Posts

Showing posts from July, 2010

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன் “சாத்தான் அனுப்பிய அரக்கன் இவன்”– அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் கோபம் கொப்பளிக்க உச்சரித்த இந்த கடுஞ்சொற்கள் இறுதியில் 22 வயது அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனையை பெற்றுத்த்ந்து விட்டன. இந்தியக் குற்ற வழக்கு சரித்திரத்தில் மிக விரைவாக வழங்கப் பட்ட தீர்ப்பு இது. கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் சதுக்கம், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் ஊள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 25 வெளிநாட்டவர் உள்ளிட்ட 166 பேர் பலியாயினர். 304 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் இந்தியாவின் பிரபல என்கவுனடர் ஸ்பெஷலிஸ்டான ஹேமந்த் கர்கரே உட்பட 14 போலீஸாரும் அப்பாவிப் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் பலியாயினர். அஜ்மல் காசப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் மும்பை தாக்குதல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ...

திருமணப் பதிவுச் சட்டம் - தீராக் குழப்பம்!

2009 நவம்பர் 24 ம் தேதி முதல் தமிழகத்தில் நடை பெறுகிற அனைத்து திருமணங்களையும் அரசுப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்ததிலிருந்து அரச்ல் புரசலாக கிளம்ம்பியிருந்த புகை மூட்டம் நாட்கள் செல்லச் செல்ல “எங்கள்து பிணங்ககளின் மீது சென்று தான் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும்” என்ற சவடால் வரை வளர்ந்துள்ளது. 80 களின் பிற்பகுதியை நினைவூட்டும் ஒரு போராட்டச் சூழலுக்கு முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்லும் ஆவேசப் பேச்சுக்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன · 2009 ம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி "அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். · உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும்' · கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழு...