கீரனூரி என்றால் கீரனூர்க்காரர் என்று பொருள்.
தமிழ் முஸ்லிம்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சிற்றூரான கீரனூரைத் தெரியாமல் இருக்கலாம். கீரனூரியைத் தெரியாமல் இருக்காது. அந்தக் குரலோசையில் மகிழாத செவியும் அந்தச் சொல்லாடல்களில் நெகிழாத உள்ளமும் தமிழகத்தில் இல்லை எனலாம் .
பிரபல சொற்பொழிவாளரும் தமிழகத்தின் தலை சிறந்த மார்க்க அறிஞருமான மௌளானா கலீல் அஹ்மது கீரனூரி கடந்த 16.12.2010 வியாழக்கிழமை அன்று முஹர்ரம் 9 ம் நாளின் நோன்பை ஆண்டவனின் சந்நிதியில் திறப்பதற்காக உலகிலிருந்து விடை பெற்றுச் சென்றார்.
1944 ம் ஆண்டு (ஜூன்13) பிறந்த கீரனூரி, 9 வது வரை பள்ளிப்பை முடித்த பிறகு லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் 7 ஆண்டுகள் மார்க்க்க் கல்வி பயின்று மொளல்வி பட்டம் பெற்றார். பின்னர் தேவ்பந்த் தாருல் உலூல் அரபுக்கல்லூரியில் ஹதீஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் ظ
طஅரபுக்கல்லூரியில் 8 வருடமும் ஈரோடு தாவூதிய்யா அரபுக்கல்லூரியில் 5 வருடமும் ஆசியராகப் பணியாற்றிய பிறகு திண்டுக்கல் யூசுபிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வராக 31 வருடங்கள் பணியாற்றியார். இந்தப் பணிகளின் ஊடாகவே தப்லீக் அமைப்பில் பிரபல மொழிபெயர்ப்பாளராகவும் ஊழியராகவும் உள் நாட்டிலும் இலங்கை முதல் நியூயார்க் வரை ஆசியா ஐரோப்பா ஆப்ரிக்கா அமெரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் தொண்டாற்றினார். அவரது கடைசி ஆண்டுகளில் போலி தவ்ஹீதிய குழப்பத்திற்கு எதிராக கடுமையாகப் போரானார். 63 வயதில் இறைச்சந்திப்பிற்கு தயாராகி 66 வயதில் அந்த வாய்ப்பை பெற்றுள்ளார் கீரனூரி. அன்னாருக்கு மனவியும் 3 மகன்களும் இரூ மகள்களும் உள்ளனர்.
இது போல ஒரு சிறப்பான இறுதி நாள் அமைவது யாருக்கும் அரிது.
“அல்லாஹ் கபூல் செய்ய (அங்கீகரிக்க) வேண்டும்” வேண்டும் ;அல்லாஹ் கபூல் செய்ய வேண்டும்” என்ற அவருடை அங்கலாய்ப்பும், மதரஸா, மாணவர்கள், பாடம் என்ற அவருடைய பரிதவிப்பும் அவரது உயிர்த்துடிப்பின் இறுதி ஓசையாகவே அமைந்து விட்ட்து!. “நீங்கள் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே மரணமடைவீர்கள்” எனற முஹம்மது நபியின் வாக்கிற்ற்கு மற்றொரு உதாரணமாக கீரனூரியின் இறுதி நாள் அமைந்த்து.
பல்லாயிரம் பேர் கூடியிருந்த இரங்கல் கூட்ட்த்தில் விசும்பலுக்கு நடுவே கீரனூரியின் நிழலாக இருந்த முஹம்மது அலி ஹஜ்ரத் அந்த நாளின் நிகழ்வை விவரித்த போது கலங்காத கண்களில்லை.
16ம் தேதி முஹர்ரம் 9ம் நாள் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அன்று அதிகாலை 4 மணிக்கு மாணவர்களை எழுப்ப அவரே பெல் அடிக்கிறார். எனக்கு சஹர் உணவை (நோன்பிற்கும் தயாராகும் உணவு) எனது அறைக்கே கொண்டு வாருங்கள் என்கிறார். “உங்களது உடல்நிலை எப்படி இருக்கிறது... என்று துணை முதல்வர் தயங்குகிறார். ஹயாத்தாக (உயிரோடு) இருப்பவர்கள் நோன்பு வைக்கனும் நான ஹயாத்தாகத்தானே இருக்கிறேன். சஹர் உணவு கொண்டு வரச் சொல்லுங்கள் என்கிறார். அன்றைய தினம் மதரஸாவுக்கு விடுமுறை இல்லை. மதியம் வரை புகாரி மிஷ்காத் ஹதீஸ் பாடம் நட்த்துகிறார். அஸர் தொழுகைக்குப்பிறகு சற்றே சாய்கிறார். நோன்பு திறப்பதற்கான உணவை மாணவர்கள் அவருக்கு முன்னிலையில் வைக்கிறார்கள். இங்கு நோன்பு திறக்க அவர் தயாராக இல்லை என்பது பாவம் அந்த மாணவர்களுக்குத் தெரியவில்லை. இறுதி வரை ஒரு மதரஸாக்காராக வாழ்ந்த கீரனூரி மதரஸாக்கார்ராகவே மரணத்தை தழுவினார்.
தொலைபேசி வழியே அந்த தகவல் வந்த போது அது எளிதில் தாங்கிக் கொள்ளும்படியானதாக இருக்கவில்லை. நாட்கள் பல கடந்து விட்ட பிறகும் கூட அந்தச் துயரச்சூடு இன்னும் தனியவில்லை.
வானத்து நட்சத்திரமாக தூரத்திலிருந்து பார்க்க மட்டுமே முடிந்த அவரை நெருக்கமாக அறிகிற வாய்ப்பு 1997 ல் அமைக்கப்பட்ட ஹைஅதுஷ்ஷரீஅத் தின் மூலமாக கிடைத்த்து.அப்போது அவரது பேச்சுக்களை விட அவரது எண்ணவோட்ட்த்தின் ஆழத்தையும் நீளத்தை அறிந்து கொள்ளமுடிந்த்து. எனக்கு கிடைத்த சிறிய ஆனால் அரிய வாய்ப்பு அது.
அந்தச் சிறிய தொடர்பின் அனுபவமே இந்த மரணச் செய்தியை தாங்கிக் கொள்ளத் தவித்த்து என்றால், அந்த வெள்ளிக்கிழமை என்னுடன் போனில் தொடர்பு கொண்ட ஆலிம் ஒருவர் “ கீரனூரிலா இருக்கிறீர்கள்! என்னால் ஹஜ்ரத்தை பார்க்க வரமுடியவில்லையே என்று கதறிய அழுகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்க் கூடிய சோகத்தின் சுமையை உணர முடிந்த்து.
தமிழக முஸ்லிம்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழக ஆலிம்களுக்கு பெருத்த இழப்புத்தான்.
கீரனூரி பன்முகத்தன்மை கொண்ட திறனாளி. ஒரு சர்வதேச பல்கலைகழகதை வழி நட்த்திச் செல்லும் ஆற்றல் பெற்றவர். தமிழகத்தில் பிறந்த்தனாலோ என்னவோ சர்வதேச அளவில் இன்னும் அதிக உயரத்திற்கு செல்கிற வாய்ப்பை அவர் பெறவில்லை. செல்வாக்கைத் தேடிக் கொள்ள அவர் முயலவுமில்லை. ஆனாலும் புகழுக்கும், மக்களின் அலாதியான அன்பிற்கும் குறைவில்லாத பெரு வாழ்வின் சொந்தக்கார்ராகவே அவர் இறுதிவரை இருந்தார்.
கீரனூரி ஒரு போராளியாகவே எனக்கு எப்போதும் தோன்றுவார். அவரது அறிவாற்றல், சொற்பொழிவுத்திறன், சாதுர்யம், மார்க்கப்பற்று தப்லீல் ஈடுபாடு ஆகியவற்றின் வழியாகவே பலரும் அவரை அறிந்திருப்பார்கள். எனக்கோ அவரது அசராத போராளி மனப்பான்மை வழியாகவே அவரை அறியும் வாய்ப்பு கிடைத்த்து.
போலி தவ்ஹீதிய வாத்த்திலிருந்து தோன்றிய தீவிர குண்டாயிசம் தமிழகத்தில் தலை தூக்கி இருந்த காலம் அது. தவ்ஹீதிகளின் தாக்குதலுக்கும் முரட்டுத்தனத்திற்கும் பயந்து முஸ்லிம்கள் முடங்கியிருந்த நேரம் அது. கோவை அந்த வெறியாட்ட்த்தின் தலைநகராக இருந்த்து.
அப்போது வேலூர் அல்பாகியாத் அரபுக்கல்லூரியை மையமாக கொண்டு ஹை அதுஷ்ஷரீஅத் ஷரீஅத் பேரவை அமைப்பு துவங்கப் பட்ட்து. அந்த அமைப்பு போலி தவ்ஹீத்களின் திவிரவாதச்சிந்தனையால காயம் பட்டுக்கிடக்கிற சமுதாயத்திற்கு தன்னுடைய மாற்று மருந்தால் ஒத்தடம் போடப் புறப்பட்ட்து. அந்தப் போர்ப்படைக்கு தலைமை தாங்க்த் தயாரானார் கலீல் அஹ்மது கீரனூரி. தீண்டுக்கல் யூசிபிய்யா அரபுக் கல்லூரிக்கு தன்னை த்த்துக் கொடுத்து விட்ட்தனால் பொதுவாழ்வில் அதிகமாக ஈடுபாடு கொள்ளாமல் இருந்த அவர் காலத்தின் தேவை அறிந்து ஹை அதுஷ்ஷரீஅத்தை வழி நட்த்தும் பொறுப்பை ஏற்றார். தமிழகம் முழுவதிலும் துஷ்டர்களின் முகத்திரையை கிழித்து அவர் போர்ப்பரணி பாடினார்.
ஷரீஅத் பேரவையின் முதல் பயணத் தொடர் நீடுரிலிருந்து முத்துப் பேட்டை வரை திட்டமிடப்பட்டிருந்த்து. அந்தப் பயணத்தில் கீரனூரியுடன் பயணித்த்து எனது பாக்கியமே!
சங்கரப் பந்தலில் ஒரு பொதுக் கூட்ட்த்திற்கு ஏற்பாடாகியிருந்த்து. பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தார்கள். எதிர்ப்பும் வலுவாகவே இருந்த்த். ஊரின் முலை முடுக்கிலேலாம் பையன்கள் நின்று கொண்டு விவாத்த்திற்கு அழைப்பு விடுத்டு நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருந்தனர். அரபுக்க்ல்லூரிக்கு எத்ரே இருந்த பள்ளிவாசலில் கூட்டம் மிகச் சிறப்பாக நடை பெற்றது. கூட்ட்த்திற்கு பிறகுதான் பெரும் பரபரப்பு காணப்பட்ட்து. ஏராளமான இளைஞர்கள் பள்ளிவாசலின் கேட்ட்டருகே கூடி நின்றனர். பள்ளிவாசலின் தலைவர் அவர்கள் உள்ளே நுழைந்த விட முடியாதவாறு கேட்டை மறித்து நின்று கொண்டிருந்தார். வெளியே வ்நது அந்தப் பதற்ற்த்தை கண்ட நான் மேலப்பாளையம் காஜா பாகவியிடம் “ இனி நாம் போகும் இடமெங்கும் இந்தப் பதற்றம் இருக்கும். இவர்களுக்கு இங்கேயே நாம் பதில் சொல்லி விட்ட்ல் என்ன என்று கேட்டேன். அவர் கீரனூரியிடம் அழைத்துச் சென்று நான் சொன்னதைச் சொன்னார். கீரனூரி சற்றும் தயங்கவில்லை. அவர்களை வரச்சொல்லுங்கள் பேசுவோம் என்றார். நான் பள்ளிவாசலின் தலைவரிடம் இரண்டு மூன்று பேரை பேச வரச் சொல்லுங்கள் என்றார். இந்தப் போலிகள் எப்போதும் சொன்னபடி நடக்க மாட்டார்கள் என்பது எனக்கு ஓரளவு தெரியும். ஒரு கூட்ட்த்தை காட்டி மிரட்சியை ஏற்படுத்துவது தானே அவர்களது பெரிய உத்தியே! அதன்படியே ஒரு கூட்டம் திமு திமு வென்று பள்ளிவாசலுக்குள் நுழைந்த்து. கீரணூரி அவர்களிடம் மிக சகஜமாக பேசினார். அந்தப் பேச்சும் தோரனையும் அந்தக் குறும்புக்கார இளைஞர்களிடம் அமைதியை கொண்டு வந்தார். விவாதம் என்றால் அதற்கான தயாரிப்புக்கள் முதலில் அவசியம் அல்லவா? நீங்கள் எந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களை ஒத்துக் கொள்வீர்கள் என்ற பட்டியலை உங்களது தலைவர்களிடம் தயாரித்து தரச் சொல்லுங்கள். நாம் விவாத்த்திற்கு தயாராவோம் என்றார் கீரனூரி. உடண்டியாக நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சொன்ன அந்த இளைஞர்கள் மரியாதையோடு கீரனூரியிடமும் மற்ற பெரிய ஆலிம்களிடமும் விடை பெற்றுச் சென்றார்கள், பதற்றமான அந்த இரவு மிக பக்குவமான இரவாக மாறி நிம்மதியளித்த்து. கீரனூரியின் பக்குவமும் துணிவுமே இதற்கு காரணம் என்பதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.
அதிராம்பட்டினத்தில் ஒரு பெரும் கூட்டம். தொப்பி போடாமால் தொழுப்வர்களை ஏன் தடுக்கிறீர்கள். அதனால்தானே பிரச்சினை என்று ஒரு இளைஞன் கேட்டான். இல்லை நீங்கள் பிரச்சினையை உருவாக்குவதற்கென்றே தொப்பி போடாமல் பள்ளிக்கு வருகிறீர்கள் அங்குதான் பிரச்சினை உருவாகிறது என்று தனக்கே உரிய பாணியில் அவர் பதிலளித்தார்.
போலி தவ்ஹீதிய துஷ்டர்கள் தமிழகத்தில் உருவாக்கிய களோபரத்தை மிகச்சரியாக அடையாளப்படுத்திய பதிலாக அது அமைந்த்தை இன்றும் பத்திரமாக நான் ஞாபகத்தில் வைத்துள்ளேன். விரலசைப்பதில் தொடங்கி இரண்டாவது ஜமாத் வரை அனைத்திலும் பிரச்சினையை உண்டுபன்னுவதற்காக இந்த சமூகக் குற்றவாளிகள் எப்படி மார்க்கத்தை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை பல சந்தர்ப்பத்திலும் விளக்கிச் சொல்ல் கீர்னூரியின் அந்த பதிலே அடிப்படையாக அமைந்த்து. .
போலி தவ்ஹீதிகளின் பிரச்சினை கோவையில் தானே கடுமையாக இருக்கிறது, அங்கேயே செல்வோம் என்றார் கீரனூரி. ஷரீஅத் பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துக் கொண்டார்கள். கலந்து கொள்ளவும் சம்மதித்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க முயன்ற போது நான் கோவை மாகர ஜமாத்துல் உலமாவின் செயலாளராக இருந்த போதும் ஜமாத்துல் உலமாவின் சார்பாக கூட்டம் நடத்த சிலர் ஒத்துக்கொள்ளவில்லை. சூழ்நிலை அந்த அளவு கடுமையாக இருநத்து. அப்போதிருந்த சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்வத்தோடு ஒத்துழைத்தார்கள். நானும் எனது நண்பர்களுமாக கோட்டை இக்பால் திடலில் 17. 09 .1997 அன்று ஒரு பொதுக் கூட்ட்த்திற்கு ஏற்பாடு செய்தோம். நாங்கள் சாதராணமாகத்தான் ஏற்பாடு செய்தோம். கூட்டம் பிரம்மாண்டமாக் திரண்ட்து அந்த்த்திடலில் சுன்னத் ஜமாத்த் கூட்ட்த்திற்காக அத்தனை பேர் இதுவரை திரளவில்லை. மேடையின் வாசலருகே நின்று கூட விசமிகள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
புரசைவாக்கம் நிஜாமுத்தீன் ஹஜ்ரத் தொண்டி முஸ்தபா ஹஜ்ரத் மேலப்பாளையம் காஜா ஹஜ்ரத் ஆகியோரைத் தொடர்ந்து கீரனூரி பேசுவதாக இருந்த்து. அந்தக் கூட்ட்த்தில் தொண்டி முஸ்தபா ஹஜ்ரத் தமிழகத்திலிருந்து முதன் முறையாக திரு பி ஜேவிற்கு பகிரங்க விவாத்த்திற்கு சம்மதித்து அழைப்பு விடுத்தார். கூட்டம் தக்பீர் முழக்கத்தில் அதிர்ந்த்து. விஷமிகளால் அந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சென்னையிலிருந்து போன் மூலமாக திரு பிஜே இட்ட உத்தரவின் படி அவருடைய குண்டர்கள் மேடையை சூழ்ந்து கொண்டார்கள். கீரணூரியை பேசவிடக்கூடாது என்ற திட்ட்த்தில் அன்று அந்த குண்ட்ர் கூட்ட்த்தின் தலைவனாக இருந்த ஐயூப் என்பவன்.ஒரு குண்டர்படை துணைக்கிருக்கிறது என்ற தைரியத்தில் இது அடுத்தவர்களின் மேடை என்ற நியாய உணர்வு சிறிதும் இல்லாமல் மேடை ஏறி மைக்கை பிடுங்கினான், இந்த அக்கிரமத்தை பார்துக்கொண்டிருந்த மைக் செட்கார் யாரும் செல்லாமலே ஆம்பிளிபய்ரை ஆப் செய்தார். அவரை அடித்து மிரட்டி மைக்கை ஆன் செய்ய வைத்து வீராப்பாக விவாத்த்திற்கு தயார் என்றான் அவன். அத்தோடாவது அவன் இறங்கி இருக்க வேண்டும். இனி நிகழ்ச்சியை தொடரக் கூடாது என்றான். கலரவத்தில் ஈடுபட தொண்டர்களை தூண்டினான். ஒரு ஆள் கத்தியோடு மேடை ஏறி பேனரைக் கிழித்தான். மேடை ஒரே போர்க்களமாக இருந்த்து. கூட்டம் சித்றுண்டு ஒடியது. மேடையைச் சுற்றி நகர மனிதர்களை கண்ட பழங்குடிகள் போல இந்த விஷமிகள் கத்திக் கொண்டிருந்தார்கள். கீரணூரியை சுற்றி ஒரு வளையம் போல நிற்க நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். விருந்தினராக வந்த காஜா பாகவி முஸ்தபா ரஷாதி உட்பட பலரும் விஷமிகளேடு கத்திக் கொண்டிருந்தனர். விவாதம் விவாதம் என்று தானே கூக்குரலிட்டீர்கள். அதற்குத்தான் ஒத்துக் கொண்டோமே! அதற்கு தயாராவது தானே பிறகு எதற்காக இப்படி அக்கிரம்மாக ஆக்ரமிக்கிறீர்கள். ஹஜ்ரத்தை பேசவிடுங்கள் என்று போராடிக்கொண்டிருந்தனர், கீரனூரியின் மீது ஒரு சிறு கீரலும் பட்டுவிடக்கூடாதே என்பதே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த என்னுடையவும் நண்பர்களுடையவும் பயமாகவும் பத்பதைப்பாகவும் இருந்த்து. இன்றும் அந்தச் சூழ்நிலையை எண்ணிப்பார்க்க மனம் கலங்குகிறது.
மேடையில் உட்கார்ந்த இட்த்தில் அப்படியே உட்கார்ந்த கீரனூரி அசைய வில்லை. அதிக உணர்ச்சி வசப்பட்ட ஏற்பாட்டாளர்களை அழைத்து தன் பக்கத்தில் இருத்தி அமைதியாக இருக்கச் சொன்னார். இறுதியில் போலீஸ் வந்து பேசுவதற்கு உத்திரவாதம் தர இயலாது. இம்தாதுல் உலூம் அரபுக்கல்லூரி வரை பாதுகாப்புத்தருவதாக கூறியது. அதன் பிறகு மேடையிலிருந்து கீழே இறைங்கி ஒரு வளைய மிட்டு கீரனூரியை நாங்கள் அழைத்துச் சென்ற போதும் கீரனூரி எங்களை சமாதானப் படுத்தினாரே தவிர பிரச்சினைக்குரிய ஒரு ஊரில் கடும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டோமே என்ற சலனத்தை அவரது முகத்தில் நான் பார்க்கவே இல்லை. பல சிரம்மான சந்தர்ப்பத்தில் அதை உறுதியோடு எதிர்கொள்கிற சக்தியை அல்லாஹ் எனக்கு இயல்பாகவே வழங்கியிருந்தான் என்று அவர் தனது சுய சரிதையான “நினைவலைகளில்” எழுதியிருந்தார். அது நூறு சதவீத சத்தியம்.
நம்மைச்சுற்றி இலட்ச்க்கணக்கான மக்கள் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம். இது ஒரு புதிய அனுபவம் தான என்று கீரனூரி சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.
அந்நிகழ்சிக்குப் பிறகு வேறு சிலரிடம் பேசுகிற போது நிலமை இவ்வளவு மோசமாக இருப்பது நல்லதல்லவே என்று வருத்தப் பட்டுப் பேசியுள்ளார். அது போலவே நிகழ்ச்சிகள் நடந்தன. சரியாக 15 நாளில் போலீஸ்கார்ர் செல்வராஜ் கொல்லப்பட்ட்தை தொடர்ந்து 19 முஸ்லிம்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். அதற்கடுத்த பிப்ரவரியில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. தவ்ஹீத் போர்வையில் குண்டாயிசம் செய்த தலைவர்கள் பலர் போலீஸுக்கு ஆட்காட்டி வேலை செய்து தப்பித்துக் கொள்ள, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதானார்கள். நகரில் கோலோச்சிக் கொண்டிருந்த போலி தவ்ஹீதிய வன்முறையாளர்கள் சப்தமின்றி பதுங்கிக் கொண்டனர்.
அன்று மேடையேறி மைக்கை பிடுங்கியவனை அவ்னுடைய ஆட்களே அவர்களது வழிபாட்டுத்தளமொன்றில் “அயோக்கியப் பயலே இனி நீ பேசக் கூடாது என்று கட்டளையிட்ட்தாக எனக்குச் செய்தி வந்த போது நான் கீரனூரியைத் தான் நினைத்துக் கொண்டேன், அவன் ஒரு மோசடிப் பேர்வழி என்று அவ்னுடைய் இரண்டாவது மனைவியே எனக்கு போன் செய்து பேசிய போதும் நான் கீரனூரியையே நினைத்துக் கொண்டேன். கீரனூரியின் மரணச் செய்தி வந்த போது ஒரு எதிர் சிந்தனையாக அவனுடையவும் அன்றைய அவனது சகாக்களுடையவும் துர்பாக்கியமான இறுதி நிலை எப்படி அமையுமோ என்று எண்ணம் ஏற்பட்ட்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் கீரனூரியோ இது பற்றி பிறகு பேசவே இல்லை. அன்றைய கூட்ட்த்தில் முஸ்தபா ரஷாதி அறிவித்த படி விவாத்த்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லி உத்வேகப் படுத்திய தோடு தனது பணிகளை சளைக்காமல் பலதரப்பட்ட இடையூறுகளையும் தாண்டி இறுதிவரை தொடர்ந்தார்.
இந்த போலி தவ்ஹீதிகளால் சில பித் அத்கள் களையப்பட்டிருக்கிறது என்று சில கோமாளிகள் கருதுவது போல் அவர் ஒரு போதும் கருதவில்லை. இந்த விஷச் செடியை தமிழக முஸ்லிம்களின் தளத்திலிருந்து பிடுங்கி எறிவதை தன்னுடைய தன்னுடைய இறுதி நாட்களில் ஒரு முக்கிய் பணியாக அவர் கருதினார். அவரது முன்னேடுப்புக்கள் காரணமாகவே பாகியாத் உட்பட பல உயர் தளங்களில் போலி தவ்ஹீதிகளின் எதிர்ப்பு வலுவிழக்காமல் இருந்த்து என்பது எதார்த்தம்.
போலி தவ்ஹீதிகளுக்கு எதிராக அவர் போராடியது போலவே போலி தேசியவாதிகளான இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடவும் அவர் தயங்கவில்லை. திருக்குர்ஆனின்ன் சில வசன்ங்களை மேற்கோள் காட்டி திருக்குர் ஆனுக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்க இந்துதுவ சக்திகள் முயற்சி செய்த போது, கீரனூரி திர்க்குரானின் சத்தியத்தை நிலை நாட்ட ஒரு போராளியாகவே செயல்பட்டார். ஒரு பெரும் பொதுக் கூட்ட்த்தில் 24 வசன்ங்களுக்கான விளக்கங்களை நாட்டு மக்களுக்குச் சொன்னார். புத்தகமாகவும் வீடியோவாகவும் அந்த பதில்கள் பரவக் காரணமாக் இருந்தார்.
கீரனூரியின் மற்ற சில சிறப்பம்சங்களும் அவசியம் நினைவு கூறத்தக்கவை . கீரனூரி என்றாலே நினைவுக்கு வருவது அவரது மொழி பெயர்ப்புச் சொற்பொழிவுகளாகும். அச்சொற்பொழிவுகளால் பல பெரும் மாநாடுகள் களைகட்டின.
பொதுவாக மொழிபெயர்ப்புச் சொற்பொழிவுகளில் சுரத்திருக்காது. சென்னையில் ஒரு பெரும் கூட்ட்த்தில் சோனியா காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவரை கூட்ட்த்தினெரே நீ மொழிபெயர்த்த்து போதும் உட்காரு என்று சொல்லி உட்கார வைத்தனர்.
கீரனூரியின் மொழி பெயர்ப்பு அசல் பேச்சாளரே விரும்பிக் கேட்கும் வண்ணம் அமைந்திருக்கும். தப்லீக் ஜமாத்தின் அமீர் ஹஜ்ரத் ஜீ எனக்கு மொழிபெய்ர்ப்பாளராக கீரனூரியை அழையுங்கள் என்று சொல்லுமளவு தர்ஜமா நாயகராக கீரனூரி திகழ்ந்தார். உமர் பாலன் பூரி , தேவ்பந்தின் முப்தி ஸஈத் அஹ்மது பாலன்பூரி காஜி முஜாஹிதுல் இஸ்லாம் ஆகியோருக்கு கீரனூரி மொழி பெயர்ப்பதை நான் கேட்டிருக்கிறேன். ஒரளவு என்னால் உருது விளங்கிக் கொள்ள முடியும் என்றாலும் கீரனூரியின் மொழிபெய்ர்பையும் கேட்கும் ஆவலை அது சற்றும் குறைத்து விடாது. காரணம் கீரனூரியே சொல்வது போல அவரது மொழிபெய்ர்ப்பு இன்னொறு பயானை கேட்பது போல் இல்லாமல் இரண்டு தண்டவாளத்தில் ஓடும் ஒரு ரயிலாகவே அமையும். அவரது மொழிபெயர்ப்பு ஒவ்வொன்றும் அந்த துறையின் பாடங்களாக விளங்குபவை.
வார்த்தைக்கு வார்த்தை தவறாத தமிழ் சொற்கள், சொல்லுக்குச் சொல் பிறழாத உணர்ச்சிகள் அதே நேரத்தில் ஒரு அந்நியத்தன்மை தெரியாத அந்த மொழி மாற்றம் மூலப் பேச்சாளரே தமிழில் பேசுவது போல இருக்கும். அந்த உயிரோட்டம் மிக்க மொழிப்யர்ப்புக்கு நிகரான இன்னொரு மொழி பெயர்ப்பாளர் தமிழக ஆலிம்களில் உருவாக வில்லை.
வேகமாக வளர்ந்து வருகிற இன்றைய மொழி பெயர்ப்புக் கலாச்சாரத்தில் அனைத்து இஸ்லாமிய தகவல்களும் தமிழாக்கம் செய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக கீரனூரி தமிழாக்க விருது ஒன்றை யூசுபிய்யா அரபுக்கல்லூரியோ அல்லது ஏதேனும் உலமா அமைப்போ வழங்க முன்வருவது கீரனூரியின் நினைவை அர்த்தப் படுத்தும் ஒரு முயற்சியாக அமையும்.
கீரனூரி அவர் தேர்ந்த்ர்டுத்த சில சமுதயாப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார் என்றாலும் அவரது மனசாட்சியாக மதரஸா இருந்த்து. அவரது முழுகவன்மும் தகுதி வாய்ந்த ஆலிம்களை உருவாக்குவதிலேயே இருந்த்து.
மிழகத்தில் இஸ்லாமிய மார்க்க்க் கல்வியின் தர மேம்பாடு, மார்க்க் அறிஞர்களின் உயர்வு,, அடிப்படையில் மாற்ரம் கொள்ளாமல் காலத்தின் தேவைகேற்ப இஸ்லாமிய கல்விச் சிந்தனையில் ஏற்பட வேண்டிய மாற்றங்களுக்காக போராடுகிற போராளியின் குரலாக அவரது இதயக்குரலை கேட்க முடியும்.
அவரது ஆன்மா மதரஸா என்ற சொல்லோடு பின்னிப் பினைந்திருந்த்து. காலல்லாஹ் கால ரஸூலுல்லாஹ் (அல்லாஹ் கூறுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள்) என்ற சொற்களையே மூச்சுக்கு பதிலாக அவரது உயிர் சுவாசித்த்து.
மதரஸாக்களின் நவீனத்துவம் பற்றிய பல ஆக்க்கரமான முயற்சிக்காக தனி ஒரு ஆளாக அவர் போராடினார் என்றே சொல்ல வேண்டும். அவருக்குள் உதிக்கிற சிந்தனைகளை கருத்துப் பரிமாற்றம் செய்யத் தகுந்த “பேச்சுத் துணை” இல்லை என்ற ஏக்கம் அவருக்குள் இருந்த்தை அவரது “நினைவுகள்” நூல் அடையாளப்படுத்துகிறது. ஆனாலும் பலரும் சேர்ந்து கை கொடுக்க வேண்டும் என்று அவர் காத்திருக்கவில்லை. அடிப்டைகளில் இருந்து மாறாமல் - அதே நேரத்தில் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டு விட்ட பழைய த்த்துவங்களை தள்ளிவிட்டு இன்றை விஞ்ஞான உண்மைகளுக்கு ஏற்பவும் இன்றைய போதனைப் பாணிக்கு ஏற்பவும் பல நூல்களை அவர் தொகுத்தார். தனது எல்லைக் குட்பட்ட நிறுவனத்தில் அதை பாட நூலாக்கினார்.
தொழுகைகான நேரம் மற்றும் கிப்லா கண்டு பிடுக்கும் காலவியல் கலை கலையில் அலப்லாக் வல் அவ்காத் என்ற நூலை அவர் எழுதினார். தேவ்பந்த் தாருல் உலூம் அரபுக்கல்லூரியில் அந்நூலை பார்வையிட்ட முப்தி ஸஈத் அஹ்மது அவர்கள் இதை கற்றுக் கொடுக்க நீங்களே இங்கு வந்து விடுங்கள் என்று அழைத்த்தை தனக்கு கிடைத்த துஆ வாக கீரனூரி தனது “நினைவுகளில்” குறிப்பிடுகிறார்.
அரபுக்கல்லூரி பாட திட்ட்த்தில், அடிப்படை மாறாத சீரமைப்பு பணியில் கீரனூரி பங்கை முழுமையாக வெளியுலகம் தெரிந்து கொள்ளவில்லை.
மன்திக் எனும் அளவை இயல் கலையில் அல்கிஸ்தாஸ் எனும் நூலையும் மஆனி எனும் கலையில் அல்பலாஅத் என்ற நூலையும் எழுதியுள்ள அவருக்கு அரபுக்கல்லூரிகளில் போதிக்கப்படும் த்த்துவ இயல் நூற்கள் சிலவற்றை இன்றை நடைமுறைக்கு மாற்றி எழுத யாராவது முன்வர வேண்டும் என்ற தாகம் இருந்திருக்கிறது.
அதே நேரத்தில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள பல்கலை கழக வழிக்கல்வியுடன் இணைத்து மார்க்க கல்வி கற்பிக்கப்படும் முறையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் சமுதயாத்திற்கு அவர் கரிசனத்தோடு விட்டுச் செல்லத் தவறவில்லை. அதிலுள்ள குறையை உணர்ந்த்தந்தால் அதை தான் எடுத்து விட்ட்த்தை கூறுவதோடு மார்க்க கல்வியை அதன் வழியாக மார்க்கச் சேவையை காப்பாற்றுங்கள் என்ற வேண்டுகோளை சமுதாய்த்தின் முன் வைத்து விட்டே அவர் இறந்து போனார்.
இன்றைய உலகிற்கான ஆற்றல் வேண்டும் ஆனால் மார்க்கத்திற்காக என்ற இலக்கில் அது அமைய வேண்டும் அவரது அளவுகோள் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியாக நான் உணர்கிறேன்.
கீரனூரி இனி இல்லை என்றாலும் அவரது போராட்டக் களம் இன்னும் இருக்கிறது.
· இன்றைய உலகில் இஸ்லாமிற்கு எதிரான பிர்ச்சாரங்களுக்கு தகுந்த வித்த்தில் அச்சமின்றி பதிலளித்தல்
· தமிழகத்தை போலி தவ்ஹீதிய சக்திகளிடமிருந்து மீட்டெடுத்தல்
· தமிழக் மதரஸாக்களில் நவீன உலகிற்கு ஏற்ற மார்க்கப் பற்று கொண்ட ஆலிம்களை உருவாக்குதல்
ஆகிய அம்சங்கள் தமிழக ஆலிம்களுக்கும் கீரனூரியின் அபிமானிகளுக்கும் கீரனூரியின் பாதையை காட்டிக் கொண்டிருக்கின்றன.
“நீங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு சைலன் அட்டாக் வர வாய்ப்புள்ளது” என்று தன்னுடை சர்க்கரை நோய் மருத்துவர் கூறியதாக கீரனூரி தனது “நினைவுகள்” ல் பதிவு செய்திருக்கிறார். இப்படி ஒரு சைலண்டாக இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று உறுதியாகிறது. அவரது முடிவு குறித்த முன்னுணர்வு அவருக்கு இருந்திருக்கிறது.
அது இறைவனின் நல்லடியார்களுக்குரிய விசேஷ அம்சமல்லவா?
2 comments:
alhamdulillah maulana azees baqavi ungaluku assalamu alaikum varah romba nanri neengal keeranoori hazrath patri tantha seythigal enaku alugayai varavalaithathu nanum oru maulavi than sadikqul ameen siraji malaysia
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...),
மௌளானா கலீல் அஹ்மது கீரனூரி(ரஹ்)அவர்களின் கட்டுரை அவர்களின் சீரிய வாழ்வை சீர்தூக்கி காட்டுபவை. அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னிப்பதோடு அதனை நன்மைகளாவும் மாற்றி, கப்ரிலும் மறுமையிலும் தனது ரஹ்மத்தை அவர்களின் மீது பொழிவானாக. ஆமீன்
Post a Comment