அஜ்மீர் அரசியல்
ஏபரல் 8 ம் தேதி பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒரு நாள் சொந்தமுறைப் பயணமாக இந்தியா வந்தார் . ‘ சுல்தானுல் ஹிந்த் ’ என்றும் ‘ கரீப் நவாஸ் ’ என்றும் புகழப்படுகிற அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ் தர்ஹாவிற்கு ஜியாரத் செய்ய வந்த அவரை மதிய விருந்துக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்தார் . தில்லி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நெ 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்ட சர்தாரி , பிரதமர் மன்மோகனுடன் தனிமையில் நேருக்கு நேர் 45 நிமிடங்கள் உரையாடினார் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர் என்று இந்தியா குற்றம் சாட்டுகிற ஜமாத்து தாவா அமைப்பின் தலைவர் ஹாபிழ் முஹம்ம்து சஈதை கைது செய்ய போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தானின் உச்சசநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் , உலகின் நியாயவான் (?) அமெரிக்கா ஏப்ரல் 2012 ல் அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்தது . அதன் எதிர் நடவடிக்கையாக பாகிஸ்தானை பூர்வீமாக கொண்டு இங்கிலாந்தின் ரோதர்ஹாமில் Rotherham வசிக்கிற பெரும் பணக்கார்ர...