்றத்தின் ஒரு பிரதான பரிணாமத்தை காண இருக்கிறது.
இந்திய தேர்த்ல் களத்தில் முஸ்லிம்களின் ஆதரவு அல்லது முஸ்லிம்களின் மனசாட்சி என்பது இந்திய வாக்காளரின் பொதுப்புத்தி சார்ந்தாதகவே இருந்த்து. பொதுவான வாக் காளர் எந்தப் பக்கமோ அந்தப் பக்கமே முஸ்லிம் வாக்காளரும் சாய்திருந்தார். இதற்கு முந்தயை தேர்தல்களின் போது தமது சமுதாய நன்மையை பிரதானமாக உயர்த்திப் பிடித்துக் கொண்டு அப்போதைய பொது அலையை எதிர்த்து அவர் நீந்தியதே இல்லை.
முஸ்லிம் ஓட்டு வங்கி என்ற சொல்லாடல், பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள், இந்துக்களுக்கு ஆத்திரமூட்ட திட்டமிட்டு உருவாக்கிய அவலங்களில் ஒன்றே தவிர அதில் உண்மை சிறிதும் இருக்க வில்லை. மிசாவுக்குப் பிறகு இந்திரா காந்தியை நாடு உதறிய போது அவரும் உதறினார்..
இப்போதைய இந்திய அரசியலின் ஜாதிய பண நாயக கலாச்சாரத்தில் முஸ்லிம் வாக்காளர் ஏமாளியாகவும் எளிதல் ஓரங்கட்டப்படுபவ்ராக இருந்தாலும் கூட ஓட்டு வங்கி அரசியலுக்குள் அவர் பெரும்பாலும் சிக்கியதில்லை. அது இந்திய முஸ்லிம்களின் அரசியல் பரிசுத்த்திற்கான அடையாளமாகும்.
இந்திய அரசியலில் புதிய வீச்சைப் பெற்றிருக்கிற ஜாதீய அரசியல் கட்சிகளை விட அதிகமாக முஸ்லிகள், இந்திய அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தனர். உயர் மட்டத் தலைவர்களுடன் நேரடி நெருக்கமும் அவர்களுக்கு இருந்த்து. எங்கள் சமுதாயத்திற்கு என்ன தருவாய் என்ற கேள்வியோடு அவர்கள் கடந்த தேர்தல்களை அணுகியிருந்தால் இட ஒதுக்கீடு சதவீத்த்தின் அளவோ ஆட்சிமன்றங்களின் பிரதிநிதித்துவமே கண்டிப்பாக இப்ப்போதைய நிலையை விட பன்மடங்கு உயர்ந்திருக்க கூடும். முஸ்லிம் வாக்களரோ அவர்களது அரசியல் தலைமை அப்ப்டி யோசிக்காமக் தேச நலன் என்று மட்டுமே யோசித்த்து, அதற்கேற்ப அரசியல் நிலைப்பாடுகளை எடுத்த்து. நம்முடைய் பிரச்சினைகளை பேசுவதற்கு யாராவது ஓரிருவர் மட்டுமே போது என்றும் நினைத்த்து. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத்தலைவர் பேரா. காத்ர் மைதீன், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிபை மேற்கோள் காட்டி அர்சிய்லில் ஆதிக்கம் பெறுவது எங்களது நோக்க மல்ல என்று கூறியதை இங்கே நினைவு கூறுவது பொருந்தும்.
இந்திய அரசியலில் புதிய வீச்சைப் பெற்றிருக்கிற ஜாதீய அரசியல் கட்சிகளை விட அதிகமாக முஸ்லிகள், இந்திய அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தனர். உயர் மட்டத் தலைவர்களுடன் நேரடி நெருக்கமும் அவர்களுக்கு இருந்த்து. எங்கள் சமுதாயத்திற்கு என்ன தருவாய் என்ற கேள்வியோடு அவர்கள் கடந்த தேர்தல்களை அணுகியிருந்தால் இட ஒதுக்கீடு சதவீத்த்தின் அளவோ ஆட்சிமன்றங்களின் பிரதிநிதித்துவமே கண்டிப்பாக இப்ப்போதைய நிலையை விட பன்மடங்கு உயர்ந்திருக்க கூடும். முஸ்லிம் வாக்களரோ அவர்களது அரசியல் தலைமை அப்ப்டி யோசிக்காமக் தேச நலன் என்று மட்டுமே யோசித்த்து, அதற்கேற்ப அரசியல் நிலைப்பாடுகளை எடுத்த்து. நம்முடைய் பிரச்சினைகளை பேசுவதற்கு யாராவது ஓரிருவர் மட்டுமே போது என்றும் நினைத்த்து. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத்தலைவர் பேரா. காத்ர் மைதீன், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிபை மேற்கோள் காட்டி அர்சிய்லில் ஆதிக்கம் பெறுவது எங்களது நோக்க மல்ல என்று கூறியதை இங்கே நினைவு கூறுவது பொருந்தும்.
ஓட்டு வங்கி அரசிய்லோ அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் திட்டமோ முஸ்லிம்களின் இயல்பாக இருக்கவில்லை. தேசநலனை கருத்தில் கொண்ட மக்கள் சேவைக்கான வாய்ப்பாக அவர்களது நடைமுறை அமைந்த்து. குறுகிய எண்ணத்தோடு செய்லபடாமல் இருந்த்த்தனால் தான் எதிர்முனையிலும் கூட மரியாதைக்குரியவர்களாக முஸ்லிம் அரசியல் வாதிகள் இருந்தார்கள்.
தமிழகத்தை பொறுத்த வரை கலைஞர் கருணாநிதியின் மீதான முஸ்லிம்களின் பற்று திராவிட அரசியலின் மீதான பாற்றாக இருந்த்தே அல்லாமல் ஓட்டுவங்கியாக இருக்கவில்லை. தமிழ்மீதான மோகமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் முஸ்லிம் சமுதாயத்தை என் கையைப் பிடித்து ஒப்படைத்தார் என்ற கருணாநிதி கவர்ச்சி அல்லது நெகிழ்ச்சி வார்த்தைகள் ஒலி பெருக்கியை ஈரப்படுத்திய அளவிற்கு கூட முஸ்லிம்களின் இதயத்தை தொட வில்லை.அதை இன்னும் அவர் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தமிழக முஸ்லிம் லீகில் இருக்கும் தொண்டர்களின் எண்ணிக்கையை விட திமுக வின் மாவட்ட அமைப்புக்களில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்.
என்.ஜி,ஆர் ஒரு நடிகராக என்பதும், இந்துக்களுக்கு ஒரு கட்சி இருக்க்க் கூடாதா என்று அவர் கேட்ட்தும் ஒரு நீண்ட காலத்திற்கு முஸ்லிம்களை அ.தி,மு,கவிடமிருந்து அன்னியப்படுத்தி வைத்திருந்த்து. அது கூட முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானவர் என்ற ஒட்டு வங்கி அரசியலின் வெளிப்பாடு அல்ல. இந்துத்துவாவின் பூர்வீகத்தை புரிந்து கொள்ளாமல் நடக்கும் தேச நன்மை பாதுகாப்புக்கான ஆபத்து என்ற அளவிலேயே அந்த எதிர்ப்பு மனோநிலை அமைந்த்து.
அதிமுக வுடனான அந்த ஒவ்வாமை இப்போதும் கூட முற்றிலுமாக விலகி விடவில்லை. கருணாநிதியை சந்திப்பது என்றால் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகிற உலமாவும் பிரமுகர்களும் ஜெயல்லிதா என்றால் இரண்ட்டி பின்னெடுத்து வைக்கிறார்கள்.
இன்றைஅய இந்திய அரசியலுக்கு உதவாத இந்தக் கூச்சமே தேர்தல் களத்தில் முஸ்லிம்களை ஏமாளிகளாக நிறுத்தியிருக்கிறது.
கனவுகள் ஒரு போதும் நிலைப்பதில்லை: காலம் மாறாமல் ஒரு போதும் இருப்பதில்லை அல்லவா? ஒரு மிதப்பான கனவிலிருந்து முஸ்லிம் வாக்காளர் திடீரென்று விழித்துக் கொண்டிருக்கிறார்.
பாரதீய ஜனதாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். முஸ்லிம் ஓட்டு வங்கி முஸ்லிம் ஓட்டு வங்கி என்று கூவிக்கூவி அவர்கள் கூப்பாடு போட்ட்தன் விளைவாக நான் ஏன் ஓரு ஒடடுவங்கியாக்க் கூடாது என்ற யோசனையை அவருக்குள் உருவாக்கியுள்ளது.
வாய்க்கரிக்காக கூட இல்லாமல் வெரும் வார்த்தை ஜாலத்தில் மயக்கியே தங்களது ஒட்டுரிமையின் பய்ன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
தடவித்தடவித் தங்களைத் தூங்க வைத்து விட்டு தங்களது உள்ளாடைகளை கூட திருடிக் கொண்டு இப்போது எஜமானர்களாக பகட்டுக்காட்டுகிற தங்களது முன்னாள் கூட்டாளிகளைப் பற்றி அவர் இப்போது சரியாகப் புரிந்து கொண்டுள்ளார்.
நாட்டிற்காக என்று மட்டுமே யோசிக்கப் பழகி இருந்த அவர் இப்போது சமுதாயத்திற்காக என்று யோசிக்க ஆரம்பித்த்திருக்கிறார்.அதனால் வாக்குக் கேட்டு வருகிறவர்களைப் பார்த்து நாட்டிற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பதற்கு பதிலாக எங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற இறுக்குகிற மாற்றத்திற்கு அவர் உள்ளாகியுள்ளார்.
தேசிய சிந்தனையை சிதறடிக்கும் இந்த உணர்வு சாபகரமானது என்றாலும் அது தான் இப்போதைக்கு லாபகரமானது என்ற எண்ணம் முஸ்லிம் வாக்களரின் இதயத்தில் தற்போது ஆழமாக பதிந்துவிட்ட்து.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் வெற்றி பெற்றார் என்றாலும் அவரது வாக்கு வித்தியாசம் எதிர்பார்த்த அளவு பெரிதாக இருக்கவில்லை. அவர்ர எதிர்த்துப் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் கனிசமான வாக்குகளைப் பெற்றார். பீட்டர் அல்போன்ஸ் தனக்கு வாக்களித்த முஸ்லிகளுக்கு நன்றி அறிவிப்புக்க் கூட்ட்த்தில் ஒரு விசயம் சொன்னார்: எனக்கு எதிராக போட்டியிட்டவர் அதிகமான வாக்குகளைப் பெற்றதில் எனக்கு ஒரு சந்தோசம் தான். ஏனெனறால் நீங்கள் உங்கள் சமுதாயத்ம் என்ற உணர்விக்கு வந்து விட்டீர்கள் என்பதை இது காட்டுகிறது. எப்போது இந்த உணர்வு உங்களுக்கு வந்துவிட்ட்தோ இனி அரசியலில் உங்களது எதிர்காலம் பிரகாசமாகிவிடும் எனறு சொன்னது முஸ்லிம் வாக்காளரின் புதிய பரிமாணத்திற்கு வாழ்த்துப் பாடுவது போல அமைந்த்து.
ஒரு தேர்தலின் போது எனது சமுதாயத்திற்கு என்ன நன்மை என்பதை விட நாட்டுக்கு என்ன நன்மை என்று யோசிப்பவரே நல்ல குடிமகன் என்ற எண்ணம் கொண்ட என்னால் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் காலத்தின் போக்கை கவனிக்காமல் இருந்துவிட்டால் அரிச்சந்திர மகாராஜாக்களுக்கு மயானம் வீடாகிப் போன மாதிரியான விபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை முஸ்லிம் வாக்காளருக்கு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது
இப்போதைய 14 வது சட்டமன்றத்தேர்தலை என் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ற கண்ணட்டோட்ட்த்தில் முஸ்லிம் வாக்காளர் அணுகப் போகிறார் என்பது உண்மையானால் அவர் ஜிகினா வர்த்தைகளுக்கு மயங்கி விடாதவராக விழிப்போடு இருக்கவேண்டும். இந்த்த் தேர்தலில் தங்களது சமுதாயத்தின் பலத்தை சரியாக வெளிப்படுத்த அவர் எச்சரிக்கையோடும் தெளிவோடும் தயாராக வேண்டும். முஸ்லி வாக்காள எந்த சந்தர்ப்பத்திலும் மதுவுக்கு அடிமையானவர் அல்ல. என்வே அவர் போதையில் வாக்களிக்க வாய்ப்பில்லை. ஆனால் ஏதாவது ஒரு கவர்ச்சி அலையின் பின்னே ஆட்டுமந்தையைப் போல அவர் பயணப்படுவது கடந்த கால அரசியல் காணக்கிடைக்கிற துயரம். அந்த மந்தைப்போக்கிறகு முஸ்லிம் ஆண்களும் பெண்களும் முடிவு கட்டி எச்சரிக்கையோடு வாக்களிக்க முன்வரவேண்டும்.
தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக்க் கடமை மட்டுமல்ல சம்யக் க்டமையும் கூட் (பார்க்க சம்நிலைச்சமுதாயம்)
சமுதாயத்த்திற்காக வாக்களிக்க நினைக்கும் வாக்காளர் எந்தக் கூட்டணி வெற்றி வேண்டும் என்பதை அதிகம் யோசிக்க்க் கூடாது. 14 வது சட்ட மன்றத்தேர்தலில் எத்தனை முஸ்லிம் எம் எல் ஏக்கள் இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
தமிழக் தேர்தலில் கள்மிறங்கியுள்ள இரண்டு பிரதான கூட்டணியிலும் முஸ்லிம்களுக்கு எலும்புத்துண்டுகள் தான் போடப்பட்டிருக்கிறது.
வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கைகளுக் அவசர அவசரமாக தயாரிக்கப் பட்ட சூழ்நிலையிலும் முஸ்லிம்களை ஒதுக்குதல் மட்டும் தெளிவாக நடை பெற்றிருக்கிறது. இட ஒதுக்கீட்டில் ஏதோ முடிந்தால் பார்க்கலாம் என்ற ஒற்றை வாசகம் மட்டுமெ பிச்சை மேட்பவர்களுக்கு போதும் என்று அரசியல் கட்சியின் அதிகார பீடங்கள் முடிவுக்கு வந்து விட்டன.
தங்களது கோரிக்கை என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத, அதைக் கேட்கத் தெரியாத அரசியல் கோமாவில் சமுதாயம் இருக்கிற போது பேரம் கோலோச்சுகிற இன்றையை அரசியலில் கூட்டணித்தலைமைகளுக்கு அதுவே சாதகமாகிவிட்ட்து.
அதிமுக வின் வேட்பாளர் பட்டியல் முஸ்லிம்களை அதிகம் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.. 160 வேட்பாளர்களில் இருவர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதும் முஸ்லிம்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் கூட அது முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த வில்லை என்பதும் அவர்களை கோப்ப் ப்டுத்தியிருக்கிறது.
திமுகவின் 119 வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே முஸ்லிம்கள். அதிமுகவின் பாரபட்சம் மட்டுமல்ல திமுக வின் பாரபட்சத்தையும் முஸ்லிம்கள் கவனிக்கத் தவறவில்லை. திமுக வில் கட்சிக்காக உழைகிற முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகம். திமுகவில் இருப்பது போல முஸ்லிம் ஊழியர்கள் இந்தியாவின் வேறெந்தக் கட்சியிலும் இல்லை. ரகுமான்கான் உட்டி முபாரக் போல திமுகவின் தற்போதைய பணநாயக்த்தில் தங்களது ஜனநாயக் உரிமையை பறிகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். திமுகவிற்குள் இருக்கிற இந்தப் பொருமல்கள் அதிமுகவைவிட அதிகமே!
பாமாகவின் 30 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. காங்கிரஸின் இதுவரை அறிவிக்கப் பட்ட 60 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். விடுதலைச் சிறுத்தைகள் தங்களுக்கு தரப்பட்ட 10 தொகுதிகளில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு கொடுத்த்து அவர் மீதான முஸ்லிம்கலின் கவனத்தை நெகிழ்வுப்டுத்தியுள்ளது. தேமுதிக தனது 41 தொகுதிகளில் ஒன்ரை மட்டும் முஸ்லி ஒருவருக்கு ஒதுக்கியுள்ளது.
அரசியல் கட்சிகள் ஒதுக்கிய அளவு சரியா என்பது பற்றி இப்போது விவாதிக்கச் சம்யமில்லை. போடுகிற எலும்புத் துண்டுகளை பொறுக்கிக் கொள்ளக் கூட உங்களிடம் ஆட்கள் இல்லையே என்று கூட்டணித் தலைமைகள் குரூரமாக கேட்கிற எதிர்க் கேள்விக்கு பதில் சொல்ல வக்கற்றதாக சமுதாயம் இருக்கிறது என்ற எதார்த்தை மறந்துவிடுவதற்கில்லை.
அதனால் தேர்தல் கமிஷன் தயாரித்திருக்கிற இந்த “பாஸ்ட்புட்” தேர்தலை அதற்கே உரிய வேகத்தோடு விலையோடும் சந்திக்க சமுதாயம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சற்று முன்பு வரை தி.மு,க.அரசுக்கு டாடா காட்ட தமிழக மக்கள் தயாராகி விட்ட்தாகவே தோன்றியது.
எதிர்க்கட்சி தலைவி செல்வி ஜெயல்லிதாவின் நடவடிக்கை கவனித்துப் பார்த்தால் மிக ஆசுவாசமாக அடுத்த முதலைமச்சரவதற்கு அவர் தயாராகிவருவது போலவே தெரிகிறது. அவருடை ஜோதிடர்களும் அவருக்காக பணியாற்றுகிற தனியார் புலனாய்வு நிறுவன்ங்களும் அம்மா அடுத்த ஆட்சி உங்களுடையது தான் என்று உத்திரவாதம் அளித்த்தன் அடையாளத்தை காணமுடிகிறது. அந்த வெற்றியை சிக்கலாக்கி விடக்கூடாது என்பதற்காகவே அவர் கூட்டணி அமைக்கிறார் என்கிற வியூகமும் புரிகிறது. கவர்சித் திட்டங்களைத் தாண்டி திமுகவின் செல்வாக்கு அதளபாதாளத்தில் சரிந்திருப்பதை அதிமுக உணர்ந்திருக்கிறது.
தற்போதைக்கு திமுகவின் ஒரே கொளுக் கொம்பு இலவ்சத் திட்டங்கள் தான். அதனால் தான் இந்த்தேர்தல் அறிக்கையிலும் வண்ணமயமான இலவ்சங்களை அது அறிவித்திருக்கிறது, கிரைண்டர் மிக்சி என தேர்தல் களம் கட்ட்த்து ஒட்த்தொடங்கியுள்ளது. பட்ட்த்து இளவரசர்களில் ஒருவரான தயாநிதிமாறன் பிச்சைக் கார்ர்களான தமிழ வாக்காளர்களைப் பார்த்து “நீங்க ஓட்டுப் போடுங்க வாசிங்மெஷின் கூட தருவாங்க! என்று ஜொல்லு விட வைத்திருக்கிறார்.
இந்த கவர்சிப் புயலில் தான் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக் திமுக வின் இலவச அறிவிப்பை விட ஒரு படி மேலாக அதிமுகவும் இலவசங்களை அறிவித்திருக்கிறது. தேர்தலின் போது பணம் பொருள் பரிமாறப்படுவதை மிகத்தீவிரமாக கண்காணிக்கிற தேர்தல கமிஷன் வாக்காளர்களை விலை பொருளாக்குகிற இது மாதிரியான எதிர்கால இலவச அறிவுப்புகளுக்கும் ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தால் இந்திய அரசியலில் இன்னும் கீழே சென்றுவிடாதபடி அது பாதுகாக்கும்.
எம்ஜி ஆரில் தொடங்கிய மக்களை ஏமாற்றும் இந்தப்போக்கிற்கு என்றுதான் ஒருமுடிவுவு வருமோ என்று அரசிய்ல நோக்கர்கள் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.
ஆனால் மக்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு ஏமாளிகளா இல்லை. கிரைண்டர் மிக்ஸி அறிவிப்பை படித்து விட்டு இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்த்து என்காதில் விழுந்த்து.
அக்கா! கிரைண்டர் மிக்ஸி கூட கொஞ்சம் கரண்டையும் கொடுக்கச் சொல்லுக்கா என்று ஒருத்தர் சொல்ல. ஆ..ஆ.. அது கிடக்குது கிரைண்டர் மிக்ஸிக்கு பதிலா ஒரு ஆட்டுக்கல்லு அம்மிக் கல்லு கிடச்சா பரவாயில்ல.. அதெல்லாம் இனித் தேவப்படாதுண்ணு தூக்கி எறிஞ்சு போட்டோம். இப்போ எந்த வீட்ல அம்மிக்கல்லு இருக்கு ஆட்டுகல்லு இருக்குன்னு தேடிப் போக வேண்டியதாப் போச்சு என்று மற்றவர் சொல்ல அந்த பேச்சு விளையாட்டில் தமிழக்த்தின் தேர்தல் தலைவிதி சிரிப்பதாக நான் உணர்ந்தேன்.
கருணாநிதியின் கொள்ளுப் பேர்ர்கள் கூட சர்வ்தேச பணக்கார்ர்களாகிவிட்ட செய்தியும் மக்கள் மத்தியில் சிரிப்பாகவே வலம் வருகிறது. தேர்தல் அறிவிக்கப் பட்டு விடும் என்ற அவசரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு உதவுதல் என்ற போர்வையில் பத்து பெண்கள் சேர்ந்து வந்தால் ஆளுக்கு ஐம்பதாயிரம் வரை கடன் வழங்கப் படும் என்று ஒரு அறிவிப்பு எங்களூரில் பரபரப்பாக பேசப்பட்டு ஈசல் கூட்ட்தை போல பெண்கள் அரசு அலுவலகத்திற்கு படை எடுத்தார்கள். அப்போது ஒரு பெண்மணி பேசியது என் காதில் விழுந்த்து “அதுதான் போன்ல நிறைய காசு வந்துச்சாமே.. அதை எல்லோருக்கும் பங்கு வைக்கிறாங்களாம்.
ஜெயல்லிதாவும் உடன்பிற்வா சகோதரியும் அடித்த கொட்ட்த்தை விட கருணாநிதியின் குடும்பம் அடித்த கொட்டம் அதிகம் தான் என்று உடன் பிற்ப்புக்களே ஒத்துக் கொள்கிறார்கள். கருணாந்தியை சுற்றி அமைந்த அதிகாரமையங்கள் ஒவ்வொன்றும் இனி பத்து தேர்தலில் தோற்றால் கூட பகீர்ஷா ஆகத் தேவையில்லாத அளவு பெருத்துவிட்ட்து என்பது இப்போது ஊரறிந்த ரக்சியமாக விட்ட்து. தமிழ அமைச்சர்களின் சொத்து மதிப்பும் கடந்து தேர்தலுக்கும் இந்த்த் தேர்தலுக்கும் இடையே 780 மடங்கு அதிகரித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் வேட்புமனுக்களில் தரப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்த்து.
தினகரன் பத்ரிகையின் ஊழியர்கள் பட்டப்பகலில் வெட்டிக் கொள்ளப் பட்ட்தில் தொடங்கி, ச்ன்நெட்வொர்க் நிறுவனம் கோடம்பாக்கத்தின் மஃபியாக்களாக வளர்ந்த்தில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வளர்ந்து கொண்டிருக்கிற திமுக வின் சருக்கல்கள் மக்கள் மன்றத்தில் இன்னும் பேசப்ப்டுகிற நிலையில் திமுக அரசின் கவர்ச்சித்திட்டங்கள் அதனை காப்பாற்றுமா என்பது சந்தேகத்திற்கு இடம் வைக்காத கேள்வியே!
திமுக அரசு பொறுப்பேற்ற முதல் மூன்று ஆண்டுகளில் அரசு இய்ந்திரம் என்று ஒன்று இயங்குவதாகவே தெரியவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலினும் கல்வித்துறை அமைச்சராக தென்னரசுவும் மட்டுமே இயங்கினார்கள். மற்றவர்கள் அத்தனைபேரும் கருணாநிதியின் ஒற்றைப் பற்றில் காலம் கட்த்திக் கொண்டிருந்தார்கள்.
செயல்பட முடியாத ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக கடைசி வரை உட்கார வைத்தது தி,முக அரசு தமிழக மக்களுக்குசெயத மாபெரும் தீமை. சென்னைக்கு வெளியே உள்ள தமிழகம் மின்சார வெட்டில் த்த்தளித்துக் கொண்டிருந்த்து. கொண்டிருக்கிறது. அதை சமாளிக்கவோ அது குறித்து பேசி மக்களையும் தொழில் துறையினரையும் சமாதானப்படுத்தவோ ஆறுதலையும் நம்பிக்கையும் அளிக்கவோ ஒரு துரும்பைக் கூட அவர் அசைக்கவில்லை. மக்களின் மிகப் பெரிய அவநம்பிக்கையை கருணாநிதி இதன் மூலம் சம்பாத்தித்துக் கொண்டார் ஒரு இருண்ட காலத்திற்கு திரும்பிய தமிழக மக்களின் அனுபவம் கருணாநிதி அரசின் கவர்ச்சித்திட்டங்களை தவிடு பொடியாக்கி விடக்கூடியது என்று பொது மக்கள் குறிப்பாக தொழில் துறையினர்கள் கூறுகிறார்கள்.
தனக்கு வேண்டியது என்பதற்காக மக்களுக்கு எத்தகைய சாபத்தையும் வழங்க கருணாநிதி தயங்கமாட்டார் என்று அதிமுகவினர் விமர்ச்சிப்பது ஆற்காடு வீராசாமி விசயத்தில் சரியாகவே அமைந்திருந்த்து,
கொங்கு மட்ட்த்தில் சரிந்திருக்கிற தங்களது செல்வாக்கை சரி செய்து கொள்வதற்காக புதிதாக தொடங்கப் பட்ட ஜாதிக் கட்சியான கொங்கு முன்னேற்ற பேரவைக்கு 7 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால் மின்வெட்டால் கடும் பாதிப்புக்குள்ளான திருப்பூர் ஈரோடு மாவட்ட்த்தை சார்ந்த தொழில் துறையின் இந்த முறை ஜாதி அடிப்ப்டையில் ஒட்டளிக்கப் போவதில்லை என அறிவித்திருகிறார்கள் தினமலர் செய்தி கூறுகிறது.
கடந்த தேர்தலில் கூட தி.முகவின் வெற்றி உறுதியானதாக இருக்கவில்லை. திமுக ஒரு மைனாரிட்டி அரசகாகவே ஐந்தாண்டுகளை கட்த்தியது. ஆட்சியை வெற்றிகரமாக நடந்த்தி கொண்டு வந்து கரை சேர்த்த்தற்கு கருணாந்தியின் சாதுர்யம் ஒன்று மாடுமே காரணம் ஆகும்.
அடுத்து முறை இப்படி ஒரு சூழ்நிலைக்கு ஆளாக்க் கூடாது என்ற எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவேண்டிய திமுகழகம் சிறுபான்மை அரசாக இருந்த நிலையில் முன்னேப் போதையும் விட அதிகமாக ஆட்டம் போட்ட்து, வெற்றிக்காக உயிர்போராட்டம் நட்த்த வேண்டிய சூழ்நிலையை திமுகவைவுக்கு உருவாக்கியிருப்பதாக ஒரு தெளிந்த பத்ரிகையாளர் கூறினார். இந்த முறை திமுக போட்டியிடும் தொகுதிகள் வெகுவாக குறைந்திருப்பது அதன் பிரதான அடையாளம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது போன்ற காரணங்களால் தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சுமாராக கூட எதிர்பார்க்கப் படவில்லை.ஆனால் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த தருணத்தில் தி.மு,கவுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்ற சலனம் ஏற்பட்த் தொடங்கியுள்ளது.
தேர்தல் நெருங்குகிற போது ஆட்சியில் இருப்பவகளால் அத்தைகைய ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை முந்தைய தேர்தல்கள் காட்டுகின்றன். 2006 தேர்தலின் போது அதிமுக அரசும் இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த்து. திமுகவுக்கு சார்பான இப்போதைய தோற்றம் அரசால் மட்டும் ஏற்படுத்தப்பட்ட்தல்ல.
திமுகவின் பலவீன்ங்களே தன்னை கரைசேர்த்து விடும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜெயல்லிதா தனது செல்வாக்கை பெருக்கிக் கொள் முயற்சியும் செய்ய வில்லை. மர்ம்மான அவரது வாழ்க்கை போக்கும் நடவடிக்கைகளும் அவர்மீதான ஒரு அவநம்பிக்கையை மீண்டும் ஒரு கருநிழலாக அவர் மீது படரச் செய்துள்ளது..தேர்தல் களத்தின் முக்கியமான கட்ட்த்தில் தீடிரென சர்ச்சைக்குரிய வகையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்ட விதம் ஜெயல்ல்லிதா இன்னும் அப்படித்தான் இருக்கிறார் என்ற எண்ணத்தை வைக்கோவுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறுபட்ட இழுபறிகளுக்கு இடையேயும் மிகப் பக்குவமாக வேட்பாளர் பட்டியலை கருணாநிதி அறிவித்த வித்த்தை ஜெயல்லதாவின் முதல் அறிவிப்போடு ஒப்பிட்ட பத்ரிகையாளர்கள், அந்த அறிவிப்பால் கூட்டணிக்குள் ஏற்ப்பட்ட குழப்பத்தை அவர் சமாளித்து விட்டாலும் கூட அதிமுகவுக்கு அது முக்கிய மைனஸ் பாயிண்டாக மாறிவிட்ட்து வெண்ணை திரண்டுவருகிற போது தாழியை உடைத்து போல என்கின்றனர்.
நிலையற்ற போக்கு கொண்ட ஜெயல்லிதாவின் மீது மக்களுக்குள்ள அவநம்பிக்கை ஒன்று மட்டுமே தற்போதை திமுகவின் பலம் என்பதை பல அரசியல் நோக்கர்களும் ஒன்று போலக் கூறுகிறார்கள்.
திமுகவின் மீதான அதிருப்தி அதிமுகவின் பலம். ஜெயல்லதாவின் மீதான அவநம்பிக்கை திமுகவின் பலம் என்ற சைக்கிள் சுழற்சியில், சூதாட்ட மையங்களின் சுழலும் பலகையில் உருளும் பந்து போல இந்த்த் தேர்தல் சுழன்று கொண்டிருக்கிறது. அரசியல் சூதாட்டங்களும் விருவிருப்பாக அரங்கேறி வருகின்றன்.
இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம் வாக்களர் அந்நிய தேசத்தில் புதிதாக வந்திருங்கிய பயணியை போல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்க அதிக நேரம் இல்லை. 60 க்கு 40 என்ற சதவீத்த்தில் அதிமுக திமுக அணியினருக்கான வெற்றிவாய்ப்பு தெளிவாகியுள்ள சூழ்நிலையில் தன்னுடைய வாக்கை தன்னுடைய சமுதாயத்திற்கு பயனுள்ளதாக்கிக் கொள்வதற்கு அவர் திட்டவட்டமாக முடிவெடுக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்தின் பெய்ரில் மூன்று கட்சிகள் களத்தில் உள்ளன.
ஒருவழியாக திமுக கூட்டணியி முஸ்லிம் லிகிற்கு மூன்று தொகுதிகள் கிடைத்து. அவர்கள் திமுகவினராகவே உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஜாதிக் கட்சிகு ஏழு இடங்களை வழங்கிய் திமுக அரை நூற்றாணடுகளாக அத்னோடு கைகோர்த்துக் கொண்டிருந்த்தில் தங்களது சுய அடையாளத்தை தொலைத்து விட்டு நிற்கிற முஸ்லிம் லீகிற்கு மூன்று இடங்களை மட்டுமே வழங்கியது. பிறகு காங்கிரஸோடு கூட்டணியை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக அதிலிருந்தும் ஒன்றைப் பிடுங்கியது. முஸ்லிம் லீகின் பரிதாபம் அதை விட்டுக் கொடுக்கும் உயர் பண்பாடாக காட்டிக் கொள்ள வேண்டிய அவலம் நேர்ந்த்து.
ஏதோ கொஞ்ச நஞ்சமாக ஒட்டியிருந்த உண்ச்சியில் பாத்திமா முஸப்பர் போன்ற சிலருக்கு கோபம் வந்தது. இதில் ஒரு நனமை ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில் காத்திருந்த போது இதை விட ஒரு அமைப்பை இன்னொரு வகையில் கேவ்வல்ப்படுத்த முடியாது எனும் வகையில் முஸ்லிம் லீகோடு திமுக முஸ்லிமாக இருந்த திருப்பூர் அல்தாபை ஒட்ட வைத்து பறித்துக் கொண்ட ஒரு சீட்டை கருணாநிதி வாரிவழங்கினார்.
அந்த அரசியல் சகுனித்தனம் இந்த்தேர்தலில் முஸ்லிம்களின் முகத்தில் திமுக சாணியறைந்த்தற்கு சம்மானதாகும்.
திமுக அலுவலகத்தின் வாசலில் திண்பணடம் விற்கிறவர்கள் முஸ்லிம் இயக்கங்களின் தலைமை பொறுபேற்றிருக்கிற போது இது போன்ற சங்கடங்களை முஸ்லிம் சமுதாயம் சந்தித்துத்தான் ஆக்வேண்டியிருக்கும்.
பய்ரிவிளைச்சலில் களை எடுப்பு முக்கியம் என்பது விவசாயத்தில் மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும். இந்த தேர்தலில் இரண்டு களையெடுப்புகளுக்கு முஸ்லிம் தயாராக வேண்டும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது.
முதலாவது களைஎய்டுப்பு துறை முகம் தொகுதியில் தொடங்குகிறது. அங்கு திருப்பூர் அல்தாபுக்கு ஒரு முஸ்லிம் ஓட்டுக் கூட விழக்கூடாது என்ற பிரச்சாரம் சமூதாய அக்கறைகொண்டவர்களால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
லெட்டர் பேட் வைத்துக் கொண்டு அரசிய்ல திருட்டில் ஈடுபடுகிற அவலட்சணங்களுக்கு சரியான பதிலடி கொடுக்கிற சந்தர்ப்பம் துறைமுகம் தொகுதி முஸ்லிம்களுக்கு வாய்த்திருக்கிறது. அந்த்த் தோல்விக்காக குறைந்த பட்சம் பிரார்த்தனை செய்கிற வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் பொன்னான வாய்ப்பை அவர்கள் தவற்விடக்கூடாது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். .
முஸ்லிம் லீகர் ஒருவர் அவருக்கு ஓட்டளித்தார் என்றால் அவர் முஸ்லிம் லீகுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கு துரோகம் செய்தார் என்றே பொருள். அதுமட்டுமல்ல முஸ்லிம் சமுதாயத்தை தனது விளையாட்டு பொம்மையாக கருதிக் கொண்டிருக்கிற கருணாநிதியின் சகுனித்தனத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் பொருளாகிவிடும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாமின் மூன்றாவது கலீபா தேர்வின் போது தேர்வுக்குழுவினரை பாதுகாக்கும் பொறுப்பை சுபைர் (ரலி) யிடம் ஒப்ப்டைத்த உமர் அவர்கள் சமுதாயத்திற்கு சங்கடம் விளைவிக்கிற குட்டித்தலைவர்கள் உருவானால அவர்களை விட்டு வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். ஜனநாயக நாட்டில் ஒரு சங்கட்த்திற்கு முடிவு கட்டுவதற்கு தேர்தலைவிட சரியான வழி எது? துறை முகம் இந்த அவலத்தை சுத்தம் செய்வதற்கு பொருத்தமான இடம் தான்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு முஸ்லிம்களின் அரசியலில் ஒரு அங்கம் என்ற் தோற்றம் வந்து விடாதபடி தேர்தல்களின் போதும் அதற்குப் பின்னரும் கவனித்துக் கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் இரண்டாவது முக்கியப் பணியாகும்.
தேர்தலி நிற்பதற்கான யோக்க்யாதம்சமோ தைரியமோ அற்ற அரசியல் அலிகளின் கூடாரமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு முஸ்லிம் அமைப்பே அல்ல. காதியானிகளைப் போலவே இவர்களும் இஸ்லாமை கடந்து விட்டவர்களே! ஆனால் தன்னையும் முஸ்லிம் அமைப்பு என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம்களுக்கான் அரசியல் களத்தில் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டு கணிசமாக காசு பார்த்த்து வருவதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக களத்தில் இந்தப் போலிகளோடு சில உலமா அமைப்புக்களுக்கு மானசீக சம்மதம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு என்று ஒரு அரசியல் பிரமுகர் என்னிடம் தெரிவித்த போது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கும் மேலதிகளாக சில செய்திகளை சொன்ன அவர் முஸ்லிம்களுக்கான் அரசியல் தளத்தில் இந்தப் போலிகள் எவ்வளவு தூரம் தீவிரமாக இயங்குகிறார்கள் என்பதை விவரித்து, முஸ்லிம் பெருந்தலைகளுக்கு கூட கிடைக்காத மரியாதை இவர்களது பேரத்திற்கு கிடைக்கிறது என்று கூறிய போது அதிர்ர்சியின் சதவீதம் பன்மடங்காக எகிறியது. ஆலிம் அமைப்புக்கள் சில தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் அமைப்பு குறித்து ஒரு முடிவு காணாமல் இருந்து கொண்டு காதியானிகளை எதிர்த்துப் போராடுகிறோம் என்று பம்மாத்து வேலை செய்து கொண்டிருப்பதும் ஒரு கபடநாடகமே.
முஸ்லிம் லீகின் துறைமுக வேட்பாளைரத் தவிர நாகை வாணியம்பாடி வேட்பாளருக்கு சமுதாய ரீதியான வாக்குகள் சிந்தாமல் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
முஸ்லிம்களின் மற்றொரு அரசியல் கட்சியான மனித நேயக மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கதான் என்ற அவர்களது “பிராந்”தை கடந்த நாடாளுமனறத் தேர்தலில் அவர்கள் தனித்துப் போட்டியிட்ட தொகுதிகளில் கிடைத்த வாக்குகளே மயிலிறகு நீவி சொஸ்தப் படுத்தியிருக்க்க் கூடும் 4 ஆயிரம் கிளை உறுப்பினர்களை கொண்ட பகுதியில் அதன் வேட்பாளருக்கு இரண்டாயிரத்திற்கு குறைவான வாக்குகளே கிடைத்தன் என்பது கேலியல்ல எதார்த்தம். இப்போதும் கூட அதிமுகவை ஆதரித்தாலும் தமுமுவை தோற்கடிப்போம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்னதாக நான் மயிலாடுதுறை சென்றிருந்த போது அங்கிருந்த பிரமுகர் ஒருவர் பூம்புகார் தொகுதியிக் தமுமுக நிற்க்க்க் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அந்தப் பகுதியை சார்ந்த ஐக்கிய ஜமாத் அமைப்பு ஒன்று மூன்று நபர்களை தங்களது சார்பாக நியமித்திருப்பதாக கூறினார். தமுமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவா? என்று நான் எதார்த்தமாக கேட்டேன். இல்லை அவர்களுகு ஓட்டுப்போட்டுவிடாதீர்கள் என்று சொல்வதற்காக என்றார். எனக்கு அப்போது ஏற்பட்ட அதிர்ச்சி சத்தியமானது. கோடை உறைகத் தொடங்கியிருக்கிற அந்த மதிய வெயிலை விட என்னை அது அதிகம் சுட்ட்து.
தவறு எங்கே இருக்கிறது என்பதை தேர்தல் தேதிக்கு முன்னதாக தமுமுகவினர் உணர்ந்து கொள்ளவேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கு அவர்கள் மீது வெறுப்பு எதுவும் இல்லை. ஒரு ஆம்புலன்ஸ் உதவு என்றால் அவசரமாக அவர்களைத்தானே கூப்பிடுகிறார்கள்.
அடாவடித்தனம். முஸ்லிம் ஜமாத்துக்களின் முதுகில் குதிரைச் சவாரி செய்ய முயற்சிப்பது, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவல் நிலையங்களுடன் கூட்டமைத்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்றவற்றிற்கு அவர்கள்“தவ்பா”செய்தாக வேண்டும். இனிமேல் இந்த்த்த் தவறுகள் நடக்காது என்று உறுதியேற்பது தவ்பாவின் நிபந்தனைகளில் ஒன்றாக இஸ்லாம் கூறுகிறது. கொஞ்சமும் தயங்கிக் கொண்டிராமல் “தவ்பா நிபந்தனைகளை தமுமுக நிறைவேற்றினால் மட்டுமே “என் சமுதாயம் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிற முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து தேவையான ஆதரவை அது பெற முடியும். இல்லை எனில் அதிமுகவிற்கு ஆத்ரவான இந்த சூழ்நிலையில் கூட தமுமுக நிராதரவாகிவிடக்கூடும்.
இந்த இரு கட்சிகள் தவிர மூன்றாவதாக மனித நேயப் பாசறையின் அரசியல் வடிவமான ஷோசலிஸ்ட் டெமொக்ரடிக் பார்டி ஆப் இந்தியா தனித்து தேர்தலில் குதித்திருக்கிறது. பகிரங்கமான தேர்தல் அரசியலுக்கு இன்னும் முழுமையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக சட்ட மன்றத்தேர்தலில் குதித்துவிட்ட அதனுடைய தேர்தல் நிலைப்பாடு முஸ்லிம் சமுதாயத்திற்குள் எந்த அளவு தாக்கத்தை ஏற்பட்த்தக்கூடும் என்பது கேள்விக்குரியே. தொண்டரணியின் தீவிர உழைப்பை வாக்குகளாக மாற்றும் அதன் திறனை இனிமேல் தான் பார்க்க வேண்டும். முத்ற்கட்டமாக ஆறு தொகுதிகளில் அது போட்டியிடுகிறது. முஸ்லிம்களின் ஒட்டு வங்கியை முறைப்படுத்டும் எண்ணமே தனித்து அது போட்டியிடக் காரணம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சி ஒன்றின் சார்பாக நிற்கிற முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக அது வேட்பாளர்களை நிறுத்துவது சமுதாயத்திடமிருந்து ஆட்சேபனைகளை கிளப்பியிருக்கிறது. எனினும் அந்தக் கட்சியிலும் சமுதாய நலன் என்ற கோட்பாடு மிகைத்திருப்பதால் இது விசயத்தில் தேர்தல் நாளுக்கு முன்னதாக ஒரு தெளிவான முடிவு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த தேர்தலில் உருவாகியுள்ள புதிய சூழ்நிலையின் படி முஸ்லிம் வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வாய்ப்புண்டு.
முஸ்லிம்கள் நேருக்கு நேர் போட்டியிடுகிற தொகுதிகளில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் வெற்றி வாய்ப்புள்ள முஸ்லிம் வேட்பாளரை அவர் ஆதரிக்க கூடும். இதில் வேட்பாளரின் பண்பையும் சமூக அக்கறையும் அவர் கவனத்தில் எடுத்துக்கொள்வார்
முஸ்லிம் வேட்பாளர் வெற்றி பெற் வாய்ப்புள்ள தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத அரசியல் கட்சிக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் அமைப்புக்களின் சார்பில் நிற்கிற வேட்பாளரை அவர் தேர்ந்தெடுக்க்க் கூடும். இதுவிசயத்தில் கூட்டணிப் பற்று அவரை இம்முறை அவரை அதிகம் பாதிக்காது. அரசியல் கட்சியின் உறுப்பினர்களே கூட இம்முடிவை எடுக்கத்தயாராகிவருகிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் ஒரு தொகுதியை முஸ்லிம்களுக்கு வழங்கியிருப்பதற்கு உரிய நன்றியை தெரிவிக்கும் ஆர்வம் முஸ்லிம் வாக்காளரிடம் இருக்கிறது, அதனால் அவர்கள் போட்ட்யிடுகிற தொகுகளில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு முஸ்லிம் ஒட்டுக்கள் விழும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது விசயத்தில் பாமாக வின் நிலைப்பாடு பலத்த அதிப்தியை முஸ்லிம்களிடம் ஏறபடுத்தியிருப்பதால் அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் அவர்க்களுக்கு எதிராகவே முஸ்லிம் வாக்குகள் விழும்.
முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பில்லாத தொகுதிகளில் தங்களது சமுதாயத்தின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிற, இந்தியாவின் சமயச் சார்பின்மையை பாதுகாகும் இயல்புள்ள வேட்பாளரை முஸ்லிம் வாக்காளர் தேர்வு செய்வார்.
காங்கிரஸ் தேமுதிக ஆகிய கட்சிகளை ஆதரிப்பதற்கான மனோ நிலை முஸ்லிம்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அவர்களது முஸ்லிம் வெட்பாளர்களைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு எதிரணியின் வெட்பாளரைப் பொறுத்தே முஸ்லிம் வாக்குகள் விழும்.
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக இல்லாத இடங்களில் முஸ்லிம் வாகுக்களை அவர்கள் பெறுவார்கள்.
முஸ்லிம்களின் இன்றைய இந்த மாற்றம் அவர்களின் மீது திணிக்கப்பட்ட்தாகும். தேச நலனில் மட்டுமே அக்கறை கொண்ட ஒரு சமூகம் தம் சொந்த நலனைப் பிரதானப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்ட்தற்கு அரசியல்கட்சிகளும் அதன் தலமைகளுமே பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள்.
முஸ்லிம்களின் இந்த மாற்றம் 14 வது சட்டமன்றத் தேர்தலில் தகுந்த விளைவை ஏற்படுத்தும் என்றால் சிறுபான்மை என்பது கொலுபொம்மை அல்ல என்பதை அரசியல் தலைமைகள் சீக்கிரமே உண்ர்ந்துகொளவார்கள்.
.