ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
அனபுமிகு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்றன.
விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடை பெற இருக்கிறது. இத்தேர்தலில் த்மிழக்த்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்த்டுக்க உரிமை பெற்றுள்ளனர். அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றஆலிம்களும் அரபிக் M.A. பட்டம் பெற்ற ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவ்ர்.
இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்
நீங்கள் அப்ஸலுல் உல்மா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.
இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு தெரிவியுங்கள்.
வஸ்ஸலா,
அப்துல் அஜீஸ் பாகவி
தகவல் தந்தவர் :
சுலதான் சலாஹுத்தீன் மழாஹிரி
பேராசிரியர் ஜாவியா அரபுக்கல்லூரி.
காயல்பட்டினம்.
Wednesday, October 13, 2010
Friday, October 01, 2010
பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு
குள்ள நரிகளுக்கு சாதகமாகி விட்ட தீர்ப்பு
நீதிமன்றம் ஒரு நலனை விரும்பி இவ்வாறு காம்பரமைஸுக்கு முயற்சித்துள்ளது.
சின்னப் புள்ளைக சண்டையை தீர்த்து வைக்கிற மாதிரி
ஆனால் இந்த்துத்துவ சக்திகள் அமைதியை விரும்புகிற மாதிரி நடந்து கொள்வதில்லை.
ரமார் கோயில் கட்டுவோம் என்று சொன்ன அத்வானி முஸ்லிம்கள் தங்களுக்குரிய இட்த்தில் பள்ளிவாசல் கட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருந்தால் நிலமை சூடு எவ்வளவு தணிந்திருக்கும்
பல் நிருபர்கள் இது குறித்து கேட்ட போதும் அவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை இந்தியா இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்துக்கள் இதை கவனிக்க வேண்டும்.
இந்த்துத்துவ சக்திகள் மத நம்பிக்கை என்ற பெயரில இனி எத்தனை பிரச்சினைகளை தொடர காத்திருக்கிறார்கள் என்பதை நீதிபதிகள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
இந்தப் பிரச்சினையில் குளிர்காய முனையும் குள்ள நரிகளை கவனத்தில் கொள்ளாமல் நீதிபதிகள் ஒரு சமரசத்திற்கான தீர்ப்பை கூறியுள்ளன
Subscribe to:
Posts (Atom)