மல்லிப்பட்டினத்தில் நடந்த்து என்ன?
காலையில் பத்ரிகையை புரட்டியதும் மல்லிப்பட்டினத்தில் கலவரம் என்ற செய்தி அதிர்ச்சியளித்த்து. ஓட்டுக்கேட்டு அந்த வழியாக சென்ற பா ஜ கவின் வேட்பாளரை முஸ்லிம்கள் தடுத்த்தாகவும் அதையும் மீறி உள்ளே சென்ற வேட்பாளரின் வாகனத்தை முஸ்லிம் இளைஞர்கள் கற்களால தாக்கியதால் வேட்பாளரும் அவருடன் இருந்தவர்களும் காயமடைந்த்தாகவும் . அதன் பிறகு வன்முறை சம்பவத்தில் சில வாகன்ங்களுக்கும் ஒரு வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட்தாக் அந்தச் செய்தி கூறியது. மல்லிப்பட்டினத்தில் பணியாற்றும் இமாம் ஒருவரையும் அந்த ஊரின் பிரதான மீனவர் சங்க பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த்த போது கீழ் காணும் செய்திகள் அறியக் கிடைத்தன. இராமநாதபுரம் தொகுதியில் இரு கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி இருப்பதால் எப்படியாவது அங்கு வென்று விட வேண்டும் என்பதை பா ஜ க் ஒரு தேசிய தீர்மாணமாகவே வைத்திருக்கிறது. திருவாளர் மோடி வருகிற 16 ம் தேதி இராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இரமாநாதபுரம் வேட்பாளராக ஹெச் இராசா நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த்து, ஆனால் கருப்பு என்கிற முருகானந்த்த்தை பா ஜ க வேட்பாளராக அறிவ...