Posts

Showing posts with the label கீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர்.

கீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர்.

கீரனூரி என்றால் கீரனூர்க்காரர் என்று பொருள் . தமிழ் முஸ்லிம்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சிற்றூரான   கீரனூரைத் தெரியாமல் இருக்கலாம் . கீரனூரியைத் தெரியாமல் இருக்காது . அந்தக் குரலோசையில் மகிழாத செவியும் அந்தச் சொல்லாடல்களில் நெகிழாத உள்ளமும் தமிழகத்தில் இல்லை எனலாம்   . பிரபல சொற்பொழிவாளரும் தமிழகத்தின் தலை சிறந்த மார்க்க அறிஞருமான மௌளானா கலீல் அஹ்மது கீரனூரி கடந்த 16.12.2010 வியாழக்கிழமை அன்று முஹர்ரம் 9 ம் நாளின் நோன்பை ஆண்டவனின் சந்நிதியில் திறப்பதற்காக உலகிலிருந்து விடை பெற்றுச் சென்றார் . 1944   ம் ஆண்டு ( ஜூன் 13) பிறந்த கீரனூரி , 9 வது வரை பள்ளிப்பை முடித்த பிறகு லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் 7 ஆண்டுகள் மார்க்க்க் கல்வி பயின்று மொளல்வி பட்டம் பெற்றார் . பின்னர் தேவ்பந்த் தாருல் உலூல் அரபுக்கல்லூரியில் ஹதீஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றார் . தொடர்ந்து திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் ظ ط அரபுக்கல்லூரியில் 8 வருடமும் ...