Monday, October 06, 2008

ஜம்மு : இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதம்

நெருப்பில்லாமல் புகையுமா? என்றால் புகையாது தான். ஆனால் உயர் பதவியில் இருந்த இரண்டு பொறுப்பில்லாத மனிதர்கள் மூட்டிவிட்ட சிறு நெருப்பு இந்தியா அரசியல் வானில் இவ்வளவு பெரிய புகை மூட்டத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சிரமாமாக இருக்கும் தான். ஆனால் அது தான் உணமை.

காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் பாரதீய ஜனதாவை சார்ந்தவருமான s.k.சின்ஹா, அமர்நாத் ஷரீன் போர்டின் நிர்வாக அதிகாரியாக இருந்த அருண்குமார் I.A.S ஆகிய இரண்டு பேர் சர்வசாதரணமாக மூட்டிவிட்ட நெருப்பில் காச்மீர் பள்ளத்தாக்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.


இரண்டு மாதங்கள் மட்டுமே மனிதர்கள் வசிக்க முடிந்த ஒருபனிமலைப் பிரதேசத்திற்கான போராட்டத்தில் இந்திய அரசியலில் வெகுசூடான விசித்திரமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய இலட்சணங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

நாட்டின் 62 வது சுதந்திரதின கொடியேற்றத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீரில் அமைதி ஏற்பட ஒத்துழைப்புத்தாருங்கள் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சகதிகளிடம் கையேந்தாத குறையாக கோரிக்கக வைத்திருப்பது அந்த விசித்திரங்களில் முதல் அம்சம். ஆனால் இத்தனைக்கும் சூத்திரதாரியான ஆர் எஸ் எஸ் ,ரக்சியமாக ஜம்மு பகுதிக்கு ஆட்களை அனுப்பி வன்முறைத் தீயை வளர விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர் எஸ் எஸின் ஊதுகுழலான பாரதீய ஜனதா மக்களின் எரிகிற பிரச்சினை பற்றி சிறீதும் கவலைப் படாமல் “நிலத்தை திருப்பிக்கொடுத்தால் அமைதி திரும்பும்” என்று வாயாடிக் கொண்டிருக்கிறது.

இது நாடு முழுவதிலும் வகுப்புவாத தீயை பற்றவைத்து விடக்கூடாதே என்று தேசியச் சக்திகள் அச்சப் பட்டுக் கொண்டிருக்கிற சூழலில் 13 பேரை வைத்துக் கொண்டு இல.கணேசன் சென்னை அண்ணாசாலையில் அமர்நாத யாத்ரீகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது அவலமாகிப் போன அரசியலின் அசிங்கமான வெளிப்பாடு என்றால் தொட்டதற்கெல்லாம் பெணகளை இழுத்துக் கொண்டுபோய ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் முஸ்லிம் அமைப்புக்கள் அமர்ந்நாத்தின் நிலவரம் குறித்து பத்ரிகைகளில் லாபியிங் கூட செய்யத் தெரியாமல் விழிப்பது இந்திய முஸ்லிமகளின் கையாளாகாத்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. .

150 வருடங்களுக்கு முன்பு, அமர்நாத் குகையை பதான்கோட் நகரின் பூடாமாலிக் என்கிற ஒரு முஸ்லிம் குடியானவர் தன் கால்நடைகளை தேடும்போது முதன்முறையாக கண்டுபிடித்தார். காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் 3,888 மீட்டர் உயரத்திலும் உள்ள இந்த அமர்நாத் குகையின் உட்புறத்தில் லிங்கம் (ஆண் இன உறுப்பின் மாதிரி வடிவம்) ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி காஷ்மீரின் பனிப் பொழிவு மாதங்களில் மீண்டும் உருப்பெறுகிறது. இயற்கை சூழலில் உருவாகிற இச்சிலையை கடவுளின் வடிவம் என்று கருதி இந்துக்களில் ஒரு சாராரான் சைவர்கள் வழிபடுகிறார்கள். அதாவது வழிபட யாத்திரை செய்து வருகிறார்கள். இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிகுத் தெரிவித்ததார் என்ற புராணங்களும் பிற்பாடு கருத்துக் கொண்டன. இங்கு பார்வதி மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளதாக கூறப்படுகிற அதே வளையில் சமீபத்தில் பனி லிங்கம் கரைந்த போது கோயில் நிர்வாகம் யாத்ரீகர்களை கவர்வதற்காக் செயற்கையாக லிங்கத்தை உருவாக்குகிறது என்ற சர்ச்சையும் எழுந்ததுண்டு. குகை, கோயில், லிங்கம் என்ற விசய்ங்களைத் தாண்டி பனிமலைகளை கடந்து பயணம் செய்கிற ஒரு வீர தீர பயணம் என்ற அளவிலும் இது யாத்ரீகர்களை கவர்ந்து வருகிறது.அதனால் ஒரு காலத்தில் சன்னியாசிகளும் வாழ்ந்து முடித்துவிட்டவர்களும் பயணம் செய்த இந்த இடத்திற்கு இபோது சுற்றுலா மோகத்தில் இளைஞர்களும் இளைஞிகளையும் திரளாக வர ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் காஷ்மீர் மாநிலத்துக்கு தாள் ஏரிக்கு அடுத்த படியான சுற்றுலா மையாமாக அம்ர்நாத மாறியிருக்கிறது.

இந்திய தீப கற்பத்தின் உச்சியில், இமய மலையின தென்மேற்குப் பகுதியில் இந்திய சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் காஷ்மீரில் உள்ளது. இரண்டு லட்சத்து நாற்பத்திரண்டாயிரம் சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அங்கு 15 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அதில் தொன்னூறு சதவீதம் போர் முஸ்லிம்கள். பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே அங்கு இந்துக்கள் வாழ்கிறாகள்.

காஷ்மீர் கடந்து அரைநூற்றாண்டுகளாக எரிந்துகொண்டிருக்கிற ஒரு கனல். கடந்த இருபது ஆண்டுகளில் நாற்தாயிரம் முஸ்லிம்களை அது பலி கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று பேசப் பட்டாலும் சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சியில் காஷ்மீர் ஹுர்ரரிய்யத் அமைப்பின் தலைவர் மீர்வாயிஸ் உமர் பாரூக் , இந்தியர்களே ! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. அது ஒரு பிரச்சினைக்குரிய பகுதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்! என்று சொன்னது போல பல்த்தை சர்சைக்கும் சச்சர்வுகளுக்கும் உள்ளான் உள்ளாகிக் கொண்டிருக்கிற ஒரு பகுதி அது. (விரிவான தக்வலுக்கு பார்க்க: சம்நிலச் சமுதாயம் மாத இதழ்.

அங்கு முழுக்க முஸ்லிம்கள் வாழ்கிற பகுதியில் கடந்த 150 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற அமர்நாத யாத்திரை ஆரம்பத்தில் இரட்டை இலக்கங்களில்தான் இருந்தது. தொன்னூறுகளின் வாக்கில் அமர்நாத பிரபலமடைந்தது. இப்போது அது லர்சக்கணக்கானோர் பயணம் செய்யும் ஒரு யாதிரைத்தலமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த வரை நடிகர் ரஜினிகாந்த இமயமலை பயணம் போவார் என்ற செய்தி பிரபலாகிய அளவுக்கு அமர்நாத யாத்திரை இன்னும் பிரபல்மாகவில்லை என்பதே உணமை, யாத்திரை சிறு அளவில் இருந்ததலிருந்து இன்று வரை அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்களின் ஒத்துழைப்போடுதான் நடக்கிறது என்பதும் காஷ்மீரில் உள்ள பிரிவினைக் குழிவினர் கூட யாத்திரையை தடுக்க முயற்சித்ததில்லை. இன்னொரு வார்த்தையில் சொவதானால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்கள் முஸ்லிம்களின் ஒத்துழைப்பில்லாமல் இந்த யாத்திரையை இத்தனை காலம் தொடர்ந்திருக்க முடியாது.

“காஷ்மீரில் முஸ்லிம்கள் இருக்கும் வரையில் அமர்நாத் யாத்திரை தொடரும்” என மக்களவையில் கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா கூறியதை அவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மேசையைத் தட்டி வரவேற்றனர் எனபது அமர்நாத யாத்திரை விசயத்தில் காஷ்மீர் உள்ளிட்ட இந்திய முஸ்லிம்களின் கருத்து என்ன என்பதை நாடு அறிந்து ஏற்றுக் கொண்டதற்கான பாராட்டாக அமைந்தது.

இத்தகைய சூழலில் அமர்நாத் கோயில் விவகாரம் எப்படி சர்சைசயில் சிக்கியது என்பதும். இக்கோயில் நிர்வாகத்திற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை வழங்க அனுமதித்த, முஸ்லிம்களை பெருவாரியாக கொண்ட மக்க ஜனநாயக் கட்சியே அதை திரும்பப் பெறும்படி அரசை நிர்பந்தித்து ஏன்? அரசுக்கு வழங்கிய ஆதரவினை வாபஸ்பெற்றது ஏன் என்பதும் இப்போது இந்திய மக்களின் முன் எழுந்துள்ள பிர்தான கேள்வியாகும்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகத்திற்காகவும் பாம்பூரில் இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு என்றும் பல ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு தரப் பட்டது. இந்துக்களுக்களின் கோயிலுக்கு தேவையான நிலம் தரப்பட வில்லை என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அது உண்மையை திரித்து போலித்தனமாக மக்களிடம் மதவாத வெறியேற்றுவதற்காக சொல்லப் படுகிறது என்றாலும் அதன் பின்னணி என்ன? என்பதை அறிவதும் இப்போதைய அவசியத் தேவையாகும்.

இந்தப் பரந்த தேசத்தின் மக்களுக்கு, விரிந்த வசதிகளைக் கொண்ட ஊடகங்கள் தேசத்தின் ஒரு முக்கியமான பிரச்சினையில் சரியான செய்தியை கொண்டு போய்ச் சேர்க்கவில்லை என்பது இந்தியாவை பிடித்திருக்கிற ஊடக பயங்கர வாத்ததின் ஊமை வெளிப்பாடாகும். தினகரன் நாளேடு சென்னை அண்ணாசாலையி இலகணேசன் நடத்திய அலம்பலை எழுதுகிற போது அமர்நாத யாத்திரையை முஸ்லிம்கள் தடுப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார் என்று எழுதியிருந்தது. கல்யாண வீட்டு வாசலில் எச்சில் இலைகளுக்காக காத்திருக்கிற பிச்சைக்காரர்களைப் போல பத்ரிகையாளர் சந்திப்பின் இறுதியில் கவரில் விழும் சில்லைரைகளுக்கா காத்திருக்கிற செய்தியாளர்கள் பெருகி விட்டசூழலில் செய்திகளை தேடி எடுத்து அதை காய்தல் உவத்தல் இன்றி அலசிச் சொல்லுவோர் அரிதாகிப் போவிட்டனர். பத்ரிகை அல்லது பத்ரிகயாளர் போர்வையில் இயக்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் அடிமைச் சாசணம் எழுதிக் கொடுத்து விட்ட அலிகளின் எண்ணிக்கையும் செய்தித் துறையில் பெருகிவிட்டது. இதனால் அமர்நாத யாட்திரையாளர்களுக்கு வசதி செய்து கொடுப்பதை முஸ்லிம்கள் தடுக்கிறார்கள் அதுதான் இப்போதையா பிரச்சினை என்று பலர் தவறாக விளங்கியிருக்கிறார்கள். உனமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா தடம் போட்டுக் கொடுக்க ஆர் எஸ் எஸ் அமைப்பு காஷ்மீர் விசயத்தில் தனது கன்வுத்திட்டத்தை அமுல்படுத்த மேற்கொண்ட ஒரு வெள்ளோட்டமே இந்தக் கலவரங்களின் தொகுப்பு. அமர்நாத் யாத்திரை விவகாரத்தில் நடைபெற்ற சில உள்ளடி வேலைகளின் வரலாற்றை கொஞ்சமாக புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.

நூற்றம்பது ஆண்டுகளாக நல்லபடியாக நடந்து வந்த அமர்நாத யாத்திரையில் 1996 ம் ஆண்டு ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த ஆண்டு பணிப்புயலுக்கு பலியாகி 250 யாதிரீகள் இறந்தனர். அதை தொடர்ந்து யாதிரீகளுக்கு வசதிகள் செய்து தருவதற்காக நிதிஸ் சென்குப்தா தலைமையிலான் கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டது

அந்தக் கமிட்டி அமர்நாத குகைகோயில நிர்வகிக்கவும் யாத்ரீகர்களின் தேவைகளை கவனிக்கவும் ஒரு நிர்வாகக் குழுவை ஏற்படுத்த பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது தான் அமர்நாத் செரீன் போர்டு. 2000 மாவது ஆண்டில் பரூக அபதுல்லா வின் தலைமையிலான முஸ்லிம்களின் அரசாங்கம் தான் இந்த போர்டை நியமித்தது. முஸ்லிம்கள் யாத்திரையயோ அல்லது அதற்கு வச்திகள் செய்து தருவதையோ தடுக்க நினைத்திருந்தால் பிரச்சினைக்குர்ய இந்த ஷ்ரீன் போர்டே வந்திருக்காது. ஆனால் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை. ஷரீன் போர்டு காஷ்மீர் மாநில சுற்றுலாத்துறையின் கீழ் சிறப்பகவே நிர்வகிக்ப் பட்டு வந்தது.அதன் மூலம் கழிப்பிட வசதி உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கப் பட்டு வந்தன.

இன்றைய பிரச்சினை 2003 ம் ஆண்டு காஷ்மீர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற கே.எஸ். சின்ஹா வின் வடிவத்தில் முளைவிட்டது.

பொதுவாக காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர்கள் பண்டைய இந்தியாவை ஆட்சி புரிந்த பிரிட்டிஷின் வைஸ்ராய்களைப் போலவே நட்ந்து கொள்கின்றனர் என்பது அதிகம் பேசப் படாத நிஜம், காஷ்மீர் மாநில ஆளுநருக்கு வழங்கப் பட்டுள்ள அதிக அதிகாரமும் அங்குள்ள் ராணூவத்திற்கு தனி சட்ட உரிமைகள் வழங்கப் பட்டிருப்பதும் ராணுவத்தின் ஒரு கண்ட்ரோல் ஆளுநரிடம் இருப்பதும் மாநில அரசு என்ற ஒரு அமைப் பையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்தது. ஆளுநரை தாஜா செய்து அல்லது மாஜா வாக வைத்திருக்கும் மாநில மாநில முதல்மைச்சரே சிரமிமின்றி மாநிலத்தை ஆளமுடியும் என்ற நிலையில் பாரதீய ஜனதாவைச் சார்ந்தவரான ஆளுந்ருக்கு இந்துக்களுக்காக தான் எதையாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. ஷ்ரீன் போர்டின் தலைவராக இருந்த ஆளுநர் சின்ஹா ஷ்ரீன் போர்டுக்கு முழு நேர அலுவலராக அருண்குமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தார். ஷ்ரீன் போர்டு என்ற பெரைப் பயன்படுத்தி இந்த இருவரும் அடித்த கூத்துதான். அமர்நாத் விவகாரத்தை சிக்கலாக்கியது. மாநில அரசின் சுற்றுலாத்துறைக்கு கீழே நிர்வகிக்க்ப் பட்டு வந்த ஷ்ரீன் போர்டு ஒரு தனி அரச்சாங்கத்தையே அமர்நாத்தில் நடத்த தொடங்கியது. சின்ஹா, மாநில அரசின் ஒப்பு தல் இல்லாமலே, தன்னிச்சையாக வன இலாகாவிற்கு சொந்த மான 100 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு ஒதுக்குவதாக அறிவித் தார்.

அருண்குமார் தன் பங்குக்கு அதிக உரிமை எடுத்துக் கொண்டு வனப் பகுதிக்கு சொந்தமான கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தில் பெரிய அலுவலக்ம கோயிலுக்கு எதி திரட்டுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். ஒருகட்டத்தில் அவரது அதிகப் படியான செயல் அந்தப் பகுத்தியில் வசித்துப் வந்தவர்களை துரத்தும் நோக்கில் அமைந்தது. பாரப்பரியமாக சுற்றுலாப் பய்ணிகளுக்கு உதவுவதன் மூலம் பல்வேறு காண்டிராக்ட் வேலைளைச் செய்து பிழைத்து வந்த அமர்நாத பகுதி மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக அங்கிருந்த பல்வேறு கட்டிடங்களை அருண்குமார் இடித்துத்தள்ளத் தொடங்கினார். இதுவே எரிகிற தீயில் எண்ணை வார்த்தது. பிரச்சினை சூடுபிடித்தது. உள்ளூர் மக்கள் முறையிடவே அப்போதைய முதல்வர் முப்தீ முஹம்மது இடிக்கும் பணிக்குத் 2005 ம் ஆண்டு தடை விதித்தார்.

அப்போது இந்தியா வில் வேறு எங்கும் நடக்க முடியாத ஒரு ஆச்சரியம் நடந்தது. மாநில அரசின் ஒரு அதிகாரியே அந்த அரசின் நிர்வாக உத்தவுக்கு எதிர்ரன் மாநில உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். உயர்நீதிமன்றம் ஷ்ரீன் போர்டு இடிப்புப் பணியை தொடர அனுமதித்தது. அந்தப் பகுதியில் பாரம்பரிய்மாக வசித்து வரும் மக்களின் நன்மையை கவனிக்காமல் ஒரு அரசு இருக்கமுடியாது என்ற நிலையில் பிரச்சினையை ஏற்படுத்திய அருண்குமாரை மாநில அரசு கோயிலின் நிர்வாக அதிகாரப் பொறுப்பிலிருந்து நீக்கியது.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவின் மிதப்பில் ஷ்ரீன் போரடின் தலைவரான மாநில ஆளுநர் சின்ஹா வனத்துறையின் 100 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு மாற்றித்தருமாறு மாநில அரசுக்கு கடிதம் அனுப்பினார். இந்த பிரச்சினை இப்போது காஷ்மீரி மக்களா? ஷரீன் போர்டா என்ற இருமுனப் போட்டியாக உருவெடுத்த சூழலில் அரசாங்கம் அக்கடிதத்தை கிடப்பில் போட்டது.

ஜம்முவைச் சார்ந்தவரான குலாம் நபி ஆஸாத் காஷ்மீரின் புதிய முதல்வராக் பொற்ப் பேற்ற பிறகு ஆளுநரின் நெருக்குதல் காரணமாக இந்த ஆண்டு மே 26ம் தேதி மாநில அரசு பாலாட்டலில் உள்ள 38 ஹெக்டேர் நிலத்தை 2.5 கோடிக்கு பதிலாக மாற்றிக் கொடுக்க ஒப்புக் கொண்டது. அப்போது வனத்த்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த காஷ்மீர் மக்கள் ஜனநாயக் கட்ட்சியை சார்ந்த ஒருவர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஒரு முஸ்லிமின் தல்மையிலிருந்த அமைச்சரவை ஒரு முஸ்லிம் அமைச்சரின் ஒப்புதலோடு அமர்நாத கோயிலின் வசதிக்காக 100 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக மாற்றிக் கொடுத்தது. இந்தச் சூழலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண்குமார் ஐ.ஏ.ஏஸ் நிலம் வழங்கப் பட்டது நிரந்தரமானது என்று பேட்டியளித்தார்.

ஏற்கெனவே சின்ஹாவின் தலைமையில் இருந்த ஷ்ரீன் போர்டின் சர்சைக்குரிய நடவ்டிக்கைகளால் அதிருப்தியுற்றிருந்த மக்கள் இதனால் அதிக கோபமுற்ற போராட ஆரம்பித்தார்கள். ஆளுநரின் நடவ்டிக்கையில் அதிருப்தியுற்ற முப்தி முஹம்மதின் மக்கள் ஜனநாயக் கட்சி நிலத்தை திரும்பப் பெறுமாறும் யாத்ரீகர்களுகான பணிகளை காஷ்மீர் சுற்றுலாத்துறையே மேற்கொள்ளுமாறு நிர்பந்தித்தது. ஒரு கட்டத்தில் அக்கட்சி குலாம் நபி ஆஸாத்துக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கவே குலாம் நபி ஆஸாத் பதவியை ராஜினாமா செய்தார். அவ்வாறு ராஜினாம செய்வதற்கு முன்னதாகவே அருண்குமார் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ள சூழலில் அடுத்த யாத்திரைக்கான ஏற்பாடுகள சுற்றுலாத்துறையே மேற்கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்து முடித்திருந்தார்.

இந்த சூழ்நிலையி காஷ்மீரின் புதிய ஆளுனரான வோரா விசயம் தவறான போக்கில் சென்று தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை கருத்தில் கொண்டு, யாத்ரீகர்களுக்க்கு வசதி செய்து கொடுப்பது முக்கியமே தவிர யார் செய்வது என்பது முக்கியமல்ல என்பதை உணர்ந்து, ஒன்று மில்லாத ஒரு விசயத்திற்காக மாநிலத்தில் ஒரு பெரும் மோதல் ஏற்படுவாதை தடுக்கும் நோக்கில் தற்காலிக நிலம் வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற்றார். அவரே ஷரீன் போர்டின் தலைவர் என்ற முறையில் அரசிடம் நிலம் கோரிய ஷரீன் போர்டின் கோரிகை ம்னுவையும் திரும்பப் பெற்றார்.

தன் கட்சியைச் சார்ந்த ஆளுநர் மாற்றப் பட்ட உடனேயே கலவ்ரத்துக்கு தயாராகிவிட்ட பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துதுவ சக்திகள், ஆளுநர் வோரா அரசின் முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றதும் அமர்நாத சங்கர்ஷ் சமிதி (அமர்நாத் போராட்டக் குழு) என்ற பெயரில் திட்டமிட்டு ஜம்முவிலேயே கலவரத்தை தொடங்கின. ஆர் எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றும் பல முன்னாள் ராணுவத்தினர் ஜம்முவிற்கு அனுப்பிவைக்கப் பட்டனர். அவர்கள் வெகுசுதந்திரமாக ஜம்முவிலிருந்தை முஸ்லிம்களின் வீடுகளையும் வியாபார நிறுவனங்களையும் சுறையாடினர். பல நூற்றுக்கணக்கான குஜ்ஜார் இன முஸ்லிம்களை வீடுகளை விட்டு துரத்தினர். முஸ்லிம்களை மட்டுமல்லாது இக்கலவரத்துக்கு எதிராக இருக்கிற இந்துக்களையும் மிரட்டினர், ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். ஆளுநர் வோராவின் நிர்வாகமும் மத்திய அரசும் அந்த வன்முறையாளர்களை தடுத்தால் இந்துக்களின் எதிரி என்ற குற்றச் சாட்டுக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தே வாளாவிருதனர். கிட்டத்தட்ட குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப் பட்டதை ரகசியமாக அனுமதித்த மோடி அரசாங்கத்தின் செயலை ஒத்ததாக இது அமைந்தது. மீடியாக்கள் கூட சட்டஒழுங்கை நிலை நிறுத்த முயற்சி செய்யாமல் இது என்ன வேடிக்கை? என்று கேட்கும் அளவு மத்தியை ஆளும் காங்கிரஸ் வாளாவிருந்தது. பிரச்சினை அதுவாகவே ஒரு தீர்வைத் தேடிக் கொள்ளும் என்ற காங்கிரஸின் கர்ண பரம்பரை அனுகுமுறையையே காங்கிரஸ் இதிலும் கடை பிடித்தது.

இதற்குள்ளாக ஜம்முவில் வன்முறை இரண்டு வாரங்களை கடந்து எல்லை மீறிக்கொண்டிருந்தத்து. ஆரம்பத்தில் மெலிதாகப் பரவிய வன்முறை அரசு கேட்பதற்கு வராது என்பதை தெரிந்து கொண்ட பிறகு ஜம்முவில் நிலமை வரலாறு காணாத வகையில் தீவிரமானது.ஏராளமான போலீஸ்காரர்கள் தாக்கப் படுவதாக செய்திகளும் புகைப் படங்களும் தினசரி வந்து கொண்டே இருதன. ஜம்முவிற்கு வெகு அருகில் காஷ்மீரில் இந்தியாவின் அனைத்து வகையான ராணுவ அமைப்புக்களும் இந்திய ராணுவத்திலுள்ள அனைத்து வகையான ஆயுதங்களோடும் தயாராக இருக்கிற சூழ்நிலையில்,மத்திய அரசின் பேச்சு வார்தை நடவ்டிக்கைகள் ஒரு வகையில் நீரோவை நினைவூட்டுகிற காட்சிகளாக தெரிந்தன. ஜம்மு காஷ்மீர் சம்பந்தப் பட்ட இந்தப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப் பட்ட குழுவில் முஸ்லிம்கள் இடம் பெற்றதை கூட ஜம்முவின் வன்முறையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பரூக் அபதுல்லாஹ் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பின்வாங்கிக் கொண்டனர். இந்துத்துவ சக்திகளைத் தவிர நாட்டிலுள்ள் அனைத்து அரசியல் வாதிகளையும் கவலையுறச் செய்த விசயம் இது, என்றாலும் நாட்டிற்குள் ஒரு மாதவாத மோதலை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸின் திட்டத்தை புரிந்து கொண்ட அவர்கள் அவ்வாறு நடந்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக அமைதி காத்தனர். தான் இறங்கிய வன்முறைத் திட்டம் இன்னும் போதுமான அளவில் நடந்து முடியாத சூழலில் ஆர் எஸ் எஸ் அமர்நாத் சங்கஷ் அமிதியை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் போராட்டத்தின் கால அளவை ஏதோ பொருட்காட்சிக்காண காலக்கெடுவை நீட்டிப் பதுபோல நீட்டிக் கொண்டிருந்தார்.

ஜம்முவிற்குள் இறக்குமதி செய்யப் பட்டிருந்த இந்துத்துவ வன்முறைய்ளர்கள் காஷ்மீரின் பொருளாதாரத்தை முடக்க திட்டமிட்டு காஷ்மீரை இந்தியாவுடன் தொடர்பு படுத்திவைத்திருக்கிற ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் காஷ்மீருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் செல்வது தடைபட்டது. இதன் அதிகபட்ச விளைவாக காஷ்மீரின் மாவட்ட மருத்துவமனையில் ம்ருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது (கிரேட்காஷ்மீர் நாளிதழ்)

இதன் பிறகே காஷ்மீரில் நிலமை மாறத்தொடங்கியது. தங்கள் மீது ஒரு பொருளாதார தடையை ஏற்படுத்தி எச்சிக்கை செய்ய ஆர் எஸ் எஸ் திட்டமிடுவதை புரிந்து கொண்ட காஷ்மீரிகள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத, தங்களது விளைபொருட்கள் வீணாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் ஆபத்தான அந்த முடிவை எடுத்தனர். பாகிஸ்தான் ஆகரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸப்பராபாத் நகருக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்தனர்.

ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்ச்சலையில் போக்கு வரத்து தடை செய்யப் பட்டு காஷ்மீரில் உள்ள பல் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாக்கப் பட்டதை கண்டு கொள்ளாமகல் இருந்த ராணுவம் காஷ்மீரிகள் முஸப்பராபாத பேரணியை தடுப்பதற்கு மட்டும் சுறுச்றுப்பகாக இறங்கியது. அப்போது அதன் துப்பாக்கிகளுக்கு சூடும் சொரனையும் வந்தது. பேரணியினரை நோக்கி ராணுவம் சுட்டதில் பேரணீக்கு தலைமையேற்ற ஹுர்ரிய்யத் அமைப்பின் தலைவரான ஷேக் அப்துல் அஸீல் கொல்லப் பட்டார்.

ஷேக் அஸீஸின் படுகொலையை நேரில் கண்ட பிலால் அஹ்மது பி.பி.சி யிட்டம் பேசுகையில், பாரமுல்லா விலிருந்து 35 கீமி தொலைவிலுள்ள் ராம்பூர் பகுதியில் ஒரு பெரும் பேரணி வந்த போது ராணுவத்தினர் ஊர்வ்லத்தை தடுத்தனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அங்கேயே நின்றுவிட்டனர். பெருமளவில் கோஷங்கள் முழக்கங்களும் போடப் பட்டுக் கொண்டிருந்தன. ஷேக அஸீஸ் ராணுவ்த்திற்கு பேரணி அமைதியாகவே நடைபெறும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தார். பதிலுக்கு ராணுவத்தினர் சரமாரியாக சுட்டனர். அந்த இடத்திலேயே ஒரு 16 வயதுப் பையன் இறந்து விழுந்தான். கடுமையாக காயமுற்றிருந்த ஷேக் அஸீஸ் மருத்துவ மணையில் உயிர்ரிழந்தார் என்று கூறினார்.

ஷேக் அஸீஸின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீர் பற்றி எரியத் தொடங்கியது. லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ஊர்வலங்ளில் கூடினர். 13 வருடங்களுக்கு பிறகு காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டது. காஷ்மீர் ஹுர்ரிய்யத் அமைப்பின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டனர்.

இந்திய ராணுவம் தன் பங்குக்கு ருசித்து பழகிவிட்ட காஷ்மீரிகளின் ரத்தத்தை மீண்டும் குடிக்கத் தொடங்கியது. தேசத்திற்காக என்ற பெயரில்காஷ்மீரில் கட்டவிழ்த்து விடப்பட்ட ரானுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆகஸ்ட் 17 ம் தேதிவரை பலியானோரின் எண்ணிக்கை 22 ஐ தொட்டது. இருநூற்றுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயமுற்றிருக்கின்றனர்.ராணுவம் காஷ்மீரிகளுக்கு தன்னுடைய வழமையான செய்தியை சொல்லிவிட்டது. ஷேக அப்துல் அஸீஸஸின் படுகொலை காஷ்மீரி அமைபுகளின் தலைவர்களுக்கு கொடுக்கப் பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கை என்று செய்தி விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சொரனையற்ற இந்தியா என்று இதுவரை புலம்பியா இந்தியா டுடேயின் எஜாமனர்கள் ஓரளவு தாக சாந்தியடந்திருக்கக் கூடும். ஆனால் இந்தச் சொரனை ஜம்முவில் அப்பாவிகளின் வீடுகளையும் கடைகளயும் சேதப்படுத்தி வருகிற இறக்குமதி செய்யப் பட்ட இந்து பயங்கரவாதிகளை நோக்கி ஒரு முறையாவது துப்பாக்கியை திருப்பியிருக்கும் என்றால் ஜம்முவில் இருபது நாட்களாக தொடரும் வன்முறை இரண்டு மணிநேரத்தில் காணாமல் போயிருக்கும். ஆனால் இந்திய அரசின் இரட்டை அணுகுமுறையால் காஷ்மீரில் பொசுக் பொசுக் என்று வெடிக்கிற அரசாங்கத்தின் துப்பாக்கிகள் ஜம்முவில் மட்டும் கருணை பனியில் நனைந்து போய்விடுகிறது.

காஷ்மீரின் தெருக்களில் மீண்டும் ஆஜாதி கோஷம் அதிரத் தொடங்கியிருக்கிறது. அங்குள்ள அமைப்புகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளனர். அது சுதந்திரக் காஷ்மீருக்கான இறுதிகட்ட போராடடத்தை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பொருளாதார தடையை கண்டித்து சீனாவின் ஆதிக்கத்திலிருக்கிற காஷ்மீரின் ஒரு பகுதியை நோக்கியும் பேரணியினர் செல்லப் போவதாக ஒரு தகவல்வருகிறது

ஸ்ரீநகரில் உள்ள ஐநா சபையின் ராணுவ கண்காணிப்பு குழுவின் அலுவலகத்திற்கு வெளியே பள்ளத்தாக்கின் பல் பகுதிகளிலிருந்தும் வந்து குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்கள் திரளினிடையே பேசுகிற போது ஹுர்ரிய்யத் கவுன்ஸ்லின் தலைவர்களில் ஒருவரும் மிதவாத எண்ணம் கொண்டவர் என்று அனைத்து தரப்பினராலும் கருதப் படுகிற மீர் வாயிஸ் உமர் பாரூக் காஷ்மீரின் அடைப்படையான பிரச்சினையில் கவனம் செலுத்த காலம் வந்துவிட்டதாக கூறுகிறார். காஷ்மீரின் சுய நிரணய உரிமையை காப்பதற்காக நேரிடையாக தலையிடுமாறு ஐ நா வுக்கு அழைப்பு விடுக்கிறார். காச்மீரிகளின் கருத்துக் கணிப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். ஜம்முவிலும் காஷ்மீரிலும் முஸ்லிம்களின் வாழ்வுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறிய மற்றொரு பிரிவிணை வாத தலைவர் அலிஷா கீலானி இந்தப் பகுதியில் ஐநா ஒரு சார்பற்ற அமைதிப் படை ஒன்றை நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறார். ஒரு நீண்ட கால ராஜ தந்திர முயற்சியின் பயணாக சர்வதேச அரங்கில் காஷ்மீர் பிரச்சினை எழுப்பப் படுவதை ஒரு கட்டுக்குள் வத்திருந்த இந்திய அரசின் கலகலத்துப் போயிருக்கிறது.

ஜம்முவில் ஏற்பட்டுவருகிற கொந்தளிப்பு இது ஒரு நில விவாகாரம் என்ற எல்லையை கடந்து பள்ளத்தாக்கை இந்திய மய்மாக்கும் முயறிசியாக உருவெடுத்திருப்பதக இந்து வலது சாரியான தருன் விஜய் எழுதுகிறார். ஆர் எஸ் எஸ் ஸின் திட்டத்தை அவர் அவசர்ப்பட்டு வெளியிட்டுவிட்டதாகவே தோன்றுகிறது ஆனால் நிலமை அவரது கற்பனையை பொய்ய்க்கி அடங்கியிருந்த பிரிவினை வேட்கையை இதுவரை இல்லாத அளவில் கிளப்பி விட்டிருக்கிறது.

ராணுவத்திடம் விட்டுவிடுங்கள் அது தீவிரவாதிகளை கவ்னித்துக் கொள்ளும் என்று சி.என்.என்.ஐ.பி.என் நடத்திய மக்கள் மன்றம் நடத்திய நிகழ்ச்சியில் பாரதீய ஜனதாவின் சார்பில் பேசிய ஒருவர் கூறினார். அதைதானே இருபது வருடங்களாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ன சாத்திதீர்கள் என்று இடை மறிக்கிறார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒருவர்.

ஜம்முவில் ஒரு இந்து துப்பாக்கி சூட்டிற்கு பலியானதற்காக குய்யோமுறையோ என்று இந்த்துதுவ சார்பு ஊடகங்கள் கதறுகின்றன. குல்தீப் குமார் என்ற இளைஞனை போலீஸ்காரர்கள் அவனது குடும்பத்திற்கு கூட தெரிவிக்காமல் நாட்டுச் சாராயத்தை ஊற்றி டயரை வைத்து எரிப்பதை ஒரு துறவி பார்த்த்தாகவும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸ் கூறுகிறது

இது போல பல் ஆயிரக்கணக்கான கதைகள் காஷ்மீரிகளிடமும் உண்டு என்பது நாட்டுமக்களுக்கு தெரியாதது அல்ல. இந்தக் கதையை சொல்லி இந்துக்களை தூண்டிவிடுவது தருண் விஜய்க்கும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸுக்கும் நியாயமாகுமென்றால் கல்யாண வீட்டிற்குள் திடிரென்று நுழைந்து கண்மண் தெரியாமல் சுட்டு பத்துக்கும் மேற்பட்டோரை கொன்ற பிறகு தவறாக சுட்டுவிட்டதாக கூறும் ராணுவத்தைப் பார்த்து அதை நிர்வகிக்கும் அரச்சங்கத்தைப் பார்த்தும் மக்களுக்கு ஏற்படுகிற கொந்தளிப்பு எத்தைகயதாக இருக்கும் ? என்ற கேள்விக்கு மட்டும் யாரும் விடை சொல்ல மறுக்கிறார்கள்!

அமர்நாத் கோயிலுக்கான நில விவகாரத்தில் நீத மன்றத்தீர்ப்புக்கு ஏற்ப யாத்திரை நடைபெறுகிற மூன்று மாதங்களில் அந்தப் பகுதி ஷ்ரீன் போர்டுக்கு தரப்படும் என்றும். அங்கு தற்காலிக செட்களை அமைத்துக் கொள்வது என்றும் தற்போதைய இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு காணப் பட்டிருக்கிறது. நியாய உனர்வு மிக்கவர்கள் தற்ப்போது எட்டப்பட்டிருக்கிற தீரவை கண்டு இதற்குத்தான் ஆசைப்பட்டாயா என்ற ஸ்டெயில் கேள்வி கேட்கின்றனர். இது தான் ஏற்றுக் கொள்ளப் பட்ட விசயம்தானே! இதற்க்காகவா இத்தனை சீரழிவுகள் என்று கேட்கின்றனர்?. ஆர் எஸ் எஸுக்கு அமர்நாத விசயத்தில் அக்கறை உன்றும் கிடையாது. அது தனக்கே உரித்தான குரூர வழியில் மக்களை பிளவுபடுத்துவதில் வெற்றி கண்டுவிட்டது என்பது அவர்களுக்கு தெரியாது.
.

No comments: