மீ–
மனித வரலாற்றில் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை
ஒருஅதிசயம்.
மனித வரலாற்றில் முஹ்ம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை
ஒருஅதிசயம்.
உலகின் அதிக மரியாதைக்குரியவர் என்றல்ல அதிக தகவலுக்குரியவர் என்ற தளத்திலும் முஹம்மது நபி (ஸல்) தனித்துவம் பெற்றுத் திகழ்கிறார்.
முஹம்மது நபியைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் ஏராளமாக கிடைக்கின்ற என்பது மட்டுமல்ல அவை மிகத் துல்லியமாகவும் ஆதாரங்களின் பின்னணியிலும் கிடைக்கின்றன என்பதே மிக முக்கியமானது.
பேராசிரியர் ஹிட்டி சொல்வது போல “முஹம்மது (ஸல்) வரலாற்றின் பேரொளியில் பிறந்திருக்கிறார்.” "he was born in the full light of history.
பதிவுச் சாதனங்கள் பெருகி வழிகிற காலத்தில் வாழ்கிற இன்றைய தலைவர்களைப் பற்றிக் கூட இவ்வளவு தகவல்கள் கிடைத்திருக்காது.
ஒரு காந்தி, ஒரு லெனின், ஒரு போப், ஒரு மண்டேலா, ஒரு ஐன்ஸ்டீன், ஒரு மாரடோனா, ஒரு கிளிண்டன் ஒரு மைக்கேல் ஜாக்ஸன், ஒரு பெர்னாட்ஷா, என கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்ப்ட்ட கொண்டாடப்படுகிற பிரபலங்களில் எவரைப் பற்றியும் இத்தனை தகவல்கள் உலகத்தில் இல்லை.
முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளின் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்தவர். தன்னுடைய கடைசி இருபத்து மூன்று ஆண்டு காலத்தின் ஒவ்வொரு துளியிலும் மனித சமூகத்தின் உயர்வுக்காக உழைத்தவர். அதன் ஒவ்வொரு இழையிலும் சமுதாயத்திற்கான செய்திகளை விட்டுச் சென்றவர். இறுதியாக என்னை பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் வெற்றிய்டைவீர்கள் என்று தைரியமாக்ச் சொன்னவர்.
அவரைப் போல இந்த உலகிற்கு தன்னைப் பற்றிய தகவல்களை விட்டுச்சென்றர்வர் யாருமில்லை.
அவர் சுய வரலாறு எழுதவில்லை. அவரது வரலாறு சுயமாகவே எழுந்து நிற்கிறது.
அவரது காலத்தில் திருக்குர்ஆன் எழுதிப் பாதுக்காக்கப் பட்டு வந்த்து. அதில் தன்னுடைய வார்த்தைகள் கலந்து விடக்கூடாது என்பதற்காக “என்னுடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டாம்” என்று அவர் உத்தரவிட்டார். அவருடை வார்த்தைகளோ வரலாற்றுக் சொல்லப்பட்ட உத்தரவுகளாக பன்னூறு தலைமுறைகளைத் தாண்டியும் புது மெருகு குலையாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றன.
அவரது நிழற்படம் எதுவும் இல்லை. கற்பனையாகக் கூட அவருடைய தோற்றம் உருவகப்படுத்தப் படுத்தப்ப்டவில்லை.
சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவுகும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் புத்தருக்கும் ஏசுவுக்கும் கூட உருவங்கள் கற்பிக்கப் பட்டுவிட்டன. மூலவர்கள் இனி எழுந்து வந்தால் கூட இந்த முகமூடிகளைத் தான் அணிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவு அந்தப் போலி முகங்கள் மக்கள் மனதில் படிந்துவிட்டன.
உலகின் மிக அதிக செல்வாக்கு கொண்ட முஹம்மது (ஸல்) என்றஅந்த பிரம்மாண்ட்த் தலைவரை அடையாளப்படுத்த ஒரு நிழற்படமோ, சித்திரமோ, இல்லை. உலகின் மாபெரிய அதிசயம் இது.
ஒவியர்களோ சித்திரக்கார்ர்களோ அவர் காலத்தில் இல்லாமலில்லை. சித்திரங்களும் ஓவியங்களும்தான் முந்தைய இறை ஒழுக்கமுள்ள சமுதாயத்தை சீரழித்தன என்பதை உறுதியாக அவர் உணர்ந்தார். சித்திரங்களையும் சிலைகளையும் கண்டு அகமழிந்து போகிற மக்கள் அதைப் பிடித்துக் கொண்டு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கைநழுவ விட்டுவதை தெளிவாக அறிந்தார். அந்த விபத்து இறுதித்தூதை சுமந்து செல்லும் சமுதாயத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். அதனால சித்திரங்களை அவர் எதிர்த்தார். உலகின் இறுதித் துளிவரைக்கும் தனது கருத்துக்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்த அவர் காலம் கடந்து செல்லும் ஒரு இலட்சியப் பயணத்திகு தனது சித்திரம் தேவை என்று கருதவில்லை. சிந்தனையும் வழிகாட்டுதலும் மட்டுமே போதும் என்று நினைத்தார்.
அவரது தோழர்கள் அவரது உண்மையான அடையாளத்தை உன்னதமாக பாதுகாத்தார்கள்.
அவரை அடையாளப்படுத்த எந்தப் வரைபடமும் தேவையில்லை எனும் அளவு அவரைப் பற்றி அணுவிலும் அணுவான தகவல்களை அவரது தோழர்கள் சேகரித்துப் பராமரித்துப் பாதுகாத்துப் பரவச்செய்தனர். உலகின் எந்த அதி நவீனக் காமிராவும் இவ்வளவு துல்லியமாக ஒரு மனிதரை படம் பிடிக்க முடியாது.
உலக வரலாற்றில் தன்னுடைய் தோழர்களால் இந்த அளவு பாதுகாக்கப் பட்ட தலைவர் இவேரே அன்றி மற்றெவரும் இல்லை.
இதில் எதிலும் மிகை இல்லை.
மறந்து விடாதீர்கள் ! இது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரின் வரலாறு. துளியும் கற்பனைக்கு இடமில்லாத்து, மிகைப் பூச்சூக்கோ புகழ் வீச்சுக்கோ வளைக்கப் படாத வரலாறு.
“என் விசயத்தில் பொய்யாக ஒன்றைச் சொல்பவன் நரகத்திற்கு செல்வான்” என்று எச்சரித்தவரின் எச்சமில்லாத வரலாறு. அவரைப் பற்றி எதையும் மிச்சம் வைக்காமல் பேசுகிறது.
புகைப்படங்களால் மட்டுமே பல தலைவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முஹம்ம்து நபி (ஸல்) அவர்களோ தனது வாக்கினாலும் வாழ்க்கையினாலுமே ஒரு பெரும் வரலாற்றை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். சித்திரங்களும் சினிமாக்களும் தேவையில்லாத படி சொற்சித்திரமாக அவர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவரது வாழ்வும் வாக்குமே அவரது உடல் தோற்றத்தின் வரி வடிவங்களாக பிரகாசிக்கின்றன.
விரல் நீட்டியபடி நிற்கிற பிரம்மாண்டமான சிலைகள் காக்கைகளின் எச்சத்தை சுமக்க மட்டுமே பயன்படுகின்றன. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரல் நீட்டியதாக பேசும் செய்திகளின் முன்னே ஒரு பெரும் சமுதாயம் கை கட்டி நிற்கிறது.
அதுதான் நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம்.
நபித் தோழர்களின் வார்த்தைகளில் இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…
முஹம்மது நபி (ஸல்) அவர்கள்:
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பணியாளராக 10 ஆண்டுகள் சேவை செய்தவர் அனஸ் பின் மாலிக் (ரலி). அவர் பெருமானாரைப் பற்றிக் கூறுகிறார்
· நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயர முடையவர். மிக நெட்டையானவராகவோ மிக்க குட்டையானவரகவோ அவர் இருக்கவில்லை.
· அவர் பொன்னிறம் கொண்டவர். சுத்த வெள்ளையுமில்லை மாநிறமும் இல்லை.
· அவரது முடி கடும் சுருள் முடியுமல்ல. முழுக்கவே படிந்த முடியுமல்ல. இரண்டுக்கும் இடைப்பட்டது.
· அவரது நாற்பது வயதில் அவருக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. (43 வய்துக்குப் பிறகு குர்ஆன் தொடர்ச்சியாக அருளப்ப்பட்ட்து.) குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தஙகி வசித்து வந்தார்.
· மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்.
· அவருடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார் . (புகாரி 3547)
நபித்தோழர் பராஉ பின் ஆஸிப் (ரலி) கூறுகிறார்.
· நபி (ஸல்) அவர்கள்து (முதுகும் மார்பும் விசாலமக இருந்த்தால்) இரு புஜஙகளுக் கிடையே அதிக இடைவெளி உள்ளவர்.
· அவரது தலைமுடி காதுகளின் சோணையை தொட்டுக் கொண்டிருந்த்து. ( புகாரி)
நபிதோழர் அலி (ரலி) பெருமானாரைப் பற்றிக் கூறுகிறார்.
· அவர் பெருத்த உடம்புக்காரர் அல்ல. அவரது முகம் முழு வட்ட வடிவமுமல்ல நேரான கத்தி போன்ற (ஒடுக்கமான) முகமுமல்ல. சிவந்த வெண்மை நிறமானவர்,கருவிழி உடையவர். நீண்ட இமை முடி பெற்றவர். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை கொடிபோன்ற முடி உள்ளவர் உடம்பில் முடி இருக்காது.உள்ளங்காலும் கையும் தடித்தவர்.அவர் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார் .திரும்பிப் பார்த்தால் முழுமையாகத் திரும்பிப் பாரப்பார்.இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும். அவர் தூதர்களில் இறுதியானவர். மக்களில் மிக அதிகமாக வழங்கும் கை உள்ளவர். துணிவுடைய உள்ளம் கொண்டவர். மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர்.மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர். மிக மிருதுவானவர்.பழக மிகக் கண்ணியமிக்கவர்.திடீரெனப் பாரத்தால் அச்சம் தரும் வடிவம் கொண்டவர். அறிமுகமானவர் அவரை விரும்புவர். அவரை யார் வருணித்தாலும் `அவருக்கு முன்னும் அவருக்கு பின்னும் அவரைப் போன்று யாரையும் பாரத்ததில்லை என்றே கூறுவர் . (இப்னு ஹிஷாம்)
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் பெருமானாரைப் பற்றி தரும் தகவல் இவை.
· நபி (ஸல்) அகன்ற முன் பற்கள் உடையவர்.அவர் பேசினால் பற்களின் இடைவெளியிலிருந்து வெளிச்சம் வருவது போன்றிருக்கும்.அவரது கழுத்து தூய்மையான வெள்ளிச் சிலையின் கழுத்தைப் போல் இருக்கும்.அவரது இமை முடி நீளமாக இருக்கும். தாடி அடரத்தியாக நெற்றி விசாலமாக இருக்கும் .புருவம் அடரந்து வில் வடிவம் பெற்றிருக்கும்.நீண்ட மெல்லிய மூக்குடையவர். மிருதுவான மெல்லிய கன்னமுடையவர். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை குச்சிப் போல முடி இருக்கும். வயிற்றிலோ நெஞ்சிலோ அதைத் தவிர முடி இருக்காது. குடங்கையிலும் தோள் புஜத்திலும் முடி இருக்கும்.மார்பும் வயிறும் சமமானவர். அகன்ற மார்பும் நீளமான மணிக்கட்டும் விசாலமான உள்ளங்கையும் உள்ளவர்.நீளமான முன் கையும் கெண்டைக்காலும் உள்ளவர்.உள்ளங்கால் நன்கு குவிந்தவர்.விரல்கள் நீளமாக இருக்கும். அவர் நடந்தால் கால்களை எடுத்து வைப்பவரைப் போல் பணிவுடனும் முன் பக்கம் சாய்ந்தவராகவும் நடப்பாரகள். (தாரமி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு குடிபெயர்ந்து சென்ற ஹிஜ்ரத் பயணத்தின் முன்றாம் நாளில் மக்காவிலிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் குதைத் பிராந்தியத்தின் ஓரத்தில் முஸல்ல்ல் என்ற இட்த்தில் சிறிது நேரம் அவரைக் கண்ட உம்மு மஅபத் என்ற பெண்மணி தன்னுடை கணவருக்கு பெருமானாரை வர்ணிக்கிறார். தன்னுடைய கணவருக்கு மட்டுமல்ல காலப்பெருவெளியின் கண்களுக்கும் நபியவர்கள் தன் வார்த்தைகளால் கொண்டு வந்து நிறுத்துகிறார். நபியவர்களைப் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்ணனை அது. உம்மு மஅபத் கூறுகிறார்.
அவர் பிரகாசமான முகம் உடையவர், அழகிய குணம் பெற்றவர்.வயிறோ தலையோ பெருத்தவர் அல்ல. தலை சிறுத்தவரும் அல்ல. கவரச்சிமிக்கவர் பேரழகுடையவர். கருத்த புருவம் கொண்டவர்.நீண்ட இமைமுடி பெற்றவர்.கம்பீரக் குரல் வளம் கொண்டவர்.உயரந்த கழுத்துள்ளவர்.கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர். வில் புருவம் கொண்டவர் கூட்டுப் புருவம் கொண்டவர்.கருண்ட தலைமுடி கொண்டவர்.அவரது அமைதி கம்பீரத்தைத் தரும் .ஒளி மிளிரும் பேச்சுடையவர்.தூரமாகப் பாரத்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார்; அருகில் சென்றால் பழக இனிமையானவர்.நற்பண்பாளர்.தெளிந்த பேச்சாளர். நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமாக பேசுபவர். அவருடைய உச்சரிப்பு மணிமாலை உதிர்வது போல் இருக்கும்.நடுத்தர உயரமுடையவர்.பாரவைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார்.இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர்.மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர். அவர்களில் கண்ணியம் வாய்ந்தவர்.நண்பர்கள் புடை சூழ இருப்பவர்.அவர் பேசினால் சுற்றியிருப்போர் அனைவரும் செவிதாழ்த்திக் கேட்பார்கள்.அவர ஆணையிட்டால் நிறைவேற்ற தொண்டர்கள் விரைகின்றனர் .பணிவிடைக்குரியவர்.மக்கள் கூட்டம் பெற்றவர்.கடுகடுப்பானவருமல்லர் பிறரைக் குறைவாக மதிப்பவரும் அல்லர். (அர்ரஹீகுல் மக்தூம்)
இந்த உலகில் ஒரு தனி மனிதருடைய அங்க அடையாளங்களைய்ம் குண இயல்புகளையும் விவரிப்பதற்கென்றே ஒரு கலை உருவானது என்றால் அது முஹம்மது நபிக்காகத் தான் இருக்கும். ஷமாயில் அருங்குணங்களை கூறுதல் என்ற ஒரு தனிக்கலை அன்னாரைப் பற்றிச் செல்லுவதற்காக உருவானது. அவரது நகத்துண்டுகளைக் கூட தவறவிட்டு விடக்கூடாது என்ற ஒரு சமுதாயத்தின் அக்கறையும் பரிதவிப்பும் அதில் புதைந்திருந்த்து.
திடமான ஒரு நூலில் பேசப்படுகிற அளவுக்கு குவிந்து கிடக்கிற தகவல்களிலிருந்து என் பார்வைக்கும் ஞாபகத்திற்கும் எட்டிய சிலதை மட்டும் இங்கே வரிசைப்ப்டுத்துகிறேன்.
- · அவர் வெண்ணிறமானவர். களையான முகம் கொண்டவர். நடுத்தரமான உடல் வாகு கொண்டவர்.
- · அவர் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் கொண்டிருந்தார்.
- · அதிக வியர்வை கொண்டவர்
- · அவருடை கை பனிக் கட்டியை விடவும் குளிர்ச்சி யானதாகவும் கஸ்தூரியை விடவும் நறுமணம் மிக்கதாகவும் இருந்தது
- · அவர் தம் (முன் தலை)முடியை தமது நெற்றியின் மீது) தொஙகவிட்டு வந்தார். பிறகு தம் தலை(முடி)யை (இரு பக்கஙகளிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்
- ·
- · அவர் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கம் கொள்பவராக இருந்தார்.
- · அவர் அன்பளிப்புக்களை ஏற்றுக்கொள்வார். அதற்கு ஈடு செய்துவிடுவார்.
- · அவர் சிறுவர்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் மிக அதிக கரிசணம் கொண்டவர்.
- · குழந்தைகளை அவரிடம் கொண்டு வருவார்கள். அதன் தலையை தடவுவார். அதன் ஈறுகளில் மென்ற பேரீத்தம் பழத்தை தேய்ப்பார். அதற்காக பிரார்த்திப்பார்.
- · சிறுவர்களை கடந்து சென்றால் அவர்களுக்கு சலாம் சொல்வார்.
- · அவரது பேச்சு எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தெளிவான பேச்சாக இருக்கும்.
- · அவரது பேச்சு சரளமாகவும் இடைவெளி கொண்ட்தாகும் இருக்கும்.
- · அவர் ஒரு விஷயத்தை பேசினால் ஒரு வார்த்தை விடாமல் எண்ண முடிகிற அளவு நிறுத்தி நிதானமாக பேசுவார்கள்
- · மக்கள் விளங்கிக் கொள்வதற்கு வசதியாக வார்த்தைகளை மூன்று தடவை திரும்பக் கூறுவார்.
- · அவர் வெள்ளி மோதிர்ம் அணிந்திருந்தார்.
- · சிலபோது அவரது இட்து கையில் மோதிரம் அணீந்தார்.
- · சில சமயம் வலது கையில் மோதிரம் அணீந்தார்.
- · பச்சை அவருக்கு பிடித்தமான நிறம்.
- · அவருக்கு பிடித்தமான ஆடை கமீஸ்
- · இனிப்பான குளிர்பானம் அவருக்கு மிகவும் பிடித்தமானது
- · மூன்று முறை மூச்சு விட்டு குடிப்பார்.
- · சாய்ந்து உட்கார்ந்து சாப்பிட மாட்டார்.
- · சுரைக்காயை விரும்பிச் சாப்பிடுவார்
- · பாலாடையும் பேரீத்தம் பழமும் அவருக்கு பிரிமானவை
- · தேன், அல்வாவும் அவருக்குப் பிடிக்கும்
- · முன் சப்பைக் கறி அவருக்குப் பிடிக்கும்
- · உணவின் மேற்புறமிருந்து சாப்பிட ஆரம்பிப்பதை அவர் வெறுப்பார்.
- · மூன்று விரல்களால் சாப்பிடுவார்.கையை துடைப்பதற்கு முன் விரல்களைச் சூப்புவார்.
- · வயிறு நிறைய்ச சாப்பிடும் அளவுக்கு அவரிடம் காய்ந்த தரம் குறைந்த பேரீச்சம் இருக்கவில்லை. (நுஃமான் பின் பஷீர் – முஸ்லிம்)
- · வாசனைப் பொருட்களை அவர் மறுக்க மாட்டார்.
- · நறுமணம் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
- · அவருடை வருகையை நறுமணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- · ஒரு பாதையில் அவர் நடந்து சென்றுள்ளார் என்பதை அவரகளது நறுமணத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்
- · அவரது வியர்வை மிக உயரந்த நறுமணமாக இருக்கும்.
- · அருவருப்பான சொற்கள் காதில் விழுந்தால் முகத்தை திருப்பிக் கொள்வார்.
- · அவர் ஒன்றை வெற்த்தால் அதன் அடையாளம் அவரது முகத்தில் தெரியும்.
- · நாளைக்கு என்று எதையும் அவர் சேகரித்து வைக்க மாட்டார்.
- · நல்ல கனவுகளை அவர் விரும்புவார்.
- · மக்களில் மிக அழகிய குண்ம் கொண்டவர் அவர்.
- · அவருக்கு மிகவும் பிடிக்காத குணம் பொயபேசுவது.
- · அவரைச் சார்ந்தவர்களில் யாராவது பொய் சொன்னதை அறிந்தால் அதற்காக அவர் வருந்தும் வரை சுட்டிக்கட்டுவார்.
- · தலைப்பாகை அணிந்தால் அதை புஜங்களுக்கிடையே தொங்க விடுவார்.
- · சுர்மா இட்டால் ஒற்றைப்படையாக இடுவார். சுத்தம் செய்கிற போதும் ஒற்றைப்படையாகவே செய்வார்.
- · அவரது சிரிப்பு புன்னகையகவே இருக்கும்
- · மௌனம் காப்பார்; குறைவாக சிரிப்பார்.
- · அவர் வேகமாக நடப்பார். அவருக்கு (கீழே) பூமி சுருட்டுப்படுவது வேகமாக நடப்பார்.
- · சோம்பலோ தள்ளாமையோ காணப்படாதவாறு நடப்பார்
- · நடக்கிற போது திரும்பிப் பார்க்க மாட்டார்.
- · பூனைகளுக்காக அவர் தண்ணீர்ப் பாத்திரங்களை தாழ்வாக காட்டுவார். அவை அருந்திய பின்னர். மிச்சத் தண்ணீரில் உடல் சுத்தம் செய்வார்.
- · சூடாக்கப் பட்ட் வற்றை சாப்பிட்டால் சில நேரம் ஓளு உடல் சுத்தம் செய்வார்.
- · சூடாக்கப் பட்ட் வற்றை சாப்பிட்டால் சில நேரம் ஓளு உடல் சுத்தம் செய்யாமலே தொழுவார்.
- · தன்னுடைய மனைவியரை முத்தமிட்ட பிற்கு ஒளு உடல் சுத்தம் செய்யாமலே தொழுகச் செல்வார்.
- · அவரிடம் ஒரு கைத்துண்டு இருந்த்து. ஓளு செய்த பிறகு அதை வைத்து ஒற்றியெடுப்பார்.
- · ஒரு மரக்கால் தண்ணீரில் குளிப்பார். ஒரு கை தண்ணீரில் அங்க சுத்தம் செய்வார்.
- · அவரும் அவரது மனைவியும் ஒரே பாத்திரத்தில் குளிப்பார்கள்.
- · கவலை எதுவும் ஏற்பட்டால் தொழுவதற்கு விரைவார்.
- · மக்களுக்கு தொழவைக்கும் போது சுருக்கமாக தொழவைப்பார். தனியாக தொழும் போது நீணட நேரம் தொழுவார்.
- · செருப்பணிந்து தொழுவார்.
- · இரவு நேரத்தில் தொழுவதை விட மாட்டார். சோம்பலாகவோ நோயாகவோ இருந்தால் உட்கார்ந்து தொழுவார்.
- · இரவின் முன்பகுதியில் தூங்கி இறுதியில் விழித்திந்து வணங்குவார்.
- · அவர் இரவு நேரத்தில்படுத்துறங்கும் தலையணை ஈச்ச மர நார் நிரப்பட்ட்தாக இருந்த்து.
- · மாதந்தோறும் மூன்று நாள் உண்ணா நோன்பு நோர்ப்பார்.
- · பேரீத்தம் பழம் உண்டு நோன்பு திறப்பார்
- · திருக்குர் ஆனை ஓதுகிற போது துண்டு துண்டாக நிறுத்தியே ஓதுவார்.
- · திருக்குர் ஆனை ஓதுகிற போது சப்த்த்த்தை நீட்டி ஓதுவார்
- · உறங்கும் போது வலது கன்னத்துக்கு கீழே வலது கையை வைத்துக் கொள்வார்
- · தூங்கும் போது பல் தேய்க்கும் குச்சியை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவார். விழித்தவுடன் முதலில் பல் தேய்ப்பார்.
- · வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தால் பல் துலக்குவார்
- · தும்மல் வந்தால் கை அல்லது துணியை வைத்து வாயைப் பொத்தி கொண்டு அதன் சப்த்த்தை குறைப்பார்.
- · இய்றைகை தேவைகளுக்காக செல்லும் போது பூமிக்கு அருகே சென்ற பிறகே ஆடையை உயர்த்துவார்
- · மூன்றி முறை சுத்தம் செய்வார்.
- · வெளியூரிலிருந்து திரும்புகிற போது இரவு நேரத்தில் தீடிரென விட்டிற்கு செல்ல மாட்டார்.
- · சாப்பிடவும், நீர் அருந்தவும் அங்க சுத்தி செய்யவும் ஆடை அணியவும் எது ஒன்றை எடுக்கவும் எதையும் கொடுக்கவும் வலது கையை பயன்படுத்துவார். மற்ற காரியங்களில் இட்து கையை பயன்படுத்துவார்.
- · சுத்தம் செய்கிற விசயங்களிலும், செருப்பணிவது நடக்க ஆரம்பிப்ப்பது போன்றவற்றிலும் மற்ற காரியங்கள் அனைத்திலும் முடிந்தவரை வலது புறத்திலிருந்தே ஆரம்பிப்பார்.
- · தன்னுடை செருப்பை சுத்தம் செய்வார். சட்டையை துவைப்பார். முரட்டுக் கம்பளி ஆடையை அணிந்து கொள்வார். எனது வழி முறையை வெறுப்பவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று கூறுவார்.
- · ஜம் ஜம் தண்ணீரை சுமந்து வருவார்.
- · தனக்கு உதவிய அன்சாரித் தோழர்களை தொடர்ந்து சந்திப்பார். அவர்களது சிறுவர்களுக்கு சலாம் சொல்லுவார். அவர்களது தலையை தடவி அவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்.
- · தன்னுடைய ஆடைகளை சுத்தம் செய்வார். தனது ஆட்டிலிருந்து அவரே பால் கறப்பார். தன் வேலைகளை தானே செய்வார்.
- · ஜோஷியம் பார்க்க மாட்டார். நற்சகுனங்களை கவனிப்பார். நல்ல பெயர்களை விரும்புவார்.
- · அவர் உட்கார்ந்தால் முழங்கலை கையால் கட்டிக் கொட்டுக் உட்காருவார்.
- · அவர் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. ஓர் உணவை விரும்பினால் உண்பார் இல்லையென்றால் விட்டு விடுவார்.
- · அவர் எந்த ஒரு பெண்ணையும் அடிமையையும் கை நீட்டி அடித்த்தில்லை.
- · அவர் தமக்காக எவரையும் பழிவாஙகியதில்லை
- · அவர் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. “உஙகளில் சிறந்தவர் உஙகளில் நற்குணமுடையவரே,, என்று அவர்கள் கூறுவார்
- · இரண்டு விஷயஙகளில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அவரிடம் கூறப்பட்டால் அவ்விரண்டில் இலேசானதையே எப்போதும் அவர் தேர்ந்தெடுப்பார். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவுக்கு விலகி விடுவார்.
- · அவர் வெள்ளை கருப்பு இரு நிறத்திலும் கொடிகளை பயன்படுத்தினார்.
- · ஒருவருடை வீட்டுக்கு வந்தால் வாசலுக்கு நேரே நிற்கமாட்டார். வலது அல்லது இட்து புறமாக நிற்பார். அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று குரல் கொடுப்பார்.
- · அவரிடம் வந்து கேட்ப்வர்களுக்கு வாக்களித்திருந்தால் தன்னிடமிருந்தால் அதை நிறைவேற்றுவார்.
- · அவரிடம் கேட்கப்பட்டால் ஒன்று கொடுப்பார். அல்லது மவுனமாக இருந்து விடுவார்.
- · தன்னிடம் கேட்கப்படுவதை தடை செய்ய மாட்டார்.
- · அவ்ரிடமிருந்து மக்கள் தடுக்கப்பட மாட்டார்கள். அவருடை முன்னிலையில் அடிக்கப்படவும் மாட்டார்கள்
- · எளிய மக்கள் அவரிடம் வருவார்கள். அவர்களைச் சந்திப்பார். அவர்களது நோயாளிகளை நலம் விசாரிப்பார். அவர்களது இறுதிஊர்வலங்களில் கலந்து கொள்வார்.
- · மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஏதேனும் வந்தால் உடனே சிரம்பணிவார்.
- · மகிழ்ச்சியடைந்தால் அவரது முகம் சந்திரத்துண்டு போல பிரகசிக்கும்
- · கோபமுற்றால் அவரது இரு கன்ன்ங்களும் சிவந்து விடும்
- · உரையாற்றும் போது அவரது இரு கண்களூம் சிவந்து விடும். குரல் உயரும். படை வீர்ர்களை எச்சரிப்பவர் போல அவரது கோபம் கடுமையாகும்.
- · ஒரு மனிதரைப் பற்றிய தவறு அவருக்குத் தெரிய வந்தால அந்த நபருடைய பெயரைக் குறிப்பிடாமல் “மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டுவார்.
- · ஒருவரை கண்டிப்பதானால் அவருக்கு என்ன ஆச்சு? அவரது நெற்றியில் மண் பட்டும் என்று சொல்வார்.
- · அதிகமா இறைத்துதி செய்வார். வீண் காரியங்களை குறைத்து விடுவார். நீண்ட நேரம் இறைவனை தொழுவார். சுருக்கமாக சொற்பொழிவாற்றுவார். ஏழைகள் விளிம்பு நிலை மக்கள் அடிமைகளேடு நடந்து செல்ல மறுக்கமாட்டார். அவர்களது தேவைகளை முடித்துக் கொடுப்பது வரை அவர்களுடனேயே இருப்பார்.
- · உனக்கு எதுவும் தேவையிருக்கிறதா? என்று பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டே இருப்பார்.
- · ஏதேனும் தேவைக்காக ஒருவர் வந்தால் வந்தவர் அவராக திரும்புகிறவரை அவருடன் நின்று கொண்டிருப்பார்.
- · அவரைச் சந்திக்க வருபவர் அவரது கையைப் பற்றினால் கை கொடுப்பார். அந்த மனிதர் கையை கழட்டிக் கொள்ளாதவரை தன்னுடைய கையை விலக்கிக் கொள்ள மாட்டர்ர்.
- · அவரை சந்திக்க வருபவரை தடவிக் கொடுப்பார்.அவருக்காக பிரார்த்தனை செய்வார்.
- · பயணங்களில் நடக்கும் போது கூட்ட்த்திற்கு பின்னால் நடப்ப்பார். பலவீனர்களை உற்சாகப்படுத்துவார். அவர்களை தன் பின்னால் உட்கார வைப்பார். அவர்களுக்காக பிர்ர்த்திப்பார்.
- · அவரிடம் முறையிட வருகிறவர்களை அருகே ஒரு இட்த்தில் உட்காரச் சொல்வார்.அங்கே சென்று தலை தாழ்த்தி அவர்களுடை முறையீட்டை கேட்பார். அவர்கள் சொல்லி முடிக்கிற வரை தன் தலையை உயர்த்த மாட்டார்.
- · தொலிக்கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி போன்ற சாதாரண் உணவுகளை கொண்ட விருந்துக்கும் அவர் அழைக்கப்படுவார்.
- · தனது வாகனத்தில் தன்க்குப் பின்னால் ஆட்களை அமர்த்திக் கொள்வார். தனது உணவை தரையில் வைப்பார். அடிமைகளின் குரலுக்கு பதில் தருவார். கழுதையில் பயனிப்பார்
- · நோயாளியை பார்க்கச் சென்றாலோ அல்லது நோயாளி அவரிடம் அழைத்து வரப்பட்டாலோ இறைவா! இந்த கஷ்ட்த்தை போக்கு! நிவாரணம் கொடு. நீயே குணமளிப்பவன். உனது நிவாரணத்தை தவிர்த்து வேறு நிவாரணம் இல்லை. பின் விளைவு இல்லாத நிவாரணத்தை கொடு என்று பிரார்திப்பார்.
- · இறந்தவர்களை குழிக்குள் வைக்கிற போது அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வின் பெய்ர் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அவனது தூதருடை மார்க்கதில் இவரை வைக்கிறேன் என்று சொல்லுவார்.
- · வேத வசனம் அருளப்படும் போது அது அவருக்கு சிரம்மாக் இருக்கும். குளிர்காலத்திலும் கூட அவரது நெற்றியில் முத்துக்களைப் போல வியர்வை துளிர்க்கும்.
- · மக்கள் அவரிடம் உறுதி மெழி ஏற்க வந்தால் “என்னால் முடிந்தவரை “ என்று சொல்லும்படி கூறுவார்.
- · அதிகாரியாக ஒருவரை நியமணம் செய்கிற போது “ நல்லவார்த்தை சொல்லுங்கள். விரட்டாதீர்கள். இலகுவாக நடந்து கொள்ளுங்கள்; சிரம்ப்படுத்தாதீர்கள். என்று சொல்லி அனுப்புவார்.
- · பெண்களிடம் உறுதி மொழி பெறுகிற பொது அவர்களுடைய கைகளை பிடிக்க மாட்டார்.
- · பெண்களை தாண்டிச் சென்றால் சலாம் சொல்லாமல் செல்ல மாட்டார்.
- ·
- · அவரிடம் கப்ப்ப் பொருட்கள் வந்தால் அன்றைய தினமே அவற்றை பங்கு வைத்து விடுவார். குடும்பஸ்தர்களுக்கு இரண்டு பங்கும் தனிநப்ர்களுக்கு ஒரு பங்கும் கொடுப்பார்
- · தனிநபருக்கான தர்மவரியை கொண்டு வந்து தருபவர்களுக்காக இறைவார் இவரது குடும்பத்தினருக்கு கருணை காட்டு என்று பிரார்த்திப்பார்.
- · ஏதேனும் உணவு அவரிடம் கொண்டு வரப்பட்டால் அண்பளிப்பா? தர்ம்மா? என்று கேட்பார். தர்ம்ம் எனில் தோழர்களை உண்ணும் படி கூறுவார். அன்பளிப்பு எனில் கையை தட்டியபடி தோழர்களுடன் தானும் உண்ண அமருவார்.
- · வியாழக்கிழமைகளில் பேருக்குப் புறப்படுவதை விரும்புவார்.
- · மதிய நேரத்தில் எதிர்களைச் சந்திக்க விரும்புவார்.
- · தொடர்ச்சியாக செய்யப்ப்படும் நற்பணிகளே அவருக்கு பிரியமானது. அது சிற்யதாக இருந்தாலும் கூட.
- · ஒரு காரியத்தில் இறங்கினால் அதை உறுதியாகச் செய்வார்.
- · பிரார்த்தனை செய்யும் போது ஆழ்ந்த பொருட்களை கொண்ட சொற்களைப் பயன்படுத்துவார். தேவையற்றதை விட்டுவிடுவார்
- · பிர்ர்த்தனையின் போது உள்ளங்களை முகத்தை நோக்கி வைத்துக் கொள்வார்.
- · தனக்காகத்தான் முதலில் பிரார்த்திப்பார்
- · இதயங்களை திருப்பும் இறைவா! எனது இதயத்தை உனது மார்க்கத்தை நோக்கித் திருப்பு என்று அதிகம் பிரார்த்திப்பார். ஏனிப்படிக் கேட்கிறீர்கள் என்று தோழர்கள் கேட்டால் : மனித இதயம் இறைவனது இரண்டு விரல்களுக்கிடையே இருக்கிறது. அவன் நினைத்தால் நிலைப்படுத்துவான். நினைத்தல் புரட்டிப் போட்டுவிடுவான் என்று சொல்வார்.
- · தொழுகையை கடைபிடியுங்கள். உங்கள் கைவசம் இருப்பதில் இறைவனை பயந்து கொள்ளுங்கள் என்பது தான் அவர் கடைசியாக கூறிய அறிவுரைகள்.
இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி வரலாற்றில் கொட்டிக்கிடகிற தகவல்கள் ஏராளமானவை.
கான ரஸூலுல்லாஹ் “இறைத்தூதர் இப்படி இருந்தார்” என்ற அரபு வினைச் சொல் ஒரு இன்ஞினைப் போல இழுத்துச் செல்கிற தொடரில் கண்க்கில்லாத புதையல் பெட்டிகள் ஊர்வலம் செல்கின்றன.
இந்த்ச செய்திகளை கொண்டு செல்வதே தம் வாழ்வின் அர்த்தமே என்று ஒரு சமுதாயம் கொண்டு நடந்த்தின் அடையாளமாக இவை வரலாற்றில் மின்னுகின்றன.
.
2 comments:
அல்லாஹு அக்பர் .... Amazing.... avar kaalathil piraka bakkiya illamal ponadhe.... avarai paarka vavadhu sorrkam sendrae theera vendum insha Allah....
arumaiyaana katturai ithai ovvoru islaamiyanumkadabidikkanum akbar
Post a Comment