குள்ள நரிகளுக்கு சாதகமாகி விட்ட தீர்ப்பு
நீதிமன்றம் ஒரு நலனை விரும்பி இவ்வாறு காம்பரமைஸுக்கு முயற்சித்துள்ளது.
சின்னப் புள்ளைக சண்டையை தீர்த்து வைக்கிற மாதிரி
ஆனால் இந்த்துத்துவ சக்திகள் அமைதியை விரும்புகிற மாதிரி நடந்து கொள்வதில்லை.
ரமார் கோயில் கட்டுவோம் என்று சொன்ன அத்வானி முஸ்லிம்கள் தங்களுக்குரிய இட்த்தில் பள்ளிவாசல் கட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி இருந்தால் நிலமை சூடு எவ்வளவு தணிந்திருக்கும்
பல் நிருபர்கள் இது குறித்து கேட்ட போதும் அவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை இந்தியா இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்துக்கள் இதை கவனிக்க வேண்டும்.
இந்த்துத்துவ சக்திகள் மத நம்பிக்கை என்ற பெயரில இனி எத்தனை பிரச்சினைகளை தொடர காத்திருக்கிறார்கள் என்பதை நீதிபதிகள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
இந்தப் பிரச்சினையில் குளிர்காய முனையும் குள்ள நரிகளை கவனத்தில் கொள்ளாமல் நீதிபதிகள் ஒரு சமரசத்திற்கான தீர்ப்பை கூறியுள்ளன
No comments:
Post a Comment