Posts

Showing posts from July, 2014

ஜகாத் பைத்துல்மால்

( சென்னை ஜமாத்துல் உலமா மலரில் வெளியான கட்டுரை ஆலிம்களின் பயானுக்காக சில மாறுதல்களுடன் . ) இஸ்லாம் இந்த மன்னுக்கேற்ற மாற்றம் நூலில் வலம்புரிஜான் எழுதினார் . எல்லாச் சமயங்களும் தர்மத்தை ஆதரித்தன . ஆனால் அதை வலியுறுத்தி கடமையாக்கிய சமயம் இஸ்லாம் ஒன்றுதான் . மேம்போக்கான ஒரு பார்வையில் இஸ்லாத்தை பெருமைப் படுத்தும் இக்கருத்து சரியாகத் தோன்றினாலும் இதிலுள்ள உண்மையையும் பெருமையை இன்னும் சற்று ஆழமாக தேடவேண்டும் . இங்கு தர்மம் என்று குறிப்பிடப்படுகிற ஜகாத் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கடமை அல்ல . இஸ்லாத்திற்கு முந்தை தெய்வீக சமயங்களிலும் ஜகாத் ஒரு கட்டாய கடமையாகவே வலியுறுத்தப் பட்டு வந்துள்ளது . அல்பகரா அத்தியாயத்தின் 83 வது வசனம் “ தொழுகையை நிலை நிறுத்துங்கள் ; ஜகாத்தை கொடுத்து வர்ருங்கள் ” என யூத சமுதாயத்திடம் உறுதி மொழி பெறப்பட்ட்தாக கூறுகிறது . وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىوَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّ...