இறுதிச் சடங்கின் அரசியல்


2026 பிப்ரவரி 28 ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படையின் வக்கிர தாக்குதலுக்கு பலியான ஈரானின் உச்ச தலைவர் அலீ அல் காமினாயின் இறுதிச் சடங்குகள் நாளை 9 ம் தேதி ஈரானின் மஸாத் நகரில் நிறைவடைய இருக்கின்றன.

கடந்த மூன்றாம் தேதி தொடங்கிய இந்த சடங்குகள் பற்றி விவரிக்க விக்கீபீடியா தனியாக ஒரு பக்கத்தை (State funeral of Ali Khamenei) தொடங்கியிருப்பது இந்த இறுதிச் சடங்கை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றும் ஈரானின் முயற்சியை வெற்றியடைச் செய்திருக்கிறது .

 துக்கம் அனுஷ்டித்துக் கொள்ள ஈரானுக்கு ஒரு வார கால விடுமுறை அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். என்றாலும். ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை காட்டிக் கொள்ளாவிட்டால் டிரம்ப் குணம் என்னாவது ?  அதனால் நான் நினைத்திருந்தால் ஒரு குண்டு போட்டு அனைவரையும் தீர்த்திருக்க முடியும் என்று கூறி தனது அதிகார போதைக்கு சூடேற்றிக் கொண்டார்.

  “They are all there. One shot [and we can take them all out], but we are not going to do that because then we would have nobody to negotiate with,” Trump said.

 அவர்கள் எல்லோரும் அங்கு கூடி இருக்கிறார்கள். ஒரு ஷாட் போதும். அம ஆனால் நாம் அவர்களோடு பேச்சு வார்த்தை நடந்த முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஆள் வேண்டாமா

 அமெரிக்க அதிபரின் கூற்றுக்கு ஈரானிய மக்கள் மிக வன்மையாக பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அலீ அல் கமனாயியின் இறுதி மரியாதை நிகழ்வை ஆயத்துல்லா கொமேனியின் இறுதி மரியாதை நிக்ழவை விட அதிக கூட்டம் கூடியதாக மாற்றும் அளவு பெரும் எண்ணிக்கையில் திரண்டு கொண்டிருக்கிறார்கள். இதுவரை 2 கோடிப் பேர் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்றிருப்பதை உறுதி செய்கின்ற  ஊடகங்கள் 9 ம் தேதி வரை நடை பெறும் இறுதி நிகழ்வில் 3 கோடிப் பேர் வரை ஒன்று கூட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகின்றன.

இரான் தலை நகரில் உள்ள் 5000 பள்ளிவாசல்கள் 700 பள்ளிக் கூடங்களும் பங்கேற்பாளர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மில்லத் பார்க் எனும் இடத்தில் செம்பிறை அணியினர் ஆயிரம் கூடாங்களை தயார் செய்துள்ளதாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 10 இடங்களில் இலவச பைபர் இண்டர்னெட் வசதி செய்யப் பட்டுள்ளதாகவும் மளிகை கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் அவை கூறுகின்றன.  

 அலீ காமினாயின் இறுதி மரியாதைக்கு திரளும் கூட்ட்த்தை கண்டு அமெரிக்க அதிபர் அதிர்ச்சியடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் அதற்கான வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது. அலீ காமினாயின் இறுதி ஊர்வல நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான அமைப்பு இந்நிகழ்வுக்காக ஒரு அதிகாரப் பூர்வ லோகோவையும் ஒரு முத்திரை வாக்கியமாக வெளியிட்டுள்ளது. باید برخاست  இந்த பார்சி சொல்லின் பொருள் நிச்சயம் நாம் எழுவோம் என்பதாகும்.

டிரம்பின் மூக்கை அரிப்பெடுக்க செய்யும் வாசகம் இது என்பதற்கு மேலாக இறுதி மரியாதைக்காக ஈரான் பிரதானமாக தேர்ந்தெடுத்த ஜூலை 4 ம் தேதி அமெரிக்காவின் 250 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான நாளாகும்.

இது தவிர 30 நாடுகளின் அரசுத் தலைவர்களும் பிரமுகர்களும் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். இது அமெரிக்காவிற்கும் அதை ஆதரிக்கும் நாடுகளுக்கும் நல்ல செய்தி அல்ல.

 அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நம்ப முடியாத ஒப்பந்தம் ஒரு புறம் இதற்கு முன் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்திய பல உலக தலைவர்களை ஈரானிலேயே படுகொலை செய்த வரலாறு மறுபுறமாக அச்சுறுத்தினாலும் கூட பல உலக தலைவர்கள் ஜூலை 3 ம் தேதி நடைபெற்ற இறுதி மரியாதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தஜ்கிஸ்தான், ஜார்ஜியா, இராக் உள்ளிட்ட நாடுகளின் ஜனாதிபதிகள், ஆர்மீனியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட 8 பேரும்

அஜர்பைஜான் , பங்களாதேஷ் , பெலாரஸ் , ​​எகிப்து , கிர்கிஸ்தான் , கத்தார் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 12 நாடுகளின் சபாநாயகர்களும், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் துணை பிரதமர்களு பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சுமார் 90 நாடுகளின் சர்வதேச அமைப்புக்களும் ரஷ்யா மற்றும் சீனாவின் அங்கீகாரம் பெற்ற குழுவினர்களும் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்

இந்தியாவின்  பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிதா ஆகியோர் ஈரானில் நடைபெறும் இறுதிச் சடங்கு விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும்  அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் சிலரும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

 பல நாடுகளைச் சேர்ந்த சமூக செயல்பாட்டு அமைப்புக்களும் அது போல மத தலைவர்களும் கூட அலி காமினாயின் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்றுள்ளது ஈரானின் பன்முக ஏற்பாடுகளை பிரதிபலித்தது.

 ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் பொறுப்பாளர்களையும் இறுதி நிகழ்வில் ஈரான் பங்கேற்கச் செய்தது ஈரான் தனது கூட்டாளிகளை விட்டுக் கொடுக்காது என்பதை உறுதிப்படுத்தியது.

 இவை எல்லாவற்றையும் விட பெரிது சவூதி அரேபியா அதனுடைய வெளியுறவு துறை துணை அமைச்சர் வலீத் அப்துல் கரீம் அலிகிர்ரீஜி அவர்களையும் ஒரு தூதுக்குழுவினரையும் இதற்காக அனுப்பியிருந்தது. அப்போது ஓதப்பட்ட திருக்குர் ஆன் வசனங்களைப் பற்றி பலரும் பேசுகிறார்கள்.   

 உண்மையில் வியக்க வேண்டியது சவூதி அரேபியாவின் இந்த பங்கேற்பு பற்றி ஆகும்,

 சாதாரணமாக இறுதி மரியாதை என்ற பெயரில் இத்தகைய காரியங்களில் ஈடுபடுவது சவூதியின் வழக்கமல்ல. அந்த நாட்டின் அரசர்களே இறந்தால் கூட ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கம் செய்வது தான் அவர்களது இயல்பு. சவூதிக்கு ஈரானுக்கும் உள்ள மோதல்களும் மிக பிரபலமானவை அமெரிக்காவிற்கும் சவூதிக்கும் இடையே உள்ள தொடர்பின் அன்னியோன்னியமும் உலகம் அறிந்ததே! அப்படியிருந்தும் சவூதி அரேபியா கலந்து கொணடது. ஐக்கிய அரபு அமீரகமும், குவைத்தும் பஹ்ரைனும் இந்நிகழ்வை மூற்றும் புறக்கனிப்பு செய்தன் எனபதும் கவனிக்கத் தக்கது..

 இன்னொன்றும் கவனிக்கத்தக்கது ஈரான் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள அமெரிக்க ஆதரவு கொண்ட ஐரோப்பிய நாடுகளையோ அதன் பிரமுகர்களையோ அழைக்கவில்லை. அவை வரலாற்றின் தவறான பக்கத்தில் சேர்ந்திருந்ததாக "wrong side of history ஈரானிய அதிகாரிகள் அவற்றை வர்ணித்தனர்.

 ஈரான், அமெரிக்க அதிபருக்கு இந்நிகழ்வுகளின் மூலம் எத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்க முடியும் என்பதை சர்வதேச ஊடகங்கள் கனித்து வருகின்றன.

 அமெரிக்காவின் பிரபல வால்ஸ்டீரீட் ஜர்னல் நாளிதழ் ஈரானில் நடைபெறும் இறுதிச் சடங்கை மிக சரியாக கனித்துள்ளது

 the funeral is a major demonstration of political defiance toward the United States and Israel, reporting that Iranian authorities expected millions of participants during the multi-day ceremonies honoring Khamenei   The Wall Street Journal described

 கோடிக் கணக்கிலான இரானிய மக்கள் அலீ காமினாயியை மத முக்கியத்துவம் வாய்ந்த இட்த்திற்கு உயர்த்திப்ப் பிடிக்க நினைக்கிற அதே நேரத்தில் ஈரானிய அரசு இதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு போராட்டமாகவும் அணி திரட்டலாகவும் ஆக்க முயற்சிக்கிறது

 என்வே இந்த நிகழ்வுகளில் உயர் தலைவருக்கான இறுதி மரியாதை என்பதை தாண்டி அமெரிக்காவு இஸ்ரேலும் தொடுத்த யுத்தத்தில் தார்மீக ரீதியில் தான் வென்று விட்டதை இரான் அப்பட்டமாக வெளிப்படுத்த முயற்சித்த்து. அதில் அது வெற்றி பெற்று விட்ட்து என்றே கூறவேண்டும்.

 நாளை ஒரு நாள் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதுவும் பாதுகாப்பாக நடந்தேறட்டும்.

 ஈரானின் அடுத்த அரசியல் திட்டங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதற்கிடையே முஸ்லிம் ஊடகங்களில் அலீ காமினாயின் நல்லடக்க தாமதமும் அதற்கான சடங்குகளும் ஒரு விவதப் பொருளாகியிருக்கிறது.

 இறந்த உடல்களை  நல்ல்லடக்கம் செய்ய இத்தனை நாள் தாமதப் படுத்தலாமா ?

 இப்போது நல்லடக்கம் செய்யப்படுவது அலீகாமினாயியின் உடல் மட்டுமல்ல

 அவரது மகள் , புஷரா ஹுசைன், மருமகன் மிஸ்பாஹுல் ஹுதா, மருமகள் ஜஹ்ரா அதல், பேத்தி ஜஹ்ரா முஹம்மத் ஆகிய மற்ற நால்வரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட உள்ளன. காமினியின் இறுதி மரியாதையின் போது பல பெட்டிகளும் ஒரு சிறு பெட்டியும் இருப்பதை கவனித்திருப்பீர்கள். அது இவர்களுடையது தான்.

 இத்தனை பேருடைய உடல்களையும் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைக்க வேண்டிய தேவை என்ன அவை எப்படி பாதுகாக்கப் பட்டன. உண்மையில் அவை பாதுகாக்கப் பட்டனவா அல்லது புதைக்கப்பட்டு இப்போது அதன் கூடுகள் எடுத்து வரப்படுகின்றனவா என பல யூகங்கள் எழுப்பப்படுகின்றன.

 இறுதி மரியாதை கமிட்டியின் பேச்சாளர் இமான் அத்தர் ஜாதா உடல்கள் ரசாயணம் இடப்படவில்லை. இஸ்லாமிய மரபுகளுக்கு ஏற்பவே அவை பாதுகாக்கப் பட்டன். அவை முன்னர் எங்கும் அடக்கம் செய்யப்படவில்லை என்று தெளிவு படுத்தியிருக்கிறார்.

 2026 பிப்ரவரி 28 தேதி அன்று காலை 8 மணியளவில் தன்னுடைய அலுவலத்தில் இருந்த அலீ காமினாயியை இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் மூலம் படுகொலை செய்த்து. அடுத்த நாள் காலை  5 மணியளவில் இராணிய இஸ்லாமிய குடியரசின் செய்தி ஊடகம் இதை உறுதி செய்த்தது.

இரானிய அரசு உடனடியா ஒரு வார கால விடுமுறையையும் 40 நாள் துக்க அனுசரிப்பிற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.

மார்ச் 4 அல்லது 6 ம் தேதி அவரது நல்லடக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்ட்து எனினும் போர் சூழல் காரணமாக அது ஒத்திவைக்கப் பட்டது.

 இப்போது இஸ்லாமாபாத் உடன்படிக்கையின் படி போர் நிறுத்தம் ஏறப்பட்டிருக்கிற நிலையில் 6 நாள் இறுதி நிகழ்வுகளின் நிறைவாக அலீ காமினாயியின் சொந்த ஊரான் மஸாத்தில் 9 ம் தேதி நல்லடக்கம் நடை பெற இருக்கிறது. அது பெருமானாரின் பேர்ர் இமாம் ஜைனுல் ஆபிதீன் நினைவு நாளாகும்,. அது மட்டுமல்ல ஷியா இஸ்னா அஸரா பிரிவின் 8 வது இமாமான அலீ ரிழா வின் மண்ணறை அமைந்திருக்கும் வளாகத்தில் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது.

  இப்படி ஒவ்வொன்றில்ம் இறப்புக்களை வைத்து அரசியல் லாபம் தேடிக் கொள்ளும் ஷியாக்களின் ஒரு பாரம்பரிய குணம் இதில் ஒளிந்திருக்கிறது என அஹ்லுஸ்ஸுன்னாவின் அறிஞர்கள் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

 அதுவும் கூட காய்ந்து போகாத ஒரு அரசியல் கருத்தே!

 

  

Comments

Popular posts from this blog

ஜகாத் பைத்துல்மால்

உமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி

மீலாது அன்பின் அடையாளம்