பெருநாள் சிந்தனை
இனி இஸ்லாம் வெல்லும் “ அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதின் 8 வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுகிறார்கள் ” இணைய தளங்கள் பலவற்றிலும் தற்போது பரபரப்பாக இருக்கிற செய்தி இது . இந்த ஆண்டு ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் செப்டம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் படக்கூடும் . ஒரு வேளை செப்டம்பர் 11 ம் சனிக்கிழைக்கு அது தள்ளிப் போகவும் இடமுண்டு . ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் பிறையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படுகிறது . ரம்லான் 29 முடிந்த பிறகு அன்றைய இரவு அந்தி வானத்தில் சந்திரன் இளம் பிறையா க க் கண்ணுக்கு தென்பட்டால் அது ஷவ்வால் மாத்த்தின் முதல் தேதியாக அமை யும் என்ற இஸ்லாமிய சட்ட விதியின் படி பிறை தெரிகிறதா உலகெங்கிலும் இருக்கிற முஸ்லிம்கள் ஆர்வத்தோடும் ஆசையோடும் அந்தி வானத்தை அன்னாந்து பார்க்கிறார்கள் . பிறை தென்பட்ட தென்றால் எங்கும் மகிழ்சி ப...