காலையில் பத்ரிகையை புரட்டியதும்
மல்லிப்பட்டினத்தில் கலவரம் என்ற செய்தி அதிர்ச்சியளித்த்து.
ஓட்டுக்கேட்டு அந்த வழியாக
சென்ற பா ஜ கவின் வேட்பாளரை முஸ்லிம்கள் தடுத்த்தாகவும் அதையும் மீறி உள்ளே சென்ற வேட்பாளரின்
வாகனத்தை முஸ்லிம் இளைஞர்கள் கற்களால தாக்கியதால் வேட்பாளரும் அவருடன் இருந்தவர்களும்
காயமடைந்த்தாகவும் . அதன் பிறகு வன்முறை சம்பவத்தில் சில வாகன்ங்களுக்கும் ஒரு வீட்டுக்கு
தீ வைக்கப்பட்ட்தாக் அந்தச் செய்தி கூறியது.
மல்லிப்பட்டினத்தில் பணியாற்றும்
இமாம் ஒருவரையும் அந்த ஊரின் பிரதான மீனவர் சங்க பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த்த
போது கீழ் காணும் செய்திகள் அறியக் கிடைத்தன.
இராமநாதபுரம் தொகுதியில்
இரு கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி இருப்பதால் எப்படியாவது அங்கு வென்று விட
வேண்டும் என்பதை பா ஜ க் ஒரு தேசிய தீர்மாணமாகவே வைத்திருக்கிறது. திருவாளர் மோடி வருகிற
16 ம் தேதி இராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இரமாநாதபுரம் வேட்பாளராக
ஹெச் இராசா நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த்து, ஆனால் கருப்பு என்கிற முருகானந்த்த்தை
பா ஜ க வேட்பாளராக அறிவித்தது பொதுவான வாக்காளர்களை ஆச்சரியப்படுதியது. காரணம் முத்துப்
பேட்டைக்கு அருகே உள்ள தம்பிக் கோட்டை என்ற பகுதியை சார்ந்த கருப்பின் மீது அத்தனை
கிரிமினல் வழக்குகள் உள்ளன. சுமார் 20 க்கும் மேற்பட்ட கிரிமினல வழக்குகளில் பல கொலை
வழக்குகள். பா ஜ கவும் இந்துத்துவ சக்திகளும் இவரை முன்னிறுத்தியதற்கு ஒற்றைக் காரணம்,
இவர் அந்தப் பகுதியில் முஸ்லிம்களை அச்சுறுத்துகிற ஒரே சக்தி.
முஸ்லிம்கள அச்சப்படக்காரணம்
அமைதியாக இருக்கிற கிராமங்களுக்கு ஒரு முறை கருப்பு வந்தால் பின்னால் தானாகவே கலவரம்
வந்து விடும் என்பது தான்.
இராமநாதபுரம் தொகுதிக்கு
உட்டபட்ட முஸ்லிம்க பெருவாரியாக வாழ்கிற மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் வழியே பிர்ச்சாரம
செய்ய அனுமதிக்கு மாறு கருப்பு கோரியிருக்கிறார். அதை அந்தப் பகுதி மக்கள் மறுத்திருக்கிறார்கள்.
தன்னையும் தன்னுடைய வாகனத்தையும் அனுமதிக்குமாறு தான் பேசாமல் அந்த இட்த்தை கடந்து
சென்ரு விடப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஊர் ஜமாத்தார்களும் பெரியவர்களும் அனுமதித்து
விடலாம் என்று கூறியிருக்கிறார்கள். அப்போது இளைஞர்களின் ஒரு இவர் வந்தால் கலவரம் செய்யாமல்
போவதில்லை அனுமதிக்க முடியாது என்று தடுத்திருக்கிறார்கள் அதை மீறி வாகனம் உள்ளே சென்ற
போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றிருக்கிறது, இதில் இரு தரப்பாரும் காயம்டைந்துள்ளனர்.
வேட்பாளரை உள்ளே விடாமல்
தடுத்த்து யார் என்று விசாரித்த போது அந்தப் பகுதி இமாமும் மற்றவர்களும் எஸ் டி பி
ஐ கட்சியின் ஒரு பிரிவினர் அவர்களுடைய தலைவர்களை மீறி இதில் ஈடுபட்ட்தாக கூறினர். கோவையிலிருக்கிற
எஸ் டி பி ஐ சார்ந்த நணபரிடம் விசாரித்த போது
இப்படி வாக்களர் யாரையும் தடுக்க கூடாது என்று தமது இயக்கம் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும்
இதில் ஈடுபட்ட்து பழனி பாபா பெர்யரில் இயங்கும் ஒரு அமைப்பை சாரந்தவர்கள் என்றும் ஒரு
தகவல் கிடைத்த்து. இன்னும் இதை தீர விசாரிக்க வேண்டும்.
எப்படியே கல்லெறிந்தவர்கள்
எறிந்து விட்டு போயவிட்டார்கள் திங்கட்கிழமை லுஹர் தொழுக்க்குப்பின் பள்ளிவாசலை முற்றுகையிட்ட்
போலீஸ் உள்ளிருந்து வருவோரை கைது செய்ய ஆயத்தமானது. இறுதியில் ஜமாத்தார்கள் பேச்சுவார்த்தை
நட்த்திய பின தொழுகையாளிகள் வெளியேற சுமர் 50 வரை போலீஸ் கைது செய்திருப்பதாக தெரிகிறது.
இப்படி ஒரு சிறு பொறி போதாதா
இந்துதுத்துவா சக்திகளுக்கு. முஸ்லிம்கள் கனிசமாகவும் வசதியாகவும் வாழ்கிற ஒவ்வொரு
ஊரைய்ப் பற்றியும் அவர்களிடம் ஏர்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிற பீரீ பிளான்கள்
இருக்கின்றன. எந்த ஒரு சிறு மோதலின் தொடர்ந்து அடந்தேறி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை
நசுக்கிவிட வேண்டும் என்பது அத்திட்டங்களில் ஒரு முக்கிய அம்சம். அப்படி நசுக்க வேண்டுமானால்
என்ன் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சாவகாசமாக திட்டு மிட்டு வைத்திருக்கீறார்கள்.
அன்று மதியம் பா ஜ வினர்
மறியல் ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில வாகன்ங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன,
ஒரு குடிசை எறிக்கப்பட்டிருக்கிறது.
இது ஏதே தெருவில் நடந்த
தகராறு என்று நினைத்துக் கொண்டு உறங்கிய முஸ்லிம்களுக்கு இன்று காலை பொழுது புலர்ந்த்த
போது இதயத்தைல் இடி விழுந்த்து..
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
ஏழை மீனவர்களுடைய பல் போட்டுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. மொத்த சேத்த்தின்
மதிப்பு இரண்டு கோடியை தாண்டும் என மீனவர் சங்க பிரமுகர் கூறினார் பல வாகன்ங்களுக்கு
தீ வைக்கப்பட்டிருந்த்து. முஸ்லிம் ஒரு வருக்கு சொந்தமான டீசல் பங்குகில் பணியாற்றிய
பணியாளரை தாக்கிய வெறிக்கும்பல் அவரிடமிருந்து சுமார் 2.5 இலட்சத்த்தை கொள்ளையடித்து
சென்று விட்டனர்.
இன்று காலை 10 மணிக்கு நான விசாரித்த போது பாதிப்பின் முழு விவரமும் தெரியவில்லை.
கருப்பு, தான் யார் ? எப்படி
பட்ட சக்தி படைத்தவன் என்பதை காட்டி விட்டார்? மல்லிப் பட்டினம் முஸ்லிம்கள் கையை பிசைந்து கொண்டு
நிற்கிறார்கள்.
கல்வீசி வீட்டு ஓடியவர்கள்
அடுத்து அப்பாவி மக்களுக்கு என்ன நேரும் என்று யோசித்தார்களா? மக்களை பாதுகாக்க திராணியற்றவரகள்
ஒன்றுக்கு இருந்தால் மணல் கட்டியை கூட கையில் எடுக்க கூடாதல்லவா?
ஒரு வேட்பாளரின் முகத்தில்
கரியை பூச, விரல் மையை விட வீரியம் வேறு எதற்கு இருக்கிறது ?
ஏற்பட்ட் நட்ட்த்திற்கும்
இனி தொடரும் சிரமங்களுக்கும் ஏதாவது பயன் உண்டா?
தேர்தலுக்குமுன் எப்படியாவது
கலவரங்களை உருவாக்கி விடும் இந்துத்துவாவின் தந்திரம் உ.பி யில் அரங்கேறி வெறியாட்டம்
போட்டது. இப்போது அதை அறுவடை செய்ய அமித்ஷாவை அனுப்பி வைத்திருக்கிறது. தமிழ் நாட்டில்
அத்தகைய ஒரு சூழ்நிலைக்கு நாள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கோவை சேலம் உள்ளிட்ட பல
இடங்களிலும் முய்றசி செய்தார்கள். மல்லிப்பட்டினம் மாட்டிக் கொண்ட்து.
தமிழக முஸ்லிம் மஹல்லாக்களே!
கவனமாக இருங்கள்.
நாய்கள் குறைக்கட்டும்,
பயம் இல்லை எனில் அமைதியாக இருங்கள். பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பு இருக்குமெனில காவல்
துறை , தேர்தல் ஆனையத்தை முறையாக அனுகுங்கள். பொருளாதார அமைப்புக்களின் பாதுகாப்பை
உத்தரவாதப் படுத்திக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் இந்த உம்மத்தையும்
அதன் சாலிஹான புத்திரர்களையும் பத்திரமாக பாதுகாப்பானாக!