விமர்சனங்களை வென்றவர்
மிலாதுன் நபி என்பது இன்று முஸ்லிம்களின் ஒரு சிறப்பு நாளாக கருதப்படுகிறது . உண்மையில் அது உலக மக்களின் கவனத்திற்குரிய ஒரு நாளாகும் . கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது ( ஸல் ) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய் தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்ட்து . இந்த உலகில் மனித்ராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது . சமயம் , , சமூகம் , அரசியல் , பொருளாதாரம் , கலாச்சாரம் , வரலாறு , அறிவியல் , மொழி , தத்துவம் , இலக்கணம் , இலக்கியம் , வாழ்வியல் , உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது . மருத்துவம் கூட அவரிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது . இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன . சட்டம் , நீதி , நிர்வாகம் மற்...