இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார்.
இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். ஒரு ஷார்ட் விசிட்டாக தில்லி சென்ற சந்தர்ப்பத்தில் காலையிலிருந்து மதியம் வரை ஓய்வு கிடைத்தது. அப்போது தில்லியில் நான் சுற்றி பார்க்க நினைத்திருந்த பட்டியலில் குதுப்மினார் இருக்கவில்லை. ஒரு வரலாற்று மாணவனாக குதுப் மினாரைப் பற்றி படித்த தகவல்களோ இந்தியாவின் தொல்பொருள் சின்னங்களில் முக்கியமானது என்ற குறிப்போ என்னை ஈர்த்திருக்கவில்லை. மன்னர்கள் தமது பெறுமைக்காக கட்டத் தொடங்கி முடிக்காமல் விட்ட ஒரு கோபுரம் என்ற அளவில் அது என்னிடம் ஈர்ப்பற்றிருந்தது. அன்று அதிகாலையில் என் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போது குர் காவ்னிலிருந்து நான் செல்லும் வழியில் குதுப்மினார் இருந்தது. “குலா ரஹேதோ தேக்கேங்கே!” இந்த நேரத்தில் திறந்திருந்தால் பார்ப்போம் என டிரைவர் சொன்னார். திறந்திருந்தது. அதிக சிரத்தையில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொண்டு பெரிய அந்த பசுமையான வளாகத்திற்கு கிட்டத்தட்ட தனியாளாக உள்ளே நுழைந்த போது அந்த கம்பீரமும் ரம்மியமும் எனது அசிரத்தையை பறக்கடித்து விட்டது. அது ஒரு பிரம்மாணடமான பள்ளிவாசல். அதன் ஒரு முனையில் செங்கள் கட்டிட...