Posts

காதியானியும் கண்ணம்மா பேட்டையும்

சென்னை ராயப் பேட்டை பகுதியில் இந்துக்களின் பிரபலமான மயாணம் அமைந்துள்ள இடம் கண்ணம்மா பேட்டை. சென்னையின் தெருக்களில் தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறவர்களை கண்டால் ‘ மவனே நீ.. ஊட்டுக்கு போவ மாட்ட... கண்ணம்மா பேட்டைக்க்குத்தான் போவ.. என்று மக்கள் அர்ச்சிப்பது வழக்கம். அது போல இன்னோரு பிரபல மயாணம் இருக்குமிடம் கிருஷ்ணாம்பேட்டை . சென்னை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த 36 வயது காதியானி பெண் ஒருவர் கடந்த மே மாதம் 30 தேதி இறந்து பேனார். அவரது உடல் இராயப் பேட்டையில் உள்ள முஸ்லிம்களின் மையவாடியி அடக்கம் செய்யப் பட்டது. அதற்கு சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் ஆட்சேபனை செய்யவே அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப் பட்டு கிருஷ்ணாம் பேட்டை மயானத்தில் புதைக்கப் பட்டது. முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப் பற்றிய 10 சதவீத உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிட்டுவிடுவது பத்ரிகையாளர்கள் இதையும் ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்தனர். . காதியானி என்பது ஒரு தனி மதமாகும். பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்ற ஊரில் மீர்சா குலாம் என்பவரால் உருவாக்கப்பட்டதே காதியானி மதம். சீக்கிய மதம் எப்படி ...

gaza

சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட அநாதை போல, சுற்றி இருந்த அரபுநாடுகளாலும், உதவிக்கு வந்து ஊரை அடித்துத் தின்கிற ஐரோப்பிய நாடுகளாலும் ஏன் தன் சொந்த தேசத்தின் அதிபரால் கூட கைவிடப் பட்ட பரிதாபத்திற்குரிய காஸா நகரம் வரலாற்றில் மற்றுமொரு கருப்பு அத்தியாயாயத்தை சந்தித்தது. 2008 டிஸம்பர; 26 ம் தேதி முதல் 2009 ஜனவரி 17 வரை ழுpநசயவழைn ஊயளவ டுநயன என்று பெயரிட்டு இஸ்ரேல் நடத்திய பேயாட்டத்தால் நிலை குலைந்து போனது. கதறி அழ மட்டுமே காப்புரிமை பெற்ற சமுதாயம் மீண்டும் ஒருமுறை அழுது தீர;த்தது.எந்த சோகத்திலும் தம் சுதந்திர வேட்கையை விட்டுக் கொடுக்காத காஸா நகரத்து மக்கள் உலகத்தின் ஒப்பாரியை ஒரு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறு கரத்தில் ராக்கெட் லாஞ்சர;களை ஏந்தி நின்றனர;. யுத்தம் கொடுரமாகத் தொடர;ந்தது. நிலம், நீர;, ஆகாயமென தன் சக்திக்கு உட்பட்ட அத்தனை திசைகளிலிர;ந்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர;ந்ததது. உலகமெங்கிருந்தும் கண்டனக் கனைகள் பறந்தன. கண்டன ஊர;வலங்களாலும் ஆர;ப்பாட்டங்களாலும் நாடுகள் குலுங்கின. புதிய அதிபரை பார;த்த மயக்கத்தில் அமேரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மறந்திருந்த ஒரு பொன்னான சந்தர;ப்பத்தில் ஐந...

लिबास मदुरै प्रोग्रम्म ओं मार्च 17

லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கம் (லிபாஸ்) ஒரு நாள் பயிலரங்கு "முஸ்லிம் சமூகத்தில் பிரிவினைச் சக்திகள் - அவர்களை எதிர் கொள்ளும் வழிகள் என்ற தலைப்பில்" ஆலிம்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகிற மார்ச் 17 ம் தேத்தி செவ்வாய்கிழமை காலை 9:30 மணியளவில் மதுரை அன்னாநகரரில் உள்ள ஸ்டார் பார்க் கல்யாண மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிகழ்சியில் திருவனந்தபுரம் ஜாமியா பலாஹிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் , வேலூர் பாக்கியாத்தின் முன்னாள் பேராசிரியர் பையலூர் செய்யது முஸ்தபா அவர்கள் பிரதானமாக கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விசயங்களில் நமது தரப்பிற்கான சான்றுகள் என்ன? எப்படி? என்ற தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். இது தவிர பிரிவினை வாதிகளை எதிர் கொள்ளும் நடைமுறை உத்திகள் குறித்தும் அவர்களுடை முரண்பாடுகள் பற்றியும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட இருக்கின்றன. அண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழா அன்று மாலை தென்னிந்தியாவின் மார்க்கக் கல்விக்கு தன்னிகரற்ற சேவை செய்த அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்களின் நினைவு விழா பாகவிகள் சந்திப்பு "தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்வில் அண்ணல் அஃல...

பெருநாள் சிந்தனை : உதவும் கரங்கள்

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஒரு தடவை சொன்னார். “நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.” முஸ்லிம்களது வரலாற்றில் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நம்பிக்கை அளிக்கிற தலைவராகவும், உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு சவால்விடுபவராகவும் திகழ்ந்த மஹாதீரின் இந்தக் கருத்து மிகுந்த கவனத்திற்குரியது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கனிசமானது. உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 630 கோடி என்றால் அதில் 150 கோடிப் பேர் முஸ்லிம்கள். அதாவது நால்வருக்கு ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகம் முழுவதிலும் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் வாழும் நாடுகளில் கனிசமாக செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள். பெட்ரோலிய பலம், அல்லது கனிம வளம், குறைந்த பட்சம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வாழ்வது, சில பகுதிகளில் அரசியில் ஆளும் தர்ப்பை தீர்மாணிப்பவர்களாக இருப்பது ஆகிய காரணங்களால் அவர்களது செல்வாக்குக்கு குறையொன்றும் இல்லை. என்றாலும் அவர்களது மரியாதை கேள்விக்குரியதாகி இருக்கிறது. இன்றைய சூழலில் அவ...

ஜம்மு : இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதம்

நெருப்பில்லாமல் புகையுமா? என்றால் புகையாது தான். ஆனால் உயர் பதவியில் இருந்த இரண்டு பொறுப்பில்லாத மனிதர்கள் மூட்டிவிட்ட சிறு நெருப்பு இந்தியா அரசியல் வானில் இவ்வளவு பெரிய புகை மூட்டத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சிரமாமாக இருக்கும் தான். ஆனால் அது தான் உணமை. காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் பாரதீய ஜனதாவை சார்ந்தவருமான s.k.சின்ஹா, அமர்நாத் ஷரீன் போர்டின் நிர்வாக அதிகாரியாக இருந்த அருண்குமார் I.A.S ஆகிய இரண்டு பேர் சர்வசாதரணமாக மூட்டிவிட்ட நெருப்பில் காச்மீர் பள்ளத்தாக்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்கள் மட்டுமே மனிதர்கள் வசிக்க முடிந்த ஒருபனிமலைப் பிரதேசத்திற்கான போராட்டத்தில் இந்திய அரசியலில் வெகுசூடான விசித்திரமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய இலட்சணங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. நாட்டின் 62 வது சுதந்திரதின கொடியேற்றத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீரில் அமைதி ஏற்பட ஒத்துழைப்புத்தாருங்கள் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சகதிகளிடம் கையேந்தாத குறையாக கோரிக்கக வைத்திருப்பது அந்த விசித்திரங்களில் முதல் அம்சம். ஆனால் இத்தனைக்கும் சூத்திரதாரியான ஆர...

பெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும்.

இது ஒரு சர்சையான, அல்லது சிக்கலான தலைப்பு என்று தான் பலரும் முதலில் நினைப்பார்கள். எனெனில் வீடுகளுக்குள்ளளேயே பெண்கள் ஒடுங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புவதாக அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவே வலுவில் பெண்களை அரசியல் அரங்கிற்கு இழுத்து வருகிற ஒரு திட்டத்தை இஸ்லாம் அறவே ஏற்றுக் கொள்ளாது. அப்படை வாத முஸ்லிம்களும் இதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்தத தலைப்பு ஒரு சுமூகமான தலைப்பாக இருக்க முடியாது என்று அவர்கள் கருதக் கூடும். உணமை நிலவ்ரம் அப்படி அல்ல. பெண்கள் கவர்ச்சிப் பொருளாக, ஆன்களின் காமப் பசிக்கு இலக்கானவர்களாக கருதப் பட வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதே இஸ்லாமின் குறிக்கோள். இதற்காவே இஸ்லாம் பர்தா உள்ளிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளை பெண்களுக்காகச் செய்துள்ளது. அதே போல சமூக ரீதியாக சில சீர்கேடுகளை கலைவதற்காக ஆணும் பெண்ணும் சகஜமாக கலந்துறவாடுவதை தடை செய்துள்ளது. ஒழுக்கம் பண்பாடு கட்டுப்பாடு சார்ந்த எந்த விசயத்த்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்க்கும் இஸ்லாம் சமமான எல்லைக் கோடுகலையே வரைந்துள்ளது. கற்பெனப்படுவதை பொதுவில் வைட்ப்போம் என்ற தீர்மாணத்தை பாரதி பாடுவதற்கு 14 நுற்ற...

தாராபுரத்தில் ஒரு குஜராத்திய முன்னோட்டம்?

முஸ்லிம்கள் கனிசமாகவும் செல்வாக்காகவும் வாழ்கிற பகுதிகளில் இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட இந்துத்த்துவா சக்திகளுக்கு தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது ஒரு நமச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது. அந்த நமச்சலை தீர்த்துக்கொள்ள மேற்கொள்ளப் பட்ட ஒரு நடவடிக்கை தான் தாரபுரத்தில் அரங்கேறியிருக்கிறது. தாரபுத்தில் உள்ள ஒரு பள்ளிவசலில் பன்றியை கொன்று வீசியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரு நகரங்களில் தாராபுரமும் ஒன்று. 85 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அந்நகரில் சுமார் 25 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். தாராபுரம் நகர் மன்றத்தின் 30 உறுபினர்களில் நால்வர் முஸ்லிம்கள்.தாரபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர்கள் 1.70,000 பேரில் முஸ்லிம்கள் 23 சதவீதம் இருப்பதாக நகர் மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட் பகுதிகளில் 12 பள்ளிவாசல்கள் இருக்கின்றன். அவற்றில் சில் நூற்றாண்டுகள் கண்டவை. இந்தப் பகுதியில் பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழ்கிற நகரங்களில் தாராபுரமும் ஒன்று. தாரபுரத்தின் புற நகர்ப் பகுதியான கண்ணன் நகரில் உள்ள மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசலில் 2007 டிஸ...