மீலாது சிந்தனை – அவர் இப்படி இருந்தார்!
மீ – மனித வரலாற்றில் முஹ்ம்மது ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை ஒரு அதிசயம் . உலகின் அதிக மரியாதைக்குரியவர் என்றல்ல அதிக தகவலுக்குரியவர் என்ற தளத்திலும் முஹம்மது நபி ( ஸல் ) தனித்துவம் பெற்றுத் திகழ்கிறார் . முஹம்மது நபியைப் பற்றிய தகவல்கள் வரலாற் றில் ஏராளமாக கிடைக்கின்ற என்பது மட்டுமல்ல அவை மிகத் துல்லியமாக வும் ஆதாரங்களின் பின்னணியிலும் கிடைக்கின்றன என்பதே மிக முக்கியமானது . பேராசிரியர் ஹிட்டி சொல்வது போல “ முஹம்மது ( ஸல் ) வரலாற்றின் பேரொளியில் பிறந்திருக்கிறார் .” "he was born in the full light of history. பதிவுச் சாத ன ங்கள் பெருகி வழிகிற காலத்தில் வாழ்கி ற இன்றைய தலைவர்களைப் பற்றிக் கூட இ வ்வளவு தகவல்கள் கிடைத்திருக்காது . ஒரு காந்தி , ஒரு லெனின் , ஒரு போப் , ஒரு மண்டேலா , ஒரு ஐன்ஸ்டீன் , ஒரு மாரடோனா , ஒரு கிளிண்டன் ஒரு மைக்கேல் ஜாக்ஸன் , ஒரு பெர்னாட்ஷா , என கோடிக்கணக்கான மக்களால் க...