Saturday, June 18, 2011

2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இலை பரப்பிய அலை


2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை

2011 ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெற்று செல்வி ஜெயல்லிதார் 3 வது முறையாக முதலமைச்சராக முந்தைய  ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் அதிகார மையமான உடன்பிறவாக் குடும்பம் முன் வரிசையில் இருந்த போதும் முதன்மைப் படுத்தப் படவில்லை.

அதிமுக  தான் போட்டியிட்ட 160 இடங்களில் 146 ல் வெற்றி பெற்று தனிப்பெரும்பானமையை மட்டுமல்ல, சட்டம்னறத்தையே தனதாக்கிக் கொண்டுள்ளது. அதன் கூட்டணிக்கட்சிகள் கைப்பற்றிய மேலுமுள்ள 57 இடங்களோடு அதிமுகவின் கூட்டணி பலம் 203 எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் 10 , இந்திய கம்யூனிஸ்டு - 9, மனிதநேய மக்கள் கட்சி  2,  புதிய தமிழகம் 2, சரத்குமாரின் ச.ம.க.2, பார்வர்டு பிளாக் 1,  இந்திய குடியரசு கட்சி1,  கொங்கு இளைஞர் பேரவை 1 இடங்களில் வெற்றி பெற்றன.

திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி பலம் 31 தாண்டவில்லை. தி.மு.. கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களையும், பாமக 3 இடங்களையும் மட்டுமே கைப்பற்றின.10 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. 3 இடங்களில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் மூன்றிலும் தோற்றது. திமுக வின் இறுதிப் பற்றாக இருந்த கொங்கு முன்னேற்றப் பேரவை போட்டியிட்ட 7 இடங்களிலும் தோற்றது. அதன் வேட்பாளர்கள் அனைவருமே கவுண்டர் ஜாதி ஓட்டுக்கள் மிகுந்த தொகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவினர். பல்லடம் தொகுதியில் கொமுக வேட்பாளரை அதிமுக வேட்பாளர் பரமசிவம் 71 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த தேர்தல் முடிவு-  அரசிய்ல் பார்வையாளர்களுக்கு ஒரு வேளை மிதமான ஆச்சரிய்த்தை ஏற்படுத்தி இருக்கலாம். தமிழக வாக்காளரைப் பொறுத்தவரை இது எதிர்பார்த்த ஒன்று தான். அதிமுக அறுதிப் பெரும்பான்மையைப் பெறும், அதன் கூட்டணிக்கட்சியினர் கூட அதிமுகவின் தயவில் தான் வெற்றி பெறுவர் என்பதே தமிழக் மக்களின் மனோ உணர்வாக இருந்த்து. ஜெயல்லிதாவை கொஞ்சம் இழுத்துப் பிடிப்பது மாதிரி ஒரு அரசு அமைய வேண்டும் என்று நினைத்த ஒரு பகுதி வாக்களர்கள் கூட அதன் கடிவாளம் விஜயகாந்திடம் இருக்க்க் கூடாது என்றே கருதினர்.

எதிர்க்கட்சி என்ற தகுதியை திமுக இழந்த்தே பலருக்கும் அதிர்ச்சிளித்துள்ளது. திமுகவின் கவர்ச்சிகரமான இலவசங்களும் அதிமுகவின் மீதுள்ள அவநம்பிக்கையும் திமுகவை ஓரளவு தாங்கிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட்து. தேர்தல் நெருக்கத்தில் தேர்தல் நடமுறைகளுக்கு எதிராகவும் தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் திமுகவினர்  கையாணட வழிமுறைகள் மக்களை ஒரு தீர்க்கமான சிந்தனைக்கு கொண்டு சென்று விட்ட்தாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திமுக திறந்துவிட்ட பணமடை அதற்கே எதிரான சுனாமியை உண்டு பண்ணி விட்ட்து. திருச்சியில் ஒரு பேருந்தின் மேல் பகுதியில் ஐந்தைரைக்கோடி ரூபாய் கட்டுகள் அநாதையாக கண்டுபிடிக்கப் பட்ட்து திமுகவின் கடைசி எதிர்பார்ப்புகளின் மீது பேரிடியாக இறங்கியது. திமுக் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு இந்த அளவு வேகமாக வீசக்கூடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப் படவில்லை.

ந்தவெற்றி ஜெயல்லிதாவுக்கு கிடைத்த வெற்றியா? என்ற விவாத்த்தில் அரசியல் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் நிச்சயம் கிடையாது என்று வாதிடுகின்றனர்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயல்லிதா பொறுப்பான எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. பொழுதுபோகவில்லை என்றால் கொடநாட்டில் இருந்து அறிக்கை விடுவார் தனது கட்சிக்காரர்களை விட்டு அதிமுக என்ற ஒரு கட்சி இருப்பதைக் காட்ட போராட்டம் நடத்தக்கூறுவார். இதைத்தவிர மக்கள் பிரச்சனைக்காக ஒரு துரும்பைக் கூடஅவர் கிள்ளிப்போட்டது கிடையாது. கடைசிக் கட்டட்தில் அவர் நட்த்திக் காட்டிய பிரம்மாணட ஆர்ப்பாட்டங்கள் கூட அவரது செல்வாக்கை காட்டவே பய்ன்பட்டன. கட்சியும் கொஞ்சம் கலகலத்துப் போயிருந்த்து. பல முக்கியப் புள்ளிகள் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தனர். எனவே இந்த இமாலய வெற்றி என்பது எதிரணிக்கு எதிராக எழுந்த அலையின் விளைவே என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இதை முற்றிலுமாக ஏற்க இயலாது. பொதுவாகவேவே திமுக அரசின் செய்லபாடுகளில் காணப்பட்ட சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்குலைவுகள் ஜெயல்லிதாவின் ஆட்சித்திறனைப் பற்றிய சிந்தனையை மக்களிடம் தொடர்ந்து பேச்சாக்கியிருந்தது, எதெற்கெடுத்தாலும் லாவணி பாடுகிற திமுக தலைமையையும் எதைச் செய்தாலும் நேரடியாகச் செய்கிற ஜெயல்லிதாவின் அதிரடிகளையும் மக்கள் ஒப்பிடவே செய்தனர். அது ஜெயல்ல்லிதாவுக்கான சார்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே செய்திருந்த்து. என்வே அதிமுகவின் இந்த பெரும் வெற்றியை முற்றிலுமாக திமுக மீதான வெறுப்பின் விளைவு என்று அளவிட்டுவிடுவது பொருந்தாது. திமுகவின் மீதான வெறுப்பு 70 சதவீதமும் ஜெயல்லிதாவின் மீதான எதிர்பார்ப்பு 30 சதவீதமாக சேர்ந்து இந்த வெற்றியை அதிமுகவுக்கு சாதகமாக்கியுள்ளன  எனறு சொன்னால் அது மிகையாகாது.

தேர்தல் முடிவு பற்றிய விவாதங்களில் திமுகவின் படு தோல்விக்கான காரணம்  மக்களின் வெறுப்பு என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்பட்ட்து. அதிருப்தி அல்லது கோபம் என்ற சொற்களைத் தாண்டி வெறுப்பு என்ற வார்த்தை திமுக வை அலைகழித்த்தற்கான காரணத்தை திமுக நியாயமாக யோசித்தாக வேண்டும்.

அரசியலில் சுயநலம் மோலோங்குகிற போது, சொந்த குடும்பத்தினர் அரசில் செல்வாக்கு செலுத்துவதை ஆட்சித்தலைமை அனுமதிக்கிற போது அல்லது தடுக்காது விட்டு விடுகிற போது அது இழிவையும் வெறுப்பையும் சம்பாதிப்பதை எந்த வசீகரமும் தடுத்து விட முடியாது என்பது கடந்த கால அரசியலில் ஏராளமாக பதிந்து கிடக்கிற அனுபவங்களாகும். ஆட்சித்தலைமையின் குடும்பம் என்பது அரசியலில் ஒரு அங்கமே என்றாலும் அது ஒரு கட்டுக்குள் நிறுத்தப் பட வேண்டும்! இல்லை எனில் விபரீதம் தான். 

ஸ்டாலின் துணை முதல்வராக்கப் பட்ட போது அது அதிகம் விமர்சிக்கப்படவில்ல. ஆனால் அதற்கு மேலும் குடும்பத்தின் தேவை அல்லது நிர்பந்த்திற்கு திமுக தலைமை அதிக முக்கியத்துவம் கொடுத்த்தே அது மக்களின் வெறுப்பைச் சம்பாத்திதற்கு பிரதான காரணமாகும். கருணாநிதியின் குடும்பத்தில் இத்தனை உறுப்பினர்களா என்பதே பலருக்கும் இந்த முறைதான் தெரிய வந்த்து. எனக்கு தெரிந்த் அரசு அதிகாரி ஒருவர் கருணாநிதி குடும்பத்தை பற்றிய ஒரு பேமிலி டிரீ வைத்துக் கொண்டால்தான் இப்போதைக்கு நல்லது என்று சொன்னார். முந்தைய காலங்களில் ஒதுங்கியிருந்த பலரும் புதிய அதிகார மையங்களாக மாறினர். பொது அரங்குகளை ஆர்ப்பாட்டமாக அலங்கரித்தனர். ஒரு தாத்தாவாக கலைஞர் அதை ரசித்திருக்கலாம். ஆனால் மக்கள் அதை ரசிக்கவில்லை.

கடந்த ஐந்தாண்டுகால திமுகவின் ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தின் அளவு கடந்த முன்னெடுப்புக்கள் அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்திருந்தது. மத்திய அரசியலில் முக்கியத் துறைகளைப் பெறவும் கூட்டணி பேரத்திற்காகவும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய கருணாநிதி வேறு எந்த நல்ல விசயத்திற்காகவும் இத்தையக முயற்சியை செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு பேசுகிற அரசியல் விமர்சகர்கள் திமுகவிற்கும் அதிமுக விற்கும் இதில் வித்தியாசம் இருக்கின்றன என்கிறார்கள். திமுக என்பது கருணாநிதியின் குடும்பச் சொத்தல்ல என்பதையே மற்ந்து விட்டவர்கள் போல  கருணாநிதியின் குடும்பத்தின் அதிக அளவில் வெளிப்பட்டு அதிகார மையங்களாக செயல் பட்ட்து அவர்களது சொந்தக் கட்சியினராலேயே ரசிக்கப் படவில்லை. இரண்டாவதாக ஜெயல்லிதாவின் உடன்பிறவா குடும்ப ஆதிக்கம் நிலங்களை வளைத்துப் போடுதல், டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை போன்ற மறைமுக துறைகளில் ஆதிக்கம் செலுத்தியது கலைஞரின் குடும்பமோ அதில் மட்டுமின்றி மக்களோடு நேரடித் தொடர்புடைய கலை ஊடகத்துறைகளை ஆக்ரமித்த்து.

தேர்தல் முடிவுகள் ஒருவாறு தெளிவாகத் தொடங்கிய மே 13 ம்தேதி மதியத்திலிருந்து . திமுகவின் பலவீன்ங்களை தயவு தாட்சணயம் பாராமல் சன் டீவி அலசியது. ஆனால் திமுகவின் தோல்விக்கு சன்நெட்வொர்க்கும் பிரதான காரணம் என்பதை மட்டும் அது சொல்லவில்லை.

தமிழக மக்களிடயே சினிமாவிற்கு உள்ள மவுசு என்னவென்பது உலகறிந்த ஒன்று. கருணாநிதியின் குடும்பம், அதிலும் குறிப்பாக சன் நெட்வொர்க், திரைத்துறையை கபளீகரம் செய்திருநதை தமிழக் மக்கள் மிக கவனமானமாகவே நினைவில் வைத்திருந்திருந்தனர், திமுகவை தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிப்பது தமிழகத்தை கருணாநிதியின் குடும்பத்திற்கு அடமானம் வைப்பதாக ஆகி விடும் என்னும் அளவிற்கு மக்கள் நினைத்துவிட்டார்கள் எனில் அதற்கு சன் நெட்வொர்ர்கின் ஆக்டோபஸ்கரங்களே முக்கிய காரனமாகும். திமுகவின் ஊழல் குறித்த தொடரிலிருந்து சன் நெட்வெர்க் தப்பித்து விட முயற்சிப்பதை அதிமுக அரசுக்கு பலரும் கவனப்படுத்த்யுள்ளனர். 

திமுக அரசின் வீழ்சிக்கு எந்த வகையில் சன் நெட்வொர்க கார்ணமாகியது என்பதை ஊடக்வியலாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்.

ஜேம்ஸ்பாண்ட் (Tomorrow Never Dies) படத்தில் வருவது போல மக்கள் என்ன செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனார்கள். சன் தினகரன் கூறுவதே செய்தி என்றாகிப்போனது. நான் அதிகம் கவலைப்பட்டது இதற்குத்தான். மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கூறாமலே இவர்கள் பற்றிய சாதகமான செய்திகளை மட்டும் கூறி மக்களுக்கு எதையும் அறிந்து கொள்ள விடாமல் செய்கிறார்களே என்று பயமாகவே இருந்தது.

சன் நெட்வொர்க்கை நினைக்கும் பேதெல்லாம் எனக்கு கிழக்கிந்திய கம்பெனி ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்த்து, இனி ஒரு முறை திமுக வென்று விட்டால் சன் நெட்வொர்கிற்கு மக்கள் அடிமையாகிவிடவேண்டியது தான் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு, அந்த அச்சம் எனக்கு மட்டுமல்ல தமிழக் மக்களில் பலருக்கும் இருந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கமல் ரஜினியின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது போலத் தான் என்னுடைய வாரிசுகளும் வருகிறார்கள் என்று கலைஞர் கூறினார். கலைஞரின் மீது பொதுவாக ஒரு கோபம் பிறப்பதற்கு அவரது இது போன்ற சொல்லாடல்களும் ஒரு காரணமாகும். விழித்திருப்பவர்களை ஏமாற்றும் கலையில் அவர் கெட்டிக்கார்ர் என்று அவரை பலரும் சாடுவதற்கு இத்தகைய ஏமாற்றும் சொல்லாடல்களே காரணமாயின. அவருடைய வாரிசுகள் அதிகாரத்தின் துணையோடு பல துறைகளையு கபளீகரம் செய்வதை அவர் நியாயப்படுத்துவதாகவே மக்கள் கருதினர்..

திமுக வின் தோல்விக்கு ஊழல், ஈழத்தமிழர் பிரச்சினையை சரியாக கவனிக்காதது ஆகிய காரணங்களையும் சிலர் சேர்க்கிறார்கள். இவை இரண்டுமே தமிழக மக்களுக்கு பெரிய சமாச்சாரங்கள் அல்ல என்பதே என்னுடைய கருத்து. ஊழலை தப்பான ஒரு செயலாக கருதும் ம்னோபாவம் இந்திய வாக்காளரிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. தமிழக அரசியலில் எவர்கிரீன் ஸ்டாராக இப்போது அனைவராலும் போற்றப்படுகிற எம்ஜிஆர் ஊழ்லுக்கு விதிவிலக்கானவர் அல்ல. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம் எழுதிய விடுதலை என்ற நூலில் எம்ஜிஆரின் வீட்டில் ஒரு நிலவறை இருந்த்தையும் அதில் 10 அடி உயரத்திற்கு பணப்பெட்டிகள் அடுக்கப் பட்டிருந்த்தையும். அதிலிருந்து  இரண்டரைக் கோடி விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கப் பட்ட்தையும் பின்னர் ஒரு முறை 4 கோடி கொடுக்கப் பட்ட்தையும் விலாவாரியாக எழுதியிருந்தார். இலட்சங்களே பெரிதாக கருதப் பட்ட 70 களில் நடந்த கதை இது. கோடி என்பது கோடி காட்டாத காலம் அது. எம்ஜிஆருக்குப் பிற்கு வந்த எந்த அரசும் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை. மாறி மாறி கைதுகள் வசைபாடல்கள் நட்ந்து கொண்டிருந்தாலும் ஆட்சியும் மாறி மாறி அவர்களிடமே சென்று கொண்டிருந்த்து. கொண்டிருக்கிறது, அதனால் ஊழல் என்பது தமிழ் அரசியலைப் பொறுத்தவரை பெரிய குற்றம் அல்ல. 

விடுதலைப் புலிகள்/ ஈழத் தமிழர் விவகாரம் ஐபிஎல் கிரிக்கெட் அளவுக்கு கூட தமிழக மக்களை பாதிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக இந்திய அரசு இலங்கைக்கு பட்டுக்கம்பளம் விரித்து ஆயுத பந்தி பரிமாறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்யும் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் ஈழ விவகாரம் அவ்வப்போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய அவ்வளவே.
எனவே ஈழ விவகாரத்தில் திமுகவின் அலட்சியம் என்பது இணைய தளங்களில் விவாதிக்கப் படுகிற ஒரு விசயமே தவிர எதர்ர்த தமிழகத்தின்

தமிழக்த்தை பெரிதும் பாதித்த மின்வெட்டுப் பிரச்சினையை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்ட்தாகவே தோன்றியது. போர்க்கால அடிப்படையில் தீர்வுகான வேண்டிய ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக என்ன முயற்சிகள் எந்த வேகத்தில் செய்யப் படுகின்றன என்ற தகவல் எதுவும் மின்வ்ட்டினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரியவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் செம்மொழி மாநாடும் மற்ற கூத்துக்களும் நீரோபிடில் வாசித்த்த கதையாகத் தான் இருந்த்து. மின்வெட்டுப் பிரச்சினையில் பாதிக்கப் படுகிற மக்களின் வேதனைகளை கேட்டறிய முயற்சி செய்யாத்து திமுக அரசின் மீது அளவு கடந்த கோபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்த்து. தேர்தல் வரும் போது சரியாக கவனித்து விட வேண்டும் என்ற முனுமுனுப்பு வழிஎங்கும் காதில் விழுந்து கொண்டே இருந்த்து.

மின்வெட்டுப் பிரச்சினையால் ஏற்பட்ட கோபமும், பெரிய குடும்பத்தின் அதிகார கொட்ட்த்தால் ஏற்பட்ட வெறுப்புமாக சேர்ந்து திமுகவின் வரலாற்றில் மோசமான தோல்வியின் தழும்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

மேடு பள்ளங்கள் நிறைந்த திமுக வின் வரலாற்றில் ஒரு சட்ட மன்றத் தேர்தல் தோல்வி என்பது பெரிய இழப்பாகிவிடாது. இதைவிட மோசமாக இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற்ற அனுபவம் திமுகவுக்கு உண்டு. என்றாலும் இப்போதைய கலைஞரின் நிலை மிகவும் நெருக்கடியானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மகள் கனிமொழி பட்டியாலா சிபிஐ நீதிமன்றத்திற்கும் திகார் சிறைக்கும் இடையே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டில் சிக்கியிருக்கிறார். கடவுளை நம்புவதா மறுப்பதா என்பதில் தடுமாறாத கலைஞர் காங்கிரஸை நம்பலாமா நம்பக்கூடாதா என்ற பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார். ஒரு வேளை கனிமொழி கைது செய்யப் பட்டால் சட்ட்த்தின் கை அவரது வீடு வரை கூட நீளக்கூடும். இந்தச் சூழ்நிலையில் இப்போதைய தேர்தல் தோல்வி என்பது மோசமானதுதான்,

இந்தப் பிரச்சினையில் தான் தலையிடப் போவதில்லை என ஜெயல்லிதா அறிவித்திருப்பது அவருக்க் சற்றே ஆறுதல தரக்கூடும்.

மக்கள் எனக்கு நல்ல ஓய்வை கொடுத்திருக்கிறார்கள் என்ற ஒற்றைச் சொல்லோடு கலைஞர் மவுனம் சாதிக்கிறார். ஓய்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தம் கிடையாது. களைப்புக்கு அஞ்சாத போராளி அவர். கிடைத்திருக்கிற சந்தர்ப் பத்தை பயன்படுத்தி திமுக எனும் பேரியக்கத்தின் எதிர்காலம் குறித்த சரியான - குடும்பச் சிக்கலற்றமுடிவுகளை அவர் மேற் கொள்வார் எனற எதிர்பார்ப்பு அவர் மீது வலுவாக இருக்கிறது. ஒரு தாத்தாவாக இல்லாமல் தலைவராக அவர் செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. குறைந்த பட்சம் ஸ்டாலினுக்காக தலைமையை அவர் சிக்கலற்றதாக உறுதி செய்ய வேண்டும். அதற்கு 2ஜி விவகாரமோ மற்ற பழைய தொல்லகளோ அவருக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்.

அதீத பலத்தோடு ஆட்சியை பிடித்திருக்கிற ஜெயல்லிதாவிட்ம் முன்னைக்கு இப்போது மாற்றம் தெரிகிறது என்று  பத்ரிகையாளர்கள் பல்ரும் கூறுகிறார்கள். அது அவ்வளவு எளிதில் முடிவு செய்யப் படக்கூடிய விசயமல்ல. இனி வரும் காலத்தின் முக்கிய செய்தியாகப் போவது அதுவாகத்தான் இருக்கும். மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற அம்மையாரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது நலத்திட்டங்களை விடவும் சுறுசுறுப்பை விடவும் அவரது முந்தையை ஆணவம் குறையாதா? அதிமுகவினரிடம் அடிமைத்தனம் சற்றேனும் அகலாதா என்பதைத் தான்.

இதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனில் இதுவரை வரலாற்றில் தனக்குரிய இட்த்தை உறுதிப் படுத்திக்கொள்ளாத அம்மையார் அந்த இடம் நோக்கி நகர்வது சாதாரணமாகிவிடும். வரலாறு வாழ்த்துச் சாமரம் வீச அவர் கோலோசச முடியும்.

ஜெ, பதவியேற்ற இதே கால கட்ட்த்தில் கேரளா முதல்வராக பதவியேற்ற  உம்மண் சாண்டியும் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற மமதா பானர்ஜியும் ஒப்பீடு செய்யப் படுகிற போது தமிழகத்திற்கு ஒரு ஏக்கம் பிறக்கிறது. உம்மண் சாண்டியின் பதவியேற்பு விழாவில் அவரது எதிரியும் முன்னாள் முதல்வருமான அச்சுதனந்தன் தனது சகாக்களோடு கல்ந்து கொள்கிறார். ம்மதா பாணர்ஜி பெற்ற் வர்லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பிறகு அவர் தங்கியிருக்கிற வீட்டையும் அவர் பயன்படுத்துகிற காரையும் காட்டுகிற ஊடகங்கள் அவரை தீதி என்று அழைக்கின்றன. அம்மா என்ற அழைப்பை விட அதில் அதிக உண்மையும் உணர்வும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. வரலாற்றில் புகழ் பூக்க வாழ்வதற்கான அடிப்படையான தகுதிகளில் ஒன்று எளிமை என்பதை காமராஜரையும் க்க்கனையும் தெரிந்து வைத்திருக்கிற தமிழக அரசியல் தலமைகள் என்றைக்கு உணர்ந்து கொள்வார்களோ?

பதவியேற்றதும் மக்கள் பிரச்சினைகளில் முதல்வர் ஜெ, காட்டுகிற வேகம் தமிழக் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற வித்தில் அமைந்திருக்கிறது. முந்தைய திமுக அரசின் முதல் மூன்று ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆரம்ப கட்ட வேகம் பெரிதும் பாராட்டிற்குரியதாக அமையும். அதே நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் புதிய அரசு அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்க் கொள்ள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்னும் வெளிப்படையாக நடந்து கொண்டாக வேண்டும். புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு நாட்களில் மின்வெட்டு சதவீதம் அதிகமான போது என்ன இந்த அம்மா வந்தா சரியாயிடும்னு சொன்னாங்க. ஒன்னும் சரியாக்க் காணோமே என்று மக்கள் பேசத் தொடங்கி விட்டனர். மந்திர சக்தியில் மாற்றம் வந்து விடும் என்று நம்புகிற மக்களுக்கு தகுந்த வகையில் காரியங்கள் நடைபெறாவிட்டால் நம்பிக்கையின் சதவீதம் சரிந்து விடும் ஆபத்து இருக்கிறது. எனினும் ஐந்தாண்டுகள் காத்திருக்கப் பழகிய தமிழ் மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மொத்தமாக அதிருப்திய்டைய மாட்ட்ர்ர்கள் என நம்பலாம், எல்லாம் புதிய ஆட்சியின் போக்கை பொறுத்திருக்கிறது.

புதிதாக கட்டப் பட்ட வளாகத்தை புறக்கணித்து விட்டு பழைய கட்டிட்த்திற்கே சட்டமன்றத்தை கொண்டு சென்றது விமர்சனத்திற்கு உள்ளாகியது என்றாலும், 1100 கோடி செலவழித்து கட்டப்பட்ட புதிய சட்ட மன்ற வளாகத்தின் கட்ட்ட அமைப்பு குறித்தும் அது அமைந்திருக்கிற இடம் குறித்தும் பொதுவாக எழுந்துள்ள அதிருப்தி காரணமாக இந்த மாற்றம் பற்றிய விமர்சனம் வலுவடையாது என்றே தோன்றுகிறது. மக்களின் கவலை எல்லாம், காஷ்மீர் மாநிலத்த்திற்கு கோடை கால தலைநகர் ஸ்ரீநகர்  குளிர்கால தலைந்கர் ஜம்மு  என் இரண்டு தலைநகரங்கள் இருப்பது போ திமுக கால தலைமைச் செயலகமாக ஓமந்தூரார் வளாகமும் அதிமுக கால செயலகமாக ஜார்ஜ் கோட்டையும் ஆகும் பட்சத்தில் அந்த அறைகளையும் இருக்கைகளையுமாவது அப்படியே விட்டு வைத்தால் கார்ப்பெண்டர் செலவாவது மிஞ்சுமே என்பது தான்.

ஒரு குறிப்பிட்ட ஜாதிய அடையாளம் கொண்ட அதிகாரிகளை புதிய அரசு அதிகமாக அரவணைத்திருப்பது, குறிப்பாக ஒய்வு பெற்ற அதே ஜாதியைச் சார்ந்த சிலரை மீண்டும் பொறுப்புக்கு அழைத்திருப்பது ஒரு புதிய விவாத்த்தை தொடங்கியிருக்கிறது. பெரியாரிஸத்திற்கு முந்தைய அரசு அலுவலகங்கள் நினைவுக்கு வருகின்றன என்றார் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி. தமது பூர்வீகம் ஸ்ரீரங்கம் என்று சொல்லி அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவரிடம் அதற்கேற்ற இயல்பு இல்லாமல் போகும் என்று எதிர்பாப்பது சரியா என்பதே எனது கேள்வி. அது முறையா என்பது தற்போதைக்கு தேவையற்றது. தம்மவர் என்ற நம்பிக்கை முதல்வருக்கு தேவைப் பட்டிருக்கலாம். நீதியை நிலை நாட்டுவதில் குறிக்கிடாத வரை அதை ஏற்பதில் மக்களுக்கு சிரம்ம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் அமுல்படுத்தப் பட்ட சமச்சீர் கல்வித்திட்ட்த்தை அதிரடியாக புதிய அரசு இரத்து செய்திருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் முதல் முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாக்கங்களின் ஆவலைப் பூர்த்தி செய்வதற்காக சொந்த விருப்பத்தின் பேரில் மாணவர் நலனில் அதிமுக அரசு தன்னுடைய முதல் விளையாட்டை தொடங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது. 200 கோடி ரூபாய அளவுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப் பட்டு விநியோகத்திற்கு தயாராக இருக்கிற சூழ்நிலையில், பழைய புத்தகங்கள் கையிருப்பில் இல்லாத நிலையிலும் பழைய பாட்திட்டமே அமுல் படுத்தப் படும். புத்தகங்கள் கிடைப்பது தாமதமானால் ஜூன் 15 ம்தேதி பள்ளிக் கூடங்களை திறந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு மக்கள் நலைனைப் பொறுப்படுத்தாத  ஆணவ மிகுதியின் அடையாளம் என மாணவ மாணவியரும் பெற்றோர்களும் புலம்ப ஆரம்பித்துள்ளன்னர். இன்று மதியம் இது பற்றிய பேச்சினிடையே குறிக்கிட்ட ஒரு மாணவி, இந்த அம்ம தன்னுடைய குணத்தை காட்ட ஆரம்பிச்சுடுச்சு என்று சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை பக்கத்திலி இருந்த இன்னொரு மாணவி விஜ்யகாந்த இதை தட்டிக் கேட்பாரா என்று சொன்னது எனக்கு ஆச்சரியத்தை அளித்த்து.  இடையில் குறுக்கிட்ட இன்னொரு மாணவி ரைமிங்கோடு அவருக்கு படிப்பு பற்றி எல்லாம் கவலை இருக்குமா என்று பேசியது எனக்கு அதிர்ச்சியை கொடுத்த்து.

தமிழக் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த முறையும் வழக்கப் படியே அவர்கள் பொதுவான மக்களின் இயல்பிற்கு ஏற்பவே வாக்களித்திருக்கிறார்கள்.இந்த்த் தேர்தலி அகில இந்திய அளவில் தன்னுடைய சமுதாயம் என்ற உண்ர்வு அவர்களிடம் மேலோங்கியிருந்த போதும் அது அதிமுகவிற்கு பாதகமாவதை அவர்கள் விரும்பவில்லை. அதிமுகவின் பெருவாரியான வெற்றிக்கு தமிழக சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஓட்டும் ஒரு முக்கியக் காரணமாகும். வாணியம்பாடி நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லிம் லீக் வேட்பாளரை விட கனிசமான ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது அதற்கு ஒரு உதாரணம். முஸ்லிம்களிடம் சமுதாய உணர்வு மேலோங்கியிருந்த்து என்பதற்கு இந்த தேர்தல் காட்டும் ஒரே உதாரணம் பாளையங்கோட்டை தொகுதியி திமுகவின் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் வெற்றி பெற்றத்தாகும். அங்குக் கூட அதிமுக தன்னுடைய சொந்த வேட்பாளரை நிறுத்தியிருக்குமானால் மைதீன்கான் 605 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்க வாய்ப்பில்லை.  

முஸ்லிம் சமுதாயம் புதிய அரசிடம் நல்லாட்சியை தவிர தங்களுக்கு என்று சலுகையாக எதையும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஒடுக்கப் பட்ட சிறுபான்மைச் சமுதாயமாக தங்களுக்கு தரப்பட வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்குவதில் புதிய அரசு காலங்கட்த்தாமல்.. களவு வார்த்தைகளில் சாக்குப் போக்கு காட்டாமல் நிறைவேற்றித்தரும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருச்சி மேற்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்ட்த்திலும் பரங்கிப் பேட்டை தேர்தல் கூட்ட்த்திலும் அக்கறையாகவும் விரிவாகவும் ஜெயல்லிதா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசியதில் அவர் மீது முஸ்லிம் சிறுபான்மையினருக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையில் கீரல்விழாத வகையில் புதிய அரசு நடந்து கொள்ளுமானால் அதிமுகவுடனான முஸ்லிம் சிறுபான்மையினரின் உறவும் இன்னும் நெருக்கமாகும்.

புதிய அரசின் பதவிஏற்பு நிகழ்ச்சிக்கு நரேந்திரம் மோடு அழைக்கப் பட்ட்து முஸ்லிம்களுகு வருத்த்தை தரவே செய்த்து.. அவர் நவீன ஹிட்லர் என்பதை இப்போதும் கூட அவரிடம் பணியாற்றிய அதிகாரி உச்சநீதிமனறத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். மோடியின் உருவத்தை  பார்க்கிற போதெல்லாம் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்ட்தும், முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப் பட்ட்தும், கர்ப்பிணிப் பெண்கள் உயிரோடு எரிக்கப் பட்ட்தும் முஸ்லிம்களின் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாத்து. அதனால மோடி கலது கொள்கிற பதவி யேற்பு நிகழ்சியில் அதிமுகவுடன் கூட்டணியிட்டு வெற்றி பெற்ற ம்மக் கலந்து கொள்ளாத்து சரியான நடவடிக்கையாகவே பாராட்டப்படுகிறது. இந்திய அரசியலில் பாரதீய ஜனதாவோடு கடும் பகை கொண்ட கம்யூனிஸ்டுகளும் மோடியும் அருகருகே அமர்ந்திருக்கிற போது ம்மகவின் இந்த அணுகுமுறை  அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகுமா என்று கேட்கப் ப்டுகிறது. ஒரு தீய சக்தியை அடையாளப்படுத்துகிற முயற்சியில் தனிமைப பட்டு நிற்க நேர்ந்தால் அது தவறல்ல என்ப்தே அதற்கான பதில்.

பாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளாமல் அதன் சர்ச்சைக்குரிய ஒரு பிரமுகரை பதவியேற்பு நிகழ்ச்சியின் மாஸ் அட்ராக்சனாக அழைத்தது நியாயம் தானா? என்பதை அதிமுக தலைமை யோசிக்க வேண்டும். புதுச்சேரி தேர்தலில் சேர்ந்து போட்டியிட்டு விட்டு அமைச்சரவையில் கூட்டு சேர்க்கிற போது தங்களை எதிர்த்துப் பொட்டியிட்டவரை சேர்த்துக் கொண்ட்து மூலம் ரங்கசாமி முதுகில் குத்திவிட்டார் என்று க்டுமையாக சாடியிருக்கிற முதலமைச்சர் ஜெ, பதவியேற்பு வைபவத்திற்கு மோடியை அழைத்த்தை எப்படி நியாயப் படுத்தப் முடியும்?

அதே நேரத்தில் இந்த விசயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மோடி, சோ அன்கோவுடன் ஜெயல்லிதாவுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு உள்ளதை நினைவில் கொண்டு அதிமுக அரசுடன்  தொடர்ந்து இணக்கமாக்ச் செயல்படவேண்டும் என்றே முஸ்லிம்கள் ஆசைப்படுகிறார்கள். முஸ்லிம்களில் ஒரு சாராரைப் பிரதிபலிக்கிற மனித நேய மக்கள் கட்சி அந்த வேலையை சரிவரச் செய்ய வேண்டும்.

மனித நேய மக்கள் கட்சி இரண்டு எம் எல் ஏக்களைப் பெற்றுள்ளது. அது முஸ்லிம்களை முழுதாகப் பிரதிபலிக்கும் கட்சி அல்ல. என்றாலும் இராம்நாதபுரத்தில் காங்கிரஸின் ஹசன் அலியை விட ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் நன்றாக பங்காற்றுவார் என்ற அனைத்து தரப்பு முஸ்லிம்களும் அவரை ஆத்ரித்து உள்ளனர்.

அவர் சட்டமன்றத்தில் சிறப்பாக பங்காற்றினால் மட்டும் போதாது. தேர்தலில் கிடைத்துள்ள இந்தச் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி சமுதாயத்திற்குள் அவரது கட்சியினர் கடந்த காலங்களைப் போன்ற சங்கடங்களை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அதிமுகவினரை எதிர்கொள்வதை விட தனது இயக்கத்தினரை எதிர்கொள்வது தான் அவருக்கு கடுமையானதாக இருக்க கூடும.

இந்த தேர்தலில் தனியாக களமிறங்கிய சோஷ்லில குடியரசுக் கட்சி முஸ்லிம்களின் சமுதாய வாக்குகளை பெறுவதில் போதுமான அளவு வெற்றி பெறவில்லை. முழுமையான அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தாமல் திடீரென சட்டமன்றத் தேர்தலில் குதித்தது குறைப் பிரசவமாகிவிட்ட்து. சமுதாய நலன் என்பதை முன்னிலைப் படுத்தும் இயக்கமாக தன்னை கூறிக் கொள்ளும் அவ்வமைப்பு, சில் தொகுதிகளில் நேரடிக்களத்திலிருந்த முஸ்லிம் வேட்பாள்ர்களுக்கு எதிராக போட்டியிட்ட்து பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங் கட்சியின் முஸ்லிம் வேட்பாள்ருக்கு  எதிராக அக்கட்சி போட்டியிட்ட தொகுதியில் தங்களது வேட்பாளரை அறிமுகப் படுத்துகிற போது அதன் தொண்டர்களில் சிலர் எதிர் வேட்பாளரைப் பற்றி அவர் நல்ல முஸ்லிம் அல்ல என்று பிரச்சாரம் செய்த்த்தா ஒரு தகவல் கிடைத்த்து ஒருவேளை அப்படி பிரச்சாரம் செய்யப்படிருக்குமானால் எச்சரிக்கை! அதுதான் தீவிரவாத்த்தின் மூலமந்திரம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனக்குரிய கூட்டணியை  தேடி அமைத்துக் கொள்வதில் இன்னும் அதிகமாக அது உழைக்கவும் வெளிப்படவும் வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே ஜனநாயக அரசியலில் ஒரு கட்சியை சரியாக அடையாளப் படுத்தும்.

போட்ட்யிட்ட மூன்று தொகுதியிலும் தோற்றுப் போன முஸ்லிம் லீகிற்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அரசியலில் சுவாசிப்பதற்கு ஒரு எம்பி பதவி அதற்கு போதும். துறை முகம் நாகப் பட்டினம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முஸ்லிம் லீகினோடு அதிக சம்பத்ந்தம் உடையவர்கள் அல்ல எனப்தனல். கவலைப் படுவதற்கு ஆளுமில்லை. தேவையுமில்லை.. வாணியம்பாடியில் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சி அடைந்த தோல்வி கவலைக்குரியது.அதிக  கவனத்திற்கும் உரியது. தமிழக தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக முஸ்லிம் தொகுதி என்று அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் முஸ்லிம் வேட்பாளர் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கைவிடப்படுவது. முஸ்லிம் லீகிற்கு சாதராணமாக தெரியலாம்,முஸ்லிம்களுக்கு அது சாமாண்ய செய்தி அல்ல. அந்த தொகுதியில் முஸ்லிம் லீகின் அரசியல் பணிகள் எந்த அளவு மோசமாக் இருந்த்து என்பதற்கு இது உதாரணம் என்கிறா ஒரு முஸ்லிம் அரசியல் விமர்சகர். இனியாவது முஸ்லிம் லீகும் அதன் பெய்ரைச் சொல்லிக் கொண்டு பயண்டைவோரும் அரசியலில் உழைக்கவேண்டும். இல்லையே அரசியலில் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ச்ந்நியாசம் போய்விட வேண்டும் என்று என நணபர் ஒருவர் சொன்னார். முஸ்லிம் லீகின் அனுதாபி என்ற வகையில் அந்த வார்த்தை என்னை காயப்படுத்தியது என்றாலும் அதிலுள்ள நியாயத்தை மறுக்க முடியவில்லை.

இந்த தேர்தலில் மிக வருத்த்த்தை கொடுத்த வெற்றி என்றால் திருவல்லிக்கேணியில் அலுவலக கட்டிடம் வைத்திருப்பதை தவிர தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்திராத காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றதை சொல்ல வேண்டும். இந்த தேர்தலில் வருத்தப் பட வைத்த் தோல்வி என்றால் பேராசிரிய அன்பழகன் தோற்றதையும் திருவாடனை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் முஜீபுர ரஹ்மான தோற்றதையும் சொல்லவேண்டும். இளைஞர் முஜீபுர்ரஹ்மான வெற்றி பெற்றிருந்தால தேமுதிகவில் சிறுபான்மை முஸ்லிமுக்கான இடம் மட்டுமல்ல் தமிழகத்தில் ஒரு முஸ்லிம் தொகுதியும் அடையாளம் காணப்பட்டிருக்கும்.

இந்த தேர்தலில் மகிழ்ச்சியடையத்தக்க வெற்றி என்றால் 12 வது முறையாக கலைஞர் கருணாந்தி திருவாரூரில் வென்றதையும், நிம்மதியடையத் தக்க வெற்றி என்றால் ஸ்டாலின் கொளத்தூரில் வென்றதையும் சொல்லவேண்டும். இந்த தேர்தலில் மகிழ்ச்சியடையத்தக்க தோலவி என்றால் இந்தியாவில் மத் துவேஷத்தை கிள்ப்பி மக்களை கூறு போடும் பாரதீய ஜனதா அது போட்டியிட்ட 193 தொகுதியிலும் தோல்வியடைந்த்தே!

விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதியில் போட்ட்யிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறாத்தும், பாமக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் இந்த தேர்தலின் திருஷ்டிப் பரிகாரமே!