Thursday, January 02, 2014

மீலாது அன்பின் அடையாளம்

சமீபத்தில் பேஸ்புக் வழியாக எனக்கு வந்த ஒரு கேள்வி இது !


எங்களது ஊரின் ஆற்றங்கறையோரப் பள்ளிவாசலில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
அதில் மீலாது விழாக்கள் வேண்டும் என்று அழுத்தமாக கூறப்பட்டிருந்தது.
தமிழகத்தில் மிலாது விழாக்கள் வேண்டும் என்று நோட்டீஸ் அடித்து குரல்கொடுக்கிற சில மூத்த ஆலிம்கள் மீலாது கூடாது பித் அத என்று சொல்கிற காஷிபுல் ஹுதா காரர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார்களே இது சரியா?
இந்தப் பெருமக்களின் நீண்ட கால சேவையை தங்களது தேவைக்காக் அந்தக் குழப்பவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியுமா ? தெரியாதா? .
மீலாதிற்கு எதிராக ஒரு பத்வா வெளியிட்டு தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவகளை ஒரு பேச்சிற்காகவாது எச்சரித்திருக்க்லாம். இது போன்ற கருத்துக்களை நாம் அனுமதிக்க முடியாது என பகிரங்கமாக கூறியிருக்கலாம்.
தமிழகத்தில்  ஒரு மதரஸாவின் பெயரில் இப்படி பத்வா வெளிவந்த பிறகு அந்த  மதரஸாவைச் சார்ந்தவர்களோடு கொஞ்சிக் குலாவுவது அவர்களை பொது மேடையில் பாராட்டுவது சுன்னத ஜமாத்தின் ஆலிம்களுக்கு தகுமா?  என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு குழப்பம் தான் தீர்வா?

பொதுவாக பேஸ்புக்கில் நான் சஞ்சரிப்பது குறைவு என்றாலும் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்க்க என்னால் இயல்வில்லை.

நண்பரே! குழப்பம் தேவையில்லை. சில பல என அறிஞர்களை பொத்தம் பொதுவாக குறிப்பிடுவது நியாயமில்லை.!      மற்றவர்கள் செய்வது  போல நீங்களும் பாராட்டுவது போல குத்திக் காட்ட தேவையில்லை.

மீலாது அன்பின் அடையாளம். முஸ்லிம்க்ள் தமது தலைவரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.

முஸ்லிம் உம்மத்தின் பெரும் சிறப்புக்களில் ஒன்று தனது தலைவரின் மீது அலாதியான அன்பு கொண்டிருக்கிற போதும் அவர் விச்யத்தில் தடம்புரளாத சமுதாயம் இது. இன்று வரைகும் பெருமானார் விசயத்தில் உம்மத்தின் நடைமுறைகள் இதற்கு சாட்சி.

சில காமாலைக் காரர்களின் பார்வைக் கோளாருகளுக்காக நாம் பரிதாபப்படலாம். கோபபபடத் தேவையில்ல. மேதாவிகளாகவும் சீர்திருத்த வாதிகளாகவும் காட்டிக் கொள்ள முயலும் அவர்களிடமிருந்து அல்லாஹ் ஆலிம்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!

5 comments:

m.s.ahmed meeran said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
முன்பு போல் வாராவாராம் புதன் அன்றே உங்கள் பதிவு வெளியிடப்பட்டால் தயார் செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும். முயற்சிப்பீர்களா ?

Unknown said...

காஷிபுள் ஹூதா மடரசாஉம்,யாகூப் சாஹிபும்.மீலாது விழா ,கூட்டு துஆ ,போன்ற சில விஷையங்களில் தீர்க்கமான உறுதியான ஒரு நிலைபாட்டை அவர்களும் அறிவிக்காமல். அம்மதரசாவிலிருந்து உருவாகும் ஆலிம்களும் இரட்டை நிலைபாட்டில் மௌத் வரை வாழ்வது.இம்மௌலவிகலின் நிலை அறிந்து வருந்துவதா?வாழ்த்துவதா?

Unknown said...

காஷிபுள் ஹூதா மடரசாஉம்,யாகூப் சாஹிபும்.மீலாது விழா ,கூட்டு துஆ ,போன்ற சில விஷையங்களில் தீர்க்கமான உறுதியான ஒரு நிலைபாட்டை அவர்களும் அறிவிக்காமல். அம்மதரசாவிலிருந்து உருவாகும் ஆலிம்களும் இரட்டை நிலைபாட்டில் மௌத் வரை வாழ்வது.இம்மௌலவிகலின் நிலை அறிந்து வருந்துவதா?வாழ்த்துவதா?

mohammed hathees said...

Nabi (Sal) avarhalai puhalvahu sirk.yaqoo b sahibai puhalvahu eeman.idhudhan kashifikkalin nilaipadu.

mohammed hathees said...

Nabi (Sal) avarhalai puhalvaduh sirk.yaqoo b sahibai puhalvahu eeman.idhudhan kashifikkalin nilaipadu.Allah nammai kapptruvanaha aameen.