Thursday, December 30, 2010

ஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல்

ஹஜ் ()ணம்

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கிற முஸ்லிம்களிடம் அந்தப் பயணம் மறக்காத ஒரு இனிய அனுப்வமாக தங்கி விடுவதுதான் வாடிக்கை. சமீப ஆண்டுகளாக ஹஜ்ஜுக்கு சென்று திரும்புகிற ஹாஜிகளுக்கு  ஹஜ்ஜின் நினைவுகள் கூட மறந்து விடுகின்றன. தனியார் ஹஜ் சேவை  நிறுவன்ங்கள் கொடுத்த தொல்லைகள்  மறப்பதில்லை.

இந்த வருடம் ஹஜ்ஜுக்கு செல்லாமலே அந்த தொல்லைகளை தமிழகத்திலுக் கேரளாவிலும் பல முஸ்லிம்கள் அனுபவித்தார்கள். ஹஜ் சர்வீஸ் நிறுவன்ங்களிடம் பணம் கட்டி கடைசி நிமிட்த்தில் ஹ்ஜ்ஜுக்கு செல்ல முடியாமல் சில ஆயிரம் பேர் ஏமாந்தார்கள். இந்தியா முழுவதிலும் இவ்வாறு ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சொல்லப் படுகிறது. இன்னும் உறுதியாக ஒரு கணக்கு தெளிவாகவில்லை. 

இந்த ஆண்டு இந்தியாவுக்கு சுமார் 1,67,000 பேருக்கு ஹஜ்ஜுக்கான அனுமதியை சவூதி அரசு வழங்கியுள்ளது. அதில் சுமார் 57 ஆயிரம் பேர் தனியார் ஹஜ் டூர் ஆப்ரேட்டர்கள் மூலமாகவும் மற்றவர்கள் மத்திய மாநில ஹஜ் அமைப்புக்கள் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்கின்றனர், அரசு அமைப்புக்கள் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வதன்றால் சுமார் ஒண்ணேகால் லட்ச ரூபாய் செல்வாகும். தனியார் நிறுவன்ம் மூலமாக சென்றால் ஓண்ணே முக்கால் லட்சத்திலிருந்து இரண்டரை லட்சம் வரை செல்வாகும்.

இந்த ஆண்டு ஹஜ் விசாக்களை வழங்குவதில் பொதுவாகவே சவூதி தூதரகங்கள் செய்த தாமதம் காரணமாக உலகின் பல பாகங்களிலும் பலர் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாமல் போயிற்று. இந்திய அரசு நிறுவன்ங்கள் மூலமாக செல்ல இருந்த குஜராத், ராஜஸ்தான், கர்நாட்கா மாநிலத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்த ஆண்டு வாய்ப்புக்கிடைக்கவில்லை. தமிழக ஹஜ் கமிட்டி மூலம் கடைசி விமான்ங்களில் சென்ற ஹாஜிகளின் பாஸ்போர்ட்கள் கடைசி நிமிடத்தில் தான் கைக்கு கிடைத்த்தாக தமிழ ஹஜ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன. சவீதி தூதரகத்தின் இந்த தாமத்திற்கான் காரணம் என்ன எனது மிகச்சரியாக புலனாகவில்லை. சில வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்ட்து என்று சொல்லப்படுகிறது. 

தமிழக்த்தைப் பொறுத்த வரை ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்திருந்த அனைவரும ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப் பட்டு விட்டன. இந்த ஆண்டு காத்திருப்போர் பட்டியலிலும் முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரைப்படியும் பலர் கடைசி நேரத்தில் வாய்ப்புப் பெற்று ஹஜ்ஜுக்கு சென்று விட்டனர்.

ஹஜ் சர்வீஸ்களில் பணத்தை கட்டி காத்திருந்த பலரின் நிலைதான் பரிதாப் நிலையாயிற்று. ஹஜ்ஜுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விமானத்திற்கு தயாராக சென்னை வந்து விட்ட நிலையில் அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை என ஹஜ் சர்வீஸ் நிறுவன்ங்கள் கையை விரித்து விட்டன. இதில் சில பெரிய நிறுவன்ங்களும் அடங்கும் ஆனாலும் அவை பலரை அழைத்துச் சென்று சிலரை மட்டும் விட்டுச் சென்றனர். ஒரு சில நிறுவன்ங்கள் தாங்கள் பதிவு செய்த எவரையும் அழைத்துச் செல்லாமல் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தன.

மனதில் ஏராளமாக ஆசைகளைத் தேக்கி காத்திருந்த புனிதப் பயணம் கடைசி நேரத்தில்  தடைபட்ட்து சில பயணிகளுக்கு நென்ஞ்சுவலியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிருவர் தவிர மற்ற அத்தனை பேரையும் கண்ணீர்விட்டு அழவைத்துள்ளது.

அரசு ஹஜ் கமிட்டிகளில் பதிவு செய்திருந்த பலர் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாமல் போனதற்கு காரண்ம். விசா அடித்த பாஸ்போர்ட்கள் சரியான நேரத்தில் வந்து சேராத்தாகும். தனியார் ஹஜ் நிறுவன்ங்களின் பதிவு செய்திருந்தவர்கள்  ஹஜ்ஜுக்கு செல்ல முடியாமல் போனதற்கு அந்த ஹஜ் நிறுவன்ங்களின் முறையற்ற செய்ல்பாடே காரணமாகும். ஹஜ் நிறுவன்ங்களின் உள்ளச் சுத்த்தை அகழ்ந்து பார்க்காவிட்டால் இதை மோசடி என்று துணிந்து சொல்லிவிடலாம்.

தமிழக் முஸ்லிம்க்ளை சலனத்திற்குள்ளாக்கிய இந்த மோச்டி ஹஜ் சேவை வழங்கும் தனியார் நிறுவன்ங்களைப் பற்றிய பலமான விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.

பல ஆயிரம் ஹாஜிகள் பாதிப்புக்குள்ளான இந்த தருணம் ஹஜ் சேவை வழங்கும் நிறுவன்ங்களை மத்திய மாநில அரசுகளும் தமிழக் முஸ்லிம்களூம் ஒரு மைக்ரோ ஸ்கேனிங்க் செய்ய சரியான தருணமாகும்.  முஸ்லிம் பொது நல அமைப்புக்ள் இந்நிறுவன்ங்களை நெறிப்படுத்த ஒரு செக் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

தனியார் ஹஜ் சேவை நிறுவன்ங்களால் தமிழக்த்துக்கு ஏற்பட்டுள்ள வலி மிகுந்த அனுபவங்களில் முதன்மையானது தாறுமாறான முறைய கட்டண உயர்வாகும்.

போக்குவரத்து வசதிகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக சாமாண்ய மக்களும், சிறுவியாபாரிகளும் மனது வைத்தால் ஹஜ்ஜுகு சென்று வரலாம் என்ற ஒரு சூழ்ல் ஏற்பட்டிருந்த நிலையில் க்டந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக ஹஜ்ஜை ஒரு லெக்ஸுரி வணக்கமாக ஹஜ் சேவை நிறுவன்ங்கள் மாற்றியிருந்தன. இனி ஒருவர் தனியார் நிறுவனத்தின் மூலம் ஹஜ் செய்ய விரும்பினால் அவர்  குறைந்த பட்சம் மூன்று இலட்சம் செலவ்ழிக்கத் தயாராக வேண்டும் என்ற பய்ங்கர நிலையை அவை ஏற்படுத்டியிருந்தன. எதிர்காலத்தில் இது எங்கு போய் நிற்கும் என்று அனுமானிப்பது தங்கத்தின் விலையேற்றத்தை போல கணிக்க முடியாத்தாக் ஆகியிருந்த்து.

இந்த விலை ஏற்றம் இயறகையானது அல்ல. ஹஜ் சர்வீஸ் நிறுவன்ங்கள் கூட்டணீ வைத்துக் கொண்டு சங்கம் அமைத்து செய்த செய்கிற அநீதியாகும். ஒரு தலைக்கு 10 ஆயிரம் லாபம் என்ற இலக்கை துர வீசி விட்டு ஒரு தலைக்கும் சுமார் 60 ஆயிரம் ரூபாய் என்று லாப இலக்கி நிர்ணயித்த்தே ஹஜ் கட்டணத்தின் இந்த திடீர் உயர்வுக்கு காரணமாகும்.  இது ஏதோ போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல் அல்ல. பல ஹஜ் சேவை நிறுவன்ங்களையும் துலாவிப் பார்த்த்தில் அவை தலைக்கு ரூ 40 ஆயிரத்திலிருது 60 ஆயிரம் வரை சூழ்நிலைக்கு ஏற்ப லாபம் சம்பாதிக்கின்றன என்ற தகவல் உறுதியாக்க் கிடைக்கிறது.

சேர்ந்து நல்லது செய்வதற்காக அல்லது பொதுவான பாதிப்புக்களை சேர்ந்து கலைவதற்காக் சங்கம் அமைப்பார்கள். ஆனால ஹஜ் சர்வீஸ் வழங்கும் சுமார் 25 நிறுவனங்கள் சேர்ந்து சங்கம் அமைத்திருப்பது அனைவருமாக சேர்ந்து கட்டணத்தை உயர்த்துவதற்காகத்தான் என்று ஒரு அனுபவஸ்தர் சொன்னார்.  இது மிகச் சரியான கருத்தே!

அனைத்து நிறூவன்ங்களும் ஓரே மாதிரி வசதிகளை வழங்குவதில்லை. ஓரிரு நிறுவன்ங்கள் மட்டுமே மிக அருகில் உள்ள இடங்களையும் போதுமான் உணவு வசதிகளை வழங்குகின்றன, மற்ற பல நிறுவன்ங்கள் ஹஜ் கமிட்டியின் முதல் நிலை ஹாஜிகளுக்கு வழங்கப் படுகிற இடவ்சதியையே வழங்குகின்றன, சில நிறுவன்ங்கள் உணவு வசதிகளை குறைந்த அளவிலேயே வைத்திருக்கின்றன, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தண்ணீர் கூட தருவதில்லை. பாட்டிலை எடுத்துச் சென்று ஜம் ஜம் நீரைக்க் குடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதாக ஒரு ஹாஜிமதாபில் வைத்து அழாக் குறையாக சொன்னார்.

ஹஜ் கட்டண உயர்வுக்கு அடுத்தபடியாக் ஹஜ் சேவை வழங்கும் நிறுவன்ங்கள் ஹாஜிகளை வேறு பல வகைகளிலும் ஏமாற்றுவதாக அந்நிறுவன்ங்களில் இணைந்து பணியாற்றுகிறவர்களே பெருமுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்  லுஹர் தொழுகைக்குப் பிறகு ஊர்ப்பிரமுகர் ஒருவர் என்னைச் சந்தித்தார். அடிக்கடி ஹஜ்ஜுக்குச் செல்கிற அவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயணம் செய்யவே அந் நிறுவனம் ஒரு கட்ட்த்தில் அவரையே இந்தப்பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தது. பல வருடங்களாக அந்நிறுவனத்தின் கவுரவ்ப்பிரநிதியாக அவர் செயல்பட்டார்.

 நான் அவருடைய ஹஜ் பயணத்தைப் பற்றி விசாரித்தேன். அவர் மிகுந்த விரக்தியோடு பேசினார். “ ஒவ்வொரு முறையும் ஹாஜிகள் ஏமாற்றப் படுகிறார்கள். அதை நேரில் அனுபவிக்கிற பலரும் மக்காவிலும் மதீனாவிலும் கடும் கோபமடைகிறார்கள் என்றாலும் அவர்களில் பெரும்பாலோர் ஒரு தடவை மட்டுமே ஹஜ்ஜுக்கு செல்பவர்களாக இருப்பதால் ஊர் திரும்பியவுடனே மறந்து விடுகிறார்கள். இந்த மறதி  ஹஜ் சர்வீஸ் நடத்துப்வர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விடுகிறது. அவர்கள் மறந்து விடுவார்கள் என்ற தைரிய்மே ஹஜ் நிறுவன்ங்கள் மேலும் மேலும் ஹாஜிகளை ஏமாற்ற காரணமாகிறது.  

ஹாஜிகளுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்வதற்கான் ஒரு அமைப்பு இல்லாத்தால் ஹாஜிகளுக்கு ஏற்படும் ஏமாற்றம் தொடர்கதையாகிவருகிறது  அதனால் ஹாஜிகள் நலச்சங்கம் ஒன்றை அமைக்கலாமா என்ற யோசனை  கடந்த சில நாட்களாக என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது  என்று சொன்ன அவரிடம் எவ்வாறு ஹாஜிகள் ஏமாற்றப் படுகிறார்கள் ? என்று கேட்டேன்.

இன்னா லில்லாஹ்

அட்வான்ஸாக வசூல் செய்கிற பணத்தை ரொடேசன் செய்வதில் தொடங்கி - பாரின் எக்ஸேன்ஜில் - விளையாடுவதில் தொடர்ந்து அரபுகளால் ஒதுக்கப்படுகிற அழுகிய வாழைப்பழத்தை வாங்குவது வரை ஹஜ் என்ற வார்த்தை எத்தனை அவலட்சனமான காரியங்களுக்கு உப்யோகப்படுத்தப் படுகிறது என்பதை அவர் பட்டியலிட்டார் பாருங்கள். நான் அதிர்ந்து போனேன்.  சப்ர் என்ற வார்த்தையை பய்ன்படுத்தி  தாராளமாக பணம் கட்டி வருகிற ஹாஜிகளை அன்னிய தேசத்தில் எப்படி எல்லம் சிலர் அலைக் கழிக்கிறார்கள் என்று அவர் கூறிய விவரங்களை இங்கு பட்டியலிட்டால் ஏடு தாங்காது.

அதனால்தான் .   ஹஜ்ஜின் இனிய நினைவுகளை விட ஹஜ் சர்வீஸ்கள த்ரும் துன்ப அனுபவங்கள்  சிலருக்கு ஆறாத வடுவாக அமைந்து விடுகின்றன என்றார் அவர். அப்படி ஒரு அனுபவத்தை நேரில் கேட்கிற வாய்ப்பு எனக்கு மலேஷியாவில் கிடைத்த்து.

இந்த ஆண்டு  ஒரு நிகழ்சிக்காக மலேஷியாவின்தைப்பிங்நகருக்கு  சென்ற போது அங்கிருந்த ஒரு பிரமுகரின்  வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து, அவரது வீட்டில்  சில பெரியவர்கள் ஏற்கென்வே காத்திருந்தனர். அறிமுகம் முடிந்த பிறகு எதேச்சையாக ஹஜ்ஜைப் பற்றி பேச்சு வந்த்து. அந்தப் பேச்சு ஏன் தான் வந்த்தோ என்று நான் பல முறை வருந்தினேன். நான் ஹஜ்ஜுக்கு சென்ற அதே வருடம் அதே ஹஜ் நிறுவனத்தின் கிளை வழியாகத்தான் அவர்களும் ஹஜ்ஜுக்கு வந்திருக்கிறார்கள். அதிகமான பணத்தை கட்டிவிட்டு ஹஜ்ஜுக்கு வந்த இட்த்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை சுமார் மூன்று மணிநேரம் ஏச்சும் பேச்சுமாக அவர்கள் பட்டியலிட்டார்கள். நிகழ்ச்சிக்கு நேரமாகி காரில் செல்லும் போது அது நிற்கவில்லை. அபரிமிதமான மழை கொட்டி வைப்பருக்கு அடங்காமல் கார் கண்ணாடியை மழை அழுத்துகிறது. சாலையில் மரங்கள் ஆங்காங்கே வீழ்ந்து கிடக்கின்றன. எதுவும் அவர்களது அந்த வசைபாடலை நிறுத்தவில்லை.

மற்றொரு ஹஜ் சேவை  நிறுவனத்தின் குளறுபடியை நானே நேரில் மதீனாவில் கண்டேன்.

மதீனாவில் மஸ்ஜிதுன்னவி பள்ளியின் வலது புறத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் தமிழகத்தின் பிரபலமான ஹஜ் நிறுவம் ஒன்றின் ஹாஜிகள் தங்கியிருந்தனர். ஒரு நாள் காலை நேரத்தில் அந்த் ஹோட்டலின் ஐந்தாவது அல்லது ஆறாவது தளத்திலிருந்து ஒருவர் பப்பே உணவுக்காக வைக்கப்படுகிற சதுரவடிவிலான பெரிய பெரிய சில்வர் பாத்திரங்களை தூக்கி வெளியே இருந்த பள்ளத்தில் வீசிக்கொண்டிருந்தார். ஒரே களோபரமாக இருந்த்து, என்னவென்று கேட்டபோது தூக்கி வீசியவர் கடும் கோபமாகநானும் பார்க்கிறேன். முன்னூறு நானூறு பேரைக் கூட்டிட்டு வந்துட்டு தினசரி 100 150 பேருக்கு போதுமான சாப்படு மட்டுமே வைக்கிறாங்க. கொஞ்ச தாமதமா வந்தாலும் எதுவும் இருக்கிறது இல்லை. மிச்சம் மீதி இருக்கிற சப்பிட்டுவிட்டு சப்ர் செய்யுங்கன்றாங்க!நாம் அமல் செய்யப் போவமா? இல்ல சாப்பாட்ட்த் தேடி ஓட்டலுக்கு போயிட்டிருப்போமா என்று கேட்டார். விசாரித்த போது அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு கை நீட்டம் கொஞ்சம் கம்மி தான் என்றும் எப்படிஎல்லாம் மிச்சம் பிடிக்க முடியுமோ அப்படி எல்லாம் மிச்சம் பிடித்து விடுவார் என்றும் அங்கு பணியாற்றுப்வர்களே சொன்னார்கள்

ஏராளமாக பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு உரிய வசதிகளைச் செய்து தராமல் சப்ர் என்ற ஒரு வார்ர்த்தையில் ஹாஜிகளை அடக்குமுறை செய்வது ஹஜ் சேவை நிறுவன்ங்கள் கைகொள்ளும் பிரதான தந்திரமாகும்.

இப்படித்தொடர்கிற தனியார் ஹஜ் சேவை நிறுவன்ங்களின் மிக முக்கியமான குளறுபடிகளில் ஒன்றுதான் பிளாக் மார்க்கெட்டில் ஹஜ் விசாவைப் பெற்று ஹஜ் சர்வீஸ் செய்வதாகும். அந்தக் குளறுபடி வேலைதான் இந்த ஆண்டு பல முஸ்லிம்களின் ஹஜ் ஆனந்த்த்தை கடைசி நேரத்தில் கனவாக்கி கண்ணீர் விட வைத்து விட்டது. இந்த வருடம் ஏற்பட்ட இந்த விபத்தால் ஹஜ் பயண் ஏற்பாட்டில் கடந்த சில வருடங்களாக பெருகி வந்த மோசடி வியாபாரம் இப்போது அமலமாகியிருக்கிறது.

இதில் சிறிய்வர்கள் பெரியவர்கள் என யாரையும் யோக்கியதாம்சத்தில் தரம் பிரிப்பத்ற்கில்லை. அரசிடமிருந்து ஹஜ்ஜுக்கு ஆட்களை அழைத்துச் செல்ல கோட்டா அனுமதியே பெறாதவர்களும். தங்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட கோட்டா அளவுக்கு அதிகமாக ஆட்களை பதிவு செய்தவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்..

பல வருடங்களாக ஹஜ் சேவை வழங்கும் நிறுவன்ங்களுக்கு அரசு ஒரு 50,100, 200, என ஆட்களை அழைத்துச் செல்லும் கோட்டாவை ஒதுக்குகிறது. ஒரு கட்ட்த்தில் ஹஜ் சர்வீஸ் செய்வதை நிறுத்தி விடும் சில நிறுவன்ங்கள்; அல்லது ஒதுக்கப் பட்ட கோட்டா அளவுக்கு ஹாஜிகளைச் சேர்க்க முடியாதவர்கள் தங்களிடமிருக்கிற ஹஜ் விசாவை மற்றவர்களுக்கு விற்கிறார்கள். பெரும்பாலும் மேற்கு வங்காளம் உத்திரப் பிரதேசம் கர்நாடகா பகுதிகளுக்கு ஒதுக்கப் படுகிற ஹஜ் விசாக்கள் பிளாக் மார்க்கெட்டில் விற்கப்ப்டுகின்றன, இதனால் ஹாஜிகளுக்கு சேவை எதுவும் வழங்காம்லே சில பெயர் தாங்கி நிறுவன்ங்கள் ஹஜ் விசாவை விற்று உட்கார்ந்த இட்த்தில் லாபம் சம்பாதிக்கின்ற்ன, இவர்களிடமிருந்து விசாக்களை பெற்றுத்தான் தமிழகத்தில் உள்ள சில் சிறு நிற்வன்ங்கள் ஹாஜிகளை அழைத்துச் செல்கிறார்கள். இந்திய அரசிடம் பதிவு செய்து கோட்டா ஒதுக்கீட்டுக்கு காத்திருப்ப்பதைத் தவிர இந்நிற்வன்ங்களுக்கு ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதற்கான எந்த அனுமதியும் இருப்பதில்லை. கோட்டா அனுமதி பெற்ற நிறுவன்ங்களும் தங்களது அளவுக்கு அதிகமாக ஆட்கள சேருகிற போது கள்ள மார்க்கட்டில்  விசா பெற்று ஹாஜிகளை அழைத்துச் செல்கிறார்கள்,

இந்த முறைகேடான விசா பரிவர்த்தனை எந்த விதமான கூச்சமும் குற்ற உணர்வுமின்றி ஹஜ் நிறுவன்ங்களால் ஹலால் ஆக்கப்பட்ட நடைமுறையாக தொடர்ந்து நடந்த்வந்த்து.

ஹஜ் உம்ரா விசாவுக்கு சவூதி அரசு கட்டணம் வசூலிப்பதில்லை, ஆனால் பல தமிழக நிறுவன்ங்களும் விலை கொடுத்துத்தான் விசாக்களை வாங்கின, இதில் கொடுமை என்ன்வெனில் கோட்டா வைத்திருக்கிற் நிறுவங்கள் இலவசமாக கிடைக்கிற விசாக்களுக்கு கூட விலை வைத்துத்தான ஹாஜிகளிடம் கட்டணம் வசூலித்தன.
க்டந்த இரு ஆண்டுகளுக்கு முன்னாள் ஹஜ் கட்டணைம் பெரிய அளவில் உயர்த்தப்பட்ட போது அதிக லாபம் பார்த்த தமிழக்த்தின் மிகப் பிரபலாமான் ஒரு நிறுவனத்தின் தலைவர்  ஊர் திரும்பவதற்குள்ளாக மக்காவில் வைத்தே அடுத்த வருஷ கட்டணம் 2,30,000  என்றாராம்.  அதே நபரிடம் என்ன ஹாஜி இப்படி ஏத்திட்டே போறீங்க என்று ஒரு ஹாஜி கேட்க அவர் கோபமாக் எங்கிட்ட 300 விசா இருக்கு ஒரு விசாவை 25 ஆயிரத்திற்கு விற்றாலே எனக்கு உட்கார்ந்த இட்த்திலே 75 லட்சம் கிடச்சுடும். என்றாராம் ஹஜ் நிறுவன்ங்களின் சேவைப்பாதை சேமிப்பு பாதைக்கு தடம் புரண்ட்தில் இந்த விசா விற்பனை பற்றிய மனக்கணகும் ஒரு காரணமாகும்.

இந்த முறைகேடான வழியில் ஒரு நன்மை ஏற்பட்ட்து. பல புதிய நிறுவன்ங்கள் தங்களுக்கு அரசிடம் கோட்டா கிடைக்காவிட்டாலும் பிளாக்கில் விசா வாங்கி ஹாஜிகளை பிரபலமான் ஹஜ் நிறுவங்களை விட  குறைந்த கட்டணத்தில் அழைத்துச் சென்றன, சங்கம் அமைத்துக் கொண்ட பிரபலமான ஹஜ் நிறுவன்ங்களுக்கு 2007 க்குப்பிறகு இவை ஒரு போட்டியாக இருந்தன். இந்தப் போட்டி இல்லாவிட்டால் பிரபல நிறுவன்ங்கள் மூன்று அல்லது மூன்றை லட்சம் இல்லாவிட்டால தனியாக ஹஜ் செய்ய முடியாது என்ற கட்டாயத்தை தமிழக் மக்களுக்கு ஏற்படுத்தியிருப்பார்கள்.

சென்ற ஆண்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த ச்சி தரூர் இந்த தகிடுத்த்தங்களை தெரிந்து கொண்டு பல பெரிய நிறுவன்ங்க்ளிடமிருந்து விசாக்களை குறைந்த சிறு நிறுவன்ங்களுக்கு கொடுத்தார். அதனால் கடைசி நிமிட்த்தில் ஹஜ் கட்டணம் வெகுவாக குறைந்த்து. சுமார் 1,25 ஆயிரத்தில் பிரைவேட்டாக ஹஜ்ஜு செய்யும் பாக்கியம் பலருக்கும் கிடைக்த்த்து,

இதன் காரணமாக இந்த ஆண்டு பிரபலாமான பல நிறுவன்ஙகளில கூட்டம் குறைந்த்து. புதிய சிறு நிறுவன்ங்களில் நிறைய ஆட்கள் சேர்ந்தனர்,

இதற்கிடையே யாரால் நடந்துது என்று யூகிக்க் முடியாத அளவில் இந்தியாவில் விசா விற்கப்படுவது குறித்து அறிந்து கொண்ட சவூதி அரசு இந்திய அரசாங்கத்திற்கு இது பற்றி தகவல் தெரிவித்து இதைக் க்ண்காணிக்குமாறு கூறியது. இந்த விசா பரிவர்த்தனையில்  ஈடுபட்ட சில நிறுவன்ங்களுக்கு ஆட்சிப்பொறுப்பிலிருப்பவர்களோடு நெருங்கிய தொடர்பு இருந்த்த்தால் இந்தக் கண்கணிப்புச்செய்தி வெளியே கசிந்து அந்நிறுவன்ங்கள் விசாக்களை விற்பனை செய்யாமல் தாமதப் படுத்தின. சில நிறுவன்ங்களை மாட்டினால் மொத்தமாக் போய்விடும் என்று பயந்து விசாக்களை விற்க மறுத்தன. இதனால் விசா விலை இரு மடங்க்காக உயர்ந்த்து. விசா பெறுவதும் தாமதமானது. இதில் ஹாஜிகளிடம் குறைந்த கட்டணத்தை வசூலித்திருந்த நிறுவன்ங்கள் மக்காவிலிம் மதீனாவில் அறைகளை முன் பதிவு செய்வதற்கு 10 லட்சம் பதினைந்து லட்சம் என்று கொடுத்டிருந்தாலும் கூட விசாவுக்கு இப்போதிருக்கிற மார்க்கெட் நிலைவரத்தில் விசாவைப் பெற்றால் 30 லட்சம் 50 லட்சம் நட்டமாக்க் கூடும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்த்து ஹாஜிகளிடம்  பணத்தை திருப்பித்ததருவதாக கூறி பாஸ்போட்டை ஒப்ப்டைத்து விட்டன. இவ்வாறு நேர்ந்த்தற்காக வருத்தம் தெரிவித்து பத்ரிகைகளில் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கும் விளையாட்டுத்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி நேர்ந்த்தர்காக மிகவும் வருத்தப்படுவதாக பாதிப்படைந்த நிறுவனங்களும் அதே போல தாங்களும் வருத்தப்படுவதாகவும் இனிமேல் ஹாஜிகள் நல்ல கம்பெனிகளை பார்த்து தேர்வு செய்யுமாறுஅதாவது த்ங்களைத் தேர்வு செய்யுமாறு சங்கம் வைத்துக் கொண்ட கம்பனிகளும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன.

பாதிக்கப் பட்டவர்களுக்கு நிறுவன்ங்கள் முழு தொகையை வழங்கி விட்டாலும் கூட
ஹஜ்ஜுக்கு தயாராக இருந்த ஒருவருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை தேவையில்லாம நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எத்தனை பேர் முழு தொகையை எப்போது கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. இதற்கெல்லாம் மேலாக அவர்களூக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு அளவே இல்லை.

இரண்டு முறை ஹஜ்ஜுக்கு சென்றிருந்தும் மூன்றாவது தடவையாக ஹஜ்ஜுக்காக முழுமையாக் தயாராகி விட்ட நிலையில் கடைசி நேரத்தில் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாமல் போகவே  கதறி அழுதார் ஒரு ஹாஜி. பார்க்கிறவர்கள் எல்லாம் கேட்பார்களே என்பதை விட என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார் அவர்.

படுபாவிகள்! ஒரு நான்கு நாட்களுக்கு முன்னாள் சாடையாகச் சொல்லியிருந்தால் கூட நான் விருந்து வைக்காமல் தவிர்த்திருப்பேனே என்றார் மற்றொருவர். தட்கலில் இரயில் டிக்கட் பதிவு செய்த்தில் பல ஆயிரம் ஒருவருக்கு நஷடம். அது கூட அவருக்கு பெரிதில்ல இந்த வருஷமாவது கஃபாவை கண்ணாரப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மண்ணாகிப் போனதே அழுது புலம்பினர் அவர்.  

ஒரு புனிதப் பயணத்தின் ஏற்பாடு ஏன் இப்படி சபிக்கப்பட்ட தொழிலாகிவிட்ட்து ?


இந்திய அரசைப் பொறுத்த வரை, ஹஜ் நிறுவன்ங்களை பற்றி அது கண்டுகொள்வதில்லை. புனிதப் பயணத்தில் குறிக்கிடுவதாக குற்றச்சாட்டு வந்து விடும் என்றோ அல்லது எங்குதான் இந்த மோசடிகள் இல்லை என்ற எண்ணுவதாலோ என்னவோ அரசு  ஹஜ் கமிட்டிகளையோ ஹஜ் சேவை  நிறுவன்ங்களையோ  கண்கானிக்கவும் கட்டுப்படுத்தவும்  எந்த ஏற்பாட்டையும் செய்வதில்லை. ஹாஜிகள் முதன் முறையாக கிளம்புகிற விமான்ங்களுக்கு வந்து புகைப்படமெடுத்து வழியனுப்பி   வைப்பதோடு  அரசின் பணி நிறைவ்டைந்து விடுகிறது. பல நூறு கோடி ரூபாய் ம் மக்கள் பணம் புழங்குகிற ஒரு வியாபாரத்தில் மக்கள் நல்ன் எப்படிப் பேனப்ப்டுகிறது என்பது பற்றி அரசு அக்க்றை எதுவும் செலுத்துவதில்லை.  

 ஒரு ஹஜ் நிறுவனத்திற்கு வழங்கப் படுகிற அனுமதி எப்படி பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை தணிக்கை செய்ய இதுவரை எந்த ஏற்பாட்டையும்  அரசு செய்த்தில்லை. அப்படிச் செய்திருக்குமானால் கல்கத்தாவுக்கும் உத்தரபிரதேசத்துக்கும் கர்நாடகாவுக்கும் வழங்கப்பட்ட அனுமதியில் சென்னயிலிருந்து பலர் ஹஜ்ஜுக்கு செல்வதை அவர்கள் எப்போதோ கண்டுபிடித்திருக்க முடியும். இதில் நடக்கும் உள்குத்து வேளைகளை முன்னரே தடுத்திருக்க முடியும்.

இதில் ஒரு படி மேலே சென்று கடந்த முறை மத்திய வெளியுறவுத்துறை இனையமைச்சராக இருந்து ஹஜ் விவகாரங்கலை கவனித்த . அஹ்மது அவர்கள் கட்சிக்க்க்க என்ற பெயரில் ஹஜ் விசாவில் பெருமளவில் விள்ளயாடியதாக செய்திகள் பரபரபாக பேசப்பட்டன .  அவாது உறவினர்களுக்குச் சொந்தமான் அல்ஹிந்த என்ற நிறுவனத்தீற்கு இந்தியாவில் மற்ற எவரையும் விட அதிகம் கோட்டாக்கள் ஒதுக்கப் பட்டதாக புகார் எழுந்த்து. அந்நிறுவனம் தான் தனக்கு கிடைத்த அனுமதிகள்ள கள்ளச் சந்தையில் அதிகப் பணத்திற்கு விற்றதாக செய்திகள் கூறுகின்றன.

ஹாஜிகள் ஹஜ் நிறுவனம்க்களை நம்பி ஏமாந்து போவதற்கு ஹஜ் கமிட்டிகளும் ஒரு காராணம் ஹஜ் கமிட்டிகளின் நடவடிக்கை வெளிப்படையாக இருப்பதில்லை. அதுவே பல்ரும் தனியார் சேவைகளை அணுக காரணமாகிறது.

ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிற ஒருவர் ஹஜ் நிறுவன்ங்களை விட ஹஜ் கமிட்டியில் மோசடிகள அதிகம் நடப்பதாக கூறினார். ஹஜ் கமிட்டிகளில் நிர்வாக ரீதியாக மட்டுமே குறைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் ஹஜ் கமிட்டிகளின்  நிதி முறைகேடுகள்பற்றிய செய்தி தெரியாது.

ஹஜ்ஜில் பணத்தில் முறைகேடு செய்யும் பணி மும்பை ஹஜ் கமிட்டியில்  கொடிகட்டிப்பறப்பதாக பலரும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். ஹஜ் கமிட்டிக்காக அறைகளை பதிவு செய்ய சவூதிக்கு   செல்லும் பொறுப்பாளர்கள்  ஹாஜி ஒருவரின் தலைக்கு   சுமார் 300 ரியால்களுக்கு மேல் சம்பாதிப்பதாகவும் அது துறைவாரியாக பங்குவைக்கப் படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. அது மட்டுமல்லாது மத்திய அரசின் தனி ஒதுக்கீட்டின் கீழ் துறை வாரியாக விசா வைத்திருப்பவர்களும் கனிசமான தொகைக்கு அதை விற்ற் காசுபார்க்கிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஹஜ் கமிட்டியில் குலுக்கல் நடக்கும் நாட்களில் அரங்கிற்கு வெளியே நிற்கும் சில நபர்கள் குலுக்களில்  பெயர்  விழாத ஹாஜிகளை அணுகி  10 ஆயிரம் கொடுத்தால் கன்பார்ம் செய்து தருகிறோம் என்று சொல்கிறர்கள். பணம்  வழங்கினால் கன்பார்ம் செய்து கொடுக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஓருவர், புரோக்கர் ஒருவர் ரூபாய் 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு கடைசி நிமிட்த்தில் கன்பார்ம் செய்து கொடுத்த்தாக் கூறினார். ஊரிலிருந்து கிளம்ப டிக்கெட் முன்பதிவு கிடைக்காத்தால் அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்டில் பயணித்து அவர் சென்னை சென்றார். அலட்டல் அரசியல் பேர்வழிகள் சிலர் இந்த அசிங்கமான தரகின் பின்னணியில் இருக்கிறார்கள். லாட்டரிக்கு பெயர் பெற்ற ஒரு அரசியல் பிரமுகர் இந்த ஹஜ் ஒதுக்கீடு விசயத்தில் தொடர்ந்து விளையாடிவருவதாக ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகப் பேசப் பட்டுவருகிறது.

அனுபவமும் ஹாஜிகள் நலனில் அக்கறை கொண்ட சிலரிடம்  இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பற்றி பேசிய போது அவர்கள் காய்தல் உவத்தல் இன்றி பல தீர்வுகளை கூறினார்கள்.
  
·         கள்ள மார்க்கெட்டில் ஹஜ் விசாவை விற்பனை செய்பவர்கள் திருட்டு விசிடி குற்ற்வாளிகளைப் போல குண்டர் தடைச் சட்ட்த்தில் கைது செய்யப்பட வேண்டும். இதற்கு தேவையான சட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகளை முஸ்லிம் பொதுமக்களும் அமைப்புக்களும் உடனடியாக கோர வேண்டும்.

·         ஹஜ் விசா பரிவர்த்தனைகளை கண்காணிக்க அரசு புலனாய்வு அமைப்புக்களுக்கு உத்தரவிடவேண்டும். இதுவரை முறைகேடாக செய்லபட்ட அமைப்புக்களை புலனாய்வு செய்து அந்நிறுவன்ங்களுக்கு வழங்கப் பட்ட அனுமதியை இரத்து செய்ய் வேண்டும்.

·         ஹ்ஜ்ஜுக்கு செல்ல நினைப்போருக்கு தகுந்தவழி காட்டுவதற்காகவும்  ஹாஜிகளுக்கு ஏற்படும் குறைகளை கலைவதற்காகவும்  அவர்கள் ஏமாற்றப் படாதவாறு கண்காணிக்கவும்
·         மாநில வாரியாக ஹாஜிகள் நலச்சங்கம்  அமைக்கப் பட வேண்டும்.

·         ஹாஜிகள் நலச்சங்கத்தின் மூலம்  ஹஜ் சேவை வழங்கும் தனியார் நிறுவன்ங்களின் கட்டண விகிதமும் சேவையின் தரப்பட்டியலும் ஆடிட் செய்யப்பட்டு அவற்றிற்கான் நட்சத்திரக் குறியீடுகள் வழங்கப்பட்டால் போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறாமல் தடுக்க முடியும்.

·         ஹஜ்ஜுக்கான கோட்டா வழங்குவதில் பழைய நிறுவன்ங்கள் சேவை தரத்தை அரசு கண்கானிக்க வேண்டும். அந்நிறுவன்ங்களின் மீதான  உண்மையான புகார்களை இது விசயத்தில்  கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய நிறுவன்ங்கள் அனுமதித்தால் மட்டுமே கட்டணம் மற்றும் தரத்தில் போட்ட்ச் சூழ்நிலை உருவாகும் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கான வ்ழிவகைகள் காணப்பட வேண்டும்.

·         தனியார் ஹஜ் நிறுவன்ங்களின் கட்டணம் இப்போதிருப்பதிலிருந்து 20 சதவீதம் குறைக்கப் பட வேண்டும்.

·         ஹரமுக்கு அருகிலுள்ள தங்குமிடங்களை வழங்கும் சிறந்த சேவை நிறுவன்ங்கள் 1.75.000 ரூபாய் கட்டணம் வசூலித்தாலே தங்களது செல்வுகள் போக கணிசமாக லாபம் ஈட்டமுடியும்.  1,90,000 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வசூலித்தால்  ஒரு ஹாஜிக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை லாபம் சம்பாதிக்க முடியும் என்று நியாய்யமாகவும் ஓரளவு துல்லியமாகவும் பேசக்கூடிய  அனுபவஸ்தர்களும் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சிலரும் கணித்துச் சொல்கிறார்கள்.
  .
தமிழகத்தின் பல  பள்ளிவாசல்களிலும்  இப்போது ஹஜ் சர்வீஸ் விளம்பரங்களை அனுமதிப்பதில்லை.  காம்பவுண்டில்  மாட்டினால் கூட கழட்டி எடுத்து விடுகிறார்கள்.என்று ஒரு நண்பர் கூறினார். ஹஜ் நிறுவின்ங்களின் வியாபார மோகம் குறையாவிட்டால் நிலமை இதைவிடவும் மோசமாகலாம்.