Posts

Showing posts from July, 2011

உமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி

வரலாற்றின் தவறுகள் ஒரே மாதிரியானவை ஆட்களும் இடங்களுமே மாறுபடுகின்றன என வார்த்தை சித்தர்   வலம்புரிஜான் கூறுவார் .   இது , மற் றெ வரையும் விட ஆட்சியாளர்களுக்கு சரியாகப் பொருந்தும் .   ஆதிக்கம் செய்வதற்காகவும் , அளவு கடந்த பணம் சம்பாதிப்பதற்காகவும் ஆட்சிக்கு வருகிறவர்கள் . அல்லது ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தவறுகளை செய்பவர்கள் , எகிப்தின் அன்றைய பேர்ரசன் பிர்அவ்னிலிருந்து நேற்றை அதிபர் ஹோஸ்னி முபாரக் வரை கேவலமாக வீழ்ந்து படுகிறார்கள் . பெற்ற பெறுமையை இழந்து மாய்கிறார்கள் . வரலாற்றில் அவர்களுக்குரிய இடம் அழிக்கப் படுகிறது . மக்களது அபிமானத்தோடு ஆட்சிக்கு வருகிற பலரும் கூட வாழையடி வாழையாக வரலாறு சொல்லித் தருகிற இந்தப் பாடத்தை காலப் போக்கில் மறந்து விடுகிறார்கள் . வரலாற்றின் பெரிய சோகமே வரலாற்றிலிருந்து யாரும் பாடம் பெறவில்லை ! என்பது தானே ! இந்த உலகிலிருந்து எதைத் நிரந்தரமாக தம்மோடு வைத்துக் கொள்ள முடியும் ? என்ற கேள்வி குறித்து ஆட்சியிலிருப்பவர்கள் சிறிதளவாவது சிந்திக்கிறார்களா ? என்ற் கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது . ம...