முஸ்லிம்கள் கனிசமாகவும் செல்வாக்காகவும் வாழ்கிற பகுதிகளில் இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட இந்துத்த்துவா சக்திகளுக்கு தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது ஒரு நமச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது. அந்த நமச்சலை தீர்த்துக்கொள்ள மேற்கொள்ளப் பட்ட ஒரு நடவடிக்கை தான் தாரபுரத்தில் அரங்கேறியிருக்கிறது. தாரபுத்தில் உள்ள ஒரு பள்ளிவசலில் பன்றியை கொன்று வீசியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரு நகரங்களில் தாராபுரமும் ஒன்று. 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அந்நகரில் சுமார் 25 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். தாராபுரம் நகர் மன்றத்தின் 30 உறுபினர்களில் நால்வர் முஸ்லிம்கள்.தாரபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர்கள் 1.70,000 பேரில் முஸ்லிம்கள் 23 சதவீதம் இருப்பதாக நகர் மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட் பகுதிகளில் 12 பள்ளிவாசல்கள் இருக்கின்றன். அவற்றில் சில் நூற்றாண்டுகள் கண்டவை. இந்தப் பகுதியில் பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழ்கிற நகரங்களில் தாராபுரமும் ஒன்று. தாரபுரத்தின் புற நகர்ப் பகுதியான கண்ணன் நகரில் உள்ள மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசலில் 2007 டிஸம்பர் 7 ம் வியாழக்கிழமை நள்ளிரவில் யாரோ சிலர் ஒரு பன்றியை கொன்று விசியிருக்கிறார்கள்.
மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் அதைப் பார்ர்த்து அதிர்ந்துள்ளனர். நூற்றுக்கும் குறைவான முஸ்லிம்கள் வாழ்கிற புற நகர்ப் பகுதி அது. தொழகைக்கு வந்த நான்கைந்து முஸ்லிம்கள் அக்கம் பக்கத்திலுள்ள இந்துக்களிடம் விசயத்தை தெரிவித்துள்ளனர். அவர்களும் பதறிப் போயிருக்கிறார்கள். இந்தக் அக்கிரமத்திற்கு எதிராக தங்களது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இந்துக்கள் சிலரும் உடன் சென்றுள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவர் சம்பத்தும் உடன் இருந்துள்ளார். அன்று ஜீமா தொழுகைகுப்பின் ஒன்று கூடிய ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் காவல் துறை உயர் அதிகாரியை சந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். முஸ்லிம்களை சமாளிப்பதற்காக காவல் துறை அப்பகுதியைச் சார்ந்த கருணாகரன் என்பவரை கைது செய்து மிக விரைவாக அவரிடமிருந்து ஒப்புதல் வாக்கு மூலத்தையும் பெற்று குண்டர் தடை சட்டத்தில் அடைத்துள்ளது காவல் துறையின் நடவடிக்கை முஸ்லிம்களுக்கு திருப்தியளிக்கவில்லை. வெள்ளிக் கிழமையை தேர்வு செய்து, ஒருவர் மட்டுமே இக்காரியத்தை செய்திருக்க முடியாது. இதன் பின்னணியி ஒரு திட்டமிட்ட கூட்டுச் சதி இருக்கிறது என்று கருதிய அவர்கள் இதில் தீர விசாரணை செய்து சம்பந்தப் பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு போரடியுள்ளனர். காவல் துறை அவர்களது கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. அதனால் ஆவேசமுற்ற முஸ்லிம்கள் அடுத்த வெள்ளிக்கிழ்மை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியுள்ளனர். காவல் துறை அனுமதிக்க மறுத்துள்ளது. மேல் நடவடிக்கை குறித்து தாராபுரம் ஐக்கிய ஜமாத் நிதானமாக யோசித்துக் கொண்டிருந்த போது தங்களது மாநிலத்தலமை உத்தர்விட்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டு த.மு.மு.க. த.த.ஜ. உள்ளிட்ட அமைப்புக்கள் தடையை மீறி ஊர்வலம் செல்ல முடிவெடுத்துள்ளனர். ஜனவரி 4 ம் தேதி தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 2500 முதல் 3000 ஆயுரம் பேரை காவல் துறை கைது செய்து, அன்று மாலை விடுதலை செய்துள்ளது.
இதற்கிடையே சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களிலேயே அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்திய இந்து முன்னணியினர் முஸ்லிம் பயங்கரவாதிகள் வேணுமென்றே இவ்வாறு செய்து விட்டு இந்துக்கள் மீது பழிபோடுவதாக பேசியுள்ளனர். தாராபுரம் இந்துக்களுக்கு பாதுகாப்புக் கோரி கருத்தரங்கம். மோசமாகவும் கடுமையாகவும் பேசியுள்ளனர். நகருக்குள் துண்டுப் பிர்சுரங்களையும் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர். பதற்றமான ஒரு சூழ்நிலையில் இத்தகைய ஒரு கூட்டத்திற்கு காவல் துறை எப்படி அனுமதி கொடுத்தது என்று உள்ளூர் வாசிகள் வியப்புத்தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாசலில் பன்றியை வீசியிருப்பது முஸ்லிம்களை மிக வேகமாகவும் எளிதாகவும் பதட்டமடையச் செய்வதற்காக மேற்கொள்ளப் பட்ட உத்தியாகும். ஈன குணம் கொண்ட கிராதகர்ளை வேறு யாரும் இந்த இழி செயலை செய்திருக்க முடியாது. அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்து முன்னணியின் ராமகோபாலன் அங்கு வந்து சென்றுள்ளார். குஜராத்தில் இப்படித்தான் முஸ்லிம்கள்மீது அக்கிரமத்தை அரங்கேற்றுவதற்கு முன் அங்குள்ள பள்ளிவாசலில் பன்றியை கட்டிவைத்துள்ளனர். இந்த்துத்துவா சக்திகள் தமிழகத்திலும் அப்படி ஒரு கலவரத்தை அரங்கேற்றுவத்ற்கு ஒத்திகை பார்க்கிறார்களா என்பதை உன்னிப்பாக் கவனிக்க வேண்டியது தமிழக அரசினுடைய பொறுப்பு.
தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக உள்ளூர் முஸ்லிம்கள் பொறுமை காக்கிறார்கள் என்று தெரிகிறது. காவல் துறையின் நடவடிக்கை போதுமானதல்ல என்ற கருத்து தாராபுரம் நகர மக்கள் பலருக்கும் இன்னும் இருக்கிறது. அங்குள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக அமுங்கியிருந்த இந்துத்துவா சக்திகளின் ஆத்திர மூட்டுகிற செயல்கள் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் தலை தூக்கியிருப்பது கவலை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆயினும் தங்களது அதிருப்தியை ஒரு கட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். அதுவே புத்திசாலித்தனமும் நன்மை பயக்கக் கூடியதுமாகும்.
ஒரு அளவுக்கு மேல் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டு செல்வது இந்துத்த்துவா சகதிகளுக்குத்தான் லாபமாக அமையும். இப்படிச் செய்துவிட்டார்களே என்று ஆத்திரப் படுவதை விட இதன் மூலம் அவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள் என்பதை யோசிப்பதும் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடாமல் பார்த்துக் கொள்வதுமே புத்துசாலித்தனமாகும். நகரத்தில் முஸ்லிம்கள் மீது குரோத்ததை ஏற்படுத்துவதும், நகர மக்கள் மத்தியில் நிலவுகிற நல்லிணக்கத்தை குலைப்பதும் இந்துதுதுவா சக்திகளின் பிரதான நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற தாரபுரம் மக்கள் வாய்ப்பளிக்க வில்லை என்பது நிம்மதியளிக்கிற விசயம். சம்பவம் நடந்த உடனே பல அரசியல் கட்சியினரும் அப்பகுதியில் வசிக்கிற இந்துக்கள் பலரும் இந்த அக்கிரமத்திற்கு எதிராக இருந்தார்கள் என்ற செய்தி இந்த தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையளிக்கிற செய்தியாகும். இததகைய மக்கள் சக்தியின் சங்கமத்தை பார்க்கிற சாத்தான்கள் பொறாமையிலும் விரக்தியிலும் எரிந்து சாம்பலாகிப் போவார்கள். பொதுவான மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலமே இத்தீய சக்திகளை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தாரபுரத்தில் ஒரு கோயிலிருந்த சிலைகள் காணாமல் போயின. இது முஸ்லிம்களின் பழிவாங்கும் செயல் இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து முன்னணியினர் எகிறிக் குதித்தனர். காவல் துறை விரைந்து செயல்பட்டு சிலைகள் ஒரு கிணற்றில் வீசப்பட்டிருப்பதை கண்டுபிடித்த்தது. அதில் முஸ்லிம்களுக்கு தொடர்பில்லை என்பதையும் கண்டுபிடித்தது. இதற்குப் பிறகும் ராம கோபாலன் அங்கு வந்துள்ளார். அதன் விளைவாக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் வேண்டு மென்றே தாராபுரத்தில் ஒரு நாள் கடையடைப்பை அறிவித்திருக்கிறார்கள். பிரச்சினையை பயந்து வியாபாரிகள் யாரும் கடையை திறக்க வில்லை எனினும் இந்தச் செயல் அனைத்து வியாபாரிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் பள்ளிவாசலில் பன்றி வீசப்பட்ட போதோ, தடையை மீறி போராட்டம் செய்த போதோ முஸ்லிம்கள் இத்தகய அராஜகம் எதையும் செய்ய வில்லை என்பது அவர்களிடம் நல்ல சமிக்ஞயை உருவாக்கியிருக்கிறது.
முஸ்லிம் அமைப்புக்கள் இயக்கங்கள் அமைப்புக்கள் சுய விளம்பரத்திற்கு முயற்சித்து காரியத்தை கெடுத்துவிடாமல் இந்த உண்மையை புரிந்து அதற்கேற்ப நடக்கிற வரை முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்குமான இந்த நட்புறவு தொடரும். தாராபுரம் ஐக்கிய ஜமாத் பொறுப்பை உணர்ந்து விரைவாகவும் விவேகமாகவும் செயல்படும் என்றால் அத்தகைய விபத்துக்கள் எதுவும் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். அவர்களால் தான் நகரிலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் பிர்முகர்களையும் அணுக முடியும். அதன் மூலம் சமூக நல்லைணக்கத்தை கட்டிக்காக்க முடியும் என்று தாராபுரம் நகரைச்சார்ந்த சமூக அக்கறையுள்ள பலரும் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் வலிமையாக இருந்து களப்பணியாற்றியிருக்கிற பகுதி இது. இப்போதோ அந்தப் பேச்செல்லாம் தாத்தா பாட்டி கதையாகிவிட்டதால் ஐக்கிய ஜமாத் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று ஆக்கப் பூர்வமாக செயல் பட வேண்டிய தருணம் இது. அது உறுதியாகவும் விரைவாகவும் முடிவெடுக்க் தயங்கும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தின் சௌஜன்ய வாழ்வு கேள்விக்குரியதாக ஆகக் கூடும்.தாராபுரத்தின் நிகழ்வை கருத்தில் கொண்டு, தமிழ்கத்தின் மற்ற பகுதிகளில் உள்ள் முஸ்லிம் ஜமாத்துக்களும் விழிப்போடும் எச்சரிக்கையோடும் செயல் பட வேண்டியது அவசியம்.
ராமகோபாலைனப் போன்ற அருவருப்பான ஆசாமிகள் தமது மதிப்புமிகுந்த வாழ்க்கையில் விளையாடிவிட முஸ்லிம்கள் அனுமதித்து விடக்கூடாது. 200 மில்லி சாராயத்துக் காக அந்த அருவருப்புக்களின் ஆணைக்கு கட்டுப்பட்பவர்களைப் பார்த்து அனுதாபப் பட பழக வேண்டுமே தவிர தமது பொன்னான நேரத்தையும் உழைப்பையும் பாழ்படுத்தும் செயல்களில் முஸ்லிம்கள் ஈடுபடக் கூடாது. அந்த அருவருப்புக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். கலவரங்களும் பதற்றமும் எங்கு நிகழ்கிறதோ அங்கு தான் அவர்களால் வளர முடியும். அதற்கான தூண்டுதலை செய்வதை கைவந்த கலையாக கொண்டிருக்கிறார்கள்.
தாரபுரத்தில் ஒரு கலகத்திற்கு தூண்டில் போட முயன்ற தீய சக்திகள் இந்தப் பன்றியை அதன் கொக்கியில் மாட்டி வீசியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் மீண்கள் தூண்டில்காரனை தண்ணீருக்குள் இழுத்துப் போட்டு விட்டு தங்களது பாதையில் பயணிக்கப் பழகிவிட்டன. அந்தப் பயணம் தொடரட்டும். இந்துத்துவா வீழட்டும். இந்திய தேசம் வாழட்டும்.