Wednesday, October 13, 2010

ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

அனபுமிகு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்றன.

விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடை பெற இருக்கிறது. இத்தேர்தலில் த்மிழக்த்தில் உள்ள பட்டதாரிகளும்  (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.) தங்களது சார்பாக  சில உறுப்பினர்களை தேர்த்டுக்க  உரிமை பெற்றுள்ளனர்.  அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றஆலிம்களும் அரபிக் M.A. பட்டம் பெற்ற ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவ்ர்.

இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்

நீங்கள் அப்ஸலுல் உல்மா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது  வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.


இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு தெரிவியுங்கள்.


வஸ்ஸலா,
அப்துல் அஜீஸ் பாகவி
தகவல் தந்தவர் :
சுலதான் சலாஹுத்தீன் மழாஹிரி
பேராசிரியர் ஜாவியா அரபுக்கல்லூரி.
காயல்பட்டினம்.



No comments: